மீண்டும் ஒரு காதல் -12

Sweety Novel's | 17 Apr 2026 | Share

எழில் முகத்தை மூடி சத்யா அடி வெளுக்க “ஹேய் விடு… விடுன்னு சொல்றேன்ல…”என்று கத்தியவன் ஒரு கட்டத்தில் அவளை தள்ளிவிட்டு முகத்தை மூடியிருந்த டவலை எடுத்தான்.

சத்யா கைகளை முறுக்கி கொண்டு அவனை பார்த்தவள் எழில் முறைக்கவும் “என்ன முறைக்கிற… எப்படி இருந்துச்சு என்னோட அடி?…”என்றாள்..

“நீயெல்லாம் மனுஷியாடி…”

“இல்ல ராட்சசி…”

பல்லை கடித்தவன் “நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி…”என்று சொல்ல 

‘என்ன சாபம் கொடுக்கிறியா..உன்னோட சாபம் எல்லாம் என்னை ஒன்னும் பண்ணாது… கண்டிப்பா நான் நல்லா இருப்பேன்னு எனக்கு தெரியும்…”

“எதுக்குடி என்னை அடிச்ச?…”

இடுப்பில் கைவைத்துகொண்டு அவனை முறைத்தவள் “நீ எதுக்குடா குடிச்ச?…”என்றவள் நேற்று அவனால் தன்னுடைய தூக்கம் கெட்டது பற்றி சொன்னாள்.

“அதுக்காக இப்படிதான் அடிப்பியா…’

“இதுக்கும் மேலயும் அடிப்பேன் இன்னொரு தடவை குடிச்சன்னா… ஆமா நேத்து எதுக்கு நீ குடிச்ச?…”

“நான் எதுக்கு வேணும்ன்னாலும் குடிப்பேன்டி… அது என் இஷ்டம்… நீயெல்லாம் என்னை கேள்வி கேட்காத…”என்றான்.

‘என்கிட்ட திமிர் காட்டாதடா…”

‘அப்படித்தான் காட்டுவேன்… என்னடி பண்ணுவ.. “

‘என்ன பண்ணுவனா…. “சத்யா அவனை அடிக்க எழில் தடுத்து பிடிக்க இருவரும் சண்டை போட்டனர்…

இருவரின் சண்டையை நிறுத்தியது எழிலுக்கு வந்த போன் கால்…

அவள் கரத்தை பிடித்திருந்தவன் “தொலைஞ்சு போ ராட்சசி…”என்று சொல்லி அவளுடைய கரத்தை விடுவித்தவன் சென்று போனை எடுத்து பேச சத்யா வேகமாய் சென்று அவன் தலையில் நறுக்கென கொட்டிவிட்டு அவன் திரும்பி பார்ப்பதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டாள்… ( இன்னும் ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்களாவே இருக்குதுங்களே…)

அதன் பின் நாட்கள் தினமும் சத்யா எழில் சண்டையுடன் வேகமாய் நகர்ந்தது.

ஒரு வாரத்திற்கு பின்..

ஆர். ஐ கம்பனி…

எழில் அவனுடைய அறையில் வேலையாக இருந்தவன் மேனேஜர் கூப்பிடவும் எழுந்து மேனேஜர் அறைக்கு சென்றான்..

“வாங்க எழில் ப்ளீஸ் சிடவுன்…”

எழில் அவருக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தவன் அவர் தற்பொழுது அவன் பார்த்து கொண்டிருக்கும் பிராஜக்ட் பற்றி கேட்கவும் அதற்கு பதில் சொன்னான்..

“எழில் இப்போ நீங்க பார்த்துட்டு இருக்க பிராஜக்ட் நாம வேதா சாப்ட்வேர் கம்பனியோட கோலாபரேட் பண்ணி பண்ண போறோம்…”

“ம்ம் இதுக்கு முன்னாடி நீங்க கோலாபரேட் பன்ற ஐடியால சேர்மன் இருக்கிறதா என்கிட்ட இன்பார்ம் பன்னிருக்கீங்க…”என எழில் சொல்லவும் 

“யா எழில் இப்போ அபிஷலா கோலாபிரேட் பண்ணிட்டோம் இப்போ அங்க இருந்து உங்க டீம்ல ஜாயின் பண்ண ஒரு டீம் வந்திருக்காங்க… இந்த பிராஜக்ட் டி.எல் நீங்கதான் எழில் அந்த டீம் உங்க டீமோட ஜாயின் பண்ணுனாலும் உங்களுக்கு கீழதான் எல்லாரும் ஒர்க் பண்ணுவாங்க…”என்றவர் மேலும் சில விஷயங்கள் பற்றி பேசிவிட்டு 

“ஓகே எழில் அந்த டீம் இப்போ கான்பிரன்ஸ் ஹால்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க இன்ட்ருடியூஸ் ஆகிட்டு பிராஜக்ட் எந்த லெவல்ல இருக்குன்னு எக்ஸ்பிளைன் பண்ணிடுங்க… நீயூ டீம் நம்ம கம்பனி அட்மாஸ்ட்பியருக்கு செட் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும் நீங்கதான் ப்ராப்லம் வராம பார்த்துக்கணும்…”என்றார்.

“ஷுர் சார் நான் பார்த்துக்கறேன்…”என்றவன் எழுந்து அவர் கைகொடுக்கவும் ஹேண்ட்ஷேக் பண்ணினான்..

“எழில் இதுல அந்த டீம் மெம்பர்ஸ் டீடெயில்ஸ் இருக்கு…”என சொல்லி ஒரு பைலை கொடுக்க வாங்கியவன் ‘ஓகே சார்… நான் என்னோட டீம்மை மீட் பன்றேன்…”என்றவன் அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியில் சென்றான் 

சதீஸ் ஆகாஷ் எல்லாம் அவனுடைய டீம்தான்… அவர்களுக்கு தனி கேபின் கிடையாது…

சிஸ்டம் முன் அமர்ந்து இருந்த சதீஸ் அப்படியே ஒரு சுழற்று சுற்றி தனக்கு பின்னாடி வரிசையில் இருந்த ராஜியை விசிலடித்து கூப்பிட்டான்.

அவளும் திரும்பும் நேரம் எழில் வந்தவன் அவள் அமர்ந்திருந்த சேரை அப்படியே நகர்த்தி “மேடம் ஒர்க் பாருங்க… சேட்டிங் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்…”என்றான்.

சதீஸ் அவனை முறைத்தவன் “நான் ஒரு பொண்ணுகூட பேசிடக்கூடாதே…”என சொல்ல 

“ஒழுங்கா வேலைய பாருடா.. புது டீம் வேற வந்து இருக்காங்க அப்பறம் வேலை செய்யாத உங்களை எல்லாம் தூக்கிட போறாங்க….”என்றான் எழில் பயமுறுத்துவது போல்..

அது சதீஸ்க்கு மட்டுமில்லை அவன் டீமில் வேலை பார்த்து கொண்டிருந்த நிறைய பேருக்கு மினி ஹார்ட் அட்டாக் வர அதிர்ந்தனர் 

எழில் சிரித்தவன் “சும்மா சொன்னேன்… ஒர்க்கை பாருங்க…”என்றவன் கையில் இருந்த பைலை பிரித்து பார்த்தபடி கான்பிரன்ஸ் ஹாலுக்குள் சென்றவன் “ஹாய் கைஸ்…”என்றபடி வரிசையாக அமர்ந்து இருந்தவர்களை பார்த்தவன் அதிலிருந்தவளை பார்த்து அதிர்ந்தான்..

எழில் வரிசையாக அமர்ந்து இருந்தவர்களில் இருந்தவளை பார்த்து அதிர்ந்தவன் “இவளா…”என்று ஷாக்காக 

அதே அதிர்ச்சிதான் சத்யா முகத்திலும்…. 

“இவனா…”என்பது போல் அவனை பார்த்தவள் உடனே தன்னிலை உணர்ந்து அவனை பார்த்து திமிராய் இதழ் சுழித்துவிட்டு முகத்தை திருப்பிகொண்டாள்… 

அதில் எழில் முகம் கோபத்தில் சிவக்க “மூஞ்சியையா திருப்பிக்கற பார்த்துக்கறேன்டி… வசமா நீயே வந்து சிக்கிட்ட இனி எப்படி உன்னை வச்சு செய்யபோறேன்னு மட்டும் பாரு…”என்று கோபம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டான்.. 

முகத்தை இயல்பாக வைத்துகொண்டவன் “ஹாய் கைஸ் ஐயம் எழில்…டிஎல்… உங்க எல்லாருக்குமே நான்தான் டி.எல் என்கிட்டதான் நீங்க எல்லாரும் ஒர்க் பண்ண போறீங்க….”என்பதை அழுத்தம்மாய் சொன்னான்.. 

சத்யா “நீ டி.எல்லா இருந்தா என்ன நான் எல்லாம் பயப்பட மாட்டேன்டா போடா…”என்பது போல் அலட்சியம்மாய் பார்த்தாள்.. 

எழில் ஒவ்வொருவராய் தங்களை அறிமுகப்படுத்திகொள்ள சொல்ல ஒவ்வொருவரும் எழுந்து தங்களை இன்ட்ருடியூஸ் செய்துகொண்டனர்.. 

சத்யாவின் முறை வரும்பொழுது சத்யா எழுந்து நின்றவள் “ஐயம் சத்யா… டிசைனிங் எஞ்சினியர்…”என்று சொல்ல எழில் அவளுடைய டீடெயில்ஸ் இருந்த பேப்பரை பார்த்தவன் அதில் மிஸ் சத்யா என்றே அவளுடைய பெயரை குறிப்பிட்டிருக்கவும் அவள் தன்னுடைய திருமணத்தை மறைத்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டான்.. 

“மிஸ் ஆர் மிஸஸ்?…”என்று எழில் வேண்டுமென்றே கேட்க சத்யா அவனை முறைத்து பார்த்தவள் “மிஸ் சத்யா சார்…”என்றாள் அழுத்தம்மாய்.. 

“ஓ… மிஸ் சத்யா…”இழுத்தவன் அவளை உட்கார சொல்லிவிட்டு அதன் பின் அவளை வம்பு இழுக்காமல் பிராஜக்ட் பற்றி டிஸ்கஷன் செய்தவன் சதீஸ் அழைத்தான். 

சில நிமிடங்களில் கதவை திறந்து சதீஸ் வந்தவன் “எஸ் சார்…”என்றபடி திரும்பியவனும் சத்யாவை பார்த்து அதிர்ந்தான். 

“இவங்க எல்லாம் பிராஜக்ட்ல நம்மகூட சேர்ந்து ஒர்க் பண்ண போறாங்க இவங்களுக்கு ஒர்க் பிளேஸ் அரேஞ் பண்ணுங்க சதீஸ்…”என்றான். 

“ஓகே சார்..”என்றவன் அவர்களை அழைத்து சென்றான்.. சில நிமிடங்களிலேயே சதீஸ் ஆகாஷ் இருவரும் திரும்பி வந்தனர்… 

“ஒர்க் பார்க்காம இங்க என்ன பன்றிங்க…”என கேட்ட எழில் டேபிள் மீது இருந்த பைலை எடுத்துகொண்டான்.. 

“எழில் சிஸ்டர் இங்க என்ன பன்றா?…”என ஆகாஷ் கேட்க 

“உனக்கு ஏதுடா சிஸ்டர்?…உனக்கு அண்ணாதான இருக்காரு…” 

“என்ன எழில் விளையாடரியா…” 

சதிஸ் அங்கிருந்து செல்லப்போனவனை கைபிடித்து தடுத்தவன் “சத்யா இங்க என்ன பன்றா?…”என்றான் 

“பச்..”சலித்துக்கொண்டே அவன் கரத்தை எடுத்துவிட்ட எழில் “அவளோட கம்பனியும் நம்ம கம்பனியும் பிராஜக்ட்ல கொலாப் பண்ணிருக்காங்க… அவங்க ஒரு டீம் அனுப்பி இருக்காங்க அந்த டீம்ல இவளும் இருக்கா அவ்வளவுதான்…”என்றவன் அங்கிருந்து செல்லப்போய் திரும்பி வந்து 

“இங்க பாருங்க சத்யாவுக்கும் எனக்கும் மேரேஜ் ஆனது கம்பனில யாருக்கும் தெரியக்கூடாது… அவளை யாருன்னே தெரியாத மாதிரி மெயின்டைன் பண்ணிக்கோங்க…”என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல் அங்கிருந்து தன்னுடைய கேபினுக்கு சென்று விட சதீஸ் ஆகாஷ் இருவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. 

எழில் அன்று சத்யாவை எதுவும் டிஸ்டர்ப் செய்யவில்லை… அவளும் “அது… சத்யான்னா அந்த பயம் இருக்கனும்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் தன்னுடைய வேலை முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.. 

                  ***************** 

நிலாமகள் வானில் உலா வந்து கொண்டிருந்த இரவு நேரம்.. 

சத்யா சமைத்தது எல் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள் “மதியம் சாப்பிடாதது பசிக்குது…நல்லா சாப்பிடணும்…”என சொல்லிக்கொண்டவள் வேகமாய் சென்று கைகள் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.. 

சப்பாத்தியை தட்டில் எடுத்து  வைத்துவிட்டு சாப்பிடலாம் என்று கைவைக்கும் பொழுது காலிங் பெல் இசைத்தது. 

“உப்…”இதழ் குவித்து காற்றை ஊதியவள் “சாப்பிடும்போதுதான் வருவான்…”முனுமுனுத்துகொண்டவள் எழுந்து சென்று கதவை திறக்க எழில் சுவரில் தாளம் தட்டிகொண்டிருந்தான்.. 

கதவை திறந்தவள் அவனை பார்த்துவிட்டு “குடிச்சிருக்கானா என்ன…”என கண்கள் சுருக்கி அவனை ஆராய்வது போல் பார்க்க 

அவள் பார்வையை கண்டுகொண்டவன் “நான் ஒன்னும் குடிக்கல…”என்றவன் கையில் இருந்த பார்சலுடன் உள்ளே சென்றவன் அதை டேபிள் மீது வைத்துவிட்டு கை கழுவி வந்தவன் பிரித்து சாப்பிட தொடங்கினான். 

பரோட்டாதான் வாங்கி வந்திருந்தான்.. அதுவும் டிரையாக இருந்தது.. 

அது  பார்க்கும்போதே சத்யாவுக்கு ஒருமாதிரி இருக்க “இதையெல்லாம் இவன் எப்படி டெய்லியும் சாப்பிடறான்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அவன் பசியில் கஷ்டப்பட்டு சாப்பிடுவதை பார்த்து அவள் அருகில் சென்றவள் தட்டை நகர்த்தி வைத்தாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.