சரவணன் மீனாட்சி இருவரும் மறுவீட்டிற்கு வந்த தங்கள் மகளை விட்டுவிட்டு மருமகனை விழுந்து விழுந்து உபசரித்தனர்..
சத்யா விழிகள் உருட்டி “மாப்பிள்ளை ஜுஸ் சாப்பிடறீங்களா… காபி கொண்டு வரட்டுமா…”என மீனாட்சி கேட்க சரவணன் “சாப்பிடற நேரத்தில ஜுஸ் காபி குடிச்சா சாப்பிட முடியாது… மாப்பிள்ளை நீங்க வாங்க விருந்து ரெடியா இருக்கு சாப்பிடலாம்…”என்று அழைக்கவும் “அப்பா.. அம்மா…”கத்தினாள்..
இருவரும் காதை குடைந்தபடி அவள் பக்கம் திரும்பினர்…
“ஏண்டி கத்தற?…”
“அம்மா இங்க நான் ஒருத்தி இருக்கேன் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க… அவருக்கு டீ வேணுமா காபி வேணுமா ஜுஸ் வேணுமான்னு கேட்கறீங்க இன்னும் எனக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கல…”
அவள் கோபம்மாய் கேட்க எழில் கையில் இருந்த கிளாஸை அவளிடம் நீட்டி “தண்ணி குடி மூச்சு வாங்குது…”என்றான்.
அவனை முறைத்தவள் மீனாட்சி தன்னை பார்ப்பதை பார்த்ததும் அப்படியே சிரித்தார் போல் முகத்தை வைத்துகொண்டு “பாருங்க என் புருஷன் எவ்வளவு அக்கறையா இருக்கார்.. இந்த அக்கறை உங்களுக்கு இல்லல்ல ஒரே நாள்ல என்னை மறந்துட்டிங்கல்ல…”என்றாள்..
சரவணன் சிரித்தவர் “அப்படியெல்லாம் இல்லம்மா… இது உன் வீடு உனக்கு நாங்க எல்லாம் சொல்லனுமா என்ன… மாப்பிள்ளை முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு அவரை நாமதான கவனிக்கணும்…”என்றார்.
சொன்னதுபோலவே எழிலை விழுந்து விழுந்து கவனித்தனர்… விருந்து பிரமாண்டம்மாய் ஏற்பாடு செய்திருக்க இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
“மாப்பிள்ளை சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கு பிடிச்சிருக்கா?…”என்று மீனாட்சி கேட்க
“ம்ம் நல்லா இருக்கு..”
“சத்யா சூப்பரா சமைப்பா…அவ காலேஜ்ல படிக்கிறதுல இருந்து வெளிலதான் தங்கியிருக்கா நல்லா சமைப்பா…”என சொல்ல எழில் கண்கள் சுருக்கியவன் சத்யாவை பார்த்து “நீ வெளிலதான் ஸ்டே பன்றியா இங்க இல்லையா?..”என கேட்டான்..
சத்யா “போச்சு மாட்டி விட்டுட்டான்…”தனக்குள் சொல்லிக்கொண்டவள் நிமிர்ந்து பார்க்க சரவணன் மீனாட்சி இருவரும் அவளைதான் சந்தேகம்மாய் பார்த்துகொண்டிருந்தனர்..
சிரித்தவள் அவன் தோளில் இடித்து “என்னங்க உங்க விளையாட்டை நிறுத்த மாட்டிங்களா… நான் சென்னையில ஸ்டே பண்ணியிருக்கிறது தெரியாத மாதிரியே கேட்கறீங்க…”என்று சொன்னவள் தன்னுடைய அம்மா அப்பாவை பார்த்து “இவர் இப்படிதான்…”என சொல்லி சமாளித்தாள்..
விருந்து சாப்பிட்டு முடித்ததும் எல்லாரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்…
எழிலால் சத்யாவுடன் சந்தோசமா இருப்பதுபோல் நடிக்க முடியவில்லை… அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாளே நகர்ந்து அமர்ந்தான்..
அதற்கும் தன்னுடைய அம்மா அப்பா கவனிக்காத நேரத்தில் “பக்கத்தில வந்து உட்கார்ந்தா என்ன?… ஏன் முகம் மாறுது…”என்றாள்..
“ஏய் நீ அவங்களுக்கு சந்தேகம் வர்றாத மாதிரி நடிக்கனும்ன்னுதான சொன்ன இதெல்லாம் சொல்லுலயே..”
“இதெல்லாம் சொல்வாங்களா… இன்னும் கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…”
“பண்ணிக்கோவா….”
அவன் அழுத்தம்மாய் பார்க்கவும் “சாரிங்க… அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…”என்றாள் மரியாதையாக..
“இந்த ரெஸ்பெக்ட் கண்ட்னியூ ஆனாதான் நானும் இந்த ஆக்டிங்கை கன்ட்னியூ பண்ணுவேன்….”என அவன் மிரட்டாலாக சொல்லிகொண்டிருக்கும்போதே மீனாட்சி ஐஸ்க்ரீம் எடுத்து வந்தார்
“சாப்பிடுங்க மாப்பிள்ளை..”
அவன் ஒன்று எடுத்துகொள்ள “அம்மா எனக்கு ரெண்டு…”என்ற சத்யா இரண்டு கப்பை எடுத்துகொண்டாள்.
மீனாட்சி சிரித்தவர் “இவ ஒரு ஐஸ்க்ரீம் பைத்தியம்… அடிக்கடி ஐஸ்க்ரீம் கேட்பா வாங்கி கொடுக்காத்தீங்க மாப்பிள்ளை…”என்றார்
“ம்ம் இவ பைத்தியம்ன்னுதான் எனக்கு ஒரே நாள்ல தெரிஞ்சிருச்சே…”என எழில் முனுமுனுப்பாக சொன்னது சத்யாவுக்கு மட்டும்தான் கேட்டது…
“என்னையா பைத்தியம்ன்னு சொல்ற உன்னை அப்பறம் பார்த்துக்கறேன்…”என உள்ளுக்குள் அவனை திட்டிகொண்ட சத்யா வெளியில் அவனை பார்த்து சிரித்து வைத்தாள்..
சரவணன் போன் பேசிவிட்டு வர நால்வரும் சிறிதுநேரம் பேசினர்..
சரவணன் “அப்பறம் நீங்க எப்போ சென்னை கிளம்பறீங்க… சம்மந்தி அம்மா குலதெய்வக் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னாங்க…”என கேட்டார்..
“எனக்கு இன்னும் ஒன் வீக்தான் லீவ் இருக்கு சன்டே நான் கிளம்பனும்…”
“அப்படியா அப்போ அதுக்குள்ள கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்துடுங்க….”என மீனாட்சி சொல்ல எழில் தலையசைத்தான்..
சரவணன் “சரிம்மா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும் நீ உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ…”என்றார்
எழில் சத்யாவை பார்க்க அவளோ மறுத்து தலையசைத்து “அதெல்லாம் வேண்டாம் நாங்க கிளம்பறோம்…”என சொல்ல
“அதுக்குள்ளயா…”
“ஆமா ரொம்ப நேரம் எல்லாம் நடிக்க முடியாது…”
“என்ன?…”
“அது… ரொம்ப நேரம் எல்லாம் இங்க இருக்க முடியாதுன்னு சொன்னேன்…”
“ஏன்?…”
“இல்ல நாங்க கிளம்பறோம் அங்க அத்தை எங்களுக்காக வெயிட் பண்ணுவாங்கல்ல… அப்பறம் இவரோட பிரண்ட் வீட்ல விருந்துக்கு சொல்லிருக்காங்க அங்க வேற போகணும்….”
சத்யா பொய் சொல்ல எழில் “என்னோட பிரண்ட் விருந்துக்கு கூப்பிட்டானா எந்த பிரண்ட் கூப்பிட்டான்…எப்படி பொய் சொல்றா பாரு… நடிப்பு மட்டுமில்ல இவளுக்கு பொய் சொல்லவும் நல்லாவே வருது…”என மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவன் சரவணன் “அப்படியா மாப்பிள்ளை?…”என கேட்கவும் “எஸ் அங்கிள்..”என்று தலையாட்டி வைத்தான்..
“ஓகே அப்போ நீங்க கிளம்புங்க…”
இருவரும் அவர்களிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினர்…
காரில் செல்லும்பொழுது எழில் “எதுக்கு என் பிரண்ட் விருந்துக்கு கூப்பிட்டான்னு பொய் சொன்ன?…”என்று கேட்க
“ம்ம் உன் நடிப்பை பார்க்க முடியாம….”
“ஏய் என்ன ரெஸ்பெக்ட் இல்லாம பேசற…”
இதழ் சுழித்தவள் திமிராக “அதான் என் வீட்ல இருந்து வந்தாச்சே இனியும் எதுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கணும்…”என்றாள்..
எழில் காரை ஓரம் கட்டியவள் அவள் பக்கம் திரும்பி முறைத்து பார்க்க அவளோ அவன் முறைப்பிற்கு எல்லாம் பயப்படாதவளாய் “இங்க பாரு இந்த முறைப்புக்கு எல்லாம் பயப்படமாட்டேன்னு ஆல்ரெடி நான் சொல்லிட்டேன்… வண்டியை எடு விருந்து சாப்பாடு சாப்பிட்டது தூக்கம் வேற வருது…”என்றவள் அப்படியே தளர்வாய் சாய்ந்துகொண்டு விழிமூடி தூங்க தொடங்கினாள்..
அவளையே பார்த்து கொண்டிருந்தவன் “சரியான இம்சை என் லைப்ல வந்து டார்ச்சர் பன்றா… இவகிட்ட இருந்து நான் எப்படி தப்பிக்கிறது…”கோபமாகவும் புலம்பலாகவும் தனக்குள் சொல்லிக்கொண்டவன் காரை ஸ்டார்ட் செய்தான்..
************
சத்யா அறைக்குள் வர எழில் பெட்டை முழுவதும்மாக ஆக்கிரமித்து இருந்தவன் போன் பார்த்தபடி படுத்திருந்தான்..
“நேத்து தூங்கவிடாம பண்ணியும் எவ்வளவு தைரியம்மிருந்தா இன்னிக்கும் பெட்ல படுக்க வந்திருப்பான்… இவனை…”கோபத்தில் பற்களை நர நரவென கடித்தவள் வேகமாய் அவன் அருகில் சென்று கொண்டு வந்த வாட்டர் பாட்டிலை டேபிள் மீது வைத்தாள்..
அதில் அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் “ஏய் பார்த்துடி டேபிள் உடைஞ்சிட போகுது…”என்றான்.
“பெட்லயா தூங்க போற?…”
“ம்ம் ஆமா…”
“சரி ஓகே….”என்றவள் எதுவும் பேசாமல் சென்று அவனுக்கு அந்த பக்கம் சென்று அவள் படுக்க போக எழில் வேகமாய் அவளை நோக்கி தலையனையை எடுத்து வீசினான்..
அதில் அவள் நிமிர்ந்து பார்த்து கோபமாய் “ஏன் தூக்கி வீசுன?…”என்று எல்லாம் கேட்கவில்லை அவன் ஒரு தலையனை எடுத்து வீசியதற்கு இரண்டு தலையனையாக எடுத்து அவனை நோக்கி வீசினாள்.. ( பேச்சு எல்லாம் இல்ல ஒன்லி வீச்சுதான்…)
எழில் சத்யா தலையனை வீசவும் “ஏய் அறிவில்ல…”என்று திட்ட
“உனக்கு அறிவு இருக்காடா இடியட்…நீதான முதல்ல வீசுன…”
அவள் திருப்பி திட்ட எழில் பெட்டில் இருந்து கீழே இறங்கியவன் “நான் வீசுனா நீயும் வீசுவியா?…”என கேட்க சத்யா அலட்டாமல் தலையசைத்தவள் “நீ பண்ணுனா நானும் பண்ணுவேன்…”என்றாள் .
“ஓ நான் என்ன பண்ணுனாலும் நீ பண்ணுவ?…”
“ஆமாடா தடியா… தள்ளிப்போ எனக்கு தூக்கம் வருது…”என்றவள் பெட்டில் படுக்கபோக அவள் கரம் பிடித்து பின்னாடி இழுத்தான்.
“விடுடா…”
அவள் கரத்தை விடுவித்தவன் “நீ பெட்ல படுக்ககூடாது…”என்றான்..
“நான் பெட்லதான் தூங்குவேன்…”
“நான் கூடாதுன்னு சொல்றேன்ல…”
“நீ பண்ணக்கூடாதுன்னு சொன்னாதான் நான் பண்ணுவேன்… உனக்கு ப்ராப்லம்மா இருந்தா நீவேணா போய் கீழ படுத்துக்கோ இல்ல சோபால படுத்துக்கோ…”என்றவள் அவன் நகராமல் இருக்கவும் ஓங்கி அவன் காலை மிதிக்க “அம்மா…”வலிதாங்க முடியாமல் முகம் சுழித்தவன் காலை பிடித்துகொண்டு நகர சத்யா பெட்டில் படுத்துகொண்டாள்..
எழில் அவளை பார்க்க ஒய்யாரம்மாய் அவனுடைய பெட்டில் படுத்துகொண்டவள் “லைட் ஆப் பண்ணிடு…”என சொல்லிவிட்டு விழிமூடிகொண்டாள்..
அவளை பார்க்க பார்க்க எழிலுக்கு கோபம் பற்றிகொன்டு வர அவளை விட அவன் அம்மா மேலும் பிரண்ட்ஸ் மேலும்தான் கோபம் அதிகமாய் வந்தது.
“இந்த இம்சையை எங்கிருந்து தேடி கண்டுபிடிச்சாங்களோ…இத்தனை வருஷத்துக்கு நான் அவங்கள பண்ண டார்ச்சருக்கு எல்லாம் மொத்தம்மா இவளை எனக்கு கட்டி வச்சு பழிவாங்கிட்டாங்க…”அவன் திட்டிக்கொள்ள சத்யா கண் திறந்து பார்க்காமலே “திட்டுனது எல்லாம் போதும் காலையில உன் அம்மாவையும் வீணாபோன பிரண்ட்ஸும் வருவாங்க அப்போ திட்டிக்கோ இப்போ லைட் ஆப் பண்ணிட்டு ஷட்டரை சாத்திட்டு போய் படு போ…”என்றாள்.
“இவளை… பேசாம கொன்னுடலாமா…”என்று கையை அவள் கழுத்தை நெறிப்பதுபோல் சென்று “ம்ம்ஹும் ஜெயிலுக்கு போகணும்… சரக்கு தம்மு எல்லாம் கிடைக்காது…”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் சென்று லைட் ஆப் செய்துவிட்டு அவளுக்கு அந்த பக்கம் படுத்தான்..
எங்கு நேற்று போல் உதைத்து தள்ளிவிடுவாளோ என்று ஓரமாகவே படுத்தவன் முதலில் தூக்கம் வராமல் அடிக்கடி அவள் பக்கம் தூங்கிட்டா இல்லையா என்று பார்த்தான்..
சில நிமிடங்களில் அவனை உறக்கம் தழுவ விழிமூடி தூங்க தொடங்கினான்..
No comments yet.