பாகம் -7

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -7


சிவராமன் வீட்டிற்கு சென்றவுடன்

வாசலில் நின்றனர் அர்ஜூன் மற்றும் ரஞ்சனி.


“டேய், அங்கேயே நில்லுடா” என்றார் சிவராமன்.


“அப்பா, என்னப்பா நீங்க?” என்றான் அவினாஷ்.


“நீயும் வீட்டைவிட்டு வெளியே போடா. ரெண்டு பேரும் சேர்ந்து என்னோட மான மரியாதையை வாங்கிட்டீங்க”


“அப்பா, நான் என்ன தப்பு பண்ணேன்?” என்றான் அவினாஷ்.


“என்னடா தெரியாத மாதிரி பேசுற. அத்தனை பேர் முன்னாடி அந்த பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்ன இல்ல அது என்னவாம்?”


“அப்பா, அண்ணா இப்படி பண்ணதால அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம். அதுக்காகவும் தான் நான் அப்படி சொன்னேன்‌”


“இது என்ன சினிமான்னு நினைச்சியா? கல்யாணம் நின்னு போச்சுன்னா உடனே அங்க இருக்குற யாரையாவது கூப்பிட்டு தாலி கட்ட சொல்லுவாங்களே அந்த மாதிரி”


“அப்பா, நான் உண்மையிலேயே ஹர்ஷிதாவ லவ் பண்றேன். அவ அழறதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடிச்சு. இதுக்கு மேல அவ கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராமல் அவளை பார்த்துக்கனும்னு தோணுச்சு. கல்யாணம்னு ஒண்ணு பண்ணா அது அவ கூடத்தான்”


‘பளார்’ என்ற சத்தத்துடன் அவினாஷூக்கு ஒரு அடி கொடுத்தார் சிவராமன்.


அடியை வாங்கியவன் தலை குனிந்து நின்றான். 


“கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறவனையே என்ன பண்றது ன்னு தெரியல இதுல உன் கல்யாணத்தை பத்தி இப்பவே பேசறியா?”


“ஏங்க, ஏங்க. பிளீஸ் கோபப் படாதீங்க” என்று தடுக்க நினைத்தாள் நிர்மலா.


“அப்பா, எங்களை எப்போ உங்களுக்கு மன்னிக்க தோணுதோ அப்போ மன்னிச்சிடுங்க. அது வரைக்கும் ரஞ்சனியோட அப்பா எங்களுக்கு ஒரு தனிவீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அங்கே போறோம். அதோட அட்ரெஸ் இது” என்று விசிட்டிங் கார்டை அங்கிருந்த டீ பாயில் வைத்துவிட்டு.


“வா ரஞ்சனி போகலாம்” என்று அவள் கையை பிடித்து கொண்டு யாருடைய பதிலிக்கும் காத்திராமல் வெளியே சென்றான் அர்ஜூன்.


“அண்ணா” என்று பின்னால் சென்றான் அவினாஷ்.


“தேங்க்ஸ் டா” என்றான் அர்ஜுன்.


ஆச்சரியமாக பார்த்தான் அவினாஷ்.


“என்னடா சாரி சொல்லாம தேங்க்ஸ் சொல்றேன்னு பார்க்கறியா?

தெரிஞ்சோ தெரியாமலோ ஹர்ஷிதாவை கஷ்டப் படுத்திட்டோமே ன்னு குற்ற உணர்ச்சி இருந்துச்சு. ஆனா நீ அவளை லவ் பண்றேன்னு சொன்னதும் அது சரி ஆயிடிச்சு. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உனக்கும் ஹராஷிதாவுக்கும். என் சார்பாக அவ கிட்ட மன்னிப்பு கேட்டிடு. எதாவது ஹெல்ப் வேணும்னா என்னை வந்து பாரு” என்று அவனுடைய பாக்கெட்டிலும் ஒரு விசிட்டிங் கார்டை வைத்தான்.


“இரு அண்ணா, நான் அப்பா கிட்ட பேசறேன். வீட்டை விட்டு வெளியே போகாத”


“வேண்டாம் டா. கொஞ்சம் நாளைக்கு தனியா இருந்தா தான் எல்லாம் சரியாகும். எல்லாருக்கும் டைம் வேணும் இல்ல” என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.


வெளியே கார் நின்றிருக்க அதில் ஏறி கிளம்பினார்கள் அர்ஜூனும் ரஞ்சனியும்.


திரும்ப வீட்டிற்கு காலடி எடுத்து வைக்க வந்த அவினாஷின் பக்கத்தில் பேக் மற்றும் சூட்கேஸ் வந்து விழுந்தது. 


“நீயும் போயிடு, பெத்த கடமைக்கு உன்னோட படிப்புக்கு காசு அனுப்பறேன். இதோட என் முகத்தில முழிக்காத” என்று சொல்லி விட்டு கதவை சாத்திவிட்டார் சிவராமன்.


“ஏங்க ஏங்க” என்று தன் அம்மாவின் கெஞ்சுதல் குரல் கேட்டது.


கண்களில் நீர் வழிய தன் பைகளை எடுத்து கொண்டு கொயம்பத்தூர் கிளம்பினான்.


பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தான்.


அப்போது அவனுடைய ஃபோன் அடித்தது.


எடுத்து பார்த்தான். டூரூ காலரில் ஹர்ஷி என்று வந்தது.


ஃபோனை எடுத்து


“ஹலோ” என்றான்.


“மாமா, நான் ஹர்ஷிதா பேசறேன்”


“தெரியுது. டூரூ காலர்ல பார்த்தேன். சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”


“நான் உங்களை நேரா பார்க்கனும். ஆறு மணிக்கு என்னோட ஃபிரெண்டு கேத்தரின் வீட்டிற்கு வரமுடியுமா? நான் லோகேஷன் ஷேர் பண்றேன்”


“கண்டிப்பா வரேன்”


“பை மாமா ”


“பை ஹர்ஷிதா”


மணியை பார்த்தான். மதியம் 3.30.

இன்னும் இரண்டரை மணி நேரம் என்ன பண்றது என்று யோசித்தான்.


தன் பால்ய நண்பன் அமருக்கு கால் செய்தான்.


அமர் – டோவினோ தாமஸ்


“என்னடா மச்சான் சென்னைக்கு வந்திருக்கியா?”


“எப்படிடா கரெக்டா கண்டுப்பிடிச்ச?”


“இல்லன்னா நீ எப்போ எனக்கு கால் பண்ணிருக்க?”


“ஏய் இல்லடா மச்சான், காலேஜ்ல எக்ஸாம் எல்லாம் டைட் ஷெடியூல்ல போயிக்கிட்டு இருந்தது. அதான்”


“இல்லன்னா மட்டும் நீ டெய்லி ஃபோன் பண்ணுவ பாரு”


“சரி சரி அதை விடு. நான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில இருக்கேன். கொஞ்சம் வரீயா?”


“தோடா. இவரு கூப்பிட்ட உடனே நாங்க வந்திடனுமா?”


“ஏய், என் பிரச்சனை தெரிஞ்சா இப்படி எல்லாம் நீ பேச மாட்ட?”


“என்ன பெரிய பிரச்சினை? உன்னை உங்க அப்பா வீட்டை விட்டு வெளியே துரத்திட்டாரா?”


“டேய் எப்படி டா? கரெக்டா சொல்ற. எங்க வீட்டுல கேமரா எதாவது ஃபிக்ஸ் பண்ணிருக்கியா என்ன?”


“ஏய், சும்மா விளையாடாத. இப்போ தான் மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு படுத்தேன். சும்மா தொல்லை பண்ணாத. நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன். உனக்கு எத்தனை மணிக்கு பஸ் சொல்லு. சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு மேல வந்து பார்க்கறேன்”


“ஏய் எனக்கு அப்போ ஒரு முக்கியமான வேலை இருக்கு. வந்தா இப்போ வா இல்லன்னா அப்புறம் பாக்கலாம்”


“ஆறு மணிக்கு என்ன முக்கியமான வேலை? உன் லவ்வரை மீட் பண்ணப் போறீயா?”


“டேய் மச்சான். உன் வாக்கு தெய்வ வாக்கு டா. எல்லாத்தையும் அப்படியே சொல்ற?”


“ஏய் போதும் டா கதை விட்டது. நீ யாரையும் லவ் பண்ணல ன்னு எனக்கு தெரியும்”


“இன்னைக்கு காலைல தான் டா லவ் பண்ண ஆரம்பித்தேன்”


“டேய் இப்படியே பேசி வெறுப்பேத்திக்கிட்டு இருந்த. நான் இப்போ ஃபோனை கட் பண்ணிடுவேன்”


“உன் கிட்ட நிறைய பேசணும் டா. இன்னைக்கு காலைல இருந்து நிறைய விஷயம் நடந்திருச்சு. நீ நம்ப மாட்டேன்னு தெரியும். வாட்ஸ் அப்ல இன்னைக்கு நான் அவ கூட எடுத்த ஃபோட்டோவை அனுப்பறேன். அப்பவாவது நம்பு” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்துவிட்டான். 


தன் ஃபோனில் இருந்து அவன் அன்று காலை ஹர்ஷிதாவுடன் எடுத்த செல்ஃபியை அமருக்கு அனுப்பினான்.


அதை பார்த்ததும் அடுத்த நொடி தன் பைக்கை எடுத்துக் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு விரைந்தான் அமர்.


“என்னடா மச்சான், என்னால நம்பவே முடியல”


“ஆமாம் டா. நீ அருள்வாக்கு அமர் ன்னு போர்டு போட்டு உட்கார்ந்திடு கலெக்ஷன் எக்கச்சக்கமா கொட்டும்”


“டேய், விளையாடாத டா.


“யாரு இந்த பொண்ணுனு சொல்லு”


“தெரியல டா, உன் லவ்வரை எனக்கு எப்படி டா தெரியும்?”


“மாரியாத்தா டா”


“மாரியாத்தா வா?”


“நாம +2 படிக்கும் போது என் அத்தை பொண்ணு வயசுக்கு வந்திட்டா ன்னு ஆர்வமா போய் பார்த்துவிட்டு பயந்திட்டேன்னு சொன்னேனே?”


“ஹாங். ஆமாம் ஆமாம். அவளா இது?”


“ஹூம்”


“ஆமாம் உனக்கே அவளை அடையாளம் தெரியல. அப்போ அப்படி இருந்தா இப்போ இப்படி இருக்கா. இதுல ஃபோட்டோவ என் கிட்ட காட்டி யாரு இந்த பொண்ணுன்னு என்னைய கேக்குற?”


“சரி சரி அதை விடு. ஏதோ ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன் போதுமா?”


“எவ்வளவு நாளா லவ் பண்றீங்க”


“காலைல ஒன்பது மணி ல இருந்து”


“என்னடா சொல்ற?”


“நீ லவ் சொன்ன உடனே அவ ஒத்துக்கிட்டாளா?”


“இல்லடா, அவ இன்னும் பதில் சொல்லல”


“அடச்சே ஒன் சைடு லவ்வா. அதுவும் அத்தை பொண்ணு. இதுக்கு பெரிய பில்டு அப் எல்லாம் கொடுத்து தூங்க போன என்னை இங்க வரவெச்சிட்ட” என்றான் அமர்.


“ஏய், இருடா. நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளு” என்று சொல்லி அன்று நடந்த அனைத்தையும் கூறினான்‌ அவினாஷ்.


“ஓ, ஆனா என்னதான் இருந்தாலும் உங்க அண்ணன் பண்ணினது பெரிய தப்பு டா”


“ஹூம், எனக்கும் முதல்ல ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா எனக்கு அவ மேல காதல் வந்ததுனால இப்போ அவன் மேல எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை”


“ஹூம், ஆனா அந்த பொண்ணு உங்க அண்ணனை லவ் பண்ணாளா ன்னு இல்லையான்னு உனக்கு தெரியுமா?”


“ஏய், அதை நான் யோசிக்கவே இல்லை டா”


“என்னடா நீ, நிச்சயம் வரை வந்திருக்குன்னா அவளுக்கு உங்க அண்ணனை பிடிச்சு தான இருக்கும்”


“ஆமாம் டா. அவ மனசை புரிஞ்சுக்காம நான் எல்லார் முன்னாடியும் அவளை லவ் பண்றேன் ன்னு சொல்லிட்டு வந்திட்டேன். அவ மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும். அதனால்தான் என்னை மீட் பண்ணி பேசப் போறாளா? என்னை வேண்டாமன்னு சொல்லிடுவாளா?”


“டேய் மச்சான், நீயே எல்லாத்தையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. அவளைப் போய் பாரு. என்ன சொல்றான்னு தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் நீ டிசைடு பண்ணு”


“மச்சான் என் கூட வரீயா டா?”


“யப்பா சாமி ஆளை விடுடா”


“டேய் டேய், பிளீஸ் டா”


“சரி சரி. பிரெண்ட் வீடு ன்னு சொல்லற இல்ல? அந்த ஃபிகரை எனக்கு செட் பண்ணி கொடுக்கறீயா?”


“ஏய், நீ வரவே வேண்டாம். நானே பாத்துக்கிறேன்”


“சரி சரி கோச்சிக்காத. நானே பேசிக்கிறேன்”


“டேய், என் லவ்ல மண்ணை வாரி கொட்டிடாத” என்று சொன்னான் அவினாஷ்.


“கவலைப்படாதே டா. லோகேஷன் எங்கன்னு பாரு”


“கோடம்பாக்கம் டா”


“ஓ சரி சரி. ஏரியா ரொம்ப பாஷான இடம். அப்போ அவளும் சூப்பரா தான் இருப்பா”


“டேய், எனக்கு உன்னை கூப்பிட்டதே தப்புன்னு தோணுது டா”


“ஏய் வாடா மச்சான்” என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.


********************


ஹர்ஷிதாவின் வீட்டில் அனைவரும் கஷ்டத்திலும் கோபத்திலும் அமர்ந்து இருந்தனர்.


ராஜகோபால் மற்றும் வேணுகோபால் சோஃபாவில் அமர்ந்து இருந்தனர்.


ஹர்ஷிதா அவர்களிடம் சென்று,


“அப்பா, பெரியப்பா”


“சொல்லுமா” என்றனர்.


“மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் இன்னைக்கு நைட்டு கேத்தரின் வீட்டில போய் தங்கிட்டு நாளைக்கு காலைல வரட்டுமா?”


குரூப் ஸ்டடி பண்ணும் போது அவர்கள் இவ்வாறு ஒருவர் வீட்டில் தங்கி படிப்பது உண்டு. ஆகையால் இருவரும் சம்மதித்தனர். தன் அம்மாவிடமும் பெரியம்மாவிடமும் சென்று அதையே சொன்னாள்.


விஜயா ஹர்ஷிதாவை கட்டிபிடித்து கொண்டு அழுதாள். 


“அன்னைக்கு நான் என்னோட அப்பா அம்மாவை கஷ்டப் படுத்திவிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டதோட வலி இப்போ எனக்கு நல்லா புரியுது. எந்த வகையிலும் தப்பு பண்ணாத உனக்கு எதுக்கு இந்த கடவுள் இப்படி ஒரு தண்டனையை கொடுத்தான்”


“அம்மா, பிளீஸ் நீங்க அழுது என்னையும் அழ வச்சிடாதீங்க”


“அர்ஜூனை பத்தி தெரியாம உன்னை நான் கஷ்டப்படுத்திட்டேன். சாரி டி செல்லம்” என்றாள் விஜயா.


“அம்மா, விடுங்க மா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.


லக்ஷ்மி விஜயாவை சமாதானம் செய்தாள்.

கேத்தரின் ஹர்ஷிதாவை சமாதானம் செய்தாள்.


“ஆன்டி, நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பா”


“சரிம்மா” என்றனர் இருவரும்.


ஒரு நிமிஷம் ஹர்ஷி,


“என்னம்மா?”


“இப்போ நான் சொல்றது தப்புதான். இருந்தாலும் அவினாஷ் சொன்னதை ஒருமுறை யோசிச்சு பாரு” என்றாள் விஜயா.


“அம்மா, நான் அவினாஷ் மாமாவை கேத்தரின் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன்”


“என்னடி சொல்ற? உங்க அப்பா பெரியப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா” என்றார் லட்சுமி.


“பெரியம்மா, நான் பேசிட்டு வரேன். அப்புறம் நான் அப்பா கிட்டேயும் பெரியப்பா கிட்டேயும் சொல்றேன்” என்று சொல்லி விட்டு கேத்தரினுடன் கிளம்பினாள் ஹர்ஷிதா.


அவள் செல்வதையே பார்த்து கொண்டு நின்றிருந்தனர் விஜயா மற்றும் லக்ஷ்மி.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.