
தித்திக்கும் தேன்பாவை
பாகம் 8
” ஓ அந்த ரேப் கேஸா?” என்றார் அந்த பெண் போலீஸ்.
சட்டென்று அவர் அப்படி சொன்னது ஷாமிற்கு சற்று சங்கடமாக இருந்தது.
” ஏய் வாணி, இவர்கிட்ட ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கோ “
” ஓகே மேடம் ” என்று எஸ் ஐ பார்த்து சொன்ன அந்தப் பெண்மணி ஷியாமை பார்த்து,
” இங்க வாங்க சார்” என்றாள்.
” உட்காருங்க சார் ” என்று தன் முன்னால் இருந்த சேரை காண்பித்தாள்
கான்ஸ்டபிள் வாணி.
” தேங்க்ஸ் மேடம்”
” சொல்லுங்க சார் என்ன ஆச்சு “
அன்று மாலை காலேஜிலிருந்து கிளம்பியது முதல் தன் தங்கையை ஹாஸ்பிடல் சேர்த்தது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் ஷியாம். ( தானும் நந்தினியும் முத்தம் கொடுத்துக் கொண்டதை தவிர )
” உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? “
” லாஸ்ட் மந்த் எங்க வீட்டுக்கு திருடங்க வந்தாங்க. எதுவும் திருடு போகாததால நாங்க கம்பளைண்ட் கொடுக்கல. அதேபோல இப்ப திருட வந்தவங்க யாராவது இருப்பாங்களோ ஒரு சந்தேகமா இருக்கு “
” ஓகே மத்தபடி உங்களுக்கு உங்க தங்கச்சிக்கு இல்ல உங்க பேரண்ட்ஸ்க்கு யாராவது விரோதி இருக்காங்களா? “
” அந்த மாதிரி யாரும் இல்ல மேடம்”
” ஓகே சார், இத படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க. நீங்க சொன்னதை அப்படியே இதுல எழுதி இருக்கேன் ” என்று சொல்லி பேப்பரை நீட்டினாள் கான்ஸ்டபிள் வாணி.
அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டான் ஷியாம்.
” மேடம், இந்த விஷயம் எதுவும் மீடியாவுக்கு வராது இல்ல? “
” இல்ல சார் அப்படியெல்லாம் எதுவும் ஆகாது”
” கோர்ட் கேஸ்னு ஏதாவது வருமா? “
” இந்த காலத்துல பொண்ணுங்களே தைரியமா வந்து கோர்ட்டில் சாட்சி சொல்லுது. நீ என்ன இப்படி பயந்தாங்கோலியா இருக்க? உன் தங்கச்சி கிட்ட கேட்டு இருந்தாலே தைரியமா வந்து கோர்ட்டில் சாட்சி சொல்லும் போல இருக்கு. நீ என்னடான்னா கோர்ட்டுக்கு போகனுமா கேஸ் குடுக்கணுமான்னு கேக்குற?” என்றார் எஸ்ஐ மதிவதனி.
” சாரி மேடம், எங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாங்க”
” உயிரை விட்டுவிடுவார்களா? அங்கங்க பொண்ணுக்கு இந்த மாதிரி ஆச்சுன்னா அவங்களே போயி ரேப் பண்ணவனை கொல்றாங்க, நீ என்னடான்னா இப்படி சொல்ற. உன்னை மாதிரியே உன்னோட அப்பா அம்மாவும் பயந்தாங்கோலிங்களா? உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இருக்கவே தான், இந்த ரேப்பிஸ்ட் எல்லாம் தைரியமா வெளிய நடமாடுகிறாங்க” என்று சற்று கோபமாகவே பேசினார் மதிவதனி.
‘ அவர் சொல்வது நியாயம் தான் என்றாலும், இதுவே வேறு யாருக்காவது நடந்திருந்தால் நானும் இதையே தான் சொல்லி இருப்பேன். ஆனால் என் வீட்டில் நடந்ததால் அது வெளியே தெரிந்தால் அவமானம் மட்டும் இல்லாமல் என் தங்கையின் வாழ்க்கை என்ன ஆகும்?’ என்று நினைத்து பதில் பேசாமல் அமைதியாக இருந்தான் ஷியாம்.
“ஓகே, வீட்டுக்கு போகலாம் வா” என்றார் மதிவதனி.
“இப்பவா மேடம்?” என்றான் ஷியாம்.
“வேற எப்போ? இன்னும் ஒரு மாசம் கழிச்சா?”
“அது இல்ல மேடம். நான் இப்போ தான் வீட்டிலிருந்து வரேன். இப்போ ஹாஸ்பிடல் போறேன்”
“வீட்டுக்கு போய் என்ன பண்ண?”
“அது வந்து, அது”
“சொல்லு?”
“சாரி மேடம். வீட்டுக்கு போய் பெட்ஷீட் எல்லாம் வாஷ் பண்ணிட்டு. ரத்தக் கரை எல்லாம் துடைத்து விட்டு வந்தேன்”
“உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா? இந்த மாதிரி தான் கிரைம் சீனை கிளீன் பண்ணுவியா?”
அமைதியாக இருந்தான் ஷியாம்.
“நான் நினைச்சா உன்னைக் கூட அரெஸ்ட் பண்ணலாம். தடையங்களை அழிச்சதுக்கு, சந்தேகத்தின் பெயரில் கூட”
“மேடம்” என்று அதிர்ச்சி ஆனான் ஷியாம்.
” உன் தங்கச்சி கண் விழிச்சிட்டாளா? “
“மயக்கம் தெளிஞ்சு எழுந்தவ ரொம்ப டென்ஷன்ல கத்துறான்னு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சிருக்கிறதா நர்ஸ் சொன்னாங்க” என்றான் ஷியாம்.
“ஓகே, உன் தங்கச்சிக்கு மயக்கம் தெளிஞ்ச உடனே எனக்கு கால் பண்ணு. எனக்கு முன்னாடி டாக்டர் தவிர வேற யார் கிட்டேயும் அவ பேசக் கூடாது. புரிஞ்சதா? முக்கியமா உன் கிட்ட.”
“ஓகே மேடம்” என்றான் ஷியாம்.
“சரி, நீங்க கிளம்புங்க. வேற எதாவது தகவல் வேணும்னா கேட்கிறேன்.
எப்போ கால் பண்ணாலும் எடுக்கனும்”
என்றார் எஸ் ஐ மதிவதனி.
“ஓகே மேடம்” என்றான் ஷியாம்.
பிறகு அங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் ஷியாம்.
ஷியாம் வீட்டில் இருந்து கிளம்பி செல்வதை வீட்டிற்கு பின்னால் வெகு தொலைவில் மறைந்து நின்று பார்த்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டின் பின் கதவை சாவி வைத்து திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்து டார்ச் லைட் வைத்து எதையோ தேடினான் “அவன்”. பெட்ரூம் ஜன்னலின் கீழே இருந்த தனது பிரேஸ்லெட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
ஹாஸ்பிடலுக்கு சென்றான் ஷியாம். அப்போது நர்ஸ் அவனிடம் ஃபோனில் கூறியதையே மறுபடியும் கூறினார்.
” அக்ரஸிவ்வா நடந்துக்கிட்டாளா? என்ன பேசினான்னு சொல்ல முடியுமா சிஸ்டர்? ” என்றான் ஷியாம்.
“யாருடா நீ, யாருன்னு, யாருன்னு கத்தினாங்க பிறகு ஷியாம் ஷியாம் சீக்கிரமா வாடா, என்னை காப்பாத்துன்னு கத்தினாங்க”
ஷியாமிற்கு கண்கள் கலங்கியது.
” நான் உள்ள போய் அவளை ஒரு முறை பார்க்கலாமா? ” என்று பரிதாபமாக கேட்டான் ஷியாம்.
அந்த சிஸ்டருக்கு அவனைப் பார்க்க பாவமாக இருக்கவே,
” ஓகே சார் இன்னும் 5 மினிட்ஸ்ல டாக்டர் வருவாங்க. ஜென்ரலா ஐசியூல இருக்க பேஷண்ட பார்க்க அலோ பண்ணக் கூடாது. டூ மினிட்ஸ்ல பார்த்துட்டு வந்துடுறீங்களா? அப்புறம் டாக்டர் பார்த்துட்டாங்கன்னா எனக்கு தான் பிரச்சனையா ஆயிடும் “
” தேங்க் யூ சிஸ்டர், தேங்க் யூ வெரி மச். நான் டூ மினிட்ஸ்ல வந்துடறேன் “
பிறகு தன் தங்கையை பார்க்க ஐ சி யூ வார்டிற்கு சென்றான் ஷியாம்.
ஐ சி யூ விற்கு செல்வதற்கென்று தனியாக ஒரு கோட், கேப், கால் மற்றும் கைக்கு கவர், ஃபேஸ் மாஸ்க் என்று அனைத்தையும் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.
முதலில் ‘அந்த பெட்டில் யாரோ இருக்கிறார்கள்’ என்று நினைத்து அடுத்த பெட்டிற்கு சென்றவன் தன் தங்கையின் பெயரை பார்த்துவிட்டு திரும்ப வந்தான்.
இடது கண் மற்றும் இடது பக்க தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. கண் மற்றும் முகம் வீக்கமாக இருந்தது. ‘அழகு தேவதை போல இருந்த தன் தங்கை இன்று இவ்வாறு சீரயிழக்கப்பட்டு இருக்கிறாளே?’ என்று நினைத்து மிகவும் வருந்தினான். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான். அவளுக்கு நடந்த இந்த கொடுமையை பற்றி அவனுடைய பெற்றோர்களிடம் கூட சொல்லக் கூடாது என்பதில்.
அவளுடைய தலையை கோதியபடி,
“சாரி ஷிவானி, உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவனை. கண்டன் துண்டமா வெட்டி போட்டு விடுவேன். இது உன் மேல சத்தியம் ” என்றான்.
மயக்க கலக்கத்திலும் ஷிவானி.
” ஷியாம், சீக்கிரமா வாடா வந்து என்ன காப்பாத்து ” என்று முணகி கொண்டே இருந்தாள்.
அதைக் கேட்டதும் அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியாமல் அழுகை தொண்டையை வந்து அடைக்க, மாஸ்க் போட்டிருந்த தன் வாயை மூடிக் கொண்டு வேகமாக வெளியே வந்தான் ஷியாம்.
அவன் அவ்வாறு வெளியே ஓடி வருவதை பார்த்த நர்ஸ்,
” என்னாச்சு சார், உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க தானே? “
கண்கள் கலங்க, தொண்டையை சரி செய்து கொண்டு.
” இல்ல சிஸ்டர், அவளை இந்த நிலைமையில் பார்த்ததுனால நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் “
” சாரி சார்”
” டாக்டர் வந்ததும் கூப்பிடுங்க நான் வெயிட்டிங் ஹால்ல இருக்கிறேன்”
” ஓகே சார்”
அந்த ஐசியூ விற்காக போடப்பட்ட அனைத்து கவர்களையும் கழட்டி அங்கிருந்த வேஸ்ட் பேகில் போட்டுவிட்டு, வெயிட்டிங் ஹாலுக்கு சென்றதும் நந்தினிக்கு கால் செய்தான்.
” நந்தினி வீட்டுக்கு போயிட்டியா?”
” நான் வந்துட்டேன் ஷியாம். நீயும் ஷிவானியும் இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கீங்க? ” என்றாள் நந்தினி.
அவள் அவ்வாறு பேசுவதில் இருந்து யாரோ பக்கத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ஷியாம்,
” ஓகே ஓகே புரியுது, நீ ஃப்ரீ ஆயிட்டு அப்புறமா கால் பண்ணு “
” ஒரு நிமிஷம் ஷியாம், அம்மா பேசணும்னு சொல்றாங்க “
அவன் வேண்டாம் என்று சொல்வதற்குள் ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டாள் நந்தினி.
தொடரும்…
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.