சத்யா தட்டை நகர்த்தி வைக்கவும் எழில் நிமிர்ந்து முறைத்தவன் “உனக்கு நான் சாப்பிடறதுகூட பிராப்லம்மாடி?…”என கேட்க
“ஆமா ப்ராப்லம்தான்….”
“என்னடி நினைச்சிட்டு இருக்க… அவனவன் பசியில இருக்கும்போது…”என்றவன் பேச்சு அவள் மற்றொரு தட்டை எடுத்து வைக்கவும் பாதியிலேயே நின்றது.
அவள் சமைத்ததை அந்த தட்டில் பரிமாறவும் புரியாமல் பார்த்தவன் “என்ன இது?…”என்றான்.
“ம்ம் சப்பாத்தி அண்ட் கிரேவி…”
“அது பார்த்தா எனக்கு தெரியாதா…”
“அப்பறம் எதுக்கு கேட்ட….”
“உப்…”இதழ் குவித்து காற்றை ஊதியவன் “இங்க பாரு உன்கூட சண்டை போடற நிலைமையில எல்லாம் நான் இப்போ இல்ல பசிக்குது….”என்றான்.
“அப்போ சாப்பிட வேண்டியதுதான…”
“ஹான்…”அவன் அதிர்ந்து பார்க்க
‘ஷாக்கை குறைச்சுட்டு சாப்பிடுடா….”என்றவள் எழுந்து கிட்சன் சென்றாள்..
எழில் “இவ எதுக்கு நமக்கு சாப்பாடு எல்லாம் போடறா… ஒருவேளை பாய்ஸன் கொடுத்து சாகடிக்க பாக்கறாளோ…”யோசிக்க அவன் மனசாட்சி “ச்சே ச்சே அவ அப்படி பன்ற ஆள் எல்லாம் இல்ல..”என்று சத்யாவிற்காக சப்போர்ட் செய்தது.
“இப்போ எதுக்கு நீ அவளுக்கு சப்போர்ட் பன்ற…”என்று தன்னுடைய மனசாட்சியை திட்டியவன் பசிக்கவும் “பாய்ஸனே கலந்து இருந்து கலந்தாலும் பரவால்ல…”என்று சாப்பிட தொடங்கினான்..
சத்யா அவளுக்கு மட்டும்மே சப்பாத்தி செய்து இருந்தால் அதை அவனுக்கு வைத்துவிட்டாள்… எழிலுக்கு இருக்கும் பசியில் அது அவனுக்கு பத்தாது என்று தெரியும் அவனுக்கும் தனக்கும் சேர்த்து மாவு பிசைந்தவள் மறுபடியும் சப்பாத்தி போட தொடங்கினாள்..
அவன் வைத்த சப்பாத்தி எல்லாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் சுடசுட சப்பாத்தி எடுத்து வந்தவள் அவனுக்கு பரிமாறி விட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்..
முதலில் வேக வேகமாய் சாப்பிட்டவன் பசி கொஞ்சம் அடங்கியதும் பொறுமையாக ரசித்து சாப்பிட தொடங்கினான்
“இன்னும் கொஞ்சம் கிரேவி வேணுமா..”என கேட்டு அவனுக்கு பரிமாறினாள்..
எழில் சாப்பிட்டுகொண்டே அவளை பார்த்தவன் “என்ன நீ சமைச்சதை என்னை சாப்பிட சொல்லிருக்க?…”என கேட்க
“ம்ம் காய்ஞ்சதை சாப்பிட்டு இருந்த பாவமா இருந்துச்சு அதான்…”
“ஓ பாவம் பார்த்து எனக்கு சப்பாடு போட்ருக்க…”
“சாப்பாடு போடல சப்பாத்திதான் போட்டேன்.. பேசாம சாப்பிடு…”
அவள் நோஸ்கட் செய்யவும் எழில் சாப்பிட்டு முடிக்கும்வரை அதன் பின் எதுவும் பேசவில்லை.
சாப்பிட்டு முடித்ததும் அவன்பாட்டுக்கு கைகழுவிவிட்டு எழுந்து செல்ல “ஓய் எங்க போற…”தடுத்தாள்..
திரும்பி பார்த்தவன் “என்ன?…”என்று கேட்க
“நல்லா சாப்பிட்டல்ல…”
“நீதான வச்ச…”
“அப்போ எல்லாம் கிளீன் பண்ண ஹெல்ப் பண்ணு…”
“ஹான்…”
“என்ன பார்க்கிற…கிளீன் பண்ணிதான் ஆகணும்…”என்றவள் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரம் எல்லாம் கொண்டு போய் சிங்கில் போட்டவள் அவனை கழுவ சொன்னாள்..
எழில் அதிர்ந்தவன் “ஹேய் என்னால எல்லாம் முடியாது…”என்றான்.
“முடியாதா…நல்லா எட்டு சப்பாத்தி சாப்பிட்டல்ல அப்போ கழுவிதான் ஆகணும்… போ…”என்றவள் அவன் கரம் பிடித்து கிட்சன் இழுத்து சென்றாள்..
சத்யா கிட்சனை சுத்தம் செய்ய வேறு வழியில்லாமல் எழில் பாத்திரம் கழுவினான்..
வேலை முடித்ததும் அங்கிருந்து செல்லப்போனவனை தடுத்தவள் “இனி வெளில எல்லாம் சாப்பிட வேண்டாம்… நானே உனக்கு சமைக்கறேன்…”என்றாள்..
“எதுக்கு சமைச்சுட்டு இப்படி பாத்திரம் கழுவ சொல்வ…”
“ஏன் பண்ணுனா என்ன… நீயும் வேலைக்கு போற நானும் வேலைக்கு போறேன்… ஹெல்ப் பண்ணி பன்றது ஒன்னும் தப்பில்லயே…”
“திடீர்னு என்ன என்மேல இரக்கம்?…”என்று எழில் கேட்க
“நான் சாப்பாட்டு விஷயத்துல என் எதிரிகூட கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கறவ….என் புருஷனா போயிட்ட அதான் இறக்கி வந்து உனக்கும் சேர்த்து சமைக்கிறேன்னு சொல்றேன்….”என்றவள் தன்னையும் அறியாமல் அவனை புருஷன் என்று சொல்லி இருந்தாள்…மனதில் அழுத்தம்மாய் பதிந்த விஷயம் பேச்சில் வரத்தானே செய்யும்..
எழில் தாடியை தடவியபடி யோசிக்க சத்யா “என்ன யோசிக்கிற… உனக்கு ஓகே இல்லன்னா வேண்டாம்… நீ டெய்லியும் பரோட்டா காய்ஞ்சு போன பன்னுன்னு வாங்கி சாப்பிடு எனக்கென்ன…”என்றவள் அங்கிருந்து செல்லப்போக அவள் கரம் பற்றி தடுத்தான் எழில்
திரும்பி பார்த்தவள் “என்ன?…”என்று கேட்க
“வேலை அதிகமா சொல்வியா?…”
“பாத்திரம் கழுவனும் ஸ்பெஷல்லா எதாவது டிஷ் செஞ்சா வெஜிடபில்ஸ் எல்லாம் கட் பண்ணி தரணும் அவ்வளவுதான்…”
“அப்போ எனக்கு ஓகே…”
“ஓகே நாளையில இருந்து நான் உனக்கும் சேர்த்து குக் பன்றேன்…”
“ஓகே டன்…”என்றவன் அவனது அறைக்கும் சத்யா அவளுடைய அறைக்கும் சென்றாள்..
மறுநாள்..
சத்யா எழுந்ததும் நேராக சென்று தட்டியது எழில் அறைக்கதவைதான்..
புரண்டு படுத்தவன் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்து வந்து கதவு திறக்கவில்லை..
சத்யாவும் விடவில்லை தொடர்ந்து கதவை தட்டிக்கொண்டே இருந்தாள்..அதில் அவளது அரைகுறை தூக்கமும் காணாமல் போக எழிலும் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான்
கதவை திறந்தவன் அவளை பார்த்ததும் “என்னடி பிசாசு…”என்று கேட்க
“நேத்து நாம பேசுனது மறந்துபோச்சா… உனக்கு சாப்பாடு வேணுமா வேண்டாமாடா…”என கேட்டவள் “வா…”என்று அவனுடைய உயரத்திற்கு எக்கி கழுத்தை பிடித்தவள் கிட்சனுக்கு இழுத்து சென்றாள்..
முதலில் முரண்டு பிடித்தவன் பின் உப்பு சப்பில்லாத ஹோட்டல் சாப்பாட்டை நினைத்தவன் அவள் கேட்ட உதவிகளை செய்து கொடுத்தான்
சத்யா ஒன்றும் அவ்வளவுவாக வேலை வாங்கவில்லை…அதற்கே அவன் “எங்க அம்மா என்னை எப்படி வளர்ந்தாங்க தெரியுமா கிட்சன் பக்கமே வரவிட்டது கிடையாது…’என்று மூக்கால் அழுதுகொண்டே செய்துகொடுத்தான்.
எழில் அவள் சொன்ன வேலைகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு எக்ஸர்சைஸ் செய்ய சென்றுவிட்டான்..
சத்யாவும் வேக வேகமாய் சமைத்து முடித்தவள் ரெடியாக சென்றாள்..
இருவரும் ரெடியாகி முடித்ததும் சாப்பிட வந்தனர்… எப்பொழுதும் எழில் அரக்க பறக்க அவசர அவசரம்மாய் சரியாய் சாப்பிட்டும் சாப்பிடாமலும்தான் ஆபிஸுக்கு கிளம்புவான்…
இன்றும் அதுபோலவே அவன் போன் பார்த்துகொண்டு வேக வேகமாய் சாப்பிட சத்யா அவன் கையில் ஒரு அடி வைத்தாள்.
அதில் எழில் அவளை முறைக்க “சாப்பிடும்போது என்ன போனு…”என்றவள் அவன் போனை பிடுங்கிகொண்டாள்..
“ஹேய் என் போன் கொடு…”
“முதல்ல சாப்பிடுடா…”என்றவள் சாப்பிட எழில் வாட்ச் பார்த்தவன் ஆபிஸ் செல்ல இன்னும் நிறைய டைம் இருக்கவும் சத்யா செய்திருந்த கிச்சடியை பொறுமையாகவே சாப்பிட தொடங்கினான்..
சத்யா சாப்பிட்டு கொண்டே நிமிர்ந்து அவனை பார்த்தவள் “நல்லாருக்கா?…”என கேட்க
“ம்ம்…”
‘அதை கேட்டாதான் சொல்லணுமா… மார்னிங் ஆயில் புட் எல்லாம் சமைக்க மாட்டேன்…வேணும்ன்னா சண்டே குக் பண்ணி தர்றேன்…’என சொல்ல எழில் தலையாட்டினான்.
அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய சாப்பிட்டு விட்டு எழுந்தனர்…
எழில் தன்னுடைய பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்ப சத்யாவும் வீட்டை பூட்டிக்கொண்டு அவன் பின்னாடி சென்றாள்.
இருவரும் லிப்ட்டில் பயணிக்கும் பொழுதுகூட எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கீழே சென்றதும் எழில் அவனுடைய கார் நோக்கி செல்ல சத்யா தன்னுடைய ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்..
கம்பனி…
எல்லாரும் பரபரப்பாய் அவரவர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்..
சத்யாவிற்கு சதீஸ் ஆகாஷ் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சத்யா சிஸ்ட்டனில் டிசைன் வரைந்து கொண்டிருக்க அவளுக்கு பின்னாடி வரிசையில் அமர்ந்து இருந்த விஷ்ணு லென்ஸ் கண்ணாடியை வைத்து அதில் சத்யாவை பார்த்து கொண்டிருந்தான்..
அவனும் வந்ததில் இருந்து சத்யாவைதான் பார்த்து கொண்டிருக்கிறான் ஆனால் அவளோ அவன் பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லை..
பூதக்கண்ணாடியை கீழே இறக்கிய விஷ்ணு ‘ச்சே ஒருதடவை கூட பார்க்க மாட்டேங்குறாளே…. “என புலம்பலாக சொல்ல அவன் பக்கத்தில் இருந்த குமார் ‘பார்க்கிற மாதிரி இருந்தாதான பார்ப்பாங்க…”என்றான்..
விஷ்ணு முறைத்து பார்க்க குமார் “ஹிஹி…”சிரித்தவன் “சதீஸ்க்கு நம்ம ரோல இருக்க ரேமா மேல ஒரு கண்ணு பிளேஸ் மாத்திக்கறேன்னு சொல்லு…”என சொல்ல
“சொன்னா…”
“அவன் இங்க வந்திடுவான் நீ அங்கு போயிடலாம்… எப்படி என் ஐடியா?…”
“சூப்பர்டா.. இன்னிக்குதான் உருப்படியா ஒரு ஐடியா கொடுத்து இருக்க லன்ச்க்கு உனக்கு பிடிச்ச கேஜிஎப் சிக்கன் வாங்கி தர்றேன்..”என்றவன் சதீஸ் கூப்பிட சேரை இழுத்துகொண்டு அவன் அருகில் செல்லப்போக இடையில் வந்து நின்றான் எழில்..
விஷ்ணு நிமிர்ந்து அவனை பார்க்க எழில் கைகள் கட்டிகொண்டு அவனை பார்த்தவன் “விஷ்ணு என்ன விளையாடிட்டு இருக்கியா?…”என்றான்.
“நோ சார்..”என்றவன் பின் “சாரி சார்…”என்றான்.
“ஒர்க் பாருங்க…”என்றவன் சத்யா அருகில் சென்றான்… அவன் பின்னாடி நிற்பது தெரியாமல் சத்யா வேலையில் கவனமாக இருந்தாள்..
அவள் பக்கத்தில் சென்றதுமே சதீஸ் ஆகாஷ் அவன் பக்கம் திரும்பி பார்த்தனர்
சத்யா கண்ணும் சரி எழில் கண்ணும் சரி திரையில் அவள் டிசைன் செய்துகொண்டிருந்த பிராஜக்ட் மீதுதான் இருந்தது.
அவள் கொடுத்த மெஷர்மென்ட் தப்பாக இருக்கவும் “சத்யா…இந்த மெஷர்மென்ட் இல்ல…”என்றவன் பின்னாடி நின்றபடியே அவள் பக்கம் சரிந்து கீபோர்டில் கைவைக்க சத்யா அதிர்ந்து திரும்பி பார்த்தாள்..
அவள் உடல் ஒரு நொடி அதிர்ந்ததை எழிலும் உணர்ந்தவன் அவள் பக்கம் பார்க்க இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது..
No comments yet.