எழில் காரை நிறுத்த சத்யாவும் மற்றவர்களும் காரை விட்டு இறங்கினர்..
பழைய காலத்து வீடு கம்பீரமாய் இருக்க அதன் அழகில் சத்யா விழிகள் விரித்து பார்த்தவள் “வீடு ரொம்ப அழகா இருக்கு…”என்றாள்..
அதில் வள்ளி மென்னகை சிந்த எழில் காரில் இருந்து இறங்கியவன் “இங்க நின்னே பார்த்துட்டு இருக்க போறியா…”என்றவன் தன்னுடைய பாட்டியை நோக்கி சென்றான்.
பார்வதி எழுபது வயதிலும் கம்பீரமாய் இருக்க அவர் அருகில் சென்றவன் “பாட்டி…”என்றபடி அவரை அணைத்து கொண்டான்..
சதீஸ் லக்கேஜ் எல்லாம் எடுக்க வள்ளியும் சத்யாவும் பாட்டி அருகில் சென்றனர்..
எழில் பாட்டியிடமிருந்து விலகியதும் சத்யா “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி…”என்று சொல்லி பவ்யம்மாய் அவர் காலில் விழுந்தாள்..
“ம்ம்க்கும் கோல்டுமெடலிஸ்ட் ஆகட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டா…”எழில் முனுமுனுத்துகொள்ள
பாட்டி “நல்லா இரும்மா…”என்று ஆசீர்வாதம் செய்தவர் அவளை எழ சொல்லிவிட்டு திரும்பி எழிலிடம் “பார்த்தியா என் பேத்தியை எவ்வளவு மரியாதை தெரிஞ்சவளா இருக்கா… இது உனக்கு தெரியலயே…”என்றார்.
அவர் அவனை திட்ட அதற்கு அவனோ சத்யாவை முறைத்து பார்க்க அவளோ அவன் திட்டு வாங்குவதை ரசித்து பார்த்தாள்.
பின் அவளே “விடுங்க பாட்டி… அதான் நான் வந்துட்டேன்ல இனி அவருக்கு எல்லாம் நானே சொல்லி தர்றேன்… என்னங்க…”என்றவள் எழில் பார்க்கவும் கண் சிமிட்டினாள்..
“இவளை…”பல்லை கடித்தவன் பாட்டிக்கு அந்த வீட்டில் துணையாக இருக்கும் கண்ணகியை பார்த்து “அக்கா நீங்க எப்படி இருக்கீங்க?…”என கேட்டான்.
“நல்லா இருக்கேன் தம்பி…”
எல்லாரும் எல்லாரையும் நலன் விசாரித்ததும் சதீஸ் “பாட்டி எவ்வளவு நேரம் வெளிலயே நிக்கறது உள்ள போலாம்…”என்றான்.
“போலாம்.. அதுக்கு முன்னாடி என் பேரன் பேத்திக்கு ஆரத்தி எடுக்கணும்ல…”என்றவர் “கண்ணகி ரெண்டு பேருக்கும் ஆரத்தி எடு…”என்றார்.
சத்யா “பக்கத்தில வாங்க…”என்று கூப்பிட அவனோ “என்னால எல்லாம் உன் பக்கத்தில வர முடியாது.. உனக்கு வேணும்ன்னா நீ வேணா வா…”என்பது போல திமிராய் நின்றான்..
“இவனை…”பல்லை கடித்தவள் பெரியவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று எழில் பக்கத்தில் சென்று நின்றாள்.
கண்ணகி இருவருக்கும் ஆரத்தி எடுத்தவள் “உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப அழகா இருக்கு…ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் பொறந்தவங்க மாதிரி இருக்கீங்க…””என சொல்ல எழில் சத்யா ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்..
கண்ணகி ஆரத்தியை கொட்ட போக பார்வதி “வாங்க உள்ள போலாம்…”என்று எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றார்.
பாட்டி சத்யாவை பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார்
“இங்க எதுக்கு பாட்டி…”
“இதுதான் உங்க பூர்வீக வீடு…இந்த வீட்டோட சின்ன மருமக நீதான அப்போ விளக்கு ஏத்த வேண்டாமா?…”என அவர் கேட்கவும் மென்னகை சிந்தியவள் அவர் சொன்னது போல பூஜை அறையில் சென்று விளக்கு ஏற்றினாள்..
சதீஸ் வீட்டை சுற்றி பார்த்தவன் எழிலிடம் “லாஸ்ட் டைம் வந்தப்ப எப்படி இருந்துச்சோ இப்பவும் அப்படியே இருக்குடா..”என்றான்..
“அப்பறம் வருஷத்துக்கு ஒரு தடவை வீட்டை மாத்திட்டு இருப்பாங்களா?…”
அவன் கடுப்பாக பேசவும் சதீஸ் எழில் பக்கத்தில் அமர்ந்தவன் “என்னாச்சுடா உனக்கு ஏன் எல்லாத்துக்கும் கோபம்மாவே பேசற…”என கேட்க
அவனோ சற்று தள்ளி தன்னுடைய பாட்டி அம்மாவுடன் சிரித்து பேசிகொண்டிருந்த சத்யாவை காட்டியவன் “எனக்கு அவளை கொஞ்சம்கூட பிடிக்கலடா…”என்றான்..
“என்னடா இப்படி சொல்ற… சத்யா உன்னோட வொய்ப்…”
“அட போடா…”எழில் சலித்துகொள்ள சதீஸ் அவனுக்கு எடுத்து சொல்லி முற்பட அவனோ எழுந்தவன் “பாட்டி டிரைவ் பண்ணிட்டு வந்தது எனக்கு டையார்ட்டா இருக்கு நான் என் ரூம் போறேன்…”என்றவன் எழுந்து சென்றான்..
போகும் தன் நண்பனை பார்த்த சதீஸ்க்கு அவனுடைய வாழ்க்கையை நினைத்து பயமாக இருந்தது
“காட் சீக்கிரம் இவன் பாஸ்ட்ல இருந்து வெளியில வந்து சத்யாவை அக்சப்ட் பண்ணிக்கணும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டான்..
சத்யாவிற்கு அந்த வீடு அன்பாக பழகும் பாட்டி கண்ணகியை ரொம்பவே பிடித்தது..
அவர்களுடன் பேசிகொண்டிருந்தவள் பின்தான் சதீஸ் மட்டும் தனியாக அமர்ந்து போன் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றாள்.
“அண்ணா…”
நிமிர்ந்து பார்த்தவன் “என்ன சத்யா?…”என்று கேட்க
“அவர் எங்க அண்ணா?…”
“டையார்ட்டா இருக்குன்னு ரூமுக்கு போயிட்டான்…”
“அப்படியா அவர் ரூம் எந்த பக்கம்…”என அவனிடம் கேட்டுகொண்டவள் ஹாலில் இருந்த லக்கேஜ் எடுத்துகொண்டு மேலே அறைக்கு சென்றபொழுது எழில் சோர்வில் தூங்கியிருக்கவும் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் டிரஸ் எல்லாம் எடுத்து வைத்தவள் அங்கிருந்து வெளியேறினாள்..
பால்கனியில் நின்று போன் பேசிகொண்டிருந்தாள் சத்யா..
“ஹஸ்பண்ட்டா அவனை பார்க்கவே கோபமா வருது தூங்கும் போது அப்படியே தலையனை வச்சு கொன்னுடலாமான்னு தோணுது…”என்ற சத்யா எதிர்முனையில் அவளுடைய பிரண்ட் அவனை பற்றி ஏதோ கேட்கவும்
இதழ் சுழித்தவள் “ஹாண்ட்ஸம்மா.. நீ வேற கிங்காங் மாதிரி இருக்கான்.. அவனும் அவன் மூஞ்சியும்..நீ ஏன் அவனை பத்தியே பேசிட்டு இருக்க…”என்று போனில் பேசிக்கொண்டே திரும்பிய சத்யா கைகள் கட்டிக்கொண்டு பால்கனி சுவரில் சாய்ந்து நின்று அவளையே முறைத்து பார்த்துகொண்டிருந்த எழிலை பார்த்து அதிர்ந்தாள்..
“ஐயையோ இவன் எப்போ வந்தான்.. நான் பேசுனது எல்லாம் கேட்ருப்பானோ….”
அவள் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொள்ள எழில் அவள் அருகில் வந்தான்..
அவன் அழுத்தம்மான காலடி தடங்களுடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் அருகில் வர சத்யா பின்னாடி நகர்ந்தாள்..
இதற்கு மேல் நகர இடமில்லை என்ற நிலையில் அவள் சுவரில் மோதி நிற்க எழில் அவள் அருகில் வந்தவன் போனில் அவளுடைய பிரண்ட் “ஹலோ… ஹலோ.. சத்யா…”என்று கூப்பிடவும் அவளிடமிருந்து பிடுங்கினான்..
“உன்னோட பிரண்ட்டு என்கிட்ட வசமா சிக்கிட்டா உயிரோட இருந்தா நாளைக்கு அவளே போன் பண்ணுவா…”என்று சொல்லிவிட்டு கட் செய்தவன் சத்யா போனை அவனிடமிருந்து வாங்க கையை உயர்த்த அப்படியே அவள் கழுத்தை பிடித்துவிட்டான்..
சும்மா விளையாட்டுக்கு செய்கிறான் என்று நினைத்த சத்யா அவன் நன்றாகவே அழுத்தி பிடிக்கவும் “அடப்பாவி கொன்னுடாதடா… தடியா விடுடா…”என்றவள் அவன் கைகளில் அடிக்க போனால் போகட்டும் என்று பாவம் பார்த்து எழில் கைகளை எடுத்துகொண்டான்..
சத்யா வேக வேகமாய் மூச்சு இழுத்துவிட்டவள் “கொஞ்சநேரத்தில எனக்கே சாவு பயத்தை காட்டிட்டானே…”முனுமுனுத்துகொண்டவள் அவனை முறைத்து பார்த்தாள்..
எழில் அவள் முறைப்புக்கு எல்லாம் பயப்படவில்லை..
“கொஞ்சநேரத்தில என்னை கொல்ல பார்த்துட்டல்ல… உனக்கு எவ்வளவு தைரியம்…”
“நீ பேசுனதை கேட்டு கொல்லாம விட்டுட்டேன்னு சந்தோசப்படு…”என்றவன் குரலில் அவ்வளவு கோபம்..
அதில் மிடரு விழுங்கியவள் தலையை சொரிந்தவாறு “நான் பேசுனதை எல்லாம் கேட்டியா என்ன?…”என கேட்க
“ம்ம் நீ என்னை கிங்காங்ன்னு சொன்னதையும் கேட்டேன்… தலையணை வச்சு என்னை கொலை பண்ண தோணுதுன்னு சொன்னதையும் கேட்டேன்…”
“ஹிஹி…”அவள் சிரித்து சமாளிக்க பார்க்க
எழில் முறைத்து பார்த்தவன் அவள் அருகில் நெருங்கி சென்றான்..
“இப்போ எதுக்கு பக்கத்தில வர்றான் மறுபடியும் கழுத்தை பிடிச்சுடுவானா…”என பின்னாடி நகர்ந்தவள் “ஹேய் பக்கத்தில வராத…”என்றாள்..
அவனோ அவள் சொன்னதை கேட்காமல் பக்கத்தில் சென்றதும் கண்கள் சுருக்கி அழுத்தம்மாய் அவள் விழியோடு விழிகலந்து பார்த்தவன் “என்ன சொன்ன நான் கிங்காங் மாதிரி இருக்கனா உன் கண்ணுக்கு நான் அப்படியா இருக்கேன்… கொஞ்சம் நல்லா பார்த்து சொல்லு…”என்றான்.
சத்யா அவன் நெருக்கத்தில் விழிவிரித்து பார்த்தவள் பார்வை அவன் முகத்தில் இருந்து கீழே இறங்கியது…
எக்ஸர்சைஸ் செய்து உடலை கட்டுக்கோப்பாய் வைத்து இருந்தவன் எந்த பக்கம் பார்த்தாலும் சைட் அடிக்க ஏற்றவனாய் அவ்வளவு அழகாக இருந்தான்… எந்த பெண்ணும் அவனை ரசித்து சைட் அடிப்பாளே தவிர இதுபோல் கிங்காங் என்று கிண்டல் செய்ய மாட்டாள்.
“சொல்லு நான் கிங்காங் மாதிரி இருக்கனா?…”கோபம்மாய் கேட்டான்.. ( பின் கிங் மாதிரி இருப்பவனை கிங்காங் என்று சொன்னால் கோபம் வராதா….)
சத்யா விழிகளை உருட்டியவள் அவன் நெஞ்சில் கைவத்து பின்னாடி தள்ளியவள் “என் கண்ணுக்கு நீ கிங்காங் மாதிரிதான் தெரியற…”என்றாள்.
“நீ கோல்டு மேடலிஸ்ட்ல அதான் படிச்சி படிச்சி மென்ட்டல் ஆகிட்ட அதான் இப்படி சொல்ற…”
“ஹேய் யாரை பார்த்து மெண்டல் சொல்ற…”
“உன்னை பார்த்துதான்டி சொன்னேன்…”
“நான் மெண்டலா… நீதான்டா பைத்தியம்…’
“ஹேய்…”
“ஏய்…”
இருவரும் சண்டை போட கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான் சதீஸ்..
அறைக்குள் அவர்களை காணாமல் “எழில் எங்கடா போயிட்ட?…”என்று குரல் கேட்க
அவன் குரல் கேட்டதும் சத்யா எழில் விரலை மடக்கி பிடித்தவள் அவன் கரத்தை அப்படியே தன் கன்னத்தில் வைத்துகொண்டாள்.
“ஏய் விடுடி…”என்ற எழில் அவன் கரத்தை எடுக்க பார்க்க சத்யா விடவில்லை..
பேச்சு சத்தம் கேட்டு சதீஸ் வந்தவன் அவர்கள் நின்றிருந்த நிலை பார்த்து உடனே திரும்பி கொண்டவன் “சாரி கைஸ் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… நான் வெளில வெயிட் பன்றேன் வாடா…”என சொல்லிவிட்டு எழில் சொன்னதைகூட கேட்காமல் வெளியேறினான்..
அவன் அந்த பக்கம் சென்றதும் சத்யா அவன் கரத்தை தட்டிவிட எழில் முறைத்து பார்த்தான்..
டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகள் தொடரும்…
No comments yet.