பாகம் 9,10

Vaishnavi Vijayaraghavan | 03 Jun 2026 | Share

பாகம் 9 

ஹாஸ்பிட்டலுக்குள் தன் அப்பாவை பார்க்க சென்றபோது கேசுவாலிட்டியில் அவர் இல்லை.

ரிசப்ஷனில் சென்று கேட்டாள் வசுந்தரா.

“அவரை தனி பிரைவேட் ரூமிற்கு மாற்றி இருக்கிறோம்” என்று கூறினார் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

“ஏன்” என்றாள் வசுந்தரா.

“இல்ல மேடம் டாக்டர் கிட்ட இருந்து மாத்த சொல்லி இன்ஸ்டிரக்ஷன்ஸ் வந்தது, அதனால நாங்க மாத்தினோம்”

“எந்த டாக்டர்”

முந்தைய நாள் ஆதித்யா பேசிக் கொண்டிருந்த அந்த டாக்டரை காண்பித்தார் அந்த ரிசெப்ஷனிஸ்ட்.

“ஓகே தேங்க் யூ” என்று சொல்லிவிட்டு அந்த டாக்டரின் அறைக்குச் சென்றாள்.

டோரை நாக் செய்துவிட்டு “எக்ஸ்கியூஸ் மீ  டாக்டர், மே ஐ கம் இன்” என்றாள் வசுந்ரா.

“எஸ் ப்ளீஸ்”

“டாக்டர் நான் வசுந்தரா, பாலமுருகன் அவரோட பொண்ணு”

“சொல்லுங்க வசுந்தரா”

“என்னோட அப்பாவை ஏன் பிரைவேட் ரூமுக்கு மாற்றினீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நேற்று மிஸ்டர் ஆதித்யா வந்தார் இல்ல, அவர்தான் பிரைவேட் ரூமுக்கு மாற்ற சொன்னாரு, அதுவும் இல்லாம ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தையும் ப்ரீ ஆபரேஷன் போஸ்ட் ஆபரேஷன் எல்லாத்துக்குமே பே பண்ணிட்டாரு. நெக்ஸ்ட் வீக் ஆபரேஷன் ஷெட்யூல் பண்ணி இருக்கோம்”

“ஓகே டாக்டர், தேங்க்யூ சோ மச்”

“ஐ திங்க் யூ ஷுட் தேங்க் யுவர் ஹஸ்பண்ட் ஃபார் ஆல் திஸ்”

“ஷியூர் டாக்” என்று சொல்லிவிட்டு  சந்தோஷமாக தன் அப்பாவை பார்க்க சென்றாள் வசுந்தரா.

“அப்பா”

“வசு, வாம்மா”

“எப்படிப்பா இருக்கீங்க?”

“பரவால்லம்மா வலி குறைந்து இருக்கு, ஆப்ரேஷன் வேண்டாம் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்”

“இல்லப்பா ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணியே ஆகணும், மூணு பெரிய பிளாக் இருக்கு”

“சரிம்மா நீயும், உங்க அம்மாவும், தங்கச்சியும் கம்பெல் பண்றதுனால தான் பண்ணிக்கிறேன். இல்லன்னா எவ்வளவு நாள் இருக்கணும் இருக்கோ? அதோட இருக்கலாம் என்று நினைத்தேன்”

“அப்படி எல்லாம் பேசாதீங்க அப்பா”

“சரி மா, மாப்பிள்ளை எப்படி இருக்காரு? உங்க மாமியார் மாமனார் எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க அப்பா. என் நாத்தனாருக்கு தான்  காலில் அடிபட்டு இருக்கு”

“அச்சச்சோ என்ன ஆச்சு”

“காலையில படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துட்டா”

“அடி எதுவும் பெருசா படலையே?”

“ஹேர்லைன் பிராக்சர்னு டாக்டர் சொன்னாரு”

“அச்சச்சோ”

“10 டேஸ் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னு டாக்டர் சொன்னார் அப்பா”

“சரி மா”

“அம்மாவும் மந்தராவும் வராங்களா அப்பா?”

“மந்தரா நேத்து வரல, இன்னைக்கு வரேன்னு சொன்னா. அம்மா நேத்து நைட்டு வந்துட்டு காலையில் எனக்கு டிபன் கொடுத்துட்டு, வீட்டுக்கு போய் இருக்கா. குளிச்சிட்டு லன்ச் செஞ்சு எடுத்துட்டு வரேன்னு சொன்னா”

“சரிப்பா” 

‘ஆதித்யா சொன்ன அந்த அக்ரிமெண்ட் காண்ட்ராக்ட் விஷயத்தை தன் அப்பாவிடம் கேட்கலாமா?’ என்று நினைத்தவள், ‘ஏற்கனவே அவரே உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் அவரை தொல்லை செய்ய வேண்டாம்’ என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டாள்.

“நீ என்னம்மா சாப்பிட்ட?”

“இல்ல அப்பா, டிபன் எதுவும் சாப்பிடல. காலையில் காஃபி குடிச்சேன் அவ்வளவுதான்”

“ஏன்மா”

“இல்லப்பா காலையில் தான் என் நாத்தனாருக்கு அடி பட்டுச்சு ஹாஸ்பிட்டல் போனோம்னு சொன்னேன்ல, அப்புறமா அங்க இருந்து நேரா இங்கே வந்துட்டேன்”

“என்னம்மா நீ. இவ்வளவு நேரமா சாப்பிடாமலே இருக்கியே, மணி 11 ஆயிடுச்சு. கேண்டின்ல போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாமா”

“வேண்டாம் பா பசிக்கல, நான் ஒரு வழியா லன்ச் சாப்பிட்டுக்கிறேன்”

“சரி, சாத்துக்குடி ஜூஸ் குடி”

“இல்லப்பா வேண்டாம்”

“எனக்கு போட்டு கொடு”

“உங்களுக்கா சரி போடுறேன். உனக்கும் சேர்த்து போடு. நீ குடிச்சா தான் நானும் குடிப்பேன்”

ஸ்மைல் செய்து கொண்டே 

“சரி அப்பா”, என்று சொல்லி சாத்துக்குடி பழத்தை பிழிந்தாள். ஜூஸை கலந்து  தன் அப்பாவிற்கும் கொடுத்துவிட்டு அவளும் குடித்தாள்.

அப்போது ஆதித்யாவிடம் இருந்து அவளுக்கு ஃபோன் வந்தது.

அவளே கால் செய்வாள் என்று பொருத்து பார்த்த அவனுக்கு, அவளிடம் இருந்து கால் வராததால் ‘எப்படி சென்றாள், எப்படி திரும்ப வருவாள்?’ என்று நினைத்து அவனே கால் செய்தான்.

“அப்பா ஒரு நிமிஷம் இவர் கால் பண்றாரு”

“சரிம்மா பேசிட்டு வா” என்றார் பாலமுருகன்.

ஃபோனை எடுத்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து பேசினாள்.

“வசு”

“சொல்லுங்க ஆதி”

“நீங்க எப்படி போனீங்க, நான் அப்புறம் தான் ரியலைஸ் பண்ணினேன், நீங்க உங்க ஃபோன் மட்டும் தான் கையில் வச்சிருந்தீங்கன்னு”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆதி. ஜிபே யூஸ் பண்ணிக்கிட்டேன்”

“ஓ, ஓகே, இஃப் யூ வான்ட் ஐ வில் கம் அண்ட் பிக் யூ அப்” (உங்களுக்கு வேணும்னா நான் வந்து உங்களை கூட்டிக்கிட்டு வரவா)

“நோ நீடு ஆதி, ஐ வில் டேக் கேர் ஆஃப் மை செல்ஃப், தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்” (வேண்டாம் ஆதி, நானே என்னை பார்த்துப்பேன், எனக்காக கேட்டதற்கு நன்றி)

(ஆசிரியர் குறிப்பு:

நிறைய ஆங்கிலத்தில் பேசி கொள்வது போல இருப்பதால் சிலருக்கு பிடிக்கவில்லை மேலும் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதுவதால் அதை சரியாக உச்சரித்து படிக்க முடியவில்லை என்று சிலர் கூறியதால் அந்த மாதிரி ஆங்கிலத்தில் வரும் வாக்கியங்களுக்கு சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ள தமிழில் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். ஏதேனும் பிழை குறை இருந்தால் மன்னிக்கவும்🙏🏻)

“ஓகே, பை வசு”

“பை ஆதி”

ரூமிற்கு வரும்போது அவளுடைய அப்பா தூங்கி விட்டிருந்தார்.

அவர் அருகில் அமர்ந்து கொண்டு தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

அப்போது ஷகிலா கால் செய்தாள்.

தன் அப்பா எழுந்து விடப் போகிறார் என்று பயந்து ஃபோனை எடுத்துக் கொண்டு மறுபடியும் வெளியே வந்து பேசினாள்.

“சொல்லு ஷகி”

“என்னடி ஆச்சு?”

“என்ன, என்ன ஆச்சுன்னு கேக்குற”

“என்னடி தெரியாத மாதிரி கேக்குற, உன் ஃபர்ஸ்ட் நைட் என்னாச்சு”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. நான் சோஃபாவில் தூங்கினேன் அவர் கட்டிலில் தூங்கினார்”

“என்னடி அவனுக்கு மரியாதை எல்லாம் கொடுக்குற”

“சாரி டி, நான் உன் கிட்ட அப்படி பேசினேன்னா அதே பழக்கத்தில வேற யார் கிட்டேயாவது அதே மாதிரி பேசிடுவேன். அது அப்புறம் பிரச்சனை ஆயிடும்” என்றாள் வசுந்தரா.

“ஓ, ஓகே புரியுது டி” என்றாள் ஷகிலா.

பாகம் -10

“சரி, அங்கிள் எப்படி இருக்காரு?” என்றாள் ஷகிலா.

“அப்பாவுக்கு இப்போ பரவாயில்ல ஷகி, நெக்ஸ்ட் வீக் ஆப்ரேஷன்னு சொல்லி இருக்காங்க” என்றாள் வசுந்தரா.

அப்போது சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார் தனலட்சுமி.

“ஷகி, நான் அப்புறம் பேசுறேன்”

“ஓகே டி, பை டேக் கேர்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு.

“அம்மா” என்று சொல்லி கண்கள் கலங்க கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“எப்படி மா இருக்க?” என்றார் தனலட்சமி கண்கள் கலங்க.

“அம்மா நான் உங்க கிட்ட பேசனும். நல்லவேளை அப்பா தூங்குறாரு. இங்கேயே இருங்க, அதைக் கொடுங்க” என்று சொல்லி அவர் கையில் வைத்திருந்த சாப்படு பையை உள்ளே எடுத்து சென்று மெல்ல வைத்து விட்டு வெளியே வந்தாள்.

“என்னம்மா, என்ன பேசனும்”

“அம்மா ஆதித்யா என்னென்னவோ சொல்றாரு எனக்கு ஒண்ணுமே புரியல”

“என்ன சொன்னாரு?”

“கான்டிராக்ட், அக்ரீமெண்ட், ஒரு வருஷத்துக்கு அப்புறம் டைவர்ஸ், அதுக்குள்ள குழந்தை”

“வசு, நானே உன் கிட்ட இதைப் பத்தி பேசனும்னு நினைச்சேன்”

“அப்படின்னா அவர் சொன்னது போல இதை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”

“சாரி மா”

“என்னம்மா நீங்க, என் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமா தெரியலையா?”

“என்னை மன்னிச்சிடு வசு, நான் உங்க அப்பா மேல உயிரையே வச்சிருக்கேன். அதனால எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியல”

“எப்படி மா எனக்கு தெரியாம என் கிட்ட கையெழுத்து வாங்கனீங்க?”

தலை குனிந்தார் தனலட்சுமி.

“அன்னைக்கு ஒரு நாள் ஊர்ல இருக்குற நிலத்தை விற்க கையெழுத்து கேட்டேனே அதில் ஒரு பேப்பர் இந்த அக்ரீமெண்ட் பேப்பர்”

“ஏன் மா இப்படி பண்ணீங்க?”

“கவலைப்படாத வசு, பணக்காரங்களா இருந்தாலும், அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அந்த பையன் ஆதிக்கு மட்டும் தான் இந்த அக்ரீமெண்ட் பத்தி தெரியும். குழந்தை பிறந்த அப்பறம் யாரும் உன்னோட விவாகரத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. அவனே மனசு மாறிடுவான். உனக்கும் அதுக்குள்ள ஒரு பிடிப்பு வந்திடும். இதெல்லாம் யோசிச்சு தான் ஒத்துக்கிட்டேன்”

“அம்மா, இது என்ன சினிமான்னு நினைச்சீங்களா. விஜய்- சிம்ரன் படம் மாதிரி, அக்ரீமெண்ட் போட்டு அப்புறம் லவ் வந்து ஒண்ணா சேருவதற்கு”

“வசு, நிஜ வாழ்க்கையில் நடக்கிறது தான் சினிமாவா எடுக்குறாங்க. சினிமாவும் வாழ்க்கையும் ஒண்ணு தான்”

“அம்மா, நான் ஒத்துக்கலைன்னா மந்தராவை உண்மையிலேயே ஆதித்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா இல்ல என்னை பயமுறுத்துவதற்காக பொய் சொன்னீங்களா”

“சத்தியமா இல்ல வசு, அன்னைக்கு சொன்னதே தான் இன்னைக்கும் சொல்றன். எனக்கு நீயும் மந்தராவும் ஒண்ணு தான். அவ கிட்டேயும் அக்ரீமெண்ட்ல கையெழுத்து வாங்கி இருந்தேன்”

“நான் நம்ப மாட்டேன்”

கண்கள் கலங்க தன் பேகில் இருந்த அந்த அக்ரீமெண்ட் பேப்பரை எடுத்து காண்பித்தார் தனலட்சுமி.

“இது நீ கையெழுத்து போட்டது, இது மந்தரா போட்டது” என்று கொடுத்தார்.

அன்று இருவரும் கையெழுத்து போட்டது தான் அது. மந்தரா கையெழுத்து போட்ட அக்ரீமெண்ட்டை கிழித்தாள் வசுந்தரா. பிறகு அவள் கையெழுத்து போட்டதை படித்துப் பார்த்தாள். கண்கள் கலங்கியது வசுந்தராவிற்கு.

“வசு” என்றார் தனலட்சுமி.

“அம்மா, அப்பா எழுந்தவுடன் அவர் கிட்ட சொல்லிடுங்க. நான் கிளம்பறேன்”

“வசு, என்னை மன்னிக்க மாட்டீயா?”

“அம்மா, எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் நாளைக்கு வரேன். பை” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் வசுந்தரா.

வீட்டிற்கு சென்ற பிறகும் யாரிடமும் பேசாமல் அமைதியாக தன் ரூமிலேயே படுத்திருந்தாள் வசுந்தரா. காலை, மதியம் இருவேளையும் எதுவுமே சாப்பிடவில்லை. தலைவலி அதிகமாக இருந்தது. இருப்பினும் சாப்பிடும் மனநிலையில் அவள் இல்லை.

மகேஸ்வரி அஸ்வினிக்கு சாப்பாடு கொண்டு செல்லும்போது வசுந்தராவிடம் சாப்பிட கேட்டதற்கு.

“இல்ல அத்தை, நான் சாப்பிடடுவிட்டேன்” என்று சொல்லிவிட்டாள். மேலும் “வெயிலில் வெளியே சென்று வந்ததால் தலை வலிக்கிறது கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன் ரூமிலேயே படுத்துக் கொண்டாள்.

அந்த அக்ரீமெண்ட்டையே பல முறை படித்தாள். மேலும் ஆதித்யா சொன்னதையே நினைத்து பார்த்துக் கொண்டாள்.

இரவு பதினோரு மணி அளவில் வீட்டிற்கு வந்தான் ஆதித்யா. 

பெட்டில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள் வசுந்ரா. குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்றான் ஆதித்யா. அணல் வீசியது. ஜுரம் அடிப்பது போல தெரிந்தது. தன் அம்மாவை அழைத்து அவளை தொட்டு பார்க்க சொல்லலாம் என்று நினைத்தான் ஆனால் மணி பதினொன்று முப்பது அவர் தூங்கி இருப்பார் மேலும் அஸ்வினியாலேயும் வரமுடியாது காலில் அடிபட்டுள்ளது.

கைகள் நடுக்கத்துடன் வசுந்தராவின் நெற்றியை தொட்டான். பயங்கரமாக ஜூரம் அடித்தது. உடனே டாக்டருக்கு கால் செய்தான்.

“ஹலோ டாக்டர் நான் ஆதித்யா பேசுறேன் உடனே வீட்டுக்கு வரமுடியுமா?”

“என்னாச்சு ஆதித்யா ஈஸ் அஸ்வினி ஓகே?” (அஸ்வினிக்கு ஒன்றுமில்லையே)

“ஷீ ஈஸ் குட் டாக்டர் பட் மை வைஃப் ஈஸ் ரன்னிங் ஃபீவர்” (அவ நல்லா இருக்கா டாக்டர் என் மனைவிக்கு தான் ஜூரம்).

“ஓ, கேன் யூ பிரிங் ஹர் டூ தி ஹாஸ்பிட்டல்?” (அவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு வரமுடியுமா.)

“ஏன் டாக்டர், உங்களால இப்போ வீட்டுக்கு வர முடியாதா?”

“யெஸ் ஆதி, நான் இப்போ தான் ஒரு ஆப்பிரேஷன் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன். நீங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போங்க அங்க டியூட்டி டாக்டர்ஸ் இருப்பாங்க” 

“டியூட்டி டாக்டர்ஸை வீட்டுக்கு வரச் சொல்ல முடியுமா?”

“இல்ல ஆதி, அட்ரெஸ் சொல்லி அவங்க இந்த டைம்ல வருவது கஷ்டம்”

“ஓகே டாக்டர், தேங்க்ஸ். நான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போறேன்”

“ஓகே ஆதி, மெஸேஜ் மீ வித் ஹர் ஸ்டேட்டஸ்”.(ஹாஸ்பிட்டல் போயிட்டு எப்படி இருக்காங்கன்னு எனக்கு மெஸேஜ் பண்ணுங்க)

“ஷியூர் டாக்டர், அண்ட் சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ அட் திஸ் அன் டைம்”(கண்டிப்பா டாக்டர், மன்னிச்சிடுங்க இந்த ராத்திரி நேரத்தில் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணதுக்கு)

“நோ இஷ்யூஸ், டேக் கேர் ஆதி”

ஃபோனை வைத்து விட்டு தன் மனைவியை மெதுவாக தட்டி எழுப்பினான்.

அவளால் எழுந்தரிக்க முடியவில்லை. போர்வை எடுத்தான். ஃபேன், ஏசி எதுவுமே ஓட வில்லை இருப்பினும் குளிரால் பயங்கரமாக நடுங்கினாள். மறுபடியும் அந்த போர்வையை அவள் மேல் போட்டான். 

பிறகு ரூம் கதவை திறந்து வைத்து விட்டு தன் மனைவியை தூக்கி கொண்டான்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.