பாகம் 7

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை
பாகம் 7

“ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல. மருந்து வாங்கி கொடுத்துட்டீங்க இல்ல? அட்மிஷன் பேமெண்ட் கூட முடிஞ்சிடுச்சு. இதுக்கு அப்புறம் பெருசா எதையும் கேட்க மாட்டாங்க நினைக்கிறேன். அப்படியே ஏதாவது மருந்து வாங்க சொன்னா. நான் வாங்கி கொடுக்கிறேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. உங்க சிஸ்டரை நாங்க பாத்துக்குறோம் “

” தேங்க்ஸ் சிஸ்டர் ” என்று சொல்லிவிட்டு சங்கர் அங்கிளின் காரில் நந்தினியை ஏற்றிக் கொண்டு பார்ட்டி ஹால் வெளியே இறக்கிவிட்டு.

” உள்ளே அர்ஜூன் அண்ணனை பார்த்துட்டு, எனக்கு கால் பண்ணு. அதற்குப் பிறகுதான் நான் கிளம்புவேன் “

” ஓகே டா டேக் கேர் “

“நந்து, ப்ளீஸ்” என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தையிலேயே அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொண்டவள்.

“டோண்ட் ஒரி டா” என்றாள்.

” நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல உங்க அண்ணன் கிட்டயும் அப்பா அம்மா கிட்டயும் அதையே சொல்லு “

” ஓகே பை “

“பை” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள்.

தன் அண்ணனை பார்த்தாள்.

” என்ன நந்து இங்க எப்படி வந்த? ஈவினிங் கூட நாங்க மூணு பேரும் ஒண்ணா தான் இருக்கோம்னு மெஸேஜ் பண்ண? “

ஃபோனை ஆன் செய்து ஷியாம் கேட்கும்படி பேசினாள் நந்தினி .

“அண்ணா, என்னாலேயும் ஷியாமாலேயும் ஷிவானியை கன்சோல் பண்ணவே முடியல. அவ ஒரே அழுகை பாட்டியை போய் பார்த்தே ஆகணும்னு. அதனால அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறாங்க. அவங்க போகும்போது என்னை இங்கே இறக்கி விட்டுட்டு போறாங்க. நான் தான் வீட்ல தனியா இருக்க பயப்படுவேனே அதனால “

” ஓ அப்படியா, சரி சரி. நீ பயந்தாங்கோலின்னு ஊருக்கே தெரியும். அவங்க ரெண்டு பேரும் உன் கிளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆச்சே அவங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? ” என்று சொல்லி சிரித்தான் அர்ஜுன்.

“அண்ணா” என்று பொய் கோபம் வந்தது போல பேசினாள் நந்தினி.

“ஓகே ஓகே அதை விடு, டெக்கரேஷன் எப்படி இருக்குன்னு பாரு? “

” நல்லா இருக்கு அண்ணா. அண்ணிக்கு புடிச்சிருந்தா சரி ” என்று சொல்லிவிட்டு அங்கே சுற்றி பார்ப்பது போல நடந்து ஃபோனை காதில் வைத்து

“ஓகே வா ஷியாம்?”

“தேங்க்ஸ் நந்து. பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று சங்கர் அங்கிள் வீட்டில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்று.

” ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். ” என்று சொல்லி சாவியை கொடுத்தான்.

” ஷிவானி எப்படி இருக்காப்பா? ”

” இப்ப பரவாயில்ல அங்கிள், “

” மயக்கமாவே இருக்காளா இன்னும்? “

” ஆமாம் ஆன்ட்டி தலைல அடிபட்டதனால பெயிண் தெரியாம இருக்கணும்னு டாக்டரே மயக்க மருந்து கொடுத்து இருக்காங்க, மத்தபடி ஸ்டேபிளா தான் இருக்கான்னு டாக்டர் சொன்னாங்க ”

” ஓ சரிப்பா சரி “

” ஒரே ஒரு ரெக்குவெஸ்ட் அங்கிள், ஆன்ட்டி”

“என்னப்பா?”

” அப்பா அம்மா ஊருக்கு போயிருக்காங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு”

” ஆமாம் கௌசல்யா சொன்னா “

” அவங்களுக்கு ஷிவானிக்கு அடிபட்டது தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாங்க. ரெண்டு நாள்ல வந்துருவாங்க அதுக்கப்புறம் நான் நேரா பார்த்து சொல்லிக்கிறேன்”

” சரிப்பா நாங்க எதுவும் சொல்லல,”

” அது மட்டும் இல்ல ஆன்ட்டி, ரங்கநாதன் அங்கிளுக்கும் கௌசல்யா ஆண்டி கிட்டையும் கூட நான் சொல்லல. நந்தினி கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். நாளைக்கு அர்ஜுன் அண்ணாவுக்கு  நிச்சயதார்த்த பங்க்ஷன் வச்சிருக்காங்க. இந்த டைம்ல அவங்களுக்கும் தெரிஞ்சதுன்னா சங்கடப்படுவாங்க. அதனால நாங்களும் ஊருக்கு போயிட்டோம்னு நந்தினி கிட்ட சொல்ல சொல்லிவிட்டேன் “

” இந்த நிலைமையிலும் நீ மத்தவங்களுக்காக யோசிக்கிறியேப்பா. ரொம்ப நல்லது. சரி பா நாளைக்கு நாங்க ஃபங்ஷன்ல அவங்களை பார்த்தாலும் எதுவும் சொல்லலமாட்டோம் ஓகேவா? “

” ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி அங்கிள்” என்று சொல்லிவிட்டு  தன் வீட்டிற்கு சென்று ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என்று பார்த்தான்.

அவனுடைய கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. பீரோ பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே வீட்டில் திருடு போனதால் வீட்டில் எந்த நகை பணமும் வைக்க இல்லை. அனைத்தையும் பேங்க் லாக்கரிலேயே வைத்திருந்தனர்.

திருட வந்தவன் பணம் நகை எதுவுமில்லை என்று கடுப்பாகி அப்போது உள்ளே இருந்த தன் தங்கையை கற்பழித்து இருப்பானோ? என்று நினைத்துக் கொண்டான். அந்த பீரோவை மட்டும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். ஷிவானி விழித்து என்ன நடந்தது என்று சொன்னால் மட்டுமே தெரியும் என்று நினைத்தபடி வீட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தான்.

அப்போது கிட்சனில்  சிங்க் பக்கத்தில் தரையில் ரத்தம் இருந்தது . ஏற்கனவே பெட்டில் கொஞ்சம் ரத்தக் கரை இருந்தது. இப்போது கிட்சனிலும் அதைப் பார்த்ததும் ஷியாமிற்கு கண்களில் இருந்து கண்ணீருக்கு பதிலாக ரத்தம் வழிவது போல இருந்தது.

முதலில் அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து லாக்கிடு ஃபோல்டரில் வைத்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்தான். ஷிவானியின் பெட் மேல் இருந்த பெட் ஷீட்டில் ரத்தக்கரை போக நன்றாக துவைத்து வீட்டின் பக்கவாட்டில் காயப் போட்டான்.

வீட்டின் பின் கதவின் தாழ்ப்பாள் உடைக்க பட்டிருந்தது. பாட்டி இறந்த டென்ஷனில் ஊருக்கு கிளம்பியதால் டோர் லாக் செய்ய மறந்துவிட்டார்கள் போல நம் பெற்றோர்கள். கதவுடைய தாழ்ப்பாள் மட்டும் போடவே சுலபமாக அதை தட்டி உடைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டான் ஷியாம்.

மேலும் அவனிடம் இருந்த சாவியை வைத்து அந்த கதவை சரியாக அழுத்தி சாத்தி டோர் லாக் செய்தான். தாழ்ப்பாள் உடைந்து இருந்ததால் அதை மட்டும் போட முடியவில்லை.

‘அந்த பொறுக்கி ராஸ்கல் மட்டும் என் கண் முன்னாடி வந்தான்னா அவனை கண்ட துண்டமா வெட்டி போட்டிடுவேன்’ என்று நினைத்து கொண்டான்.

அப்போது ஹாஸ்பிடலில் இருக்கும் நர்ஸ் ஷியாமிற்கு கால் செய்தாள்.

“ஹலோ சார்” நான் ஏவி ஹாஸ்பிடலில் இருந்து நர்ஸ் சரஸ்வதி பேசுறேன்.

“சொல்லுங்க சிஸ்டர்” என்றான் ஷியாம்.

அரைமணி நேரத்தில் திரும்ப வருவதாக நர்ஸிடம் சொல்லிவிட்டு வந்தது அப்போது தான் ஞாபகம் வந்தது. ஏற்கனவே நாற்பது நிமிடம் ஆகிவிட்டிருந்தது.

“இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே
இருப்பேன்”

“ஒன்னும் பிரச்சனை இல்ல சார், உங்க சிஸ்டர் கண் விழிச்சாங்க. அதை சொல்லத்தான் கால் செஞ்சேன்”

“கண் விழிச்சாங்கன்னா? இப்போ மறுபடியும் மயக்கம் ஆயிட்டாளா?”

“ஆமாம் சார், அவங்க ரொம்ப டென்ஷனாகி அக்ரெஸிவ்வா கத்தினாங்க, பிபி ரொம்ப அதிகமாயிடிச்சு. ஸோ டாக்டர் இன்ஜெக்ஷன் போட சொன்னாங்க, அதனால மறுபடியும் தூங்குறாங்க”

” ஓ, நான் இமீடியட்டா வரேன் சிஸ்டர் “

“ஒன்னும் அவசரமில்ல சார், பொறுமையா வாங்க. அட்டெண்டர் கிட்ட பேஷண்டோட ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணத் தான் கால் பண்ணேன்”

” ஓகே சிஸ்டர், தேங்க்யூ சோ மச்”

” அப்புறம் இன்னொரு விஷயம் சார்”

” என்ன சொல்லுங்க சிஸ்டர்”

” உமென் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்தாங்க. உங்கள கேட்டாங்க நீங்க வீட்டுக்கு போய் இருக்கீங்கன்னு சொன்னோம். உங்களை நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வர
சொன்னாங்க. ”

” ஓகே சிஸ்டர் எந்த போலீஸ்
ஸ்டேஷன்? “

” டி ஒன் உமன் போலீஸ் ஸ்டேஷன் “

” ஓகே சிஸ்டர் நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்துட்டு அதுக்கப்புறம் ஹாஸ்பிடலுக்கு வந்துடறேன் “

” ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க மெதுவாவே வாங்க “

” ஓகே சிஸ்டர், தேங்க்ஸ் ” என்று சொல்லி ஃபோனை வைத்தவன் அதற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல் தன் பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.

உள்ளே சென்றான் ஷியாம்.

உமென் போலீஸ் ஸ்டேஷன் என்பதால் அங்கு இருந்த அனைவருமே பெண் காவல் அதிகாரிகள் தான்.

சற்றே தயக்கத்துடன் உள்ளே சென்றான் ஷியாம்.

“யாரு நீங்க?” என்று ஒரு பெண் காவல் அதிகாரியின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் ஷியாம்.

அவன் பின்னால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ நின்று கொண்டிருந்தார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி போலீஸ் யூனிபார்மில் பார்த்தால் கொலை செய்யக்கூடிய ரவுடியே பயப்படுவான் அந்த அளவிற்கு உயரம் மற்றும் உயரத்திற்கேற்ற உடலமைப்பு கொண்டிருந்தார். ஆண்களுக்கு இருக்கக்கூடிய பைசெப்ஸ், சிக்ஸ் பேக்
என்று எல்லாமே அவருக்கும் இருந்தது.
அவரது பேட்சில் மதிவதனி என்று எழுதி இருந்தது.

” மேடம் என் பேரு ஷியாம். ஏவி ஹாஸ்பிடல்ல என்னோட தங்கச்சி”
என்றான்.

தொடரும்…
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.