
பாகம் -7
“டைவர்ஸ் தந்திடுவீங்க இல்ல?” என்று ஆதித்யா கேட்டவுடன் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் வசுந்ரா.
“காண்ட்ராக்ட்ல இருக்க டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பத்தி உங்க அம்மா உங்க கிட்ட சொல்லலையா?” என்றான்.
“காண்ட்ராக்டா என்ன சொல்றீங்க?”
“அப்படின்னா, உங்க அம்மா எதுவுமே உங்க கிட்ட சொல்லலையா?”
“இல்லையே”
“ஓகே, இங்க பாருங்க வசுந்தரா.
ஒன் இயருக்கு மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். எங்க அப்பா எனக்கு சி இ ஓ பதவியை கொடுத்ததும் டைவர்ஸ் பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா கம்பெனிக்கு நான் பிரசிடெண்ட் ஆகறதுக்கு நான் ஒரு குடும்ப வாரிசு கொடுக்கணும்னு சொன்னாங்க”
“என்ன? குழந்தை பெத்துக்கணுமா?”
“பயப்படாதீங்க. அதுக்கு நிறைய வழி இருக்கு. என்னோட விரல் கூட உங்க மேல படாது”
“எனக்கு ஒண்ணுமே புரியல தலையே சுத்துது. தயவு செஞ்சு கொஞ்சம் விவரமா சொல்லுங்க”
அப்போது ஃபோன் அடித்தது.
“ஒன் மினிட்” என்று சொல்லி தன் ஃபோனை எடுத்தான் ஆதித்யா.
“சொல்லுங்க அம்மா. அச்சச்சோ அப்படியா. நாங்க உடனே வரோம்” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு.
“வசுந்தரா, சீக்கிரமா வாங்க போகலாம் வாங்க. அஸ்வினி கீழே விழுந்துட்டாலாம். அம்மா பதட்டமா பேசுறாங்க”
“அடிபட்டு ரத்தம் ஏதாவது வருதா?”
“எதுவும் தெரியல போனால் தான் தெரியும்”
“ஓகே நான் ரெடியா தான் இருக்கேன் போகலாம்”
அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டிலிருந்தனர்.
தன் ரூம் கட்டிலில் படுத்து இருந்தாள் அஸ்வினி.
வசுந்தரா அவள் அருகில் சென்று அமர்ந்து “என்னாச்சு மா, ரொம்ப வலிக்குதா?” என்றாள்.
“இல்ல அண்ணி. நான் ஃபோன் பார்த்துக்கிட்டே ஸ்டெப்ஸ்ல இறங்கும் போது தெரியாம ஸ்லிப் ஆகி மூணு படிக்கட்டு தாண்டி தரையில் விழுந்துட்டேன். அநேகமா ஸ்பெரெயின் தான் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். சாரி அண்ணி” என்றாள்.
“என்கிட்ட எதுக்கு மா சாரி சொல்ற?”
“இல்ல அண்ணனையும் உங்களையும் டிஸ்டர்ப் பண்ணதுக்கு”
“சேச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல”
“அம்மா அண்ணனுக்கு கால் பண்ண உடனே, எனக்கு ஒரே கில்டி ஃபீலிங் ஆயிடுச்சு”
“அஸ்வினி. உங்க அண்ணன் தான் தூங்கிட்டு இருந்தாரு. நான் குளிச்சிட்டு காஃபி எல்லாம் குடிச்சிட்டு உக்காந்துட்டு இருந்தேன். அப்போ அவரும் எழுந்து என்கிட்ட பேசிட்டு இருந்தாரு, அப்போதான் அத்தை கால் பண்ணாங்க”
“ஓகே அண்ணி”
“சரி சரி, டாக்டர்கிட்ட போகாம ஏன் உக்காந்து இருக்கீங்க”
“டாக்டர் வீட்டுக்கே வந்து பாப்பாரு அண்ணி”
“ஓ அப்படியா. சரிம்மா”
“அண்ணி”
“சொல்லுமா”
“உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி”
ஸ்மைல் செய்து கொண்டே.
“எனக்கும் தான் அஸ்வினி” என்றாள் வசுந்ரா.
அப்போது டாக்டர் உள்ளே வருவதற்கு கதவை தட்டினார்.
வசுந்ரா எழுந்து நின்று கொண்டு.
“யெஸ் டாக்டர், பிளீஸ் கம் இன்” என்றாள்.
டாக்டர் உள்ளே வந்து அஸ்வினியின் கால்களை செக் செய்தார்.
“ஒரு காலில் சிராய்ப்பு மட்டும் தான். இன்னொரு காலில் ஃபிரேக்சர் இருக்கலாம்” என்று சொன்னார்.
“அச்சச்சோ” என்று பதட்டம் ஆனார் மகேஸ்வரி.
“கவலைப்படத் தேவை இல்லை. ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்”
“எங்கே போய் எக்ஸ்ரே எடுக்கனும் டாக்டர்” என்றாள் வசுந்ரா.
“என் ஹாஸ்பிட்டலையே இருக்கு. இவங்க எல்லாருக்குமே தெரியுமே. பை தி பை, நீங்க யாரு அஸ்வினியோட ஃபிரெண்டா?” என்றார் டாக்டர்.
“இல்ல டாக்டர் நம்ம ஆதியோட வைஃப்”
“வாட், ஆதித்யாவுக்கு கல்யாணம் ஆயிடிச்சா. என்கிட்ட சொல்லவே இல்ல. என்னை கூப்பிடவும் இல்ல”
“நேத்து தான் கல்யாணம் ஆச்சு டாக்டர். திடீர்னு அரேஞ்ச் பண்ணின மேரேஜ் அதான் சொல்ல முடியல நெக்ஸ்ட் வீக் ரிசெப்ஷன் வைக்கிறோம், அப்போ கண்டிப்பா சொல்றோம்”
“ஓ, ஓகே ஓகே. ஹேப்பி மேரீடு லைஃப் டூ யூ” என்றார் டாக்டர் வசுந்ராவை பார்த்து.
“தேங்க்ஸ் டாக்டர்”
“உங்க பேர் என்ன மா”
“வசுந்ரா”
“நைஸ் நேம், ஆதித்யா ஈஸ் ஸோ லக்கி டு ஹேவ் யூ” என்றார் டாக்டர்.
“என்ன டாக்டர், எங்க அண்ணனை தான் உங்களுக்கு நல்லா தெரியும். அவரை கல்யாணம் பண்ணின நீங்க லக்கின்னு அண்ணி கிட்ட சொல்லுவீங்கன்னு பார்த்தா? இப்படி சொல்றீங்களே?” என்றாள் அஸ்வினி.
“இல்லம்மா, நேத்து தான் மேரேஜ் ஆச்சுன்னு உங்க அம்மா சொன்னாங்க. ஆனா அதுக்குள்ள உனக்கு அடிப்பட்டதை பார்த்து அவங்க பதறியதும், உனக்கு உடனே டிரீட்மெண்ட் கொடுத்து சரி செய்யனும்னு நினைக்கிறதையும் பார்த்ததால அப்படி சொன்னேன்”
“அது என்னவோ கரெக்ட் தான் டாக்டர். எங்க அண்ணி ரொம்ப ஸ்வீட் அண்ட் கேரிங்”
என்றாள் அஸ்வினி.
டாக்டர் கீழே இறங்கி சென்றதும்.
“அத்தை நான் அஸ்வினியை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகலாமா?” என்றாள் வசுந்ரா.
“உனக்கு எதுக்குமா சிரமம் நான் பார்த்துக் கொள்கிறேன்”
“இல்ல அத்தை, எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல”
“இல்லம்மா நான் போறேன். வீட்டில் இருந்தா எனக்கு தலைவலியே வந்திடும். என்னாச்சு ஏதாச்சுன்னு” என்றார் மகேஸ்வரி.
“ஓகே அத்தை. அப்போ நானும் உங்க கூட வரேன். அப்படியே எங்க அப்பாவை போய் பார்த்திட்டு வந்திடறேன்”
“சரிம்மா” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
கீழே இறங்கி வருவதற்காக தன் அம்மாவையும் அண்ணியையும் பிடித்துக் கொண்டு நொண்டி நொண்டி நடந்து வந்தாள் அஸ்வினி.
கீழே டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த ஆதித்யா.
“ஓகே டாக்டர். நீங்க ஆஸ்பிட்டலுக்கு போங்க, நான் அஸ்வினியை கூட்டிக் கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக படிக்கட்டில் ஏறி வந்து தன் தங்கையை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.
வசுந்ரா மற்றும் மகேஸ்வரி இருவரும் ஆதித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
காரில் அஸ்வினியை அமர வைத்து விட்டு உள்ளே வந்து தன் அம்மாவிடம் சொல்ல வந்தான்.
தன் மகனிடம் நானும் கூட வருகிறேன் என்று சொல்ல தயங்கினார் மகேஸ்வரி.
“அம்மா நான் எக்ஸ்ரே எடுத்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றான் ஆதித்யா.
“நானும் அத்தையும் உங்க கூட வரோம்” என்றாள் வசுந்ரா.
அவளை திரும்பி ஏன் என்பது போல பார்த்தான்.
“அத்தை கூட இருக்கணும்னு நினைக்கிறாங்க”
அமைதியாக இருந்தான் ஆதித்யா .
“அதுவும் இல்லாம எக்ஸ்ரே எடுக்கும்போது டிரஸ் சேஞ்ச் பண்ணனும்னு சொன்னாங்கன்னா அப்போ நாங்க யாராவது கூட இருக்கனும் இல்ல?” என்றாள் வசுந்தரா.
பாகம் -8
அவன் பதில் சொல்வதற்குள்
“வாங்க அத்தை போகலாம்” என்று சொல்லி அவரையும் இழுத்துக் கொண்டு காருக்கு சென்றாள் வசுந்ரா.
அவளுடைய இந்த செய்கை ஆதித்யாவுக்கு கடுப்பாக இருந்தாலும் வேறு வழியின்றி அமைதியாக காரில் ஏறினான்.
“அண்ணி, எக்ஸ்ரே எடுத்துட்டு டாக்டரை பார்த்த அப்புறமாக என்னாச்சுன்னு அப்பா கால் பண்ண சொன்னாரு” என்றான் அர்ஜுன்.
“ஓகே பா” என்றாள் வசுந்ரா.
காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள் அஸ்வினி. வசுந்ரா ஆதித்யாவின் பக்கத்தில் முன் சீட்டில் அமராமல், அஸ்வினியின் பக்கத்தில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
அதனால் மகேஸ்வரி முன் சீட்டில் தன் மகன் ஆதித்யாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
காரில் செல்லும் போது வசுந்ரா தன் மாமியாரிடம் பேசினாள்.
“மாமா ஆஃபீஸுக்கு கிளம்பிட்டாரா அத்தை”
“ஆமாம்மா, காலைலேயே ஏதோ மீட்டிங் இருக்குன்னு கிளம்பிட்டாரு. இவ கீழே விழுந்திட்டான்னு ஃபோன் பண்ணி தான் சொன்னேன். அவரும் பதட்டமா நான் உடனே வீட்டுக்கு வரவா என்று கேட்டார். இல்லைங்க வேண்டாம் ஆதித்யா வரான்னு சொன்னேன்.
டாக்டர் வந்து போனது அர்ஜுன் ஃபோன் பண்ணி சொன்னான். அதனாலதான் எக்ஸ்ரே எடுத்த அப்புறமா சொல்ல சொல்லி சொல்லி இருக்காரு”
“அஸ்வினி, நீ ரொம்ப லக்கி. உன் குடும்பமே உன்னை தாங்கு தாங்கனு தாங்குறாங்க” என்றாள் வசுந்தரா.
“ஏன் அண்ணி, உங்க வீட்ல உங்கள இப்படி தாங்க மாட்டாங்களா?”
“அப்படி எல்லாம் இல்ல. எல்லாருக்கும் பாசம் இருக்கும் ஆனா இங்கே இருக்கிறவர்கள் வெளிப்படுத்துர மாதிரி எங்க அப்பாவோ அம்மாவோ என் தங்கச்சியோ என்கிட்ட வெளிப்படுத்தினதில்லை அதனால சொன்னேன்”
“அண்ணி இப்ப இருக்கிறவங்க உங்க சித்தி தானே?”
“அஸ்வினி ஏன் தேவையில்லாமல் பேசுற?” என்றார் மகேஸ்வரி.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. அவளுக்கு தெரிஞ்சுக்குற உரிமை இருக்கு இல்ல?” என்று மகேஸ்வரி இடம் சொல்லிவிட்டு,
“ஆமாம் அஸ்வினி, ஆனா எங்க அம்மா இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு பார்த்து இருந்து இருப்பாங்களான்னு எனக்கு தெரியல அவ்வளவு நல்லா பாத்துக்கிட்டாங்க”
“அப்ப நீங்களும் லக்கி தானே அண்ணி?”
“ஆமா அஸ்வினி”
‘உண்மையிலேயே வசுந்தராவின் சித்திக்கு இவள் சொல்வது போல அதிகமான பாசம் வைத்திருக்கிறாரா? அப்படி இருந்தால் எப்படி இந்த கான்ட்ராக்ட்க்கு ஒத்துக்கொண்டு இருப்பார். இந்த விஷயத்தைப் பற்றி வசுந்தராவிடம் சொல்லாமல் கூட திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்?’ என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.
ஹாஸ்பிடலில் இறங்கியதும் ஆதித்யா கார் பார்க்கிங் செய்து விட்டு வருவதற்குள்
வீல் சேர் கொண்டு வந்து அதில் அஸ்வினியை அமர வைத்து வசுந்தராவே தள்ளிக் கொண்டு சென்றாள்.
ரிசப்ஷனில் கேட்டுவிட்டு டாக்டர் ருமூக்கும் அழைத்துச் சென்றாள். தன் மாமியாரை அங்கிருந்த சாரில் அமரச் சொல்லிவிட்டு அவளை எக்ஸ்ரே ரூமுக்கு அழைத்து சென்றாள்.
“டிரஸ் சேஞ்ச் பண்ணனுமா?” என்றாள் அஸ்வினி.
“கால்ல தானம்மா அடிபட்டு இருக்கு. அதனால பேண்ட் மட்டும் ரிமூவ் பண்ணிட்டு அங்கே ஷார்ட்ஸ் இருக்கும் அத போட்டுக்கிட்டு வாங்க” என்றார் அங்கு எக்ஸ்ரே எடுக்கும் ஆப்பரேட்டர்.
வசுந்தராவின் உதவியுடன் அதை மாற்றிக் கொண்டாள்.
எக்ஸ்ரே எடுத்து முடித்ததும் மறுபடியும் பேன்டை மாற்றி விட்டு விட்டு அஸ்வினியை வெளியே அழைத்து வந்து சாரில் அமரச் செய்தாள்.
“வசு”
“சொல்லுங்க அத்தை”
“நாங்க இவளை பார்த்துக்கிறோம் மா, நீ உங்க அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போகனும்னு சொன்ன இல்ல நீ போயிட்டு வா”
“இல்ல அத்தை. அஸ்வினிக்கு என்ன ரிசல்ட்” என்று பார்த்துட்டு அதுக்கப்புறம் போறேன்.
“நான் ஃபோன் பண்றேன் மா”
“இல்ல அத்தை எக்ஸ்ரே ரிசல்ட் தான அது சீக்கிரமா வந்துடும். பார்த்துவிட்டு அப்பறமா போறேன்”
கால் மணி நேரத்தில் டாக்டர் ரூமுக்கு அழைப்பு வந்தது.
வீல் சேரில் அஸ்வினியை தள்ளிக் கொண்டு வசுந்தரா வர மகேஸ்வரியும் ஆதித்யாவும் பின்னாலயே சென்றார்கள்.
டாக்டர் எக்ஸ்ரே வை செக் செய்துவிட்டு.
“நான் கெஸ் பண்ணது சரிதான். ஆனா பயப்படுற அளவுக்கு பெரிய கிராக் எதுவும் இல்ல மைல்டு ஹேர்லைன் பிராக்ச்சர் தான்”
“இப்ப கட்டு போடணுமா டாக்டர்” என்றான் ஆதித்யா.
“ஆமாம் 10 டேஸ், அதுக்குள்ள கூடிடும்”
“ஓகே டாக்டர்”
அஸ்வினிக்கு கட்டு போட்டுவிட்டனர். வீட்டுக்கு செல்லலாம் என்று டாக்டர் சொன்னதும்.
“நீங்க எல்லாம் இங்கேயே இருங்க. நான் போய் கார் எடுத்துட்டு வரேன்” என்றான் ஆதித்யா.
“சரிங்க அத்தை, நான் போயிட்டு வரேன். அஸ்வினி நான் எங்க அப்பாவ பாத்துட்டு ஈவினிங் வந்துடறேன்” என்று இருவரிடம் சொல்லிவிட்டு கார் பார்க்கிங்கில் தன் கணவன் கார் எடுக்க சென்றபோது அங்கேயே சென்றாள்.
அவன் கார் எடுக்க கதவை திறந்து உள்ளே அமர்ந்தான். வசுந்தரா கார் கதவை திறந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“நான் தான் அங்கேயே வெயிட் பண்ண சொன்னேன் இல்ல?”
“இல்ல ஆதித்யா, நான் எங்க அப்பாவை பார்க்க போறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”
“ஓகே”
“ஈவினிங் வந்திடுறேன்”
“ஓகே”
“பை ஆதி”
“பை”, ‘வசு டேக் கேர்’ என்று அவன் சொல்வதற்குள் காரில் இருந்து இறங்கி விட்டாள்.
ஹாஸ்பிடல் என்ட்ரன்ஸில் நின்று கொண்டு ஆட்டோ புக் செய்தாள்.
தன் அம்மாவையும் தங்கையையும் ஏற்றிக்கொண்டு கிளம்பும்போது ரியர் வியூ மிரரில் தன் மனைவியை பார்த்தான் ஆதித்யா.
அவள் கையில் ஃபோனை தவிர வேறு எதுவும் இல்லை. ‘அடச்சே பர்சை வீட்டிலேயே மறந்துட்டு வந்துட்டோமே?’ என்ற தலையில் அடித்து தன்னையே திட்டிக் கொண்டாள்.
அதை கவனித்தான் ஆதித்யா. அவள் நிலைமையை புரிந்து கொண்டாலும், ‘அவளே தனக்கு கால் செய்து ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்க எதிர்பார்த்தான். ஆகையால் எப்படியும் தனக்கு கால் வரும்’ என்று நினைத்தபடி வீட்டிற்கு சென்றான்.
ஆட்டோ புக் செய்தவள் ஆட்டோ வந்தவுடன்.
“அண்ணா ஏ வி ஹாஸ்பிடல் போகணும். உங்ககிட்ட ஜிபே இருக்கா” என்றாள்.
“இருக்குமா, வாங்க போகலாம்”
“தேங்க் காட்” என்று நினைத்துக் கொண்டாள்.
ஹாஸ்பிடலில் இறங்கும் போது “எவ்வளவு அண்ணா வந்திருக்கு?” என்றாள்.
“127 மா”
“அண்ணா நான் உங்களுக்கு 500 ரூபாய் போடுறேன். 150 ரூபாய் எடுத்துக்கிட்டு, எனக்கு மீதி கேஷா தரீங்களா. நான் பர்ச வீட்ல மறந்துட்டு வந்துட்டேன்”
“சரி மா” என்று சொல்லி 350 கேஷ் ஆக அவளிடம் கொடுத்தார் அந்த ஆட்டோ டிரைவர் .
“தேங்க்ஸ் அண்ணா” என்று சொல்லிவிட்டு ஹாஸ்பிடலுக்குள் சென்றாள் .
No comments yet.