மீண்டும் ஒரு காதல் -15

Sweety Novel's | 17 Apr 2026 | Share

சத்யா சமைத்து முடித்து விட்டு எல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள் எழில் அறைக்கு சென்று அவனை சாப்பிட வா என்று அழைக்கவில்லை கதவை தட்டிவிட்டு அவள்பாட்டுக்கு அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்..

குளித்துவிட்டு பிரஷாகி வந்தவள் டைனிங் ஹாலுக்கு சென்றாள்..

அவள் எடுத்து வைத்துவிட்டு சென்றது எல்லாம் அப்படியே இருக்க “இவன் சாப்பிடலயா…”என சொல்லிக்கொண்டவள் சென்று எழில் அறைக்கதவை தட்டினாள்.

உடனே திறக்கவில்லை சில நிமிடங்களுக்கு பின்தான் வந்து கதவை திறந்தான்…

‘டோர் ஓபன் பண்ண இவ்வளவு நேரமா தட்டி தட்டி என் கையே வலிக்குது.. “என்று சொல்ல 

முகத்தை இறுக்கமாய் வைத்துகொண்டவன் “என்ன வேணும்?…”என்றான் பேசவே பிடிக்காதவனாய் 

“ஓ நான் கேட்டதுல கோபமா இருக்கியா… ஓகே இனி எதுவும் கேட்க மாட்டேன்…வா சாப்பிடலாம்…”

முகம் சுழித்தவன் “ஒன்னும் வேண்டாம்.. நீயே போய் சாப்பிடு…”என்றவன் வேகமாய் கதவை சாத்த சத்யா கை வைத்ததில் அவள் கை கதவில் மோதியது.

“அம்மா…”அவள் கத்தியதில் வேகமாய் கதவை திறந்தவன் “ஹேய் என்னாச்சு?…”என்றான் பதட்டத்துடன்..

“பாவி கையை உடைச்சுட்டு என்னாச்சுன்னா கேட்கிற…”

அவள் திட்ட “லூசு உன்னை யாருடி கதவுல கைவைக்க சொன்னது நான் பார்க்கல…”என்றவன் அவள் கைபிடித்து ரொம்ப அடிப்பட்ருக்கா என பார்த்தவன் “வா…”என அவனுடைய அறைக்குள் இழுத்து சென்றான்..

சத்யா வலியில் முகம் சுழித்தவள் பெட்டில் அமர்ந்தாள்… அவன் எதையோ தேடவும் வலிக்கும் கையை பிடித்துகொண்டு அவனை பார்த்தவள் “என்ன தேடற?…”என்று கேட்க 

“ஸ்பிரே.. அது அடிச்சா பெயின் இருக்காது…”என்றவன் அதை தேடி எடுத்ததும் அவள் அருகில் சென்றான்..

பக்கத்தில் அமர்ந்தவன் “கையை காட்டு…”என்று சொல்ல சத்யா கையை பின்னாடி இழுத்துகொண்டவள் “ஸ்பிரே எரியும்தான வேண்டாம்… அதுக்கு இந்த வலியே பரவால்ல…”என்றாள்.

“எரியும்தான் ஆனா கொஞ்சநேரத்துலயே சரியாகிடும்… நீ என்ன சின்ன குழந்தையா கையை காட்டு…”

அவன் மிரட்டியும் அவள் கையை காட்ட மாட்டேன் என்று பிடிவாதம்மாய் இருக்க எழில் “நீ சொன்னா எல்லாம் கேட்க மாட்ட…”என்றவன் வலுக்கட்டாயம்மாக அவள் கைபிடித்து ஸ்பிரேவை அடித்துவிட்டான்..

பயங்கரமாக எரியவும் சத்யா “எருமை… நான்தான் சொன்னேன்ல இப்போ பாரு பயங்கரமா எரியுது…”என்று அவனை கண்ட மேனிக்கு திட்டினாள்.

அவள் திட்டுவதை எல்லாம் அவனால் காது கொடுத்து கேட்க முடியவில்லை..

சட்டென கையை உயர்த்தி அவள் வாயில் வைத்து அடைத்துவிட்டான்.

சத்யா மலங்க மலங்க விழித்தபடி அவனை பார்க்க “உஷ்…இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது…கொஞ்சநேரத்துல சரியாகிடும்….”என்றவன் நிறுத்தி “புரிஞ்சுதா?…”என கேட்க சத்யா தலையாட்டி வைத்தாள்..

“சரி போ…”என சொல்ல சத்யா ஏழாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்..

“ஹேய் உன்னைதான் போக சொன்ன?…”என மறுபடியும் சொல்ல 

“நீயும் வா சாப்பிடலாம்..”

“எனக்கு வேண்டாம்…”

“ஏன் வேண்டாம்…இப்போ நான் கேட்டதுல என்னாகிடுச்சு அவளாலதான் உனக்கு பொண்ணுங்க மேல கோபம்ன்னா ஆமான்னு இல்லன்னா இல்லன்னு சொல்லிட்டு போ… அதைவிட்டுட்டு என்மேல எதுக்கு கோபப்படற தேவையில்லாம எதுக்கு சாப்பாடு மேல கோபத்தை காட்டற…”என்றாள்… அவள் பேச்சு நான் உன்கிட்ட கெஞ்சிட்டு எல்லாம் இருக்க மாட்டேன் மிரட்டதான் செய்வேன் என்பது போல் இருந்தது.

எழில் அவனை முறைத்து பார்த்தவன் “ஆமா…”என்று சொல்ல “இந்த ஆமா எதுக்கு?…”என்றாள்.

‘அவ மேல இருக்க கோபத்தைதான் எல்லா பொண்ணுங்ககிட்டயும் காட்டறேன்… எனக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது போதும்மா…”

“பொண்ணுங்கன்னா பிடிக்காதா அப்போ உனக்கு உன் அம்மாவை பிடிக்காதா?…”என சத்யா கேட்க 

“என் அம்மாவை எனக்கு பிடிக்காம போகுமா.. பிடிக்கும்…”

“அப்போ உன் பாட்டி…”

“பிடிக்கும்..”

“ஊர்ல பக்கத்து வீட்டுல இருந்து வந்து ஒரு பாப்பா விளையாடிட்டு இருக்கும்ல நீ கூட தூக்கி கொஞ்சுவல்ல… அதிதி… ஹான் அதிதி அந்த பாப்பாவை பிடிக்குமா?..’

“பிடிக்குமே…”

‘அப்போ அவங்க எல்லாம் பொண்ணுங்க இல்லயா?… “என சத்யா கேட்க எழில் அதிர்ந்து பார்த்தான்..

“என்ன பார்க்கிற…உன்னை ஒருத்தி ஏமாத்துனா எல்லா பொண்ணுங்களும் அந்த மாதிரிதான் இருப்பாங்களா… இங்க பாரு எல்லா பொண்ணுங்களும் உன்னோட எக்ஸ் மாதிரி கிடையாது…முதல்ல அதை புரிஞ்சுக்கோ… சும்மா எல்லார்கிட்டயும் கோபத்தை காட்டுனா உன்னைதான் எல்லாரும் வெறுப்பாங்க உன் எக்ஸ் உன்னை விட்டு போயும் உன்னை டவுன் பன்றா அதை புரிஞ்சுக்கோ…”என்றாள்..

எழில் யோசிக்க “யோசிச்சது போதும் சாப்பிட்டு வந்து யோசி வா… எனக்கு பசிக்குது…”என்றவள் வம்படியாக அவன் கரத்தை பிடித்து இழுத்து சென்றாள்..

ஒரு வாரம் வேகமாய் சென்றது…

சத்யா கம்பனிக்கு ஏற்ற மாதிரி தன்னை ஆடாப்ட் ஆகியிருந்தாள்…

எழில் அவனுடைய கோபத்தை பற்றி எடுத்து சொன்னப்பின் முடிந்தளவு தன்னுடைய கோபத்தை குறைக்க முயற்சி செய்தான்..

மற்றவர்களுக்கு அது புரிந்ததோ என்னவோ கூடவே சுற்றும் சதீஸ் ஆகாஷ்க்கு புரிந்தது… இந்த மாற்றம் சத்யாவினால் வந்தது என்று உணர்ந்தவர்களுக்கு அவள் மேல் மரியாதை வர கூடவே தன்னுடைய பிரண்ட் வாழ்க்கை இனி சரியாகிடும் என்று சந்தோசப்பட்டனர்..

அன்று…

கம்பனியில் சத்யா வேலை பார்த்து கொண்டிருக்க அவர்கள் டீமில் வேலை பார்க்கும் பிரியா வந்தாள்..

“சத்யா…”

வேலை பார்த்து கொண்டிருந்தவள் அவள் பக்கம் திரும்பி பார்த்து “என்ன பிரியா?…”என கேட்க 

“நீயூ பிளாட் வாங்கி இருக்கேன்ல அதுக்கு நைட் டின்னர் ட்ரீட் கொடுக்க போறேன் நீ கண்டிப்பா வரணும்…”என சொல்ல சத்யா யோசித்தாள்..

அவள் யோசிப்பதை பார்த்து பக்கத்தில் அமர்ந்து இருந்த சதீஸ் “சத்யா ரொம்ப எல்லாம் யோசிக்காத…இவ ட்ரீட் கொடுக்கிறதே அதிசயம்…’என சொல்ல அவன் முதுகிலேயே ஒரு அடி வைத்தாள் பிரியா..

‘அவுச்…’அவள் அடித்தது வலித்தது போலவே நடித்தான்..

அவளை வந்ததில் இருந்து சைட் அடித்து கொண்டிருந்த விஷ்ணு திரும்பி பார்த்து “நீங்களும் வாங்க சத்யா ஜாலியா இருக்கும்…”என்றான்.

எல்லாரும் சொல்லவும் சத்யா “ஓகே வர்றேன்…”என சொல்ல விஷ்ணு முகம் மலர்ந்தது..

அவனுக்கு பக்கத்தில் இருக்க குமார் “என்ன விஷ்ணு பேஸ்ல பல்பு எரியுதே… என்ன சத்யா டின்னருக்கு வர்ற சந்தோசமா?…”என கேட்க 

“ம்ம் அவகிட்ட நல்லா பேசி பிரண்ட்டாக இது ஒரு நல்ல சான்ஸ்… அதுக்கு அப்பறம் எப்படியாவது அவளை கரெக்ட் பண்ணிடுவேன்…”என்றான் நம்பிக்கையாய் 

“ஓகே…ஆள் த பெஸ்ட்…”என்றவன் வேலையில் கவனமாக விஷ்ணு சத்யாவையே பார்த்தான்.

ஆகாஷ் “பிரியா எழில டின்னருக்கு கூப்பிட்டியா?…”என கேட்க 

“அவர் வந்தா நான் ஹாப்பிதான் பட் நான் கூப்பிட்டா அவர் வருவாரா?…”சந்தேகம்மாய் கேட்டாள் பிரியா..

இதுவரைக்கும் அங்கு ஒர்க் செய்யும் எந்த பெண் கூப்பிட்டாலும் டின்னர், பார்ட்டி என்று எதற்கும் எழில் வந்தது கிடையாது..

சத்யா அவர்கள் பக்கம் திரும்பி பார்த்தவள் “ஒன்ஸ் கூப்பிட்டு பாரு… வர சான்ஸ் இருக்குல்ல…’என்றாள்..

“ஓகே நான் கூப்பிட்டு பார்க்கறேன்…”என பிரியா சொல்ல சதீஸ் “கோபமா இருக்கும்போது போயிடாத… நல்ல மூட்ல இருக்கும்போது போ…”என்றான்.

சில நிமிடங்களுக்கு பின்…

எழில் அறைக்கதவை தட்டி பிரியா “சார் மே ஐ கம்மின்?…”என்று கேட்க 

சிஸ்டம் பார்த்து கொண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பி பார்த்து “யா கம்மின்…”என்றான்.

உள்ளே வந்தவள் தயக்கத்துடன் “சார் உங்ககிட்ட…”என்றவள் திட்டிவிடுவானோ என்று பயத்துடனேயே பேசினாள்..

‘வாட்?…”

“நான் புதுசா ஒரு பிளாட் வாங்கியிருக்கேன்…”

“கங்கிராடுலேஷன்… எந்த ஏரியா?…”

‘அடையார்… “

‘ம்ம் நல்லா பிளேஸ்தான்… “என்றவன் நார்மலாக பேசவும் தைரியத்தை வரவழைத்துகொண்டு அவனை டின்னருக்கு அழைத்தாள்..

நெற்றியை தேய்த்தபடி யோசித்தவன் ‘யாரெல்லாம் கூப்பிட்ருக்க?…”என்று கேட்க 

“சார் நம்ம டீம் எல்லாரையும்தான் சார்…”

“நம்ம கூட நீயூவா ஒரு டீம் கோலாபரேட் பண்ணிருக்காங்களே அவங்களையுமா?…”என எழில் கேட்க பிரியா தலையசைத்தவள் “எஸ் சார் அவங்களையும் கூப்பிட்ருக்கேன்…”என்றாள்..

“எல்லாரும் வர்றாங்களா?..”

‘ஹான் வர்றேன்னு சொல்லிட்டாங்க சார்… நீங்களும் வந்தா நல்லா இருக்கும்… “

‘ஓகே வர்றேன்… எந்த பிளேஸ்?… “

அவன் வர்றேன் என்று சொன்னதில் சந்தோசமானவள் ஹோட்டல் பெயரை சொல்லிவிட்டு வெளியில் சென்றாள்..

எல்லாரும் “என்னாச்சு?…”என்று கேட்க தம்ஸப் காட்டியவள் “சக்ஸஸ்… சார் வர்றேன்னு சொல்லிட்டாரு…”என்று சொல்ல சத்யாவை தவிர மற்ற எல்லாரும் ஷாக்கானார்கள்… திரும்ப திரும்ப “சார் வர்றேன்னு சொன்னாரா…நிஜம்மாவா…”என கேட்டு பிரியாவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்..

ஒர்க் முடியவே ஈவினிங் செவன் ஆகிவிட எல்லாரும் அங்கிருந்து நேராக ஹோட்டல் செல்வது என்று பிளான் செய்து கிளம்பினர்..

சத்யா பேக் எடுத்துகொண்டு எழுந்தவள் எழில் அறையை பார்க்க சதீஸ் அதை கவனித்துவிட்டு ஆகாஷிடம் “நீங்க கிளம்புங்க நான் எழில் கூட்டிட்டு வர்றேன்…”என்று சொல்லி எழில் அறையை நோக்கி சென்றான்..

பேரடைஸ் ஹோட்டல்…

ஒரு பெரிய லாங் டேபிள் முன் எல்லாரும் அமர்ந்து இருந்தனர்..

பிரியா “கைஸ் உங்களுக்கு என்ன வேணும்ன்னாலும் ஆர்டர் பண்ணுங்க…”என சொல்ல

குமார் உடனே “பிரியா எங்களுக்கு புடிச்ச மாதிரி ஆர்டர் பண்ணலாமா…”என்று சைகையில் பாட்டில் போல் வைத்து காட்ட பிரியா “பண்ணித்தொலை…”என்று தலையசைத்தாள்..

எல்லாரும் அவரவர்க்கு பிடித்ததை ஆர்டர் செய்ய பிரியாவின் முகம் அப்பொழுது அங்கு வந்த எழிலை பார்த்ததும் மலர “சார் வந்துட்டாரு…”என்றாள் சந்தோசமாய்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.