பாகம் -9
சாக்ரடீஸ் கிளம்பும் போது அவன் வெளியே செல்லும் முன்
“ஒரு நிமிஷம் டா” என்றாள் கேத்தரின்.
அவன் திரும்பினான்.
“என்னம்மா” என்றான் கேத்தரினை பார்த்து.
சாக்ரடீஸ் யாரையும் வாடி போடி என்று சொல்லமாட்டான். அவனுடைய தங்கையை தான் அப்படி சொல்லி கூப்பிட்டான். அவள் இறந்த பிறகு வேறு யாரையும் அப்படி கூப்பிட அவனுக்கு மனம் வரவில்லை.
ஹர்ஷிதாவை தங்கையாக நினைத்தாலும் அவளை வாடி போடி என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
“சகி, வாம்மா போம்மா” என்று அழைப்பான்.
ஹர்ஷிதா எங்கே என்று திரும்பி பார்த்தாள் கேத்தரின். பால்கனி சென்று அவினாஷூக்கு பை சொல்லி கொண்டு இருந்தாள்.
திறந்திருந்த வாசல் கதவை சாத்தி விட்டு சாக்ரடீஸ் அருகே சென்று அவனை இறுக்கி அணைத்து அவனுடைய இதழில் முத்தம் கொடுத்தாள். அவனும் அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.
ஏதேச்சையாக பார்த்து விட்டாள் ஹர்ஷிதா. பின்னர் மறைந்து கொண்டாள். ‘பெரிய ஆளு தான் கேத்தரின்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். ‘இன்னும் பேச்சு வார்த்தைல தான் இருக்குன்னு நினைச்சேன்’ என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கேத்தரின் என்று குரல் கொடுத்து கொண்டே கீழே இறங்கினாள். வேகமாக விடுவித்து கொண்டனர் இருவரும்.
“பை கேத்தரின், பை சகி”
“இன்னும் கிளம்பலையா பிரதர் நீ?” என்றாள் கிண்டலாக.
“இதோ, எதாவது வேணும்ன்னா எனக்கு கால் பண்ணுங்க. பை” என்று சொல்லி விட்டு முதல் முறையாக அவன் பெற்ற மற்றும் கொடுத்த முத்தத்தை நினைத்துக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்து சிரித்துக் கொண்டே கிளம்பினான் சாக்ரடீஸ்.
கேத்தரினும் சிரித்துக் கொண்டே கிட்சனுக்குள் நுழைந்தாள்.
பின்னால் சென்ற ஹர்ஷிதா,
“என்ன மேடம், லவ் ல எத்தனையாவது ஸ்டேஜ்ல இருக்கீங்க?”
“என்னடி உளருற?”
“என்ன நான் உளருறேனா? நீயும் சாக்ரடீஸூம் அடிச்ச கிஸ்ஸை பார்த்துட்டேன். நானும் அஞ்சு நிமிஷமா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ன்னு பார்த்தா நீங்க வேர்ல்டு ரெக்கார்டு பண்ணிடுவீங்க போல? அதான் குரல் கொடுத்தேன்”
“ஹேய், சீ போடி, வெட்கமா இருக்கு”
“பார்ரா”
“இல்ல டி, இதுதான் ஃபர்ஸ்ட் கிஸ் எங்களுக்கு”
“ஓ அப்படியா? ஆனா ரெண்டு பேரும் எக்ஸ்பீரியன்ஸூடு ஆட்கள் மாதிரி கொடுத்துக்கிட்டீங்க?” என்றாள் ஹர்ஷிதா கிண்டலாக.
“ஏய், போடி” என்று வெட்கப் பட்டு கொண்டே பெட் ரூமுக்கு ஓடிச் சென்றாள்.
இரவு பெட் ரூமில் இரண்டு பெண்களும் அவரவர் காதலர்களுடன் ஃபோனில் சேட் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஆம், நம் ஹீரோயின் ஹர்ஷிதா நம் ஹீரோ அவினாஷ் மேல் காதல் கொண்டாள். ஏனோ அவள் மனம் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது.
அவினாஷ் ஹர்ஷிதாவின் மொபைலுக்கு மெஸேஜ் அனுப்பினான்.
“நான் பஸ் ஏறிட்டேன்” என்று.
“பத்திரம் மாமா, அங்கே போனதும் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க”
“கண்டிப்பா ஹர்ஷி.
என்னோட சமையல் உனக்கு பிடிச்சிருக்கா?”
“ரொம்ப ரொம்ப, நீங்க கிளம்பின பிறகும் ஒரு முறை சாப்பிட்டேன். எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்துச்சு. பிரியாணியும், உங்களையும்” என்றாள்.
“தேங்க்ஸ் தேங்க்ஸ்”
“உண்மையிலேயே நான் ரொம்ப லக்கி”
இப்போது தான் அவள் அதற்கு முன்னால் அனுப்பிய மெஸேஜை ஒழுங்காக பார்த்தான் அவினாஷ்.
“என்ன சொன்ன, என்னை பிடிச்சிருக்கா?”
“யெஸ், ரொம்ப ரொம்ப”
மனதிற்குள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருவரும்.
“தேங்க்ஸ், தேங்க்ஸ் செல்லம்”
“தேங்க்ஸா? லூசு மாமா. ஐ லவ் யூ சொல்லனும்”
“என்னது லூசா? உன்னை என்ன பண்ணப் போறேன் பாரு” என்று கோப எமோஜிகளை போட்டான்.
இவள் பயந்த எமோஜிகளைப் போட்டாள்.
இருவரும் சிரித்துக் கொண்டே மாற்றி மாற்றி மெஸேஜ் செய்துக் கொண்டு இருக்க,
“ஐ லவ் யூ டி செல்லம்” என்றான் அவினாஷ்.
“ஐ லவ் யூ டூ மாமா” என்றாள் ஹர்ஷிதா.
“ஆனா இவ்வளவு சீக்கிரமா நான் உங்களை லவ் பண்ணுவேன்னு நினைக்கல”
“மாமாவோட திறமைல விழுந்துட்டியா டி செல்லம்”
“உண்மையை சொல்லனும்ன்னா? அப்படி தான் நினைக்கிறேன் மாமா” என்று மெஸேஜ் அனுப்பி கொண்டிருந்தனர் இருவரும்.
கேத்தரின் மற்றும் சாக்ரடீஸூம் காதல் டயலாக்குகளையும் முத்த எமோஜிகளையும் ஷேர் செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காலிங் பெல் சப்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தனர். இருவரும் “ஒரு நிமிஷம் யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க யாருன்னு பார்க்கிறேன்” என்று மெஸேஜ் அனுப்பினார்கள்.
சாக்ரடீஸ் கால் செய்து “நான் லைன் ல இருக்கிறேன் நீ டோர் கேமரா ஆன் செய்து யாரு ன்னு சொல்லு” என்றான்.
அவினாஷ் வீடியோ கால் செய்து “நான் லைன்ல இருக்கேன். நீ போய் பாரு. யாருன்னு எனக்கு காட்டு. அப்புறம் கதவை திற” என்றான்.
இருவரும் ஒருவித பயம் கலந்த குழப்பத்துடன் கதவின் கேமரா ஆன் செய்ய டோர் அருகில் இருந்த சிசிடிவி ஆன் ஆகியது.
****************
நிர்மலா அழுதுகொண்டே இருந்தாள்.
சிவராமன் அவளருகில் சென்று அமர்ந்து அவளுடைய தோளைத் தொட்டார்.
இன்னும் அழுதுகொண்டே இருந்தாள்.
“இங்கே பாரு நிர்மலா. நீ அழறதால எல்லாம் சரியாக போறதில்லை. நல்லவேளை அங்கே நடந்ததை பார்த்து அப்பாவுக்கு எதாவது ஆயிடுமோன்னு பயந்தேன். நல்லவேளை அவரை வரும் போது ஆஸ்பத்திரியில சேர்த்திட்டு வந்திட்டோம். இங்க வீட்ல நடந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான் கண்டிப்பா அட்டாக் வந்திட்டிருக்கும் அவருக்கு”
“மாமாவுக்கு அட்டாக் வருதோ இல்லையோ? எனக்கு இப்போ அட்டாக் வரப்போகுது” என்று சொல்லி அழுதாள்.
லேசாக சிரித்து கொண்டே அவள் முகத்தை அவர் பக்கம் திருப்பி,
“இங்கே பாரு நிர்மலா. உன் பசங்க ஒன்னும் குழந்தைங்க இல்லை. அச்சோ ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க ன்னு சொல்லி மன்னிச்சு விடறதுக்கு. நல்லா யோசிச்சு தெளிவா பிளான் பண்ணி பண்ணிருக்கான் உன் பெரிய பையன். அப்பாடா நம்ம ரூட் கிளியர்ன்னு யோசிச்சானே தவிர. நம்மோ இப்போ தான் படிச்சிக்கிட்டு இருக்கோம் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் எல்லார் முன்னாடியும் ஹீரோயிசம் காட்டினான் உன் சின்ன பையன்”
பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள் நிர்மலா.
“அவங்களே பட்டு எழுந்து வரட்டும். நம்ம அவங்க வாழ்நாள் பூராவும் அவங்க கையை பிடிச்சிக்கிட்டு இருக்க முடியாது. நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே. பாதிக்கப்பட்ட விஜயா, ஹர்ஷிதா அவங்க வீட்டில இருக்குற எல்லாருக்கும் எப்படி இருக்கும். நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் விஜயா வீட்டுக்கு போய் பேசிட்டு நம்ம பசங்க சார்பாக மன்னிப்பு கேட்டுவிட்டு வரலாம்” என்றார் சிவராமன்.
“சரிங்க” என்று சொல்லி விட்டு சிவராமன் தோளில் ஆறுதலுக்காக சாய்ந்தாள் நிர்மலா.
****************
கதவின் கேமரா வழியாக பார்த்தார்கள் ஹர்ஷிதா மற்றும் கேத்தரின்.
வெளியே ராஜகோபாலும் வேணுகோபாலும் நின்றுக் கொண்டு இருந்தனர்.
கேத்தரின் சாக்ரடீஸிடம்,
“ஹேய் ஃபோனை வை டா. ஹர்ஷியோட அப்பாவும் பெரியப்பாவும் வந்திருக்காங்க”
“ஓ, சரி சரி பை” என்று வைத்து விட்டான்.
கேமராவில் அவர்களை பார்த்த அவினாஷூம்
“ பை டி செல்லம்” என்று மெதுவாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.
இந்த நேரத்தில் ஏன் இவர்கள் வந்தார்கள் என்று நினைத்து கொண்டே கதவை திறந்தாள் ஹர்ஷிதா.
“வாங்க அங்கில்ஸ்” என்றாள் கேத்தரின்.
“என்னாச்சு அப்பா, பெரியப்பா?” என்றாள் ஹர்ஷிதா.
“என்னம்மா நீயாவது சொல்லி இருக்க வேண்டாம்?” என்றார் ராஜகோபால் கேத்தரினை பார்த்து.
“என்னாச்சு அங்கில்?”
‘ஒருவேளை அவினாஷ் இங்கு வந்ததை தெரிந்து கொண்டு இங்கே வந்திருக்கிறார்களோ?’ என்று நினைத்து கொண்டே கேட்டாள்.
“என்ன ஹர்ஷி நீ?” என்றார் வேணுகோபால்.
“என்னாச்சு அப்பா, ஏன் இப்படி சொல்றீங்க?” என்றாள் ஹர்ஷிதா.
“யாரும் வீட்ல இல்லன்னா அங்கேயே தங்கி இருக்கலாம் இல்ல? எதுக்கு இங்க வந்து தனியா இருக்கனும். நல்ல வேளை உங்க அம்மா உன் ஃபோன் லைன் கிடைக்கலன்னு எங்க வீட்டு லேண்டு லைனுக்கு கால் பண்ணவே தெரிஞ்சுது. நீ அங்கே தங்கப்போறன்னு அவங்க கிட்ட சொன்னியா?” என்றார் வேணுகோபால்.
“ஆமாம் அங்கில், அப்படி தான் பிளான் பண்ணிக்கிட்டு வந்தேன். ஹர்ஷிதா மூடு ஆஃப்ல இருக்கவே சரி அவளை இங்கே கூட்டிக்கிட்டு வரலாம் ன்னு நினைச்சேன்”
“அதெல்லாம் சரிம்மா. ஆனால் உங்க வீட்ல யாரும் இல்லாத போது எதுக்கு இங்க வந்து தங்கனும். சரி சரி ரெண்டு பேரும் கிளம்புங்க வீட்டுக்கு போகலாம். அம்மாடி கேத்தரின் நாளைக்கு அங்கிருந்தே காலேஜ் போற மாதிரி புக்ஸ் டிரெஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திடு” என்றார் ராஜகோபால்.
“சரிங்க அங்கில்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
அனைவரும் ஹர்ஷிதா வீட்டிற்கு சென்றனர். இருவரும் அமைதியாக காரில் சென்றனர். இருவருக்குமே அவரவர் காதலர்களுடன் ஃபோனில் சேட் பண்ண முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
****************
மறுநாள் காலை எட்டு மணி அளவில் நிர்மலாவும் சிவராமனும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்தனர்.
கேத்தரினும் ஹர்ஷிதாவும் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
நிர்மலா மற்றும் சிவராமனுக்கு வீட்டிற்கு உள்ளே கால் எடுத்து வைக்க சங்கடமாய் இருந்தது. காலிங் பெல்லை அழுத்திவிட்டு நின்றிருந்தனர்.
வெளியே வந்தாள் விஜயா. இவர்கள் இருவரையும் பார்த்து
“வாங்க அண்ணா, வாங்க அண்ணி” என்றழைத்தாள்.
அப்படியும் அவர்கள் இருவரும் உள்ளே செல்லாமல் நின்றிருந்தனர்.
வேணுகோபால் அவர்கள் நிற்பதை பார்த்து விட்டு,
“வாங்க, உள்ளே வாங்க” என்றார்.
இருவரும் காலை உள்ளே எடுத்து வைக்கும் போது,
“நில்லுங்க” என்ற குரல் கேட்டு அப்படியே நின்றனர்.
ராஜகோபால் நடந்து வந்தார்.
“தயவுசெய்து உள்ளே வராதீங்க” என்று கை கூப்பி சொன்னார்.
“அண்ணா, நடந்த தப்புக்கு இவங்க என்ன அண்ணா பண்ணுவாங்க?” என்றார் வேணுகோபால்.
“வேணு” என்றார் சற்று கோபமாக.
“என்னங்க” என்றாள் லக்ஷ்மி.
திரும்பி அவளை முறைத்தார் ராஜகோபால்.
“பெரியப்பா”
விஜயா தடுக்க முயன்றாள். ஆனால் ஹர்ஷிதா,
“இருங்க அம்மா” என்று சொல்லி கொண்டே அவர் அருகில் சென்றாள் ஹர்ஷிதா.
“ஹர்ஷி, நீ சின்ன பொண்ணு. பெரியவங்க விஷயத்தில தலையிடாத”
“இல்ல பெரியப்பா. நான் சின்ன பொண்ணு இல்ல. நல்லது எது கெட்டது எதுன்னு நீங்க நாலு பேரும் எனக்கு சொல்லி கொடுத்து தான் வளர்த்து இருக்கீங்க”
“இப்போ எது நல்லது ன்னு சொல்ல வர?”
“இல்ல நீங்க அவங்க கிட்ட பேசினது கெட்டதுன்னு சொல்றேன்”
“ஹர்ஷிதா” என்று கோபமாக சொன்னார் ராஜகோபால்.
“ஸாரி பெரியப்பா, நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் படியேறி வீட்டுக்கு வந்தவர்களை இப்படி அவமான படுத்தக் கூடாது”
ஓங்கி ஒரு அரை விழுந்தது கன்னத்தில்.
திரும்பி பார்த்தாள் விஜயா நின்றிருந்தாள்.
“அம்மா” என்று கன்னத்தை பிடித்து கொண்டு கூறினாள்.
“என்னடி அவ்வளவு திமிரா உனக்கு? பெரியவங்க என்ற மரியாதை இல்லாம இப்படி பேசுற” என்றாள் விஜயா.
அழுதுகொண்டே ஹர்ஷிதா உள்ளே ஓடிவிட்டாள். கேத்தரின் அவளை சமாதானம் செய்ய அவளுடன் ரூமிற்கு சென்றாள்.
“விஜயா பிளீஸ் குழந்தையை திட்டாத. இதுக்கெல்லாம் நாங்க இங்க வந்தது தான் காரணம். நாங்க கிளம்பறோம்” என்றார் சிவராமன்.
“அண்ணா” என்று சொல்லி அழத் தொடங்கியவள் ராஜகோபால் மற்றும் வேணுகோபாலை பார்த்து விட்டு அமைதியானாள்.
“எங்களை மன்னிச்சிடுங்க மாமா” என்று ராஜகோபாலை பார்த்தும், “மன்னிச்சிடுங்க மச்சான்” என்று வேணுகோபாலை பார்த்தும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள் சிவராமன் மற்றும் நிர்மலா.
கண்கள் கலங்கிய தன் மனைவி விஜயாவின் தோளைப் தட்டி தேற்றினார் வேணுகோபால்.
கோபமாக ரூமுக்கு சென்றார் ராஜகோபால். பின்னால் சென்றாள் லக்ஷ்மி.
மனவருத்தத்துடன் தங்கள் காரில் ஏறி சென்றனர் நிர்மலா மற்றும் சிவராமன்.
No comments yet.