முன்னுரை மற்றும் பாகம் 1

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

என் வசம் நானில்லை என் உயிரே…..

நம் கதையின் கதாநாயகன் – தினேஷ்


நம் கதையின் கதாநாயகி – நிஷாந்தி


கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.


தினேஷ் கேரக்டர் – அப்பர் மிடில் கிளாஸ். நல்ல திடகாத்திரமான உடம்பு. உடற்பயிற்சி செய்து தன் உடம்பை கட்டக்கோப்பாக வைத்திருக்கிறான். கோதுமை நிறம் கொண்டவன். எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நல்லது கெட்டதை எல்லாம் யோசித்து பின்னர் அந்த வேலையை செய்வான்.


அவ்வாறு அவன் தேர்ந்தெடுத்து சேர்ந்தது தான் இந்த கம்பனி. இதற்கு முன் மூன்று கம்பெனிகளை இவன் நிராகரித்து விட்டான். மற்றவர்களின் கருத்தை கேட்டாலும் தன் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்வான்.


அவனுக்கு ஒரு தங்கை பெயர் தன்ஷிகா காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறாள் – கம்பியூட்டர் என்ஜினியரிங்.

அப்பா – சுவாமிநாதன் – போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் 

அம்மா – திலகவதி – ஸ்கூலில் மேத்ஸ் டீச்சர்.

நிஷாந்தி கேரக்டர் – மிடில் கிளாஸ். நம் கதாநாயகி நிஷாந்தி மிகவும் அழகானவள். +2 முடித்துவிட்டு கம்பியூட்டர் கோர்ஸ் படித்தாள். அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் பில்லிங் கவுண்டரில் வேலை செய்கிறாள். 


நிஷாந்தியின் அக்கா – உஷா திருமணம் ஆகி 2 வயதில் மகள் இருக்கிறாள் ‌. மகள் பெயர் – ஷாலினி.

அக்காவின் கணவர் – மேத்யூ – சொந்தமாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். 


உஷா கம்பியூட்டர் கோர்ஸ் படிக்க சென்ற போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். அங்கே தான் நிஷாவும் கம்பியூட்டர் கோர்ஸ் படித்தாள். மேத்யூ நல்லவன். தன் மனைவியின் தங்கையை தன் தங்கை போல நினைத்து பழகுவான். 


உஷா மற்றும் மேத்யூ இருவரும் சேர்ந்து கம்பியூட்டர் சென்டரை நடத்தி வருகின்றனர். 

நிஷாவின் அப்பா – சங்கர் – ஹீரோ வேலை செய்யும் கம்பெனியில் செக்கியூரிட்டி.

நிஷாவின் அம்மா – சாந்தி – ஹவுஸ் ஒயிஃப். 

நிஷாவுக்கு அவளுடைய அம்மா என்றாள் உயிர் ஆகையால் அவருடைய பெயரை தன் பெயருடன் சேர்த்து கொண்டாள்.


முன்னுரை:


இது ஒரு உன்னதமான காதல் கதை.


கதை தொடக்கம்:


தினேஷ் ஒரு பிரபலமான கம்பெனிக்கு வேலைக்கு வருகிறான். அந்த கம்பனியில் செக்கியூரிட்டி வேலை செய்யும் சங்கரின் மகள் தான் நம் கதாநாயகி நிஷாந்தி.


நிஷாந்தி வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் தான் நம் கதாநாயகனின் வீடு. அவர்கள் அனைவருமே அந்த கடைக்கு வந்து தான் எல்லா பொருட்களையும் வாங்குவார்கள் தினேஷைத் தவிர. 

இதுவரை நம் ஹீரோவும் ஹீரோயினும் சந்தித்ததில்லை.


படிப்பறிவும் பொது அறிவும் அதிகமாக உள்ளதால் நம் கதாநாயகனுக்கு அந்த கம்பனியில் உயர் பதிவி கிடைத்துள்ளது. மேலும் எம்.டெக் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்ததால் ஆரம்ப சம்பளமே மாதத்திற்கு இரண்டு லட்சம். 


அவனுடைய தினசரி வேலை, காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து விட்டு ஜாகிங் செல்வான். பின்னர் தன் வீட்டில் வைத்திருக்கும் டிரெட்மில்லில் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு. குளித்து விட்டு ரெடியாகி கார்ன்ஃபிலேக்ஸ் பால் கலந்து சாப்பிடுவான் அல்லது பிரெட் சான்ட்விஜ் செய்து சாப்பிடுவான். மேலும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுவான். 


மதியத்திற்கு நிறைய காய்கறிகளுடன் இரண்டு சப்பாத்தி ஒரு கப் பிரௌன் அரிசி சாதம் சாப்பிடுவான். இரவு பழங்கள் மற்றும் பால் மட்டுமே சாப்பிடுவான். இடை இடையே பச்சை பயிறு சுண்டல், மூக்கடலை சுண்டல், பழச்சாறு என சாப்பிட்டு தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு இருந்தான்.


ஆனால் நம் கதாநாயகியோ அவனுக்கு அப்படியே நேர் எதிர். அவளுடைய அம்மா செய்யும் சமையலுக்கு அவளின் நாக்கு அடிமை. காலையில் கூட ஒரு தட்டு நிறைய புளிசாதம் சாப்பிடுவாள். குண்டு என்று சொல்ல முடியாது. ஓரளவு பூசினாற்போல இருப்பாள் நம் நாயகி நிஷா. 


நம் கதாநாயகனை விட நிறம் கொண்டவள். ஆனால் ஃபேர் என்ற சொல்ல முடியாது.

(நண்பர்களே நீங்கள் அந்த கதாபாத்திரத்தை கற்பனை செய்து கொள்ளவே இவ்வாறு குறிப்பிடுகிறேன். மற்றபடி நிறம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் கிடையாது)


உஷா மற்றும் அவளுடைய குடும்பம் பக்கத்து தெருவில் இருக்கிறது. தினமும் காலை 9 மணி அளவில் குழந்தை ஷாலினியை அவளுடைய அம்மாவிடம் விட்டு விட்டு தன் கணவருடன் கம்பியூட்டர் சென்டருக்கு செல்வாள்.


நிஷாவிற்கு ஷிஃப்ட் மாறி மாறி வரும். 11 மணி நேர வேலை அதில் ஒரு மணி நேரம் பிரேக். 


காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை


மாதம் 15000 சம்பளம். வெள்ளி, சனி ஞாயிறு மட்டும் விடுமுறை எடுக்கக் கூடாது. மற்ற தினங்களில் ஒரு நாள் லீவு எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் நிஷாவுக்கு காலை பத்து முதல் இரவு ஒன்பது டியூட்டி தான் கிடைக்கும். 


அவள் லஞ்ச் டைமில் அவளுக்கென்று ஒரு டிஃபன் பாக்ஸூம் மற்றவர்களுக்கு ஷேர் செய்ய ஒன்றும் கொண்டு வந்துவிடுவாள். அவளுடைய அம்மா சமையலுக்கு அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் அனைவருமே அடிமையாகி விட்டனர். 


“எப்படி டி உங்க அம்மா செய்யறாங்க? இவ்வளவு டேஸ்டியா இருக்கு” என்பார்கள்.


அவளுடைய அப்பாவும் ஷிஃப்ட் மாறி மாறி தான் வேலைக்கு செல்வார்.


தினேஷின் அப்பா போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள். 


மிகவும் நேர்மையானவர் அதனால் கான்ஸ்டெபிளாக இருந்தவர் கடந்த இருபது ஆண்டுகளில் ஹெட் கான்ஸ்டபிளாக பிரமோஷன் பெற்றிருக்கிறார்.


அம்மா ஒரு பிரைவேட் ஸ்கூலில் கணக்கு டீச்சராக வேலை செய்கிறார். தினேஷ் மற்றும் தன்ஷிகா அங்கு தான் பள்ளி படிப்பை முடித்தார்கள். 


தன்ஷிகா கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறாள். ஒருதலையாக யோகேஷை காதலிக்கிறாள். யோகேஷ் காலேஜ் பிரின்ஸ்பாலின் மகன் மற்றும் ஸ்டூடேன்ட்ஸ் சேர்மன். அவன் பி.ஈ. ஃபைனல் இயர் படிக்கிறான். அவன் மேல் பல பெண்களுக்கு காதல் இருந்தாலும் அவனுக்கும் தன்ஷிகாவின் மேல் தான் விருப்பம் இருந்தது. ஆனால் இருவரும் தங்கள் காதலை சொல்லிக்கொள்ள வில்லை.


இனி கதைக்குள் செல்லலாம்.


நண்பர்களே கதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

என் வசம் நானில்லை என் உயிரே.


வசம் -1


“அம்மா, சீக்கிரம் மா. டைம் ஆகுது” என்றாள் நிஷா.


“இந்தா புடி, எப்பவுமே கடைசி நேரத்தில தான் பண்ணுவ. ஒரு பத்து நிமிஷம் முன்னாடி எழுந்தரிக்கலாம் இல்ல? அம்மா தனியா கிட்சன்ல கஷ்டம் படறாங்க ன்னு உனக்கும் உங்க அக்காவுக்கும் கொஞ்சமாவது நினைப்பு இருக்கா?” என்று புலம்பினார் சாந்தி.


“அம்மா, நாங்க கிட்சனுக்குள்ள வந்தோம்ன்னா அப்புறம் உங்க சமையல் ருசி மாறிடும். அதான் நாங்க வரல. அதான் உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்றோம் இல்ல? அக்கா சாயந்திரம் வந்து பாத்திரம் தேய்கிறா. நான் துணி துவைக்கிறேன்” என்றாள் நிஷா.


“அவ பாத்திரம் தேய்கிறான்னு வேணும்னா சொல்லு. நீ எங்கே துணி துவைக்கிற? காலைல லேட் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு போயிடற. நைட்டு டயர்டா இருக்குன்னு சொல்லிடற”


“அம்மா, அதான் வாரத்தில ஒரு நாள் லீவுல எவ்வளவு துணி துவைக்கிறேன். அது தெரியலையா உங்களுக்கு?”


“அது எல்லாமே உன் துணி. எங்களோடது எதுவும் இல்லை அதுல. அப்புறம் எப்படி அது எனக்கு ஹெல்ப் ஆகும்?”


“அதான் உங்களுக்கு கஷ்டம் கொடுக்காம நானே என் துணியை துவைச்சிக்கிறேன் இல்ல? உங்களையா என் துணியை துவைக்க சொல்லி கேட்கிறேன்?”


“அடிப்பாவி, கேட்டுத் தான் பாரேன். விளக்குமாறு பிஞ்சிடும்” என்று சொல்லி முறைத்தவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து, அவர் கையில் வைத்து இருந்த லஞ்ச் பேகை வாங்கிக் கொண்டு,


“அம்மா, தக்காளி சாதம் சூப்பர். அதுக்கு இன்னொன்று” என்று சொல்லி மறுபக்க கன்னத்தில் முத்தமிட்டாள் நிஷா.


கோபம் போய் விட்டது. சிரித்தார் சாந்தி.


“ஓகே அம்மா பை. என் அம்மான்னா அம்மா தான். சிரிச்சா அப்படியே மகாலக்ஷ்மி போல இருக்கீங்க” என்றாள்.


“இப்போ டைம் ஆகலையா?”


“அச்சச்சோ, பை” என்று சொல்லி தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள்.


அப்போது ஷாலினியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் உஷா.


“ஹாய் சித்தி” என்றாள் ஷாலினி மழலை மொழியில்.


“செல்லக்குட்டி” என்று சொல்லி அவளின் கன்னத்திலும் ஒரு உம்மா கொடுத்துவிட்டு,

“பை அக்கா, பை மாமா” என்று சொல்லி விட்டு சைக்கிளை மிதித்து கொண்டு வேகமாக சென்றாள்.


“பை டி, பை மா” என்ற அவர்கள் இருவரும் சொல்வது கூட காதில் விழவில்லை. அதற்குள் பத்தி அடி தூரத்தில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்றாள் நிஷா.


ஐந்து நிமிடத்தில் சூப்பர் மார்க்கெட் உள்ளே சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நினைத்து கொண்டே வேகமாக மிதித்தாள். அப்போது அந்த ஃபிளாட்டின் வெளியே தன் காரில் வந்தான் தினேஷ்.


அவனுடைய காரில் இடித்து கொண்டு கீழே விழுந்தாள் நிஷா.


“ஷிட்” என்று கத்திகொண்டே வெளியே வந்தான் தினேஷ்.


“ஏய், உனக்கு கண்ணு தெரியுமா? தெரியாதா? ரோட்டுல என்ன வருது ன்னு பார்க்காம அப்படியே வர?”


“சாரி சார், டைம் ஆயிடிச்சு. அதான்”


“எனக்கும் தான் டைம் ஆகுது. அதுக்காக? நான் ஸ்லோவா வரவே ஒண்ணும் ஆகல. இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?”


“அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல சார்?”


“சாரி சொல்லிட்டா? நீ உன்னோட டப்பா சைக்கிளை வச்சு இடிச்சு என் காரில் ஏற்பட்ட இந்த டென்ட்க்கு என்ன பண்றது?”


“சார், பிளீஸ் சார். நான் இங்கு தான் வேலை செய்யறேன். என் பெயர் நிஷா. ஈவினிங் வாங்க பேசிக்கலாம். இப்போ நான் போய் சைன் போடலன்னா எனக்கு லேட் ரெஜிஸ்டர் ஆயிடும். பிளீஸ்”


அவனுக்கும் மீட்டிங்கிற்கு டைம் ஆவதால்,


“ஓகே, ஆனா என்னை ஏமாத்தனும் ன்னு நினைக்காத?”


“சார், நாங்க எல்லாம் ஏழைங்க. ஏமாத்த நினைக்க மாட்டோம். காசுக்கும் ஆசை படமாட்டோம்”


“சரி சரி, ஓவரா பேசாத. எனக்கு உன் காசு எதுவும் வேண்டாம். என்னோட காருக்கு எவ்வளவு ஆகுதோ அதை மட்டும் கொடு போதும். சாயந்திரமா பில் வாங்கி கொண்டு வந்து தரேன்” என்று சொல்லி விட்டு சென்றான்.


பிறகு வேகமாக சென்று பயோமெட்ரிக் என்னும் இயந்திரத்தில் தன் விரல் வைத்து உள்ளே வந்ததிற்கான பதிவை செய்தாள் நிஷா.


“சூப்பர் டி, எப்படி கரெக்ட்டா ஒரு நிமிஷம் முன்னாடி வந்திடற?” என்றாள் சுமதி.


“நீ வேற, நான் இன்னைக்கு லேட் வாங்கிடுவேன்னு நினைச்சேன். ஆல்ரெடி ரெண்டு லேட் வாங்கிட்டேனா இப்போ வாங்கினா ஒரு நாள் லீவாயிடுமேன்னு பயந்து ஒருத்தன் கிட்ட பொறுமையா பேசிட்டு வந்தேன்”


“யாரு டி”


“யாரோ ஒருத்தன். தெரியாம அவன் கார்ல இடிச்சிட்டேன். அதுக்கு ஓவரா பேசினான். இதுவே வேற நேரமா இருந்தா கிழிச்சு தொங்கவிட்டிருப்பேன். ஷாலினி பர்த் டே வருது. அதுக்கு லீவு கேட்கப் போறேன். அதான் பல்லைக் கடிச்சிக்கிட்டு பொறுத்துக்கிட்டேன்”


“சரி விடு”


“அதெப்படி விடுவா இந்த நிஷா”


“பின்ன என்ன பண்ண போற?”


“ஈவினிங் வரச் சொல்லி இருக்கேன்”


“இங்கேயா?”


“ஆமாம்”


“ஏய் இன்னைக்கு சூப்பர்வைசர் வராரு டி”


“அச்சச்சோ. அதை மறந்திட்டேனே? அவன் வந்தான்னா வெளியே கூட்டிக்கிட்டு போய் அசிங்கமா திட்டிவிட்டு வரலாம்ன்னு நினைச்சேன். சூப்பர்வைசர் வந்தா நம்மலால வெளிய போக முடியாதே”


“சரி விடு, வந்தா பார்த்துக்கலாம்”


அதற்குள் கஸ்டமர்கள் வர ஆரம்பித்துவிடவே, அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டு வேலைகளை தொடங்கினர்.


ரவி அண்ணா, யாமினி, வேலு என்று அவளுடன் வேலை செய்பவர்களை அழைத்து அவர்களுக்கான வேலையை பிரித்து கொடுத்தனுப்பினாள் நிஷா.


பில்லிங் கவுண்டரில் எப்போதும் அவளும் சுமதியும் மட்டுமே இருப்பார்கள். எப்போதாவது யாமினி கேஷ் கவுண்டரில் வேலை செய்வாள். சுமதி அல்லது நிஷா லீவில் இருக்கும் போது. ஏனோ சுமதிக்கும் சரி நிஷாவிற்கும் சரி யாமினியை பிடிக்காது.


ஆண்களிடம் வழிந்து பேசுவாள். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச வரவில்லை என்றாலும் அங்கு வரும் ஆண்களிடம் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதிற்குள் இருப்பவர்களிடம் அப்படி பேசுவாள். 


என்ன பொண்ணு டி இவ….. என்றாள் சுமதி.


இவளுக்கு ஒரு இருபது வயசு இருக்குமா?…. என்றாள் நிஷா.


மேல இருக்கும்……


கல்யாணம் ஆகாத ஆம்பளைங்க கிட்ட இப்படி பேசினா கூட பரவாயில்லை….. ஏதோ ஒருத்தனாவது சிக்குவான் நினைச்சு பேசறா ன்னு சொல்லலாம். ஆனா கல்யாணம் ஆகி ஒயிஃப் கூட வர ஆம்பளைங்க கிட்ட கூட வழியிரா இவ….. சீ….. என்றாள் நிஷா.


அதெல்லாம் ஒரு ஆளு ன்னு அதை பத்தி பேசிக்கிட்டு இருக்க…..


இன்னைக்கு சூப்பர்வைசர் வராரே…..

இதுவரைக்கும் அவ சூப்பர்வைசரை பார்த்தது இல்லைல?


ஆமாம் டி….. நான் வேற லைஃப் ஜாக்கெட் எடுத்து கொண்டு வரல…..


என்னடி சொல்றே…..


ஆமாம் அவ ஊத்துர ஜொல்லுல இன்னைக்கு இந்த சூப்பர் மார்க்கெட்டே மூழ்க போகுது….. என்றாள் சுமதி.


ஹாஹாஹா என்று சற்று சுத்தமாக சிரித்தாள் நிஷா.


ஏய்….. என்றாள் சுமதி.


சாரி…. சாரி மேடம்….‌என்றாள் நிஷா அங்கே டிராலியை தள்ளிக் கொண்டு வந்து நின்ற பெண்ணை பார்த்து.


இட்ஸ் ஓகே மா….. நோ இஷ்யூஸ்….. சிரிக்கக் கூடாதா நீங்க எல்லாம்?


அச்சோ அப்படி எல்லாம் இல்லை மேடம்….. எங்க பிரேக் டைம்ல பேசி சிரிக்கலாம்….. இப்போ ஒர்க் டைம் இல்ல….. அதான்….. சாரி சொன்னேன்.


ஓ…. ஓகே….. என்று சொல்லி விட்டு பே பண்ணிவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பும் போது….


பை மா…. நைஸ் ஸ்மைலிங் ஃபேஸ் யூ ஹேவ்……என்றாள் அந்த பெண்மணி.


பை மேடம்….. தேங்க்ஸ்….தேங்க் யூ ஸோ மச்…..ஹேவ் எ நைஸ் டே மேடம்….. என்றாள் நிஷா.


சிரித்து கொண்டே….. யூ டூ மா….. என்று சொல்லி விட்டு சென்றார்.


வேலு….. என்று அழைத்தாள் நிஷா…..


அக்கா……


இதுல பிரைஸ் டேக் இல்ல பாரு…. கஸ்டமருக்கு வேற எடுத்துக் கொண்டு வா….. இதை ரவி அண்ணா கிட்ட கொடுத்து பிரைஸ் ஒட்டி அரேன்ஜ் பண்ண சொல்லு…..


ஓகே அக்கா….. என்று சொல்லி அவள் சொன்ன வேலையை செய்தான்.


மேடம்….. உங்களுக்கு ஷூகர் வேணுமா இல்ல ஆட்டா வேணுமா?


அம்மாடி ஷூகர் வேண்டாம்….. என் உடம்பு ஃபுல்லா இருக்கு….. ஆட்டா கொடு….. என்றார் அந்த வயதான பெண்மணி.


ஸ்மைல் செய்து விட்டு….. இந்தாங்க மேடம்…. என்று கொடுத்துவிட்டு.


கேஷ்ஷா கார்டா மேடம்…..


ஜிபே….. 


ஓகே மேடம்….. என்று சொல்லி கியூ ஆர் கோடை காண்பித்தாள்.


அம்மாடி….. இந்தா நீயே பே பண்ணிடு….. என்று சொல்லி தன் ஃபோனை கொடுத்தார்….. அந்த பெண்மணி.


இல்ல மேடம்….. நான் எப்படி….. உங்க பின் நம்பர் எல்லாம்….


நான் சொல்றேன் மா…..


அதுக்கில்ல மேடம்….. 


நானே தான மா சொல்றேன்….. ஒண்ணும் பிரச்சனை இல்லை….. 


ஓகே மேடம்….. என்றாள் நிஷா.


############


தொடரும்……

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

என் வசம் நானில்லை என் உயிரே……

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.