இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவ நொடி நேரத்தில் இருவரும் சுதாரித்துகொண்டனர்..
எழில் நிமிர்ந்தவன் “கரெக்ட்டா மெஷர்மென்ட் கொடுங்க…”என சொல்ல சத்யா தலையசைத்தவள் பிராஜக்டில் கவனம் செலுத்த எழில் சில நிமிடங்கள் அவள் பக்கத்திலேயே நின்று டிசைனிங் எல்லாம் மாற்ற சொல்லி சொன்னான்..
அவன் பக்கத்திலேயே நின்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க அது சத்யாவிற்குதான் கம்பர்ட்டபிளாக இல்லை..
“பச் இவன் என்ன பக்கத்திலயே நின்னு நொய் நொய்ன்னு சொல்லிட்டு இருக்கான்…”என தனக்குள் திட்டிக்கொண்டவளுக்கு அவன் எப்பொழுது அங்கிருந்து போவான் என்றிருந்தது..
டீமில் இருந்த மற்றவர்களோ ஆவென வாயை பிளந்தபடி எழிலை பார்த்துகொண்டிருந்தான்.
எழில் ஒரு பெண்ணிடம் இரண்டு நிமிடங்கள் பேசுவதே அரிதான விஷயம் அதுவும் திட்டாமல் பேசுவது எல்லாம் அதிசயம்…
“நம்ம எழில் சாரா இது…”என்று எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்…
சதீஸ் ஆகாஷ் இருவர் மட்டும் அவர்களை இப்படி பார்த்து சந்தோசப்பட்டனர்..
எழில் “ஒர்க்கை ஒழுங்கா பண்ணுங்க…மெஷெர்மென்ட்டே தப்பா போட்டா புல் அவுட் லுக்கும் மாறிடாதா… கேர்ப்புல்…”என்று எச்சரித்தவன் அங்கிருந்து செல்ல அதன்பின் தான் சத்யாவால் நிம்மதியாக முடிந்தது.
“தொல்லை விட்டுச்சு….”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கினாள்..
அன்றைய முதல் நாளிலேயே எழில் வேலை விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவன் என்று சத்யாவிற்கு புரிந்து போனது…
சதீஸ் ஆகாஷே இரண்டு முறை அவன் கேபின் சென்று திட்டுவாங்கிக்கொண்டு வந்தனர்..அவன் திட்டுவது வெளியில் கேட்கும் அளவுக்கு திட்டினான்.
அதுவும் பெண்கள் சென்றாள் இன்னுமே அதிகமாய் கோபப்பட்டான்…
அவர்கள் டீமில் இருக்கும் மனிஷா அவன் கேட்ட பைலை எடுத்துகொண்டு சென்றவள் திரும்ப வரும்பொழுது திட்டு வாங்கிய கோபத்துடன் வந்தாள்.
“சரியான மான்ஸ்ட்டர்….பொண்ணுங்கன்னா அப்படி என்ன கோபம்மோ… ஒரு சின்ன தப்புக்கு போய் அப்படி திட்டறான்…”என முனுமுனுத்துகொண்டே அவளிடத்தில் உட்கார சத்யா அவளையே பார்த்தவளுக்கு அவள் என்ன முனுமுனுத்தாள் என்று உதட்டசைவு வைத்தே புரிந்தது.
“இந்த எழில் எதுக்கு எல்லாரையும் திட்டறான்…”என சொல்லிக்கொண்டவள் தான் அவனிடம் திட்டுவாங்கி விடக்கூடாது என்று கவனமாகவே வேலை பார்த்தாள்..
அப்பொழுதும் அவள் ஒரு சின்ன மிஸ்டேக் செய்துவிட எழில் அவளை கூப்பிட்டு எல்லாம் திட்டவில்லை அவனே வெளியில் வந்தவன் ஓங்கி அவள் சிஸ்டம் இருந்த மேசையை தட்டினான்..
அதில் அதிர்ந்து அவள் திரும்பி பார்க்க “என்ன ஒர்க் பன்றிங்க… மெயில் பன்றதுக்கு முன்னாடி சைன் அவுட் லுக் கரெக்ட்டா இருக்கான்னு பார்க்க மாட்டிங்களா.. டைம் பாஸுக்கு வேலைக்கு வர்றிங்களா…”என்று எல்லாரும் பார்க்க திட்டினான்..
சற்று முன் அவனிடம் திட்டு வாங்கிய மனிஷாவிற்கு இப்பொழுது சத்யா திட்டுவாங்குவதை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருந்தது.
“இவ ஒருத்திதான் திட்டுவாங்காம இருந்தா இப்போ இவளும் திட்டு வாங்கிட்டா…”என தனக்குள் சொல்லிக்கொண்டாள்..
சதிஸ் எழ எழில் பார்வையிலேயே அவனை அடக்கியவன் “நீங்க அனுப்புன அவுட் லுக் எல்லாமே தப்பா இருக்கு… ஒர்க்ல கான்ஸன்ட்ரேட்டோட பண்ணுங்க இனி இந்தமாதிரி மிஸ்ட்டேக் பண்ணக்கூடாது….”என வார்னிங் கொடுத்தவன் “ஹாப்பனவர்தான் டைம் கரெக்ஷன் பண்ணி அகைன் மெயில் பண்ணுங்க…”என திட்டிவிட்டு தன்னுடைய கேபின் சென்றான்.
சத்யா திரும்பி பார்க்க இவ்வளவு நேரம் அவளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த எல்லாரும் உடனே வேலை பார்ப்பது போல் தலையை திருப்பிக்கொண்டனர்..
சதீஸ் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “சத்யா நீ எதுவும் தப்பா எடுத்துக்காதம்மா அவன் வேலை விஷயத்தில கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டு யாருன்னு எல்லாம் பார்க்க மாட்டான்..”என சொல்ல
“புரியுது தப்பு என்மேலதான…”என்றவள் உடனே டிசைனிங் அவுட் லுக்கை கரெக்ட் செய்து எழில் கொடுத்த டைமுக்குள் அவனுக்கு மெயில் அனுப்பினாள்..
அன்றைய நாள் எழிலிடம் திட்டு வாங்கி ஒருவழியாக முடிந்தது..
ஆபிஸ் டைம் முடியவும் சத்யா சிஸ்டம் ஆப் செய்தவள் பேக் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்..
பார்க்கிங்கில் ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது மனிஷா வந்தவள் “சத்யா ஒன் செகண்ட்…”தடுத்தாள்..
சத்யா திரும்பி பார்க்க “அப்சட்டா இருக்கீங்களா?…”என கேட்க
“அப்சட்டாவா… இல்லயே…”
“இல்ல அந்த மான்ஸ்டர்கிட்ட திட்டு வாங்கறது எல்லாம் நாங்க பழகிட்டோம் உங்களுக்கு இது புதுசுல்ல அதான் அப்சட்டா இருக்கீங்களோன்னு கேட்டேன்…”
சத்யா முகம் இறுக “நாம தப்பு பண்ணுனா நமக்கு மேல பொசிஷன்ல இருக்கவீங்க திட்டதான் செய்வாங்க ஏன்னா எதாவது ப்ராப்லம்ன்னா அவங்கதான் எம்டிக்கு பதில் சொல்லணும்….நான் அவர் என்னை திட்டுனார்ன்னு அப்சட்டாவும் இல்ல அவர்மேல கோபமாவும் இல்ல…உங்க அக்கறை தேங்க்ஸ்… வழியை விடறீங்களா…”என்றவள் வண்டியை கிளப்பிகொண்டு அங்கிருந்து செல்ல அவள் பேசியதை எல்லாம் எழில் சற்று தள்ளி இருந்த கார் பக்கத்தில் நின்றபடி கேட்டிருந்தான்..
சத்யா முதலில் வீட்டிற்கு சென்றவள் கொஞ்சநேரம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு பின் டின்னெருக்கு சமைக்க தொடங்கினாள்..
அவள் சமைத்து கொண்டிருக்கும்பொழுது எழில் வந்துவிட்டான்.
காலிங் பெல் அடிக்கவும் சென்று கதவை திறந்தவள் எழிலை பார்த்தவன் “வா…”என்றுவிட்டு எதுவுமே நடவாதவள் போல் கிட்சன் சென்றுவிட்டாள்..
அங்கு கம்பனியில் வேறொருத்தியிடம் தன்னை விட்டு கொடுக்காமல் பேசினாலும் வீட்டில் தன்னிடம் கோபத்தை காட்டுவாள் என்றுதான் நினைத்தான்.. ஆனால் அவள் எதுவுமே நடக்காதது போல் இயல்பாய் சென்றது அவனுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது…
எழில் பிரஷப்பாகிவிட்டு கிட்சன் சென்றவன் “என்ன குக் பன்றியா?…”என கேட்க
அவன் பக்கம் திரும்பி பார்த்தவள் “ஏன் உனக்கு துணி துவைச்சுட்டு இருக்க மாதிரி இருக்கா…”என்றாள்.
“உன்னால நக்கலா பேசாம இருக்கவே முடியாதுல்ல….”
இதழ் சுழித்தவள் “இதுதான் நான்… ஓகே உனக்கு காபி போட்ருக்கேன் எடுத்துக்கோ…”என்றவள் அவன் பக்கம் காபி கப்பை நகர்த்தி வைத்துவிட்டு
“சீக்கிரம் குடிச்சுட்டு சிங்ல இருக்க பாத்திரம் எல்லாம் கழுவிடு…”என்றாள்..
“அதெப்படி காபியை இந்த பக்கம் கொடுத்ததும் உடனே அடுத்த வேலையை சொல்ற…”என்றவன் காபியை ஒரு மிடரு குடித்துவிட்டு கீழே துப்பியவன் இரும்பினான்…
சத்யா அதில் கைகள் மடக்கி காற்றில் குத்தி “சக்ஸஸ்…”என்றவள் அவனை பார்த்து சிரித்தாள்..
எழில் முகம் அஷ்டகோணலாக மாற “உவேக் கசக்குது… என்னடி இது?…”என்று கேட்க
“ம்ம் சால்ட் காபி ஸ்பெஷலா உனக்காகவே போட்டேன்… என்னா எல்லார் முன்னாடியும் வச்சா திட்டற அதுக்குதான் இந்த ரிவேஞ்சு… எப்படி..”என்றாள்.
“அடிப்பாவி…”எழில் அவளை முறைத்தவன் “உன்னைபோய் நல்லவன்னு நினைச்சேன் பாரு…”என சொல்ல
“நான் நல்லவன்னு உன்கிட்ட சொன்னன்னா…”என கேட்டு இதழ் சுழித்தவள் “நீயே நினைச்சிக்கிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…”என்றாள்..
“உன்னை…”என்றவன் நொடி நேரத்தில் அவள் கைபிடித்து அருகில் இழுத்தவன் காபி கப்பை அவள் வாயில் வைத்து குடிக்க வைத்தான்..
“ஹேய் வேண்டாம்…”என்றவளை விடவில்லை… எப்படியோ போராடி அவளை குடிக்க வைத்தான்
சத்யா முகம் அஷ்ட்கோணலாக மாற முகம் சுழித்தவள் வேகமாய் அவனை தள்ளி விட்டு சிங்கில் குடித்த காபியை துப்பினாள்..
“உவேக்.. என்ன இப்படி கசக்குது…”
“ம்ம் நீதான உப்பை தாராளமா அள்ளி போட்ருக்க… எப்படி இருந்துச்சு ஸ்பெஷல் காபி…”
சத்யா முறைத்து பார்க்க எழில் சிரித்தான்..சில நொடிகள் அவனை முறைத்தவள் பின் அவளும் சிரித்துவிட்டாள்..
எழில் சிரித்துகொண்டே ‘தேவையா உனக்கு இந்த வேலையெல்லாம்…”என்று கேட்க
“நீ என்னையும் குடிக்க வைப்பேன்னு எனக்கு எப்படி தெரியும்…”என்றவள் வாய் எல்லாம் கசக்கவும் பிரிட்ஜ் திறந்து உள்ளே சாக்லேட்ஸ் அடுக்கி வைத்திருக்க அதில் இருந்து ஒன்றை எடுத்து அதில் பாதி உடைத்து சாப்பிட்டாள்…
எழில் “ஏய் கொஞ்சம் இங்கயும் கொடு…”என்றவன் அவளிடமிருந்து சாக்லேட்டை பிடுங்கினான்..
சத்யா சமையல் செய்ய செல்ல எழில் சாக்லேட் சாப்பிட்டபடி அவள் பக்கத்தில் சென்று இடைவெளி விட்டு நின்றவன் “ஏய் கோபத்துல டின்னர்ல எதுவும் பண்ணிட மாட்டியே?…”என்று கேட்க
“இது நானும் சாப்பிடறது இதில எல்லாம் நான் எதுவும் பண்ணல…”
“ம்ம் அப்போ நம்பி சாப்பிடலாமா?…”
சத்யா திரும்பி ஒரு பார்வை பார்க்க “ஓகே விடு முறைக்காத… முறைக்கும் போது முகத்தை பார்க்க முடியல..”என்றான்.
“ஏய்…”
“சமையலை கவனி..”என்றவன் சில நிமிடங்கள் எதுவும் சொல்லவில்லை பின் அவனே “நான் உன்னை வேணும்ன்னு எல்லாம் திட்டல தப்பு பண்ணுனதுக்காகதான் திட்டுனேன்…”என்றான்
“அதுக்காக எல்லார் முன்னாடியும் வச்சு திட்டுவியா… நான்னு இல்ல எல்லாரையும் அப்படித்தான் திட்டற.. அதுவும் பொண்ணுங்கன்னா உனக்கென்ன அப்படியொரு கோபம்…”என கேட்க
“கோபம் எல்லாம் இல்லயயே…”
கரண்டியை எடுத்துகொண்டு சத்யா வேகமாய் திரும்ப அடிக்கபோகிறாளோ என்று எழில் சட்டென பின்னாடி நகர்ந்தான்..
“ஏய்…”
“பயப்படாத அடிக்க எல்லாம் மாட்டேன்… என்ன சொன்ன கோபம் எல்லாம் இல்லயா அப்பறம் எதுக்கு உன் டீம்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் உன்னை அப்படி திட்டறாங்க?…’என கேட்க எழில் முகம் இறுகியது..
அவனையே பார்த்தவள் எழில் அமைதியாக இருக்க “ஓ உன் எக்ஸ் உன்னை ஏமாத்திட்டு போயிட்டான்னு உனக்கு பொண்ணுங்க எல்லார் மேலயும் கோபம்மா அந்த கோபத்தைதான் பொண்ணுங்ககிட்ட காட்டிட்டு இருக்கியா?…”என கேட்க
எழில் அவளை முறைத்து பார்த்தவன் வேகமாய் அங்கிருந்து சென்றான்..
No comments yet.