பள்ளிக்கூடம் போக வேண்டும் பாப்பா
பிள்ளைத்தமிழ் பாட வேண்டும் பாப்பா
கலைகள் பல கற்க வேண்டும் பாப்பா
உயிர் இரக்கம் காட்ட வேண்டும் பாப்பா
ஒழுக்கத்தை உயிரென காத்திடு பாப்பா
சினத்தில் கூட உள்ளத்தால் சிரித்திடு பாப்பா
வெற்றி மட்டும் வாழ்க்கை இல்லை பாப்பா
தோல்வியையும் தாங்க வேண்டும் பாப்பா
சின்னஞ்சிறு கவிதை போல பாப்பா
சிந்தனையைத் தூண்ட வேண்டும் பாப்பா
தடைகள் பல வந்தாலும் பாப்பா
தன்மானம் விலக்காதே பாப்பா
எந்த ஒரு சூழலிலும் பாப்பா
தன்னம்பிக்கை இழக்காதே பாப்பா
நட்பு துன்பத்தில் சிக்கும் போது பாப்பா
அறிவுரை கூறாதே ஆற்றுப்படுத்து பாப்பா
சொல்வது யாராக இருந்தாலும் பாப்பா
மூடநம்பிக்கைகளை எதிர்த்திடு பாப்பா
உயர் எளிமை பழகிடு பாப்பா
உயிர் வாழ்க்கை கடினமில்லை பாப்பா
No comments yet.