சதீஸ் உடன் பேசியபடி வந்த எழிலை பார்த்ததும் பிரியா முகம் மலர்ந்தது.
“எழில் சார் வந்துட்டாரு…”என சொல்ல எல்லாரும் திரும்பி பார்க்கவும் சத்யாவும் நிமிர்ந்து பார்த்தாள்..
எழில் வந்ததை இன்னும் நம்ப முடியாதவர்களாய் எல்லாரும் பார்க்க பிரியா ‘வாங்க சார்…”என்றவள் தன் பக்கத்தில் இருந்த சேரை காட்டினாள்..
அவனோ அவள் பக்கத்தில் உட்காராமல் சத்யா பக்கத்தில் சேர் இருக்கவும் அவள் அருகில் அமர்ந்தான்..
எல்லாரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதை பார்த்து “வாட்…
என்னாச்சு கைஸ் இதுக்கு முன்னாடி நீங்க டின்னர் கூப்பிட்டு நான் வந்தது இல்லையா என்ன இப்படி பார்க்கறீங்க?…”என்றான்..
குமார் “இல்ல சார் பாய்ஸ் ட்ரீட் கொடுக்கும் போது எல்லாம் வந்து இருக்கீங்க பர்ஸ்ட் டைம் நம்ம டீம்ல இருந்து ஒரு கேர்ள் இன்வைட் பண்ணி வந்திருக்கீங்க…”என்றான்
பிரியா மென்னகை சிந்தியவள் “உங்ககிட்ட இந்த சேஞ்ச் நல்லா இருக்கு சார்…’என்றாள்..
எழில் புன்னகையை உதிர்த்தவன் சத்யாவை பார்க்க அவளோ அவனை கண்டுகொள்ளாதவளாய் மெனு கார்ட் பார்த்து கொண்டிருந்தாள்…
“கண்டுக்கறாளா பாரு…”முனுமுனுத்தவன் மற்றவர்களை பார்த்து “என்ன எதுவும் ஆர்டர் பண்ணலயா?…”என கேட்க
‘”அவங்கவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ண சொல்லிருக்கேன் சார்… நீங்களும் பாருங்க…”என்ற பிரியா மெனு கார்டடை அவனிடம் கொடுத்தாள்..
எழில் வாங்கி பார்க்க சதீஸ் “மச்சான் ட்ரிங்ஸ் என்ன ட்ரை பண்ணலாம்…”என்றான்.. அவர்கள் மூவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்..
எல்லாரும் அவரவர்க்கு வேண்டியதை ஆர்டர் பண்ண விஷ்ணு “சத்யா நீங்க என்ன ஆர்டர் பன்றிங்க?…”என்றான்.
நிமிர்ந்து பார்த்தவள் “இங்க எனக்கு பிடிச்சது எதுவும் இல்ல… சாப்பிடற மூட்லயே இல்ல…”என்றாள்..
அதை எழிலும் கேட்டவன் வெயிட்டர் அழைத்தான்…வெயிட்டர் வரவும் தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தவன் சத்யாவிற்கு பிரான் பிரியாணியும் ட்ரை குலோப் ஜாமுனும் ஆர்டர் செய்தான்.
சத்யா அவனை பார்க்க ‘இங்க பிரான் பிரியாணி நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாரு…”என்றான்..
அவன் எல்லாரையும் வா போ என்று பேசுவதால் சத்யாவை அவன் ஒருமையில் பேசியதை யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை..
“ச்சே அவருக்கு தோணுனது எனக்கு தோணாம போயிடுச்சே…”என சொல்லிக்கொண்ட விஷ்ணு போன் எடுத்து “சத்யா ஒன் செல்பி…”என்று கேட்க அவளும் தலையாட்டினாள்..
சத்யா சிரித்தபடி போஸ் கொடுக்க எழில் போட்டோ எடுத்த விஷ்ணுவை கண்கள் சுருக்கி முறைத்து பார்த்தான்..
அந்த பெரிய டேபிளில் அமர்ந்து இருந்த நிறைய பேர் இரண்டு பேர் மூன்று பேர் என்று செல்பி எடுத்து கொண்டுதான் இருந்தார்கள் ஆனால் எழிலுக்கு விஷ்ணு போட்டோ எடுத்ததுதான் தப்பாக தோன்றியது..
ஆர்டர் செய்திருந்தது வரவும் எல்லாரும் சாப்பிட தொடங்கினர்… எல்லாரும் ட்ரிங்ஸ் ஆர்டர் பண்ணியிருந்தார்கள் பெண்கள்கள் கூட ஸ்டைல்லாய் மது கிளாசை கையில் வைத்துகொண்டு பேசியபடி குடித்தனர்..
விஷ்ணு சத்யாவிடம் “நீங்க ட்ரிங்ஸ் பண்ணலயா?…”என கேட்க
“எனக்கு அந்த பழக்கம் இல்ல… பழக்கம் இருக்கவங்களயும் எனக்கு பிடிக்காது…”என்றவள் விஷ்ணு உடனே கையில் இருந்த கிளாஸை கீழே வைத்ததை கவனிக்கவில்லை… எழில் பக்கம் திரும்பி பார்த்து முறைத்தாள்..
எழில் அவள் முறைப்பதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை… சதீஸ் உடன் பேசியபடி மது அருந்தினான்..
சத்யா முறைத்து பார்ப்பதை பார்த்து சதீஸ் “எழில் சத்யா முறைக்கிறாடா… போதும் ட்ரிங்க்ஸ் பண்ணுனது…”என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல
எழில் சத்யாவை பார்த்தவன் இதழ் சுழித்து “அவ எப்போடா என்னை பார்த்து சிரிச்சு இருக்கா… எப்பவும் முறைச்சுட்டுதான இருப்பா…”என்றவன் அவர்கள் சொன்னதை கேட்கவில்லை..
எழில் சொன்னது போல் பிரான் பிரியாணி நன்றாக இருக்க சத்யா சாப்பிட்டவள் டைம் பார்த்தாள்..
“ஐயையோ அத்தை வீடியோகால் பன்ற டைமாச்சே…சீக்கிரம் இங்கிருந்து கிளம்பனும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் எழில் பார்க்க அவனோ குடிப்பதிலும் தன்னுடைய பிரண்ட்ஸ்களிடம் பேசுவதிலும்தான் கவனமாக இருந்தான்.
“எப்படி இங்கிருந்து போறது…”யோசித்தவள் போன் இசைக்கவும் எடுத்து பார்த்தாள்.. வள்ளிதான் வீடியோகால் பண்ணியிருந்தார்..
“ம்ம்ஹும் இங்க அட்டன் பண்ணி பேச முடியாது…”
கட் செய்ய அதை கவனித்த விஷ்ணு “ஏன் கட் பண்ணி விடறீங்க அட்டன் பண்ணி பேச வேண்டியதுதான…”என்றான்..
“இல்ல வீட்டுக்கு போய் பேசிக்கறேன்… ஓகே எனக்கு டைமாச்சு கிளம்பறேன்…’என்றவள் பிரியாவிடமும் சொல்ல
“அதுக்குள்ள கிளம்பறீயா…இன்னும் டின்னர் முடியலல்ல…கேம்ஸ் எல்லாம் விளையாடலாம்ன்னு பிளே பண்ணிருக்கோம் ஜாலியா இருக்கும்…ஒருநாள்தான லேட்டா போலாம்…”என சொல்லி அவளை கட்டாயப்படுத்த வேறு வழியில்லாமல் சத்யா எழுந்தவள் மீண்டும் அமர்ந்தாள்…
அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை அடுத்து அவர்கள் ஆடப்போகும் விளையாட்டு தனக்கும் எழிலுக்கும் இடையில் ஒரு கலவரத்தையே உருவாக்க போகிறது என்று..
எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் விளையாடலாம் என்று முடிவு செய்தனர்
“என்ன கேம்?…”என எழில் கேட்க
விஷ்ணு சிரித்துகொண்டே “காலங்காலம்மா நாம விளையாடிட்டு இருக்க ட்ருத் ஆர் டேர் கேம்தான்…”என்றான்
குமார் பியர் பாட்டில் ஒன்றை டேபிள் நடுவில் வைத்தவன் “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் உங்களுக்கே தெரியும் பாட்டில் சுத்திவிட்டு நிக்கும்போது…”என சொல்ல மனிஷா “போதும்டா எங்களுக்கு தெரியும் நீ பாட்டில சுத்திவிடு…”என்றாள்..
“நான் பேசுனா உன்னால தாங்க முடியாதே.. ஓகே…”என்றவன் பாட்டிலை சுற்றி விட அது பிரியாவையும் அவளுக்கு அப்போஸிடில் இருந்த ஆகாஷையும் காட்டியது.
கைகள் தேய்த்துகொண்டவன் “மாட்டுனியா… ட்ரூத் ஆர் டேர்?…”என்று கேட்க
பிரியா “டேர்…”என சொல்ல வந்து “இல்ல கஷ்டமானதா எதாவது சொல்லவ… ட்ருத்…”என்றாள்..
“ஓகே அப்போ சொல்லு உனக்கு நம்ம ஆபிஸ் கிரஷ் யாரு?…”
“அது…”
“ஹேய்…உண்மையை மட்டும்தான் சொல்லணும்… “
பிரியா எழில் பார்க்க சத்யாவும் எழிலை பார்த்தாள்.. அவனோ இருவரையும் கண்டுகொள்ளாதவனாய் போன் பார்த்து கொண்டிருந்தான்…
பிரியா அவனையே பார்த்தபடி “நம்ம டி.எல் சார்தான் என்னோட ஆபிஸ் கிரஷ்…”என சொல்ல எல்லாரும் “ஹூரே…”என கத்தினர்..
அதில்தான் எழில் திரும்பி பார்த்தவன் “என்னாச்சு?…”என்று கேட்க
“ம்ம் நீதான் அவ கிரஷ்ன்னு சொன்னா… கொஞ்சமாச்சும் கேம்ல கான்ஸன்ட்ரேட் பண்ணுடா…”என்ற சதீஸ் அவன் போன் வாங்கி டேபிள் மீது வைத்தவன் சத்யாவை ஆராய்வது போல் பார்த்தான்
அவள் எதாவது தப்பாக எடுத்துகொண்டாளோ என நினைக்க அவளோ முகத்தை எந்த உணர்வையும் காட்டாதவளாய் அமர்ந்து இருந்தாள்..
மறுபடியும் சுற்றி விட்டு விளையாட விஷ்ணு “ச்சே சத்யாவுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்து இருக்கலாம் அவ யாரையாவது லவ் பன்றாளா இல்லையான்னு தெரிஞ்சு இருக்கும்…”என தனக்குள் நொந்துகொண்டான்..
அடுத்தடுத்து எல்லாரும் பாட்டில் சுற்றி விட்டு டேர் ட்ருத் என்று விளையாட சதீஸ் டேர் வரும் பொழுது அவனுக்கு அப்போசிட்டில் இருந்த மனிஷா “யாரையாவது ஒரு பொண்ணை ஹக் பண்ணிட்டு வா…அது நம்ம டீம்லயா இருக்ககூடாது…”என்றாள்..
“இப்படியெல்லாம்மா டேர் கொடுப்பிங்க?…”என சத்யா கேட்க
“அப்போதான செருப்படி கிடைக்கும்… மேடம் அதுக்குதான் பிளான் பன்றாங்க…”என்ற சதீஸ் மறுக்கவில்லை எழுந்தவன் சுற்றி முற்றியும் பார்த்தான்.
அங்கு நிறைய பேர் இருந்தார்கள்… அதில் ஒரு டேபிளில் கப்பில்ஸாக இருக்க அவர்கள் அருகில் சென்றான்
அறுபது வயது முதியவள் “பாட்டிம்மா…”என்றவன் குரலில் திரும்பி பார்த்தார்..
“நீங்க என் பாட்டி மாதிரி இருக்கீங்க… உங்களை பார்த்ததும் ஐ மிஸ் ஹெர்…”என்றவன் அவரை அணைக்க அந்த முதியவள் இதழில் சிறு புன்னகை தோன்றியது..
அவரிடமிருந்து விலகி அவருக்கு எதிரில் இருந்த பெரியவரையும் அணைத்தவன் “அவங்கள நல்லா பார்த்துக்கோங்க தாத்தா…”என்றவன் அவர் புன்னகையுடன் “கண்டிப்பா சைல்ட்..”என சொல்ல அவர்களிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு வந்தான்..
“எப்படி சூப்பரா பண்ணிட்டனா….”
மனிஷா கண்கள் சுருக்கியவள் “நான் சொன்னது பொண்ணு…”என சொல்ல
“நான் ஹக் பண்ணுனவங்ககூட பொண்ணுதான்… நீ ஏஜ் லிமிட் சொல்லுலயே…”என சதீஸ் அவளுக்கு பல்பு கொடுக்க எல்லாரும் சிரித்தனர்…
மறுபடியும் பாட்டிலை சுற்றி விட பாட்டில் சத்யா அவளுக்கு ஆப்போசிட்டில் இருந்த வருண் பக்கம் பதிந்தது…
“ஓகே ட்ருத் அர் டேர்?…”என கேட்க
அவர்கள் கொடுத்த டேர் எல்லாம் பார்த்தவள் அதில் சிக்கக்கூடாது என்று முடிவு செய்து “ட்ருத்…”என்றாள்..
“ஓகே…ஆர் யூ இன் ரிலேஷன்ஷிப்?…”என வருண் கேட்க
எழில் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்தான்…
விஷ்ணு “இல்லன்னு சொல்லு… இல்லன்னு சொல்லு…”என தனக்குள் முனுமுனுத்துகொள்ள சத்யா “எஸ்…”என்றாள்..
“ஓ அப்போ கமிட்டட்டா…”என வருண் சொல்ல சிங்கிள் பசங்க முகம் எல்லாம் தொங்கியது… விஷ்ணு கன்னத்தில் கைவைத்து கொண்டவன் “போச்சு இந்த பிகரும் போச்சு…”என்று புலம்பலாக சொல்லிக்கொண்டான்..
மறுபடியும் விளையாட தொடங்கினர்… எழில் முறை வரவும் அவளுக்கு ஆப்போசிட்டில் இருந்த விஷ்ணு “சார் ட்ருத் ஆர் டேர்?…”என்று சலித்துக்கொண்டு கேட்டான்… அவனுக்கு இப்பொழுது விளையாடும் ஆர்வம்மே போயிருந்தது.
“டேர்…”என எழில் சொல்ல
விஷ்ணு யோசித்தவன் பின் “ஓகே சார் நம்ம டீம்ல ஒரு கேர்ள்கூட நீங்க டேன்ஸ் ஆடணும்…”என்றான்..
உடனே எல்லா பெண்களும் அவன் தன்னை டேன்ஸ் ஆட அழைப்பான என்று ஆர்வம்மாய் பார்த்தனர்… பிரியா “எப்படியும் சார் என்னைதான் கூப்பிடுவாரு…”என்று ரெடியாக இருந்தாள்..
எழில் எழுந்தவன் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சத்யாவை பார்த்தவன் “சத்யா…”என்று கூப்பிட சத்யா நிமிர்ந்து பார்த்தாள்..
No comments yet.