பாகம் 8, 9

Vaishnavi Vijayaraghavan | 03 Jul 2026 | Share

பாகம் -8

வீட்டிற்கு சென்றதும் சங்கீதா இருவருக்கும் டிபன் கொடுத்தாள்.

“டேய் அருண், வினோவை தேடறதுக்காவது உன் உடம்பில் தெம்பு வேண்டும். தயவு செஞ்சு சாப்பிடு” என்றாள் சங்கீ.

ஹரியும் வற்புறுத்தினான். ஆகையால் இரண்டு சப்பாதிகளை மட்டும் சாப்பிட்டான் அருண்.

ஹரியும் சங்கீதாவும் சாப்பிட்டனர்.

“பிறகு, நீயும் ஹரியும் கெஸ்ட் ரூமில் தூங்குங்க” என்றாள் சங்கீதா.

“இல்ல சங்கீ, நான் என் நித்தியை தூக்கி வந்து என்னுடன் படுக்க வச்சிக்கிறேன். நீங்க வழக்கம் போல தூங்குங்க” என்றான் அருண்.

“ஏய், அவ நல்லா தூங்குறா டா. எதுக்கு இப்போ அவளை தூக்கிக்கொண்டு போகப் போற? முழிச்சிக்க போறா” என்றாள் சங்கீதா.

“இல்ல சங்கீ, ஏற்கனவே வினோதா இல்லாம எனக்கு பயித்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. இதுல நித்தியும் பக்கத்தில் இல்லன்னா, எனக்கு தூக்கமே வராது, பிளீஸ்” என்றான் அருண்.

“ஏய், என்னடா எதுக்கு பிளீஸ் எல்லாம் சொல்ற? நீ போய் ரெஃபிரெஷ் ஆகு. நான் குழந்தையை தூக்கிக் கொண்டு வரேன்” என்றாள் சங்கீதா.

ரெஸ்ட் ரூம் சென்று கை கால் முகம் கழுவி விட்டு வந்த போது நித்திலாவை தூக்கி வந்து படுக்க வைத்தாள் சங்கீதா.

“நித்தி எதாவது சாப்பிட்டாளா? சங்கீ”

“இல்லடா, பசிக்கலன்னு சொல்லிட்டு பால் மட்டும் குடிச்சா. பிஸ்கட் சாப்பிட்டா”

“ஓ, ஓகே. சரி சரி நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க”

“அருண், கவலைப்படாம உன்னால இருக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் மனசை தளரவிடாத. நம்ம வினோவுக்கு ஒண்ணும் ஆகாது”

“தேங்க்ஸ் சங்கீ”

“டோண்ட் மென்ஷன் டா. குட் நைட்டு” என்று சொல்லி விட்டு தங்கள் ரூமிற்கு வந்தனர் சங்கீதா மற்றும் ஹரிஹரன்.

தன் குழந்தையின் தலையை கோதி விட்டான் அருண். 

‘எங்கே இருக்க வினோ?

சீக்கிரமா வந்திடு டி. நானும் நம்ம பொண்ணும் நீ இல்லாமல் இருக்க மாட்டோம்’ என்று தன்னிடமே சொல்லி கண்கள் கலங்கினான்.

சங்கீதா தன் கணவன் ஹரியின் பக்கத்தில் படுத்தாள்.

“ஹரி”

“சொல்லுடி”

“நீ என்னடா நினைக்கிற? வினோதா எங்கே போயிருப்பா?”

எனக்குமே அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு தான் தோணுது.

“ஆமாம் டா. நானும் அதையே தான் நினைக்கிறேன்”

“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற?”

“இல்ல, அவளுக்கும் அருணுக்கும் சின்ன சின்ன சண்டை வருமாம்.

அப்புறம் அவரே என்னை கட்டிப் பிடித்து சமாதானம் செய்து விடுவார்ன்னு என் கிட்ட அவ சொல்லி இருக்கா.  அப்படி இருக்கும் போது இந்த மாதிரி சின்ன சண்டைக்கு எல்லாம் அவ கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போற ஆள் எல்லாம் இல்லை”

“ஹூம்”

“என்ன ஆபத்து வந்திருக்கும்?”

“தெரியலையே டி, என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? சும்மா வளவளன்னு பேசிக்கிட்டே இருக்க. தூங்க விடு. எனக்கு தூக்கமா வருது” என்று சற்று சத்தமாகவே சொன்னான் ஹரி.

“இல்லடா, என்ன ஆகி இருக்குமோன்னு ஒரு ஆதங்கத்தில அப்படி கேட்டேன். அதுக்கு எதுக்கு இப்படி கத்துற. குழந்தை முழிச்சிக்க போறா?” என்று அவனை திட்டிவிட்டு கோபித்துக் கொண்டு தன் குழந்தையின் பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டாள். ‘நானும் வினோதாவைப் போல தொலைஞ்சு போயிருந்தா அப்போ என் அருமை உனக்கு புரியும் ’ என்று புலம்பினாள்.

“ஏய் சங்கீ, சங்கீ” என்று அவளை சமாதானம் செய்ய அவளை தன் புறமாக திருப்பினான் ஹரி.

“போடா” என்று சொல்லி மறுபடியும் திரும்பி படுத்து கொண்டாள்.

“ஏய் ஏய், கோச்சிக்காத டி. பாவம் நம்ம அருண். அவனை நாளைக்கு எங்க கூட்டிக்கிட்டு போறது. போலீஸ் ஸ்டேஷனில் கூட கம்ப்ளெயின்ட் கொடுத்தாச்சு. இப்போ அடுத்து என்ன பண்றது ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ கேள்வியா கேட்டுக்கிட்டு இருந்தியா. அதான் டென்ஷன்ல கத்திட்டேன். சாரி டி” என்றான் ஹரி.

“ஓகே ஓகே, அதை விடு. போலீஸ் என்ன சொன்னாங்க” என்று சொல்லி மறுபடியும் பேச தொடங்கினாள் சங்கீ.

‘பேசாம அவ கோச்சிக்கிட்டு இருக்கட்டும் ன்னு விட்டிருக்கலாமோ?’ என்று நினைத்து கொண்டே ஹரி 

“தெரியல, 

ஆமாம், 

இல்லை” என்று  அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.

“அண்ணே, நீங்க டெய்லி காலேஜை விடுங்க. அதெல்லாம் நான் சினிமாவிலே பார்த்திருக்கேன். ஒரு மாசம் கழிச்சு நீங்க என்ன சொன்னீங்க? வினோதா அண்ணி என்ன சொன்னாங்க” என்றான் வேலன்.

“வேலு, நான் அவளை பார்க்கிறதோட சரி. பேசறது இல்லன்னு சொன்னேன் இல்ல?”

“ஆமாம்” 

“ஒருநாள் ஒரு சப்ஜெக்ட்ல டவுட் அவளுக்கு அதனால காலேஜ் லாஸ்ட் பீரியட் முடிஞ்சதும் என்னிடம் அவளே பேச வந்தாள்”

“மனோ”

திரும்பி பார்த்தேன்.

“எனக்கு இதுல ஒரு டவுட். சொல்லித் தரீயா?”

அமைதியாக இருந்தேன்.

“பிளீஸ் மனோ. நம்ம ஃபிரெண்ட்ஸ் ஓகே?” என்று சொல்லி கையை மறுபடியும் நீட்டினாள்.

நான் அவள் கையை பார்த்துவிட்டு அவளை பார்த்தேன். நான் என் சேரில் இருந்து எழுந்தேன். நான் எங்கே மறுபடியும் அவளை கட்டிப் பிடித்து விடுவேனோ என்று நினைத்து பயந்து ஒரு அடி பின்னால் சென்றாள். 

பதில் பேசாமல் வெளியே போக நடந்தேன்.

“மனோ” என்றாள்.

‘திரும்பி அவளை பார்த்து’

“எனக்கு நீ ஃபிரெண்டாக எல்லாம் இருக்க வேண்டாம். நான் உனக்கு சொல்லித் தரேன். அதுக்கு நீ எனக்கு பணம் கொடுக்கறீயா?” என்றேன்.

‘இதை சற்றும் எதிர்பார்க்காத என் வினோ. என்னை அதிர்ச்சியாக பார்த்தாள்’

“உண்மையிலேயே தான் சொல்றேன். எனக்கு உங்களை எல்லாம் போல நல்ல டிரெஸ் போட்டுக்கணும்ன்னு ஆசை. ஆனா எனக்கு அந்த அளவுக்கு வசதி இல்ல? அதனால தான்”

‘நான் அப்படி கேட்டதால அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியல. எதுவுமே பேசாமல் அமைதியாக போய்விட்டாள்’ என்றான் மனோகர்.

“என்ன அண்ணா நீங்க? உங்களுக்கு ஒரு நல்ல சேன்ஸ் கிடைச்சுது. அதை நழுவ விட்டுட்டீங்களே?”

“என்னடா சொல்ற?”

“ஆமாம் அண்ணா. நீங்க வாலி படம் பார்த்தீங்க இல்ல?”

“ஆமாம், அதுக்கு என்ன?”

“அதுல சிம்ரன் அக்கா சொல்லுவாங்க இல்ல?”

“சிம்ரன் அக்காவா? ஹா ஹா, சரி சரி சொல்லு”

“மவுத் ஆர்கன் வாசிக்க தெரியுமான்னு கேட்டா சோனா. எனக்கு தெரியும்ன்னு சொன்னேன்னு அஜித் சார் சொல்லுவாரு”

“டேய் விஷயத்தை மட்டும் சொல்லு டா”

“அப்போது சிம்ரன் சொல்லுவாங்களே, நீயே சொல்லிக் கொடுத்திருந்தீன்னா அப்படியே பெரிய ரொமான்ஸே நடந்திருக்கும் ன்னு. அந்த மாதிரி நீங்க அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது கை கால்கள் டச் ஆகி லவ் வந்திருக்கும் இல்ல?”

“நீ பெரிய டைரக்டர் தான் போ. அஜித் சார் சொன்னது போல தான். தெரியும்ன்னு சொல்லியும் ரொமான்ஸ் நடந்துச்சு. எனக்கும் ரொமான்ஸ் நடந்துச்சு”

“என்ன அண்ணா சொல்றீங்க?” 

“இரு டைம் ஆயிடிச்சு. அவ முழிச்சிடப் போறா. நான் ஸ்பிரே பண்ணிட்டு வந்து மிச்சத்தை சொல்றேன்”

“அவங்க எழுந்தா எழுந்துக்கட்டும். இப்போது தான் நம்ம கன்னியாகுமரி தாண்டி ரொம்ப தூரம் வந்திட்டோமே. அதுவும் இல்லாம அவங்களுக்கு டிபன் வாங்கிட்டு வந்திருக்கீங்களே. அதை எப்போ சாப்பிடக் கொடுப்பீங்க?”

“இப்போ தான்”

“என்ன அண்ணே சொல்றீங்க?”

“இப்போ அவ அரை மயக்கத்தில் இருக்கா, அதனால மெதுவாக அவளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிடப் போறேன்”

“இங்கேயே ரொமான்ஸ் சீன் நடக்கப் போகிறதா?” என்றான் வேலன்.

பாகம் -9

அருண் வெகுநேரமாக தன் மனைவியை நினைத்து தூங்காமல் இருந்தவன் மூன்று மணி அளவில் தூங்கி காலை 6 மணிக்கே எழுந்துவிட்டான். தன் குழந்தை கீழே விழாமல் இருக்க இரண்டு பக்கமும் தலையணையை வைத்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்தான். சங்கீதா எழுந்து வந்தாள்.

“என்ன அருண், எழுந்திட்டியா?”

“ஆமாம் சங்கீ, நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு போலீஸ் ஸ்டேஷனிற்கு போய் பார்க்கிறேன்”

“இருடா, ஹரியை எழுப்பறேன்”

“இல்ல இல்ல வேண்டாம் சங்கீ.

 அவன் தூங்கட்டும். நான் பார்த்துக்கொள்கிறேன்”

“ஏய், அடி வாங்க போற நீ. அவனும் உன் கூட வரட்டும். ஹரிக்கு ஒரு பிரச்சனைன்னா நீ இப்படி தான் தூங்கிட்டு இருப்பீயா?”

“இல்ல சங்கீ, அவனுக்கு வேலைக்கு போகனும் இல்ல? அவனோட மேனேஜர் வேறு சரியான சிடுமூஞ்சின்னு சொல்லி இருக்கான். லீவு எல்லாம் கேட்டா பிரச்சனை ஆயிடப் போகுது”

“அருண், அவனுக்கு இதனால வேலையே போனா கூட நான் கவலைப்பட மாட்டேன்னு உனக்கு தெரியும். அப்புறம் என்ன?”

“சங்கீ, ஏன் இப்படி பண்ற?”

“நீ அப்போ எங்களை உன் ஃபிரெண்டா நினைக்கலீயா டா?”

“இல்லடி, நீயும் ஹரியும் எப்பவுமே என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் தான்” என்றான்.

“சரி சரி, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு ரெடியாகு. நான் ஹரியை அனுப்பி வைக்கிறேன்” 

“ஓகே சங்கீ, நித்தி?”

“நித்தியை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே”

“ஓகே சங்கீ, தேங்க்ஸ். பை”

“ஓகே பை டா” என்றாள் சங்கீதா.

ஹரி எழுந்து வந்தான்.

“எங்கடி அருண்?”

“வீட்டிற்கு போயிருக்கான்” என்று சொல்லி அவன் சொன்னதையும் இவள் சொன்னதையும் சொன்னாள் சங்கீதா.

“அவன் சொன்னதும் சரிதான் டி. என் மேனேஜர் பத்தி தான் சொல்லி இருக்கேனே?” என்றான் ஹரி.

“என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு. நான் பேசறேன் உன் மேனேஜர் கிட்ட. நம்பரை கொடு” என்றாள் சங்கீதா.

“நீயா? என்னடி பேசப்போற?”

“பயப்படாத டா” என்றாள் சங்கீதா.

பயந்து கொண்டே தன் ஃபோனை பார்த்து நம்பரை சொன்னான் ஹரி.

“ஏய், நான் வினோதாவை என் உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன். அவளை முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ரொமான்ஸ் எல்லாம். அவ என் மனசு அளவில் இப்போ பொண்டாட்டி. அவளை கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியது என் கடமை. அதான் இப்போ அவளுக்கு டிபனை ஊட்டி விட்டுட்டு மறுபடியும் மயக்க ஸ்பிரே அடிக்க போறேன்” என்றான் மனோகர்.

“ஓ, ஓகே ஓகே அண்ணே” என்றான் வேலன்.

மெதுவாக அவளை தன் மேல் சாய்த்து உட்கார வைத்து, பரோட்டாவை பிய்த்து ஊட்டினான். அறை மயக்கத்தில் இருந்ததால் வினோதாவால் அதை ஊட்டி விடுபவன் யாருரென்று கண்ணை திறந்து பார்க்கக்கூட முடியவில்லை. வேறுவழியின்றி வாயில் இருந்த உணவை வெளியே துப்ப முடியாமல் மெதுவாக மென்று விழுங்கினாள். ஒரு பரோட்டா சாப்பிட அரைமணி நேரம் ஆனது. 

“அண்ணே, பேசாம நீங்க இட்லியை வாங்கி இருக்கலாம். பாருங்க அவங்களால மென்று கூட விழுங்க முடியல”

“சரி தான் டா, நான் ஏன் பரோட்டா வாங்கினேன்னா அவளுக்கு நாளை காலை எத்தனை மணிக்கு அடுத்து டிபன் கொடுக்க முடியும்னு தெரியல, பரோட்டான்னா அவ்வளவு சீக்கிரமா பசி எடுக்காது அதனால தான்”

“ஓ, ஓகே அண்ணா”

அதற்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை என்று புரிந்து கொண்ட மனோகர். அவள் மிச்சம் வச்சதையும் சேர்த்து அவனுக்கு வாங்கிய சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டான் மனோகர்.

வினோதா லேசாக முனக ஆரம்பித்தாள்.

“நித்தி, நித்தி…. அரு, அருண்…”

தண்ணீர் குடிப்பாட்டினான் மனோகர்.

லேசாகக் கண்கள் திறக்க முயற்சி செய்தவளின் மூக்கில் மறுபடியும் ஸ்பிரே அடிக்க, அவள் மயங்கினாள்.

அவள் அவனுடைய தோள் மீது சாய்ந்து இருந்தது அவனுக்கு பிடித்திருந்தது.

“அண்ணே வாங்க, அவங்களை உள்ளே உட்கார வைத்து பெட்டியை மூடலாம்.

“இல்லடா வேண்டாம். அதான் செக் போஸ்ட் எல்லாம் முடிஞ்சிடிச்சே. கொஞ்ச நேரம் என் வினோ நல்லா மூச்சுவிடட்டும். என்னதான் அந்த அட்டைப் பெட்டியில் ஓட்டை போட்டாலும் காத்து கம்மியாகத் தான் உள்ளே போகும். என் தோளில் சாய்ந்து தூங்கட்டும்” என்றான் மனோகர்.

பிறகு அவளுடைய தலையை மெல்ல தன் மடி மீதி சாய்த்து படுக்க வைத்து கொண்டான். 

“சரி அண்ணே, அப்புறம் என்ன நடந்துச்சு. அதை முதல்ல சொல்லுங்க”

‘நான் வினோதாவிற்கு படிப்பு சொல்லித் தர காசு கேட்டது. அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது போல. பதில் பேசாமல் அமைதியாக சென்று விட்டாள். இரண்டு நாள் கழித்து எனக்கு நாலு டி ஷர்ட்டும் இரண்டு ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு செட் காஷ்வல் ஷூஸ், இரண்டு செட் சாக்ஸ், பெல்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தா’

‘காலையில் நான் சீக்கிரமா வந்திடுவேன். அது தெரிந்து அவளும் வந்தா’

“மனோ, இந்தா” என்று சொல்லி என்னிடம் அந்த டிரெஸ்களை கொடுத்தா.

“எனக்கு யாரும் இனாமா கொடுக்கிறது பிடிக்காது”

“நான் உனக்கு இலவசமா எல்லாம் கொடுக்கல. நீ எனக்கு சொல்லிக் கொடுக்கப்போற படிப்புக்கு குரு தட்சணையாக கொடுக்கிறேன்”

“என்ன சொல்ற?”

“ஆமாம் மனோ, எனக்கு ரெண்டு சப்ஜெக்ட்‌ சுத்தமா புரியல. அதை வீக்லி டூ டேஸ் ஈவினிங்ல சொல்லிக் கொடு. பிளீஸ்” என்றாள் வினோதா.

“சரி, ஆனா அடுத்த மாசம் காசே கொடுத்திடு. டிரெஸ் வேண்டாம்.

 இதையே நான் இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல போட்டுக்குவேன்” என்று சொல்லி ஸ்மைல் செய்தேன்.

“ஓகே மனோ” என்றாள் வினோதா சிரித்துக் கொண்டே.

பிறகு வாரத்தில் இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தேன்.

‘அவளுக்கு என்னுடன் நேரத்தை செலவழிக்க ரொம்ப பிடிச்சிருந்துச்சு. எனக்கும் தான்’

‘அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் சொல்லிக் கொடுப்பேன். அப்புறம் டெய்லியே சொல்லிக் கொடுக்க சொல்லி கேட்பாள்’

“பேசாம நீயே பிரொஃபசர் ஆயிடு டா. நீ சொல்லிக் கொடுக்கிறது போல யாருமே சொல்லித் தர மாட்டேங்குறாங்க” என்றாள் வினோதா சிரித்துக் கொண்டே.

‘அப்போது அவளுடைய கை என் தோளின் மீது இருந்தது. அதை இப்போது நினைத்தாலும் சந்தோஷமாகவும் இன்பமாகவும் இருக்கு’

‘இரண்டு மாசமா ஹாஸ்டல் ஃபீஸ் கட்டாததால என்னை வெளியே அனுப்பிட்டாங்க. அப்போது தான் நான் கோபால் கூட ரூம் எடுத்து தங்கினேன். ஒருநாள் அவன் சமைப்பான். ஒரு நாள் நான் சமைப்பேன். ஈவினிங் பார்ட் டைம்ல பெட்ரோல் பங்க்ல வேலைப் பார்த்தேன். வினோதா எனக்கு மாசம் நாலாயிரம் தருவா. பெட்ரோல் பங்க்ல பார்ட் டைம் அதனால மூவாயிரம் வரும். எப்படியோ சமாளிச்சேன்’

‘நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பிறகு வினோதா நல்லா படிக்க ஆரம்பிச்சா. எல்லா சப்ஜெக்ட்லேயும் நல்ல மார்க் வாங்கினா. இதைப் பார்த்த அவளுடைய ஃபிரெண்ட்ஸூம் என் நண்பர்கள் சிலரும் என்னிடம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டனர்’ என்றான் மனோகர்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.