வசம் 10,11

Vaishnavi Vijayaraghavan | 05 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே…….


வசம் -10


வெளியே போன எஸ்.ஐ. திரும்ப உள்ளே வந்து மேத்யூவை கூப்பிட்டார்.


சொல்லுங்க சார்…..


மேத்யூ….. வழக்கமாக கவர்மெண்ட் ஆஸ்பத்திரில தான் ரேப் டெஸ்ட் எடுக்கனும்….. ஆனா அங்க போனா கண்டிப்பா போலீஸ் கம்ப்ளெயின்ட் நம்பர் இல்லாம டெஸ்ட் எடுக்க மாட்டாங்க…… ஸோ நீங்க இங்கேயே டெஸ்ட் எடுத்துக்கோங்க…… உங்க ஒயிஃபை கன்சன்ட் ஃபார்ம்ல சைன் பண்ண சொல்லுங்க….. 


சார்….. அவ ஒத்துக்க மாட்டா சார்……


அப்புறம் உங்க இஷ்டம்….. இங்கே ஃபர்ஸ்ட் எய்டு டிரீட்மெண்ட் முடிஞ்சதும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில ஷிஃப்ட் பண்ணிட்டு ஃபார்மலா கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ணிட்டு அதுக்கு பிறகு டெஸ்ட் எடுக்க உங்களுக்கு சம்மதமா?


சார்…..‌வேண்டாம் சார்….. நான் உஷா கிட்ட பேசி புரியவைக்கிறேன்….. என்று சொல்லி விட்டு அவளருகில் போய் அமர்ந்தான்.


உஷா….. அம்மா கிட்ட சொல்லிட்டியா?


ஹாங்….. சொல்லிட்டேன் மேத்யூ…… கொஞ்சம் பயந்தாங்க….. டாக்டர் பயப்படற மாதிரி எதுவும் இல்லை ன்னு சொன்னதை சொல்லிட்டேன்…… அப்புறம் கொஞ்சம் நிம்மதியாக இருக்காங்க……


உஷா….. உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்…..


என்னடா….. சொல்லு……


இன்ஸ்பெக்டர் சார்….. என்று ஆரம்பித்து அவர் சொன்ன அனைத்தும் சொல்லி முடித்தான்.


அவன் சட்டை தன் இருகைகளாலும் பிடித்து……


என்னடா சொல்ற…..


அதான் சொன்னேனே டி….. அவ பக்கத்துல இருந்து ஒருத்தன் எழுந்து ஓடி இருக்கான்….. அதான் இன்ஸ்பெக்டர் சந்தேக படறார்.


இல்லடா….. என்னால முடியாது. அவளை பார்த்தாலே தெரியுது….. அவளுக்கு எதுவும் நடக்கல….. விழுந்ததில் தான் தலைல அப்புறம் கை கால்ல சிராய்ப்பு இருக்கு….. மத்தபடி எதுவுமில்லை…… வேண்டாம்….. எந்த டெஸ்ட்டும் வேண்டாம்.


ஏய்….. புரிஞ்சிக்க டி….. இன்ஸ்பெக்டர் பார்த்ததால தான் சொல்றாரு….. இங்கு டெஸ்ட் பண்ணினா போலீஸ் கம்ப்ளெயின்ட் எதுவும் இல்லாம நம்ம விருப்பத்துல எடுத்த மாதிரி இருக்கும். நம்ம இதுக்கு ஒத்துக்கல ன்னா….. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஷிஃப்ட் பண்ணி லீகலா கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ணி டெஸ்ட் எடுக்க சொல்றாரு.


என்னடா சொல்ற….. எனக்கு ரொம்ப பயமா இருக்கு…..


பயப்படாத உஷா….. நம்ம நிஷாவுக்கு ஒண்ணும் நடந்திருக்காது….. நீ கையெழுத்து மட்டும் போடு…… டெஸ்ட் எடுத்திட்டா நம்ம இங்கிருந்தே நம்ம வீட்டுக்கு போயிடலாம்…..


சரி….. என்று கண்கள் கலங்க சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள்.


டாக்டரிடம் சொல்லி ஃபார்மில் சைன் போட்டாள்.


இன்ஸ்பெக்டர் கான்ஸ்டெபிளிடம் சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.


அரைமணி நேரத்திற்கு பிறகு…..


உஷா மற்றும் மேத்யூவை கூப்பிட்டார் டாக்டர்.


பயந்தவாறே உள்ளே சென்று அமர்ந்தாள் உஷா.


அந்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு.


நீங்க பயப்பட தேவை இல்லை மா….. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல….. இன்ஃபேக்ட் அவங்க வெர்ஜின் தான்.


தேங்க்ஸ் டாக்டர்….. தேங்க் யூ ஸோ மச்….. என்றாள் உஷா.


தேங்க்ஸ் டாக்டர்…..‌என்றான் மேத்யூ……


இன்ஸ்பெக்டருக்கு கால் செய்தார் கான்ஸ்டெபிள்.


டாக்டர் ரிப்போர்ட் பற்றி கூறினார்.


ஓகே….. மறக்காம அவங்க மூணு பேர் கிட்டேயும் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வந்திடுங்க…..


ஓகே சார்……


கண் விழித்தாள் நிஷா.


உஷா அவளருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து கொண்டாள்…..


மேத்யூ நிஷா விடம்…..


இப்போ எப்படி மா இருக்க….. என்றான்.


ஒண்ணும் பிரச்சனை இல்லை அத்தான்….. லேசான அடி தான்….. ஆனா ஏன் மயக்கம் வந்துச்சுன்னு தெரியல……


சரிமா….. கவலைப்படாதே….. எல்லாம் சரி ஆகிடும்….. நான் போய் பில் பே பண்ணிட்டு மருந்து வாங்கிட்டு வரேன்….. என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் மேத்யூ.


என்னாச்சு டி…… என்றாள் உஷா நிஷாவிடம்.


தெரியல அக்கா….. நான் சைக்கிள்ல வந்தேன்….. யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரி தெரிஞ்சது…… திரும்பி பார்த்தேன் யாரும் இல்லை….. பயந்து வேகமாக சைக்கிளை மிதித்தேன்….. அப்போ ஒரு கல் மேல ஏத்தி பேலன்ஸ் மிஸ் ஆகி விழுந்திட்டேன்….. அப்போ அந்த உருவம் என் கிட்ட வரமாதிரி இருந்துச்சு….. ஆனா மயங்கிட்டேன்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் எதுவுமே ஞாபகம் இல்ல….. என்றாள் நிஷா.


ஓகே டி….. ரிலாக்ஸாக இரு….. என் கிட்ட சொன்னது எல்லாத்தையும் இவர் கிட்டேயும் சொல்லு……


என்னாச்சு அக்கா….. எதுக்கு போலீஸ் வந்திருக்காங்க…… என்றாள் நிஷா.


நீ மயக்கிய போது போலீஸ் தான் உன்னை முதலில் பார்த்து எங்களுக்கு தகவல் சொல்லி….. நான் ஆட்டோவில வந்து உன்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு வந்தேன்.


ஓ……அப்போ நீ வர வரைக்கும்…..என்னை அங்கேயே போட்டு வச்சிருந்தாங்களா டிரீட்மெண்ட் கூட கொடுக்காம…..


இல்லடி….. அவங்க கூட லேடி போலீஸ் இல்ல….. அதான் அவங்க என்னை கூப்பிட்டாங்க….. அவங்களுக்கும் ரூல்ஸ் இரூக்கு….. உன் தலையில் அடிப்பட்டு வந்த ரத்தத்தை தன் கர்சீப்பில் துடைத்து…… மேலும் ரத்தம் வழியாமல் அதையே வைத்து முதலுதவி செஞ்சிட்டு தான் இருந்தாங்க……


சரி….. வா எனக்கு ஒண்ணும் இல்ல…… வீட்டிற்கு போகலாமா?…… அடி வயிறு வலிக்குது பீரியட்ஸா ன்னு தெரியல…..


உன் கிட்ட மறைக்க எனக்கு விருப்பம் இல்லை நிஷா…..


என்ன அக்கா?


உனக்கு டெஸ்ட் எடுத்தாங்க…..


என்ன சொல்ற உஷா…..


ஆமாம் டி…… என்று ஆரம்பித்து மேத்யூ சொன்னவற்றை கூறினாள் உஷா. 


கண்கள் கலங்கினாள் நிஷா.


நிஷா……


ஹூம்……


இந்த விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும்….. வீட்டில் அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.


அமைதியாக இருந்தாள் நிஷா.


சரி நான் வெளியே இருக்கேன்….. போலீஸ் கிட்ட நடந்தவற்றை சொல்லு….. அப்புறம் வீட்டுக்கு போகலாம்.


சரி….. என்று தலையை ஆட்டினாள்.


கான்ஸ்டெபிள் நிஷாவிடம் கேள்வி கேட்டு…. அதன் பதிலை ரெக்கார்டு செய்து கொண்டார்.


சரிம்மா….. அவ்வளவு தான்….. என்று சொல்லி ரெக்கார்டிங்கை ஆஃப் செய்து விட்டு எழுந்தார்.


சார்….. 


சொல்லுமா…..


ஒண்ணு கேட்கலாமா?


கேளும்மா……


நீங்க இருந்தீங்களா நான் மயங்கிய இடத்தில்?


இருந்தேன் மா…..


என் பக்கத்தில் இருந்து ஓடியவன் எப்படி இருந்தான்?


தெரியலை மா….. அவன் முகத்தில தான் லைட் அடிச்சோம்…… ஆனாலும் முகத்தை மூடிக் கொண்டு ஓடிட்டான்…… ரொம்ப தூரம் துரத்தி கொண்டு ஓடியும் அவனை பிடிக்க முடியல….. ஆனா கவலைப்படாதே எப்படியும் அவனை கண்டுப்பிடிச்சிடுவோம்….. ஆனா நீ எதற்கும் ஜாக்கிரதையா இரு…..


ஓகே சார்….. தேங்க்ஸ்….. என்று சொல்லி விட்டு.


மெதுவாக பெட்டில் இருந்து இறங்கினாள்.


உஷா வந்து அவளை கைத்தாங்களாக பிடித்து கொண்டாள்.


வெளியே இருந்த சேரில் அமர்ந்து இருந்தாள் நிஷா.


ஏய் மேத்யூ வரைக்கும் பெட்லையே படுத்துக் கொண்டு இருக்கலாம் இல்ல?


இல்லக்கா வேண்டாம்….. 


என்னடி டல்லா இருக்க?


அடி வயிறு ரொம்ப வலிக்குது….. அதைவிட மனசு ரொம்ப வலிக்குது.


அவள் தோளை தடவி சமாதானம் செய்தாள் உஷா.


மேத்யூ உஷாவிற்கு கால் செய்தான்.


சொல்லு மேத்யூ…..


பார்ஸ் எடுத்து வந்திருக்கியா?


இருக்குடா……


சரி ஒரு நிமிஷம் வா….. கொஞ்சம் பணம் பத்தல……


இரு இதோ வரேன்….. என்று சொல்லி விட்டு உஷா நிஷாவிடம்.


நிஷா….. இரு பில்லிங் கவுண்டருக்கு போயிட்டு வரேன்…… மேத்யூ கூப்பிடறாரு……


ஓகே அக்கா….. நீ போ….. நான் இங்கேயே வெயிட் பண்றேன்……


போலீஸ் கான்ஸ்டபிள் மேத்யூ மற்றும் உஷா நிஷாவிடம் கையெழுத்து வாங்கி கொண்டு கிளம்பி சென்றார்.


அவர் சென்றதும்…..


நிஷா….. என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.


அங்கே தினேஷ் நின்று கொண்டு இருந்தான்.


அவளுக்கு எப்படி அவனிடம் பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.


வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு…..


ஹாய்….. என்று சொல்லி ஸ்மைல் செய்தாள்.


என்னாச்சு நிஷா….. தலை கைல எல்லாம் பேண்ட் எய்டு…


சைக்கிளில் இருந்து விழுந்திட்டேன்…… அதான் லேசா அடிப்பட்டிருச்சு……


 கொஞ்சம் கேர்ஃபுல்லா போயிருக்கலாமே…..


இல்ல நான் பார்த்து தான் போனேன்…..


நல்லவேளைங்க சைக்கிள்ல போகவே கம்மியா அடி பட்டிருக்கு….. இதுவே பைக்ல போயிருக்கும் போது விழுந்திருந்தா ரொம்ப அதிகமா அடிப்பட்டு இருக்கும்…..ரொம்ப வலிக்குதா?…..


இல்ல ….. வலிக்கல….. பெயின் கில்லர் கொடுத்திருக்காங்க….. அவ்வளவா பெயின் இல்ல…..


ஓ….. ஓகே…… டேக் கேர்……


தேங்க்ஸ்……


சாரி நிஷா….. இன்னைக்கு மார்னிங் என்னால வரமுடியல….. எங்க அம்மாவுக்கு ஷூகர் அதிகமாகி மயங்கி விழுந்திட்டாங்க….. அதான் ஹாஸ்பிடலுக்கு வரவேண்டியதா போச்சு…… ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா?


இல்ல அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல….. 

இப்போ ஆன்டிக்கு….. எப்படி இருக்கு?


சாரி….. அப்படி சொல்லலாமா?


ஓ…. எஸ்….. நீங்க கண்டிப்பா என்னைவிட சின்ன பொண்ணா தான் இருப்பீங்க….. நீங்க ஆன்டின்னு சொன்னா தப்பில்லையே……


ஓகே….. எப்படி இருக்காங்க……


நௌ ஷீ ஈஸ் ஃபன்….. ஆமாம் நீங்க யார் கூட வந்தீங்க…..


அதோ….. அவங்க என் அக்கா….. என்று கை காட்டினாள்.


ஓ….. ஓகே…… டேக் கேர்….. பை…..


பை……


தினேஷ் திரும்ப வந்து…..


நீங்க தப்பா நினைக்கல ன்னா…….

உங்க ஃபோன் நம்பர் தரீங்களா?


என் வசம் நானில்லை என் உயிரே…….

வசம் -11


ஒரு நிமிடம் யோசித்து விட்டு……


ஓகே….. என்று சொல்லி தன் ஃபோன் நம்பரை கொடுத்தாள்.


தேங்க்ஸ்….. நான் வாட்ஸ் அப்பில் மெஸேஜ் பண்றேன்….. என் நம்பரை ஸேவ் பண்ணிக்கோங்க…..


ஓகே ……


சீக்கிரமா உங்களுக்கு சரியாக நான் பிரே பண்ணிக்கிறேன்…..‌என்றான் தினேஷ்.


முதல்ல உங்க அம்மாவுக்கு சரி ஆகனும் ன்னு பிரே பண்ணுங்க….. அப்புறம் எனக்கு பிரே பண்ணலாம்…… என்றாள் சற்றே கோபமாக.


இதை சற்றும் எதிர்பார்க்காத தினேஷ்…..


சாரி….. நீங்க ஏதோ மூட் அவுட்ல இருக்கீங்க போல….. பை….. ஒன்ஸ் அகெயின் சாரி….. என்று சொல்லி விட்டு சென்றான்.


தன் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்த தினேஷ்.


ஏன் அவ இப்படி பேசினா….. நாம என்ன தப்பா சொல்லிட்டோம்….. ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசறேன்னு நினைக்கிறாளா?…… சாரி சொல்லி மெஸேஜ் பண்ணலாமா?

இல்ல வேண்டாம்….. அதுக்கும் அவ தப்பா நினைச்சிக்க போறா……நாம இனிமே அவளா பேசினா தான் பேசனும்….. என்று நினைத்து கொண்டான் தினேஷ்.


அவளுக்கே சற்று சங்கடமாக இருந்தது. சே….. நான் ஏன் இப்படி பேசினேன்…. அன்னைக்கு அப்படி திட்டியவன் இன்னைக்கு இவ்வளவு பொறுமையா பேசறான்…… என்று நினைத்து கொண்டாள்.


யாருடி அது….. என்றாள் உஷா.

தினேஷ் சென்ற போது அவள் வந்தாள்.


அது அப்புறம் சொல்றேன்….. எனக்கு மனசு சரியில்லை….. சீக்கிரமா வீட்டுக்கு போகலாமா?……


ஹூம் முடிஞ்சிடிச்சு….. போகலாம்…… என்றாள் உஷா.


அடுத்த அரைமணி நேரத்திற்கு பிறகு மூவரும் கிளம்பி ஒரு ஆட்டோ புக் செய்து சென்றனர்.


கிளம்பும் வரை பார்த்தாள் தினேஷ் வரவில்லை. எந்த ரூம்…. ஃபிளோர்…. அவனுடைய அம்மா பெயர் எதுவும் தெரியவில்லை….. அவசர பட்டு அப்படி பேசிட்டோமே….. அவனுடன் ஃபிரெண்டுஷிப்பை வளர்த்து கொள்ள தானே நினைத்தோம்….. என்றெல்லாம் யோசித்து கொண்டு இருந்தாள். அடிவயிற்றில் வலி அதிகமாக இருந்ததால் அதற்கு மேல் அவளால் மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க முடியவில்லை. 


வீட்டிற்கு சென்றதும்…..


அம்மா….. என்று சொல்லி சாந்தியை கட்டிப்பிடித்து கொண்டாள் நிஷா.


என்னம்மா ஆச்சு?….. நீ எப்பவுமே மெதுவாக தான சைக்கிளில்ல போவ….. இப்போ என்னாச்சு?


இருட்டில் கல்லு இருப்பது தெரியல….. அதான் மா தடுக்கி விழுந்திட்டேன்….. என்று திக்கி திணறினாள் நிஷா.


ஓ….. விடுமா….. அடிப்பட்டதை திருஷ்டி கழிஞ்ச மாதிரி நினைச்சிக்கலாம்…..


என்னம்மா நீ….. அவ போய் படுக்கட்டும்….. விடுங்க….. காலையில பேசிக்கலாம். மாத்திரையை போட்டுக்கொண்டு நல்லா தூங்கி எழுந்திரு….

 போ…… போய் படு….. கண்களால் அம்மாவிடம் எதுவும் சொல்லாதே என்று ஜாடை செய்தாள் உஷா.


தலை அசைத்தாள் நிஷா.


மாத்திரையை போட்டுக்கொண்டு தன் ஃபோனை எடுத்தாள். ஹேண்ட் பேக் கீழே விழுந்ததில் லேசாக டெம்பர்டு கிளாஸ் உடைந்து இருந்தது…… அதில் ஏதோ ஆப் ஆனில் இருந்தது. ஏதேச்சையாக ஃபோன் விழுந்ததில் வீடியோ ரெக்கார்டு ஆகி இருந்தது…… இருட்டாக இருந்ததால் வீடியோ தெரியவில்லை….. லேசாக ஆடியோ கேட்டது. உடனே தன் பேகில் இருந்த ஹெட் ஃபோனில் கனெக்ட் செய்து சவுண்ட் அதிகமாக வைத்து கேட்டாள்.


ஏய்….. என்ன யாருன்னு நினைச்ச….. பிரமோத் டி….. என்பதில் இருந்து. 

அவள் இதழ்களை அவன் சிவப்பு பழம் போல இருக்கு…. என்று சொல்லும் வரை எல்லாமே ரெக்கார்டு ஆகி இருந்தது.

குரலிலேயே அவன் தான் என்று தெரிந்து கொண்டாள். முந்தைய நாள் ரெக்கார்டிங்கையும் போட்டு கேட்டாள். சந்தேகமே இல்லை…… அவனே தான். 


அக்கா…..அக்கா….. என்றாள் மெதுவாக எழுந்து சென்று அவர்கள் ரூம் கதவை தட்டி……


என்னடி….. என்னாச்சு….. உடம்பு முடியலையா?….. என்றாள் உஷா.


இல்லக்கா….. இதைக் கேளு….. என்று சொல்லி போட்டுக் காட்டினாள்.


அச்சச்சோ….. என்ன பண்றது மேத்யூ….. என்றாள் உஷா மேத்யூவிடம்.


போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திடலாம்.


வேண்டாம் டா….. ஏதாவது பிரச்சனையா ஆகிடப் போகுது.


கம்ப்ளெயின்ட் கொடுக்கலைன்னா தான் பிரச்சனை ஆகும்…… அந்த ஆள் மறுபடியும் நம்ம நிஷா கிட்ட பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்கு. போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டா மாட்டிக்குவோம்ன்னு பயந்து இவ பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான்.


ஆமாம் அக்கா….. அத்தான் சொல்றது கரெக்ட் மாதிரி தான் தெரியுது.


அப்பா கிட்ட இதை பத்தி சொல்லாம எப்படி….. என்றாள் உஷா.


நாளைக்கு காலைல மாமா டியூட்டி முடிச்சிட்டு வருவாரு இல்ல….. அப்போ அத்தை மாமா ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிடலாம்.


ஓகே…… என்றனர் இருவரும். 


சரிடி….. நீ போய் தூங்கு. மாத்திரை போட்டுகொண்டு இவ்வளவு நேரமா தூங்காம இருந்தா மயக்கம் வரும்.


ஹூம்….. என்று சொல்லி விட்டு போய் படுத்தாள் நிஷா.


தன் ஃபோனை எடுத்து வாட்ஸ் அப்பில் எதாவது மெஸேஜ் வந்திருக்கா என்று பார்த்தாள். எதுவும் இல்லை. அவனுடைய நம்பரை வாங்கி இருந்தால் நாமாவது மெஸேஜ் பண்ணி சாரி சொல்லி இருக்கலாமே….. என்று நினைத்து கொண்டாள் நிஷா.


தன்னிடமே பேசிக்கொண்டாள் நிஷா.


ஏன்டி இப்படி பண்ண….. உன் மேல அக்கரையோட தான அவன் அப்படி சொன்னான். காலைல வரமுடியல ன்னு அவனோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத நேரத்திலும் உன் கிட்ட வந்து சாரி சொன்னான்…. உனக்கு சரி ஆகனும் ன்னு பிரே பண்றேன் ன்னு சொன்னான். சரியான லூசு டி நீ….. என்று ஃபோனில் கேமராவை ஆன் செய்து தன்னையே பார்த்து பேசிக் கொண்டாள். பின்னர் மாத்திரையின் மயக்கத்தில் தூங்கிவிட்டாள் நிஷா.


#############


மறுநாள் காலை……


டியூட்டி முடிந்து வீட்டிற்கு வந்தார் சங்கர்.


சாந்தி….. கொஞ்சம் இஞ்சி டீ போட்டு குடுமா….. என்றார்.


டீயை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார் சாந்தி.


ஏங்க…..


என்னம்மா…..


நம்ம நிஷாவுக்கு அடி பட்டிருக்கு…..


அச்சச்சோ….என்னாச்சு?


அப்போது வந்து அமர்ந்தனர் உஷா மற்றும் மேத்யூ.


என்னாச்சு உஷா….. நிஷா எப்படி இருக்கா….. என்று சற்று பதட்டமாக கேட்டார்.


அப்பா….. எனக்கு ஒண்ணும் இல்ல….. பயப்படாதீங்க….. என்றாள் நிஷா.


வாம்மா….. என்று சொல்லி அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து அவள் தலையை தொட்டு பார்த்தார். என்னம்மா ரொம்ப வலிக்குதா?


இல்லப்பா…. வலி லேசா தான் இருக்கு…..

அப்பா….. அம்மா….. உங்க ரெண்டு பேர் கிட்டேயும் முக்கியமான விஷயம் சொல்லனும்……


என்னம்மா?….. சொல்லு… என்றார் சங்கர் 


என்னடி யாராவது உன் மண்டைல அடிச்சிட்டாங்களா….. நாங்க பயந்திட போறோம் ன்னு சைக்கிளில் இருந்து கீழே விழுந்திட்டேன் ன்னு சொன்னீயா?….. என்றார் சாந்தி.


அம்மா….. கொஞ்ச நேரம் அமைதியா இரு….. நாங்க சொல்லபோறதை பொறுமையா கேளு….. என்றாள் உஷா.


அக்கா….. எத்தனை முறை உன் கிட்ட சொல்லி இருக்கேன் அம்மா கிட்ட அப்படி பேசாதே ன்னு…..


ஏய்…. போடி லூசு….. இப்போ எவ்வளவு முக்கியமான விஷயம் பேசப் போறோம்……அதை விட்டுட்டு இப்போ அம்மா கிட்ட மரியாதையா பேசு ன்னு கிளாஸ் எடுக்குற…… என்றாள் உஷா.


எனக்கு இதுவும் முக்கியம் தான்.


சரிம்மா தாயே….. இனிமே நம்ம அம்மாவை வா போ ன்னு சொல்லாம வாங்க போங்க ன்னு சொல்றேன்….. சரியா?….. என்றாள் உஷா.


ஓகே….. என்றாள் நிஷா.


சரி விஷயத்துக்கு வருவோம்….. என்றான் மேத்யூ.


சொல்லுங்க தம்பி…..‌என்றார் சாந்தி சற்று பதட்டமாக.


பதட்டப்படாமல் கேளுங்க ரெண்டு பேரும்….. என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தான் மேத்யூ.


நாம கும்பிடும் அங்காளம்மா தான் உன்னை காப்பாத்தி இருக்கா….. என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாந்தி.


அம்மா….. என்றாள் உஷா.


உண்மையிலேயே தான் டி……நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ…… என்றார் சாந்தி.


உங்களுக்கு சீக்கிரமா சரியாகனும் ன்னு நான் பிரே பண்ணிக்கிறேன்….. என்று தினேஷ் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.


சரி….. விஷயத்தை முழுசா சொல்லிடறேன் கேளுங்க….

இப்போ போலீஸ் ஸ்டேஷனில் போய் நிஷா கிட்ட இருக்கும் ரெக்கார்டிங்கை எவிடென்ஸா சப்மிட் செய்து கம்ப்ளெயின்ட் கொடுத்து விட்டு வந்திட்டா அப்புறம் நமக்கு பிரச்சனை இல்லை….. என்றான் மேத்யூ.


எதுக்கு பா போலீஸ் எல்லாம்……


இல்ல மாமா….. அப்போ தான் நம்ம நிஷாவுக்கு பிரச்சனை இருக்காது.


பயமா இருக்கு தம்பி…. போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டோம் ன்னு தெரிஞ்சா அவன் நிஷாவ எதாவது செஞ்சிட்டா…..


அப்படி எல்லாம் பண்ண முடியாது அத்தை….. நிஷாவுக்கு பிரச்சனைன்னா முதல்ல அவனை தான் கேள்வி கேட்பாங்க….. அதுக்கு பயந்துக்கிட்டே அவன் நிஷா பக்கமே வரமாட்டான்.


ஒருவழியாக இருவரும் சம்மதம் சொன்னவுடன்….. நிஷா மற்றும் மேத்யூ பத்து மணி அளவில் இருவரும் பைக்கில் சென்றனர். உஷா கம்பியூட்டர் சென்டருக்கு சென்றாள். சங்கர் நைட்டு ஷிஃப்ட் முடித்துவிட்டு வரவே படுத்து தூங்கினார். சாந்தி குழந்தை ஷாலினியை பார்த்துக் கொண்டு இருந்தார். 


நிஷா லீவு போட்டு விட்டாள். மேனேஜருக்கு மெஸேஜ் செய்தாள்.


சிக்னலில் நிற்க்கும் போது….. தினேஷ் நிஷாவை பார்த்தான்.




இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.