Rani Govindh | 04 Nov 2025
இரவு நேரத்தில் அந்த ஹோட்டலின் அழகு, வண்ண லைட்டுகளின் ஒளியில் மேலும் பிரகாசமாக இருந்தது, ஆனால் பாவம் இந்த வெளிச்சம் தான் இளமதியின் மனதை ரணமாக்கி கொண்டிருந்தது, இத்தனை வெளிச்சத்தில் அவள் எப்படி தன் ஆடைகளை களைந்து பிறந்த மேனியாக அத்தனை பேர் முன்னிலையிலும் நிற்க முடியும், நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
நொடிக்கொரு முறை அவள் போனுக்கு வந்த மெசேஜ்கள் அவளுக்கு ஒன்றை மட்டும் தெளிவாக கூறி கொண்டிருந்தது. இளமதி உனக்கு வேறு வழியே இல்லை, இதை தவிர வேறு என்ன செய்து எட்டு லட்ச ரூபாய் பணத்தை ஒரே நைட்டில் உன்னால் ஏற்பாடு செய்ய முடியும், வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? அவள் மனம் அவளை கேள்வியால் துளைத்து கொண்டிருந்தது.
டிரெசிங் டேபிளுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவள் ஆளுயர கண்ணாடியில் தன் உடலை பார்த்து கொண்டாள். திருமணம் ஆகி டிவோர்ஸ் வாங்கியவளாக இருந்தாலும் இன்னுமும் அவள் அழகு மெருகேறி தான் இருந்தது.
இருபத்தி ஐந்து வயதான அவளுக்கு, வாழ்க்கையே சூன்யம் ஆகி விட்டது என்பதை அவள் அழகை ரசித்தவர்கள் யாரும் நம்ப கூட மாட்டார்கள். பதினெட்டு வயதிலேயே திருமணம், அடுத்த வருடத்திலேயே விவாகரத்து, திரும்பவும் அம்மா வீட்டிற்கே வந்தவள் மீதமிருக்கும் தன் இரண்டு தங்கைகளுக்காகவும், அப்பா என்ற பெயரில் இருக்கும் குடிகாரனுக்காகவும், உடலில் சக்தி இல்லாமல் நடமாடி கொண்டிருக்கும் அம்மாவிற்காகவும் ஓடி ஓடி உழைத்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த உழைப்பு எல்லாம் இப்போது பத்தாது என்பது போல் அவள் தங்கை செய்து வந்த காரியம் அவள் உடல் அழகை பல கண்களுக்கு விருந்தாக்கும் நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறது.
“இங்க பாரும்மா, உன் தங்கச்சிய நாளைக்கு காலைல கோர்ட்ல ஆஜர் பண்றதுக்கு முன்னாடி எட்டு லட்ச ரூபாயோட வந்தின்னா நீ சொல்ற மாதிரி உன் தங்கச்சிய மானம் மரியாதையோட வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும், இல்லைன்னா இதோ இங்க நிக்கறாங்களே இந்த பொண்ணுங்க மாதிரி விபச்சாரி பட்டத்தோட கோர்ட்ல உன் தங்கச்சி நிற்ப்பா, நீ கோர்ட்டுக்கு வந்து என் தங்கச்சி விபச்சாரி தான்னு ஒத்துக்கிட்டு பைன் கட்டி கூட்டிட்டு போற மாதிரி இருக்கும், உனக்கு எது வசதியோ அத பண்ணிக்கோ”
இன்ஸ்பெக்டர் தெள்ளதெளிவாக கூறிய பிறகும் ஸ்டேஷன் வாசலில் நிற்பதில் எந்த பலனும் இல்லை என்பதை அறிந்தவளிடம் ஒருவன் அக்கறையாக பேசினான்.
“நீங்க இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினது எல்லாம் நான் கேட்டேன்மா, நீங்க என்ன சொன்னாலும் இங்க பணம் தான் பேசும், சீக்கிரம் போய் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, இல்லைன்னா உங்க தங்கச்சி வாழ்க்கை கண்ணுக்கு தெரிஞ்சே அழிஞ்சி போய்டும்” என்று ஒருவர் ஸ்டேஷன் வாசலில் அழுது கொண்டு நிற்பவளிடம் அக்கறையோடு கூறினார்.
முதலில் அதை அக்கறை என்று தான் அவளும் நினைத்தாள், ஆனால் பிறகு தான் தெரிந்தது அது அவரின் ப்ரோக்கர் புத்தி என்பது.
“அவ்ளோ பணத்த நைட்டுகுள்ள என்னால எப்படி சார் ஏற்பாடு பண்ண முடியும், ஒரு லட்ச ரூபாய கூட நான் கண்ணால பார்த்தது இல்ல, இதுல எட்டு லட்சத்துக்கு நான் எங்க போவேன், என் தலைய அடமானம் வச்சா கூட அவ்ளோ கிடைக்காது சார்” என்று வேதனை தாங்காமல் கண்ணீர் வழிய கூறியவளை அவன் ஏற இறங்க பார்த்தான்.
“உன் தலைய அடமானம் வச்சா அவ்ளோ பணம் கிடைக்காது, ஆனா.. “என்று நிறுத்தியவன் அவள் உடலை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.
“இதுக்கு ஒரு வழி இருக்கு, என்ன வழின்னு நான் சொல்றேன், ஆனா தப்பா நினைக்காதம்மா, உன் நிலமைய புரிஞ்சிக்கிட்டு தான் சொல்றேன், உனக்கு பிடிச்சா பண்ணு, இல்லாட்டி உன் வழில நீ போ, அத விட்டுட்டு லப்போ திப்போன்னு இங்க ஆர்ப்பாட்டம் பண்ணி என்ன சிக்கல்ல மாட்டி விட்றாத” என அவன் பீடிகை போட்டான்.
ஏதாவது ஒரு வழி கிடைத்து விடாதா என்று தவித்து போயிருந்தவளிடம் ஒரு வழி இருக்கு என்று கோடு போட்டு விட்டு, இப்படி பேசி கொண்டிருந்தால் அவள் விட்டு விடுவாளா?
“என்ன வழி சார், எதுவா இருந்தாலும் ப்ளீஸ் தயங்காம சொல்லுங்க, என் தங்கச்சி வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம், அதுக்காக என் உயிர கொடுக்க சொன்னா கூட கொடுப்பேன்”
“உயிருக்கு இங்க எங்கம்மா மதிப்பு இருக்கு, நீ பொம்பள புள்ள ஆச்சே, அதுக்கு தான் இங்க ஜாஸ்தி மதிப்பு, எனக்கு தெரிஞ்ச ஒரு கோடீஸ்வர பையன் இருக்கான், அவன் ஆர்டிஸ்ட், அவனுக்கு வரைய ஒரு மாடல் தேவைபடறா, மாடல்னா சும்மா இல்ல, உடம்புல ஒட்டு துணி இல்லாம பிறந்த மேனியா போஸ் கொடுக்கணும்” என அவர் தயங்கியபடி சொல்லி முடிக்க இளமதி கண்களில் வழிந்த கண்ணீர் அதிர்ச்சியில் நின்றே போனது. அவள் ஷாக்காக அவரை பார்த்தாள். அவள் அதிர்ச்சியான முகத்தை பார்த்தவர் சுதாரித்து கொண்டார்.
“நான் தான் சொன்னேன்லம்மா, உனக்கு விருப்பம் இருந்தா பண்ணு, இல்லாட்டி விடுன்னு, ஆனா ஒன்னு, இத மட்டும் நீ செஞ்சா நீ கேட்கற பணம் இன்னைக்கு நைட்டே உன் கைல இருக்கும், மணி இப்போவே ஆறு ஆச்சி, இதுக்கு மேல நீ எங்க போய் பணத்துக்கு அலைவ, அப்படியே அலைஞ்சாலும் பணம் கிடைக்குமா என்ன? எல்லாத்தையும் யோசிச்சி பாரும்மா, உன் நல்லதுக்காக தான் சொல்றேன். அப்புறம் நீ நினைக்கற மாதிரி இது தப்பான வேலைலாம் இல்ல, இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் ஆச்சி, இதுவும் ஒரு கலை தான, அவங்க பார்த்து வரைய ஒரு மாடல் தேவை, அவங்க சொல்ற மாதிரி நீ போஸ் கொடுத்தா உன் மேல அவங்க விரல் கூட படாம வரைஞ்சி முடிச்சிட்டு நீ போன மாதிரியே உன்ன திருப்பி அனுப்பி வச்சிடுவாங்க, இதனால உனக்கு எந்த கலங்கமும் வராது, ஆனா இதுவே உன் தங்கச்சி மட்டும் விபச்சாரி பட்டம் வாங்கி கோர்ட் வரை போய்ட்டா, உன் வீட்டுக்கு பொறிக்கி பசங்க பல பேரு வருவாங்க, உன் குடும்பத்துக்கே ரேட் பேசுவானுங்க, உன் வீடே ரெட் லைட் வீடாகிடும், ஒருத்தரும் உங்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டாங்க, நீங்க எங்க போனாலும் இதே நிலைமை தான், கடைசில நீயும் சேர்ந்து விபச்சாரி பட்டத்தோட தான் வாழ்ந்தாகணும், இந்த ஊரு உங்கள மானத்தோட வாழ விடாது, நீயே யோசிச்சி பாரு, இதெல்லாம் உன் குடும்பத்துக்கு தேவையா?” என அவள் குழம்பிய மனதை பயன்படுத்தி கொண்டு ஏதேதோ பேசி அவளை மேலும் குழப்பி கொண்டிருந்தான்.
“உனக்கு ஓகேன்னா சொல்லு, இப்படியே உன்ன கூட்டிட்டு போய் கூடவே இருந்து, பணத்தையும் உன் கைல வாங்கி கொடுத்து, பத்திரமா நாளைக்கு காலைலகுள்ள இங்க கூட்டிட்டு வந்து விடறேன், நீ என்ன முழுசா நம்பலாம், நானும் ரெண்டு பொம்பள புள்ளைங்கள வச்சிருக்கறவன் தான்” என அவன் கூறியதும் அவள் மனம் அவனிடம் எதோ கேள்வி கேட்க குமுறியது. அதை அவனும் அறிந்து கொண்டான் போல.
“இந்த மாதிரி உன் பிள்ளைங்கள கூட்டிட்டு போவியான்னு கேட்க நினைக்கற அதான, அவங்களுக்கு இந்த நிலைமை வர கூடாதுன்னு தான் நான் இப்படி ஒரு வேலை பார்க்கறேன், நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன், உனக்கு ஓகேன்னா அதோ அந்த கார்ல உட்காரு, உள்ள எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு, இன்ஸ்பெக்டர் சார்கிட்ட பேசிட்டு வந்துடறேன், விருப்பம் இல்லைன்னா நீ கிளம்பி போய்கிட்டே இரு, எந்த முடிவு எடுக்கறதா இருந்தாலும் நான் உள்ள போயிட்டு வரதுக்குள்ள எடுத்துடு” என கூறி விட்டு அவன் உள்ளே சென்றான்.
அவன் வெளியே வரும் போது அவன் சொன்னது போல இளமதி அவன் காருக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க அவன் முகத்தில் சந்தோசம் பொங்கி வழிந்தது.
அவனே இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்து ஒரு ரூமில் தங்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து விட்டான் தான், ஆனால் கடைசி நொடியில் தான் அவன் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பெரிய குண்டை அவள் தலையில் தூக்கி போட்டான்.
“பதட்டபடாம நான் சொல்றத கேளும்மா, நான் சொன்ன மாதிரி அவங்க உன்ன படம் வரைவாங்க, யாரும் உன்ன தொட கூட மாட்டாங்க, ஆனா இதுல ஒரே ஒரு மாற்றம் தான். ஒருத்தர் இல்ல, பத்து பேர் உன்ன பார்த்து படம் வரைய போறாங்க” என்றதும் அவள் தலையில் இடியே இறங்கியது போல் இருந்தது. பத்து பேருக்கு முன்னால் தன் உடலை காட்டி கொண்டு நிற்பதை நினைக்கும் போதே உடலெல்லாம் புழு மேய்வது போல் ஆகி விட்டது.
திருமணம் ஆகி இருந்தாலும் இதுவரை இல்லற சுகம் என்றால் என்னவென்றே அறியாதவள் அவள், அவள் கணவனுக்கு ஆண்மை இல்லை என்பதால் அவன் வெளியூர் வேலை என்று அவளை தனிமையில் தான் தவிக்க விட்டிருந்தான், அப்படி இருக்க, இப்படி ஒரு சூழ்நிலையை அவளால் எப்படி எதிர்கொள்ள முடியும்?
அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது, அவளால் பேச கூட முடியவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது.
“உன்னோட நிலைமை எனக்கு புரியுதும்மா, ஆனா இது எனக்கே புதுசா தான் இருக்கு, எட்டு லட்சம் பணமாச்சே, அவங்க சொல்ற கண்டிஷனுக்கு நாம ஒத்துக்கிட்டு தான் ஆகணும், ஒருத்தரா இருந்தா என்ன? பத்து பேரா இருந்தா என்ன, பார்த்து படம் தான வரைய போறாங்க, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க விரல் கூட உன் மேல படாது, அதுல எந்த மாற்றமும் இல்ல, இவ்ளோ தூரம் வந்தாச்சி, இத விட்டா நம்ப ரெண்டு பேருக்கும் வேற வழி இல்லம்மா, நீ மாட்டேன்னு சொன்னா இன்னொரு பொண்ணுக்கு நான் எங்க போவேன், உனக்கும் எட்டு லட்சம் பணத்த யாரு சும்மா தருவாங்க, யோசிச்சி பாரு. நான் சொல்றத கேளும்மா, கண்ண மூடிக்கிட்டு சிலை மாதிரி நின்னுட்டு வந்துடு, அப்புறம் எல்லாத்தையும் கெட்ட கனவு மாதிரி மறந்துடு, இத பத்தி வேற யாருக்கும் தெரிய போறது இல்ல, அவங்களும் இத கலையா பார்க்கற பசங்க, திரும்ப உன்ன தொந்தரவு பண்ண மாட்டாங்க, என்ன நம்பும்மா” என்று கெஞ்சாத குறையாக கூறினான்.
அந்த நிலைமையில் இளமதியால் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை, ஸ்டேஷனில் இருக்கும் அவள் தங்கை வெண்ணிலாவை நினைக்க நினைக்க அவள் அடிவயிற்றில் பயம் எகிறி கொண்டிருந்தது.
அவள் அமைதியே சம்மதம் என்று நினைத்து கொண்டவன் “இங்கயே வெயிட் பண்ணும்மா, அந்த ரூம்ல எல்லாம் ரெடி ஆனதும் உனக்கு தகவல் வரும், அதுக்கப்புறம் நீ அங்க வந்தா போதும்” என்று கூறி விட்டு அவன் கிளம்பி போய் விட்டான்.
இளமதிக்கோ ஒவ்வொரு நொடியும் போராட்டமாக இருந்தது, இது தவறு என்று அவள் உள்ளுணர்வு ஒரு பக்கம் சொல்லி கொண்டே இருக்க, பேசாமல் இங்கிருந்து போய் விடலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள், ஆனால் தாமதிக்கப்பட்ட முடிவு வாழ்க்கைக்கு உதவாதே.. அவள் அங்கிருந்து போகலாம் என்று நினைத்து அந்த அறையின் கதவை திறக்க, அந்த ஹோட்டலின் ஸ்டாப் ஒருவன் அறை வாசலில் வந்து நின்றான்.
“மேடம் நீங்க ரெடியா? சார் உங்கள ரூமுக்கு வர சொன்னாரு”
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, அவள் பதட்டத்தில் நின்று கொண்டிருக்க, அவன் மேலும் அவசரபடுத்தினான்.
“லேட் பண்ணா சார் டென்ஷன் ஆகிடுவாரு, சீக்கிரம் வாங்க” என்று அவளை கையோடு அந்த அறைக்கு அழைத்து சென்றான்.
“டோர் ஓப்பன்ல தான் இருக்கு, நீங்க உள்ள போனதும் டோர் லாக் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க, சார் வந்துடுவாரு” என்று இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லி விட்டு அவன் அங்கேயே நிற்க இளமதி வேறு வழியில்லாமல் கைகள் நடுங்க அந்த கதவை திறந்தாள்.
அவள் உள்ளே சென்றதும் அந்த ஆளே கதவை மூடி விட்டு சென்று விட்டான். விளக்கின் வெளிச்சத்தில் தன் கண்ணீரை கூட மறைக்க முடியாதோ என்று நினைத்து கொண்டு சென்றவளுக்கு அந்த அறையின் இருட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த இருட்டில் அந்த அறையில் சுவிட்ச் எங்கிருக்கிறது என்பது கூட அவளுக்கு தெரியவில்லை. பயந்தபடியே ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க அந்த அறைக்குள் இருந்த வேறு ஒரு அறை கதவை திறந்து கொண்டு ஒருவன் வெளியே வந்தான்.
அவன் கையில் ஒரு டார்ச் இருந்தது, அது கூட டார்ச் வெளிச்சத்தை அவள் மீது படர விட்ட போது தான் அவள் அறிந்தாள்.
டோரை அவள் லாக் செய்யவில்லை என்பதை அறிந்தவன் “டோர் லாக் பண்ணு” என்று அதிகார குரலில் ஆணையிட்டான்.
அவன் குரலுக்கு அடங்கியவளாக அவள் பதட்டத்தோடு கதவை லாக் செய்தாள்.
“கமான், சீக்கிரம் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டு பெட்ல வந்து படு” என்று அவன் குரல் ஆணையிட்டது கேட்டு அவள் அதிர்ச்சியடைந்தாள்.
“அது, அது.. எதுக்கு, பெ.. பெட்ல” என்று பயந்து போய் கேட்டாள்.
“அவன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா, ப்ளடி ராஸ்கல், லட்சகணக்குல பணம் கேட்டானே, இத கூட சொல்லலையா?” என்று அவன் குரல் கடுகடுத்தது. அதில் பயந்து போனவள் “இல்ல, சொன்னாரு, எல்லாம் சொன்னாரு”
“தென் நான் தனியா எக்ஸ்ப்ளைன் பண்ணனும்னு நினைக்கறயா, டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வந்து படு”
அவன் கொடுத்த ப்ரஷரில் வேறு வழியில்லாமல் அவள் தன் ஆடையை கழட்ட ஆரம்பித்தாள். அவனோ டார்ச் வெளிச்சத்தில் அவளை பார்த்து கொண்டிருந்தான். அந்த டார்ச் வெளிச்சம் அவள் கண்ணில் பட்டு கொண்டே இருந்ததால் அவளின் பார்வை மங்கலானது போல் உணர்ந்தாள். எதிரில் இருப்பவனை பார்க்க அந்த வெளிச்சம் துளியும் இடம் கொடுக்கவில்லை, ஆனால் அவன் மட்டும் அவளை அங்கம் அங்கமாக பார்த்து கொண்டிருக்க, அவளால் அந்த இருளுக்கும் டார்ச் வெளிச்சத்திற்கும் நடுவில் அவனை பார்க்கவே முடியவில்லை.
ஒருவேளை இப்படி தான் தன்னை பார்த்து வரைவானோ, ஆனால் பத்து பேர் இருப்பார்கள் என்று அந்த ஆள் சொன்னானே, இங்கு ஒருத்தன் மட்டுமே இருப்பது போல் தெரிகிறதே, ஒருவேளை அவர்கள் இதற்கு மேல் வருவார்களா, இல்லை இவன் மட்டும் தானா, இவன் மட்டும் என்றால் கூட பரவாயில்லை, பலர் முன்னிலையில் மானம் போவதற்கு இது தேவலாமே என்று இளமதி மனம் ஏதேதோ நினைத்து கொண்டிருக்க, அதே நேரம் அவள் ஆடைகள் துறந்து பிறந்த மேனியில் அவன் முன் உடல் கூசி நின்றாள். அனிச்சையாக அவளின் கைகள் அவள் மார்பின் மீது திரையானது. அதை பார்த்து அவன் கடுப்பானான்.
“இடியட், கை எடு” என்று அவன் மிரட்ட அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சில்லென்ற காற்று அவள் மேனியில் படர்வது அவளை ஊசியால் குத்தி கிழிப்பது போல் இருந்தது. பாத்ரூமை தவிர இப்படி வேறெங்கும் இந்த நிலையில் அவள் நின்றது இல்லை, அப்படி இருக்க யாரென்றே தெரியாத ஒருவன் முன்னிலையில் அவள் இப்படி ஒரு நிலையில் நிற்பதை அவளால் எப்படி பொறுத்து கொள்ள முடியும். நெருப்பில் தன்னை எரிப்பது போல் உணர்ந்தாள்.
“உனக்கு காது கேட்காதா, கைய எடு” என்று திரும்பவும் அவன் கத்த பயந்து போய் அவள் கையை எடுத்து தலை குனிந்தபடி நின்றாள். ஆனால் அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அவனிடம் இருந்து வந்த டார்ச் ஒளியும் நிற்காமல் இருக்க, எவ்வளவு நேரம் அவள் நின்றாலோ, அவன் அவளை ரசித்தானோ.. ஆனால் நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
பெட்டில் வந்து படுக்க சொன்னவன் திடீரென்று முடிவை மாற்றி கொண்டு அவள் நின்ற வாக்கிலேயே அவளை ரசித்து கொண்டிருந்தான்.
“யூ ஆர் ப்யூட்டிபுல்” என்று அவன் வாய் மெல்ல முணுமுணுத்து கொண்டது. ஆனால் அவளோ அவன் காம்ப்ளிமென்ட்டை கூட அறியாதவளாய் கடவுளிடம் சண்டை போட்டு கொண்டிருந்தாள்.
“கடவுளே உனக்கே இது அடுக்குமா? இப்படி ஒரு சூழ்நிலைல என்ன நிக்க வச்சிட்டு, என்ன பார்த்து நீ சிரிச்சிட்டு இருக்கியா? இன்னும் எவ்வளவு நேரம் இப்படி என்ன சோதிப்ப, அங்க என் தங்கச்சி வாழ்க்கை அந்தரத்துல தொங்குது, இங்க என் மானம் மொத்தமா போயிருச்சி, இன்னும் என்ன பாக்கி. என்ன காப்பாத்த மாட்டியா? என்னால முடில, இந்த நொடி மரணம் வந்தாலும் பரவால்லன்னு தோணுது, இதுல இருந்து என்ன காப்பாத்த மாட்டியா” என்று மனதிற்குள் தவித்து கொண்டிருந்தாள்.
அவள் தவிப்பு கடவுளுக்கு தெரிந்திருக்குமோ என்னவோ.
“போதும், ட்ரெஸ் பண்ணிட்டு இங்க இருந்து போ” என்ற குரல் வந்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது போல் இருந்தது, அவனின் இந்த வார்த்தை அவள் வேதனைக்கு மருந்திட்டது போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் அவள் உடல் ஐஸாகி இருக்கும், நல்லவேளை அப்படி எதுவும் நடப்பதற்குள் அவன் அவளை போக சொல்லி விட்டான்.
வேக வேகமாக அந்த டார்ச் வெளிச்சத்தில் டிரெஸ்ஸை போட்டு கொண்டவள், விட்டால் போதும் என்ற மனநிலையில் கதவை நோக்கி சென்றாள்.
“பணம் வேண்டாமா?” என்று பின்னால் இருந்து வந்த குரலில் தான் பணத்தின் நினைவே அவளுக்கு வந்தது. வேகமாக அவனை நோக்கி அவள் வர, “அங்கேயே நில்லு” என்று அவன் குரல் திரும்பவும் அவளை தடுத்தது.
அடுத்த நொடி அவள் மீது பணகட்டு ஒன்றை தூக்கி வீசினான். அது அவள் மேலே பட்டு கீழே விழுந்தது.
அதை எடுத்து பார்த்தவள் அதில் ஒரு லட்சம் தான் இருக்கிறது என்று பார்த்து ஷாக் ஆனாள்.
“சார் இதுல, இதுல ரெண்டு லட்சம் தான் இருக்கற மாதிரி தெரியுது” பயந்து கொண்டே கேட்டாள்.
“எஸ், பேசின அமவுண்ட் டூ லேக் தானே”
“இல்ல சார், எட்டு லட்சம்”
“வாட், எய்ட் லேக்ஸ்” என்று கூறி அவன் வில்லத்தனமாக சிரித்தான்.
“எய்ட் லேக்குக்கு இப்போ நீ என்ன பண்ணன்னு சொல்றியா?” என்று கேலியாக அவன் கேட்க அவளுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. அவமானத்தில் அவள் உடல் கூசியது, இருந்தாலும் அதை பார்க்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.
“அவரு எட்டு லட்சத்துக்கு பேசி தான் என்ன கூட்டிட்டு வந்தாரு சார், அவசரமா எனக்கு எட்டு லட்சம் பணம் தேவை, அதனால தான் இப்படி ஒரு விசயத்துக்கு சம்மதிச்சேன், இப்போ நீங்க இல்லன்னு சொன்னா நான் செத்தே போய்டுவேன்” என்று அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஷட் அப், டிராமா க்ரியேட் பண்ணாத, நான் டென்ஷன் ஆனேன் நீ சாக வேண்டியது இல்ல, நானே கொன்னுடுவேன்” என்று வார்த்தையாலேயே மிரட்டினான். அந்த மிரட்டலில் அவள் அழுகையை நிறுத்தி விட, சில வினாடிகள் அமைதிக்கு பிறகு அவன் ஒரு ஆபர் கொடுத்தான்.
சில பணக்கட்டை எடுத்து வந்து அவள் மேல் தூக்கி எறிந்தான்.
“இதுல ஆறு லட்சம் பணம் இருக்கு, இந்த பணம் புல்லா உனக்கு தான், எடுத்துக்கோ” என்று அவன் குரல் கேட்டதும் அவள் அவசர அவசரமாக அந்த பணக்கட்டை எடுத்து கொண்டாள்.
“உனக்கு கொடுக்கறதா சொன்னது டூ லேக் தான், ஆனா இப்போ மொத்தமா எய்ட் லேக்ஸ் கொடுக்கறேன், அதுக்கு எனக்கு பெனிபிட் இருக்கணுமே, கீழ ஒரு அக்ரீமென்ட் இருக்கு பாரு, அத எடு”
அவன் சொன்னதும் தான் அங்கு ஒரு ஸ்டேம் பேப்பர் இருப்பதையே அவள் கவனித்தாள், அதை கையில் எடுத்தாள்.
“அதுல உன் டீடைல்ஸ் எழுதி, எனக்கு முழு சம்மதம்னு ஒரே ஒரு சைன் போட்டா, இந்த எட்டு லட்சத்த எடுத்துக்கிட்டு இங்க இருந்து நீ போகலாம்” என்று அவன் கூறியதும் இளமதிக்கு ஷாக் ஆனது.
அவன் சொன்னபடி இளமதி சைன் போடுவாளா? அந்த அக்ரிமெண்டில் என்ன இருக்கிறது? இதனால் இளமதி வாழ்க்கையில் வர போகும் விபரீதம் என்ன?
இதுக்கான பதில் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
Madhu Niki
nice 😍