பாலைவனத்தில் பூத்த ரோஜா

BalaSneha Velmurugan | 22 Mar 2026 | Share

அத்தியாயம்
-17

இவ்வளவு
சீக்கிரமாக தீனா கிளம்பி சென்ற இடம் வேறு எங்கும் இல்லை
, “ குரு தங்கி இருந்த
அப்பார்ட்மெண்ட்
….” தான்.

குருவிடம்
இருக்கும் பெரிய
கெட்ட பழக்கம்இது தான்.  தூங்கினான் என்றால்,
எத்தனை காட்டுக்கத்து கத்தினாலும் சரி
, இடியே இடிந்து  விழுந்தாலும் “, அவனாக தூங்கி எந்திரிக்கும் நேரத்திற்கு தான் எந்திரிப்பான் ….

அதற்கு
முன்பு எவ்வளவு போன் அடித்தாலும்
,
 எழுந்து  கொள்ள மாட்டான். “ ஒருவர் வந்து
தட்டி எழுப்பினால் அந்த தொடு உணர்வில் டக்கென்று எழுந்து விடுவான்
”…

 இது சிறுவயதிலிருந்தே அவனுக்கு இருக்கிற ஒரே
பிரச்சினை இந்த தூக்கம்
.

அவன் அம்மாவும்
அப்பாவும் இன்றுவரை அதற்காக சிகிச்சையும் பார்த்து அதுவும் எந்தவொரு பலனும் தரவில்லை

அதனையும்
தாண்டி பூஜை பரிகாரம் என எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற‌ நிலைக்கு வந்துவிட்டனர்
”….

 அவர்களின் இந்த செயல் கோபத்தை தர வெளியில் வந்து
வீடு எடுத்து தங்கிவிட்டான்

அந்த நேரத்தில்
தான் தீனாவும்
, குருவும் போலீஸ் எக்ஸாமில் தேர்வு பெற்று டிரெயினிங்கிற்கு சென்று விட,

அத்தனையும்
தாண்டி
போலீஸ் ட்ரைனிங் கூட முடிந்த அளவுக்கு தீனா  எழுப்பினால் தான் குரு
எந்திரித்து இருக்கிறான்

குருவின் நிலை அறிந்து அன்றில் இருந்து இன்று வரை  தீனா பார்த்துக் கொள்ள , தீனா குருவிற்கு அனைத்துமாகிவிட்டான்…..

தீனாவின்
கடந்தகாலத்தில்
, “ குருவின் உதவியால் மட்டுமே உயிர்ப்போடு நடமாடினான்”….ஒரு காலகட்டத்தில் நடைபிணமாக இருந்தவனை கவனித்துக்கொண்டு, “ தீனாவின் தந்தையின் நகைக்கடையும் நடத்தி, தீனாவை
மீண்டும் போலீஸ் டிரையினிங்கில் சேர்த்து
, தானும் அவனோடு இணைந்து
இன்று வரை அவனை உருவேற்றி  அவனோடு இருக்கும்
ஒரே உயிர் நண்பன் குருதான்
”…

அதனால் என்னவோ, அப்போ இருந்து
இப்போ வரைக்கும் குருவை
மட்டும் தீனாவால்
கடிந்துகொள்ளவே முடிவதில்லை
“…

குருவிற்கு
இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த ஒருவன் தீனா மட்டுமே
,” அன்றில் இருந்து குருவை எழுப்பி விடறது தீனாவோட வேலையா போச்சு!!.”

பலமுறை அடித்தும்
,திட்டியும் பர்வதமும்
தீனாவும் தங்களோடு இங்கே இருந்துவிட வற்புறுத்தியும் ஏதோ சாக்கு சொல்லி தப்பித்து கொண்டே
இருக்கிறான்
….

 இந்த மாதிரி, ரொம்ப இம்பார்ட்டன்ட் கேஸ் சமயங்களில் மட்டும், கண்டிப்பா! தீனா ஆஜர் ஆகிவிடுவான் .

இன்றும் அதேபோல்தான்
குரு தங்கி இருக்கும் அபார்ட்மெண்ட்‌ டின் அவனது அறைக்கான  ஸ்பார்க  தீனாவிடம் எப்பொழுதும் இருக்கும்.

யோசித்து
கொண்டே
, “
குருவின் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே பார்க்க ஆள் உயரம் இருக்கும் டெடிபியரின்
கழுத்தில் கால் வைத்து நெறிப்பது போல் படுத்து கிடந்தான்
”….

அந்த டெடி
அவனது பிறந்த
நாளுக்கு அவன் ஆள் வாங்கி குடுத்த பொம்மை
. இதை மட்டும் அவள்
பார்த்தால் கண்டிப்பாக பத்திரகாளி ஆகிவிடுவாள்
”…. எதற்கும் இருக்கட்டும்
என அப்படியே ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு
,

திரும்பி
டெடியை பார்க்க
….

ப்ளீஸ் ஹெல்ப்
மீ
காப்பாத்துங்க
சாமி
! உங்களுக்கு புண்ணியமா போகும் சாமிஎன கெஞ்சுவது போல தோன்ற,

குருவை பின்பக்கத்தில்
ஒரு மிதி விட்டு டெடியை இழுக்க
,,,

மச்சா!!! “என் அஞ்சல மச்சா அவ குடுடா

டேய் இன்னும்
ரெண்டு மிதி வைச்சேனுவை
, “ நல்லா பாருடா மூக்குல பஞ்சு வைக்கிற நிலைமையில் இருக்குஏதாவது சொல்லிடபோற மூடிட்டி எந்திரி டைம் ஆயிடுச்சு

என்
அஞ்சலைய குடுறா
”!!!

ஐய்யா புண்ணியமா
போகும்
!!! இந்த
படுபாவிகிட்ட என்ன காப்பாத்துங்க
!! “என்ன அக்கடானு அந்த ஸ்டூல்
சாச்சுபோடுங்க என மைண்ட் வாய்ஸில்கதற
”!!!டெடி கதற

குருவை எழுப்பி
குளிக்க அனுப்பிவிட்டு டெடியையும் சேரில் அமர்த்திவிட்டு குருவிற்காக காத்து
கொண்டிருந்தான்.

குருவுக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் தீனாவிற்கு , தீனாவிற்கு   அப்படியே நேர்எதிரான கேரக்டரில் குரு”..

 
ரெண்டு பேரும்  இப்ப வரைக்கும் எல்லா
விஷயங்களையும்
ஒருவரோடு ஒருவர் ஏற்ற இறக்கங்களிலும் ஒண்ணா இருந்துட்டு வராங்க”…..

இதுக்கும் கல்லூரியில் தான் இருவருக்கும்
பழ
க்கம் , ஆனால் இருவருக்கும் இவ்வளவு நெருக்கம் ஆகும் நண்பர்களும் ஆகிவிடுவோம் என  கூறி இருந்தால் சிரித்து இருப்பார்கள்”…

சில நேரங்களில் வாழ்க்கையில் நம்ம நிறைய பேரை சந்திப்போம்!! அது
ரொம்ப சீக்கிரமான சந்திப்பா
இருக்கலாம்,
 இல்ல ரொம்ப தாமதமான  சந்திப்பா இருக்கலாம்.”

சீக்கிரமா சந்திக்கிறவங்க நமக்கு
உண்மையாக தான் இருக்கணும் என்ற அவசியம் கிடையாது
”!
அதே
மாதிரி
தாமதமாக சந்திக்கிறவங்க நமக்கு உண்மையா
தான் இருப்பாங்களான்னு சந்தேகப்படுற
 
நிலைமையிலும் நாம் இருக்கக் கூடாது”!.

  தாமதமாகவோ,
 சீக்கிரமாகவோ உண்மையான நம்பிக்கையிலேயும்,புரிதல்லயும் மட்டும்
தான் அது
வலுவானதாக இல்ல கடந்து போற மேகமானு  தெரியும்”…

எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவும் , அதிலிருந்து மீளவும் நமக்கு சுய
தைரியம் மட்டும்
வேண்டும் அதையும் தாண்டி குரு மாதிரியான நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை வரம் தான்”.

கருத்து—- கருத்து—–😂

 

குரு கிளம்பி
தயாராகி வெளியே வர  இருவரும் கிளம்பி கீழே
வந்திருக்க அவர்கள் இருக்கும் இடத்திற்கு டீனாவும் வந்து சேர்ந்தால்
,

என்ன
வானரம் எப்படி வந்த என டீனாவை
”, குரு  வம்பிழுக்க

ம்ம்ம்ம்ம்!!! “ பறந்து வந்தேன்..பார்த்த தெரியல

ஆமா!!!ஆமா!! “மரம் கம்மியா இருக்குனு பில்டிங் பில்டிங்கா தாவி தாவி பறந்துட்டு தானே வரனும்”.
என்க

நீ சொல்லாத
அத
!!  நீயே பெரிய வானரம் வாலு மட்டு இருந்தா
கன்பார்ம் பண்ணிடுவாங்க
குரங்கு குரு!!! குரங்கு குரு!! என கத்த

இவர்களை
மட்டும் இப்பொழுது யாராவது பார்த்தால் சத்தியமாக டம்மி போலீஸ் போல என்று நினைத்து
விடுவார்கள்
..அந்த
அளவுக்கு அடிக்காத குறையாக அங்கும் இங்கும் ஓடி சண்டை போட்டு கொண்டிருக்க
,

ஒரு
கட்டத்திற்கு மேல் தீனாவிற்கு பொறுமை காற்றில் கரைய இப்போ இரெண்டு பேரும் வரீங்களா
? இல்ல எப்படி ? என்று குரல் உயர்த்த!!

ஒருமுறை
இப்படிதான்
, “இருவரும் தீனாவின் கண்டிப்பையும் மீறி சண்டையிட, இருவரையும்
தொடர்ந்து வாய்மேல் கைவைத்து
, ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்கும்
வரை நிப்பாட்டி விட்டான்
”…

 இருவருக்கும் , “ஒரேஅசிங்கமா போச்சு குமாரு “!! என்ற நிலைதான்
பிறகு ஸ்கூல் பசங்க மாதிரி வாய் மேல் விரல் வைத்து நிற்க வைத்தால்…..

கப்சிப்
என  அமைதியாக தீனாவுடன்  கிளம்ப  ஆரம்பித்தனர்

குருவின்
வீட்டின் முன் வண்டியை நிறுத்தி வைத்து விட்டு
, ஜீப்பை எடுத்து கொண்டு தருண் வீட்டை நோக்கி
செல்ல
,

சார் !!! “சொல்லு டீனா”?

சார்!! “கடந்த இரண்டு வாரங்களாக
எந்த ஒரு திடீர் கொலையும் நடக்கல
? நீங்க அத கவனிச்சிங்களா”?

யெஸ்!!! நானும் அதை பத்தி சொல்லனும்
நினைச்சேன் தீனா
!!.”நம்ம கண்காணிப்பில் இருக்க மத்த நகைக்கடை
பசங்கள் சுத்தியும் எந்தவொரு சந்தேகப்படும் மாதிரி ஆட்கள் யாரும் வரல
!! அதேசமயம் எந்தவொரு கொலையும் நடக்கல

எனக்கு
ஏதோ சரியா படல
!நீ என்ன நினைக்கிற”!!!

ம்! ம்!! என யோசித்துவிட்டு  எனக்கும் அந்த சந்தேகம்
இருக்கு. ” நமக்கான எல்லா கேள்விக்கும் பதில் இப்போ போகும் இடத்துல நமக்கு கிடைக்கும்னு
எனக்கு தோணுது….

என தருணின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்…..

மூவரும் இறங்கி வீட்டிற்குள் நுழைய , அனைவரும் இவர்கள் வருவதை முன்பே அறிந்து தங்களுக்கு கண்கள சைகை செய்வதும் இவர்களை பார்ப்பதும் என நிற்க …..

 காத்திருங்கள் 🤍

🤍

🤍

🤍

 பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்

 

 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

  • Author
    BalaSneha Velmurugan
    April 26, 2026

    tq dr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *



  • Author
    Kavi Kavya
    April 26, 2026

    good

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *