
தொடர்பியல்….. பாகம்-9
கேஸ் -1.( சங்கவி -கிஷோர்)
ராகினிக்கு ரம்யா மெஸேஜ் செய்தாள்.
தூங்கிட்டியா டி…..
உடனே கால் செய்தாள் ராகினி.
ஹாய் ரம்யா….. என்னடி காலைல கால் பண்ணேன்…. நீ எடுக்கல…. இப்போ தான் பேசுற….
டிரெயின்ல சரியா தூங்கல…. அதான் டெல்லி வந்ததும் ரூமிற்கு வந்து படுத்திட்டேன்…. ஃபோன்லயும் சார்ஜ் இல்ல…. அதான் உனக்கு கால் பண்ண முடியல…. சாரி டி….
ஏய்…. எதுக்கு டி சாரி எல்லாம் சொல்ற…. சரி சரி…. அந்த கிஷோர் ரோஸி பத்தி சொல்லு…. என்றாள் ராகினி.
என்ன சொல்ல சொல்ற…. நானே பயத்துல உறைஞ்சிட்டேன்….. உன் கனவை நான் நேரில் பார்த்தது போல இருந்துச்சு…. என்றாள் ரம்யா.
ஹூம்…..
முதல்ல நான் கவனிக்கலை….. அவங்க சங்கவி ன்னு பேசிக்கிட்டாங்க…. அப்புறம் கிஷோர் ரோஸி ன்னு பேசியதும் எனக்கு பயமா இருந்தது…. அதான் பாத்ரூமுக்குள் வந்து உனக்கு உடனே கால் பண்ணேன்.
ஹூம்….
என்னடி கதை சொல்ற மாதிரி ஹூம்…. ஹூம்…. ன்னு கேட்டுக்கிட்டு இருக்க?
பின்ன என்னை என்ன பண்ண சொல்ற டி….
அப்போ உன் கனவு பலிக்கட்டும் ன்னு அப்படியே விட்டுவிடப் போறீயா?….
இல்ல…. அதுக்கு மனசு ஒப்புக்கலை….
அப்போ என்ன பண்ண போற…. மாதவன் கிட்ட சொல்லி எதாவது ஸ்டெப் எடுக்க போறீயா….
இல்ல டி…..
அப்புறம்?
நானே நேரா போய் சங்கவியை பார்க்க போறேன் …
வாட்…..
ஆமாம் டி…. அவங்க உயிரை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியலை……
மாதவனை கூட கூட்டிக்கிட்டு போறீயா?
இல்ல.. நான் தனியா தான் போகப் போறேன்…. மாதவன் ஊரில் இல்லை என்று அவனுடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அனைத்தையும் கூறி முடித்தாள்.
ராகினி…. நீ தனியா போறது எனக்கு சரியா படல டி…..
உண்மையை தெரிஞ்சு அமைதியாக இருக்க முடியல டி….
உன்னோட நிலைமை புரியுது…. நீ உன்னோட தங்கச்சியை நினைச்சு பாரு…. உன்னை விட்டா அவளுக்கு வேறு யாரு இருக்கா….. நீ எதாவது ஆபத்துல மாட்டிக்க போற…. உன் கனவு படி பார்த்தா அந்த கிஷோரும் ரோஸியும் ரொம்ப பயங்கரமானவங்க…. அப்படி இருக்க உண்மை தெரிஞ்சது ன்னா உன்னை கொலை செய்யவும் அஞ்ச மாட்டாங்க….
அந்த கிஷோரும் ரோஸியும் திங்கட்கிழமை இல்லன்னா செவ்வாய் கிழமை தான் வருவாங்க…. நான் ஞாயிற்றுக்கிழமை போய் சங்கவியை பார்த்து உண்மையை சொல்லிட்டு வந்திடுவேன்…. அதுக்கு அப்புறம் அவங்க என்ன முடிவு பண்றாங்களோ பண்ணிக்கட்டும்…. என்றாள் ராகினி.
நீ நினைச்சதை முடிக்காம விட மாட்ட…. நான் என்ன சொன்னாலும் உன்னோட காதுக்கு தான் எட்டும் மூளைக்கு எட்டாதுன்னு தெரிஞ்சு போச்சு…. சரி…. உன்னோட உயிர் தோழியா உன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன்…..
ஹூம்…. சொல்லுடி….
ஜாக்கிரதையா போயிட்டு வா…. எதாவது பிரச்சனை ன்னா…. உடனே அதுல இருந்து வெளியே வந்திடு…. எனக்கும் மாதவனுக்கு உன்னோட லைவ் லொகேஷன் ஷேர் பண்ணு….. அந்த ரெண்டு நாளும் எங்களுக்கு கால் பண்ணு…. என்றாள் ரம்யா.
கண்டிப்பா டி…. எனக்காக ரிஸ்க் எடுத்து ஃபோட்டோ எடுத்ததிற்கு தேங்க்ஸ் டி….
என்னை சாரி சொல்லாதே ன்னு சொல்லிட்டு இப்போ நீ மட்டும் தேங்க்ஸ் சொல்ற…. ஃபிரெண்ட்ஸூக்குள் நோ பிளீஸிங் வேர்டுஸ்…. ன்னு நீ தான சொன்ன?…. என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
ஆமாம் டி…. என்று சொல்லி சிரித்தாள் ராகினி.
பை ராகினி…. டேக் கேர்…. குட் நைட்டு….
பை ரம்யா…. யூ டூ…. குட் நைட்டு….
ஃபோனை வைத்து விட்டு தன் ஃபோனில் இருந்த அவளுடைய ஃபோட்டோ கேலரிக்கு சென்று பார்த்தாள்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் தன் அம்மா அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்துக் கொண்ட பர்த் டே ஃபோட்டோக்கள் இருந்தன…. கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது…..
ஆறு வருடங்களுக்கு முன் கொயம்பத்தூரில் வசித்து வந்தனர் ராகினி மற்றும் அவளுடைய அப்பா அம்மா தங்கை.
காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள் ராகினி. தங்கை ரூபினி பத்தாம் வகுப்பில் படிக்கும் போது அவளுடைய பர்த் டேவிற்கு வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு பிறகு படத்திற்கு செல்ல ராகினி மற்றும் ரூபினி ராகினியின் ஸ்கூட்டரில் வர…. அவர்களுடைய அப்பா- அம்மா வேறு வண்டியில் வந்தனர். பத்து மணிக்கு படம் முடிந்ததும் அதே போல வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு வலைவில் ராகினி ரூபினி திரும்பிவிட….
ஏய் ராகினி…. அந்த தெருவில வேண்டாம் மா…. இந்த பக்கமா போகலாம் வா…. என்று அவளை பார்த்து கூறிக்கொண்டே வண்டியை ஓட்டியவர் எதிரே வேகமாக வந்த லாரியை பார்க்காமல் இடித்துவிட்டார். லாரி டிரைவர் இரவு நேரம் ரோடு காலியாக இருக்கவே அவனும் வேகமாக ஓட்டி வந்தான். சம்பவ இடத்திலேயே ராகினியின் அப்பா அம்மா உயிரிழந்தனர். கண் எதிரே நடந்த கொடூரத்தை பார்த்த ரூபினி மனரீதியாக பாதிக்கப்பட்டாள். யாரிடமும் பேசாமல் அமைதியாக சாப்பிடுவது, தூங்குவது, என்று இருந்தாள். தினமும் இரவு பதினோரு மணி அளவில் அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தோடும்…. ஆனால் சத்தமாகவோ, தேம்பியோ குமிறியோ அழ மாட்டாள்.
இது ஆக்ஸிடென்ட் டிரோமா…. சீக்கிரமா சரியாகிவிடும்…. என்று டாக்டர் சொன்னார். ஆறு வருடங்களுக்கு பிறகும் இன்னும் சரியாக வில்லை. தன்னுடைய அத்தை வீட்டில் நர்ஸ் வைத்து பார்த்து கொள்கிறார்கள். இரண்டு வருஷத்துக்கு முன்னர் ஃபாரன்ஸிக் கோர்ஸ் படிக்க சென்னைக்கு வந்தாள் அதுவரை ராகினியே தன் தங்கையை பார்த்து கொண்டாள். வேலை கிடைத்த உடன் வீடு பார்த்து அழைத்து சென்றுவிடுவேன் அதுவரை அவளை பார்த்து கொள்ள சொல்லி அவளுடைய அத்தை வீட்டில் விட்டு வந்தாள்.
கொயம்பத்தூரில் அவர்களுடைய வீட்டு வாடகை மட்டுமே அவளுடைய வருமானமாக இருந்தது ( மூன்று போர்ஷன் ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தனர் அவர்களுடைய அப்பா-அம்மா) .
அவர்கள் வாழ்ந்த தரை தள வீட்டை மட்டும் வாடகைக்கு விடாமல் பூட்டு வைத்திருந்தனர். வாடகையில் 5000 ரூபினியை பார்த்து கொள்ளும் நர்ஸூக்கும்…. 10,000 அவளுடைய அத்தைக்கும்…. மீதம் 15,000 அவளுடைய செலவிற்கும் வைத்து கொண்டாள்.
இப்போது 20,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது அதுவும் மாதவனின் புண்ணியத்தில். கொயம்பத்தூரில் அவன் போலீஸ் டிரெயினிங்கில் இருந்தபோது தான் சங்கவியை முதன் முதலில் பார்த்தான். அவளை பற்றி தெரிந்ததும்…. இளம்வயதில் இவ்வளவு பொறுப்பாக இருக்கிறாளே என்று அவள் மீது வந்த மரியாதை பின்னர் காதலாக மாறியது.
அவளிடம் நேராக போய் தன் காதலை சொல்லிவிட்டான். சிந்திக்க சில காலம் கேட்டாள் ராகினி. அவன் டிரெயினிங் முடித்து விட்டு சென்னைக்கு போஸ்டிங் என்றான். அப்போது அவள் தன் சம்மதத்தை தெரிவித்தாள். மூன்று வருடமாக ஃபோனிலும்…. லீவுக்கு அவன் சேலம் வரும்போது கோயம்புத்தூர் சென்று ராகினியை பார்த்து விட்டு சென்னைக்கு மறுபடியும் செல்லுவான். பிறகு அவள் ஃபாரன்ஸிக் கோர்ஸ் படிக்க சென்னைக்கு வந்த பிறகு அவர்களின் காதல் இன்னும் பலம் பெற்றது. அன்று இரவு மாதவன் ஃபோனில் பேசியது வரை நினைவில் கொண்டவள்…. மணியை பார்த்தாள். மணி இரவு 1. பிறகு தூங்கிவிட்டாள் ராகினி.
***************
வெள்ளிக்கிழமை.
வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பும்போது….
ராகினி…. நான் என் அம்மா கிட்ட கேட்டேன்…. உன் கூட ஏலகிரிக்கு போயிட்டு வரச் சொன்னாங்க….. நானும் உன் கூட வரேன்….. என்றாள் மம்தா.
மம்தா…. நான் தான் வேண்டாம்னு சொன்னேன் இல்ல…. உன்னால என் கூட வரமுடியாது….. புரிஞ்சிக்கோ….
பயப்படாத ராகினி….. ஒண்ணும் ஆகாது…. நாளைக்கு நான் உன் கூட வந்திட்டா….. அப்போ ஒத்துக்கிறீயா?
ஹூம்…. சரி…. என்றாள் ராகினி.
ஓகே…. நாளைக்கு மார்னிங் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…. ஈவினிங் ஐந்து மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மீட் பண்ணலாம்…. பை…. என்றாள் மம்தா.
ஓகே மம்தா…. பை…..
ஐந்து மணிக்கு தானே?
ஆமாம் மம்தா….
உன்னால வரமுடியாது…. நான் சொன்னா ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற…. என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் ராகினி.
மாதவனிடம் பேசி அவனுடைய அம்மாவிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டாள் ராகினி.
அப்படியே தான் இருக்காங்க…. என்று மிகவும் வருத்தமாக சொன்னான் மாதவன். அவனுடைய அம்மா உடம்பு சரியில்லாமல் போனதில் ராகினியின் கனவையும் ஏலகிரி போகலாம் என்று முடிவு செய்து இருந்ததையும் சுத்தமாக மறந்துவிட்டான் மாதவன். மேலும் அவனுடைய டிபார்ட்மெண்டில் இருந்து கால்ஸ் வந்து கொண்டே இருந்தது.
இப்போதும் அவள் ஏலகிரி போக நினைப்பதை பற்றி மாதவனிடம் கூறவில்லை.
***************
சனிக்கிழமை மாலை ஐந்து மணி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள் ராகினி.
மம்தா வந்தாள்.
மம்தாவை பார்த்ததும் ராகினிக்கு சந்தோஷமாக இருந்தது. அப்பாடா நம்மளோட இன்டியூஷன் எல்லாமே கரெக்ட் இல்ல…. என்று நினைத்து கொண்டே
வா மம்தா…. என்றாள் ராகினி.
போகலாம் ராகினி…. என்று சொல்லி பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.
ஒண்ணும் பிரச்சனை இல்லையே…. என்றாள் ராகினி மம்தாவை பார்த்து.
இல்ல ராகினி…. அதெல்லாம் ஒண்ணும் இல்லை…. என்று சொல்லி சிரித்தாள் மம்தா.
No comments yet.