பாகம் 6,7

Vaishnavi Vijayaraghavan | 03 Jul 2026 | Share

பாகம் -6

ஸ்மைல் செய்து கொண்டே

அவளை கட்டி பிடித்து,

“ஓகே வினோ, லெட்ஸ் பீ ஃபிரெண்ட்ஸ்” என்றேன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் உறைந்து போய் நின்றாள்.

பிரொஃபசர் உள்ளே வரவே நான் என் இருக்கையில் போய் அமர்ந்தேன். அவள் நின்று கொண்டே இருந்தாள்.

அவளுடைய தோழிகள் அவளை இழுத்து அமர வைத்தனர்.

“அண்ணா, செம கெத்து அண்ணா நீங்க. அப்புறம் என்னாச்சு?” என்றான் வேலன்.

வண்டியை டீ குடிக்க நிறுத்தினான் கோபால்.

“வா டீ குடிச்சிட்டு வந்து சொல்றேன்”

“அவங்க முழிச்சிடுவாங்களா?” என்றான் வேலன்.

“இல்ல இல்ல, இன்னும் குறைஞ்சது அஞ்சு மணி நேரத்திற்கு மயக்கத்திலேயே தான் இருப்பா” என்றான் மனோகர்.

“என்ன மச்சி பிரச்சனை எதுவும் இல்லைல?”

“இல்லடா, கொஞ்சம் பயந்தா. அதான் நீ சொன்ன ஐடியா பண்ணிட்டேன். சரி வா, டீ குடிக்கலாம்” என்று சொல்லி டீ குடித்து விட்டு பரோட்டா பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். வினோதாவிற்கும் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினான் மனோகர்.

கண் விழித்த நித்திலா. தான் எங்கிருக்கிறோம் என்று திரும்பி திரும்பி பார்த்தாள். பின்னர் தன் தோழி மேகா அருகில் இருப்பதைப் பார்த்து விட்டு,

“அப்பா, அம்மா” என்று கூப்பிட்டாள்.

அருகில் படுத்து ஃபோனை பார்த்துக் கொண்டு இருந்த சங்கீதா தூங்கிவிட்டாள்.

குழந்தை நித்திலாவின் குரல் கேட்டு எழுந்த அவள்.

“நித்தி, சாப்பிடறீயா மா? இட்லி இருக்கு தரவா? நான் உன்னை ரொம்ப நேரமா எழுப்ப டிரை பண்ணினேன். நீ எழுந்துக்கல”

“ஆன்டி, அம்மா வேணும்” என்று சொல்லி அழுதாள் நித்திலா.

அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு,

“அம்மா ஒரு இம்ப்பார்டன்ட் வேலையா போயிருக்காங்க. உங்க அப்பாவும் ஹரி அங்கிளும் உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு வர போயிருக்காங்க. அதுவரைக்கும் நீ ஆன்டி வீட்ல மேகாவோட விளையாடிக் கொண்டு இருக்கலாம்”

“ஆன்டி” 

“என்ன மா?”

“எனக்கு, எங்க வீட்டுக்கு போகனும்”

“அம்மா வந்ததும் போகலாம் நித்தி. நீ குட் கேர்ல் இல்ல? இரு நான் இட்லி கொண்டு வரேன்”

“வேண்டாம் ஆன்டி பசிக்கல. நான் அப்பா கூட சேன்ட்விச், கேக், ஃபிரைஸ் எல்லாம் சாப்பிட்டேன்”

“மணி 9 ஆகுது மா. அது நீ ஈவினிங் சாப்பிட்டு இருப்ப. இவ்வளவு நேரமா சாப்பிடாம இருந்தா என்ன ஆகுறது”

“பிளீஸ் ஆன்டி, எனக்கு வேண்டாம்”

“சரி, பால் மட்டுமாவது குடிம்மா. ஆன்டிக்காக, அப்புறம் நாளைக்கு உங்க அம்மா வந்து என்னிடம்,

என்ன சங்கீ? என் பொண்ணுக்கு டின்னர் கொடுக்கலீயா? ன்னு திட்டுவாங்க”

“எங்க அம்மா யாரையும் திட்டவே மாட்டாங்க. நீங்க அவங்க கிட்ட சொல்லுங்க. நான் கொடுத்தேன் உன் பொண்ணு நித்தி தான் சாப்பிடல ன்னு”

“நித்தி குட்டி, எப்படி இப்படி எல்லாம் பேச கத்துக்கிட்ட?” என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.

“சரி சரி வா” என்று சொல்லி அவளை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கிட்சனுக்கு சென்று பாலை கலந்துக் கொடுத்தாள்.

நித்திலா குடித்தாள். 

“பிஸ்கட் இருக்கு சாப்பிடறீயா மா?”

“என்ன பிஸ்கட் ஆன்டி?”

“இதுல இருக்கு பாரு. உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோ?” என்று சொல்லி ஒரு பாக்ஸை நீட்டினாள் சங்கீதா.

“தேங்க்ஸ் ஆன்டி” என்று சொல்லி அதில் இருந்து ஒரு பேக்கெட்டை எடுத்து சாப்பிட்டாள் நித்திலா.

“பசிக்கலன்னு பொய் தான சொன்ன?”

“இல்ல ஆன்டி, எனக்கு இட்லி பிடிக்காது”

“அதை சொல்லி இருக்கலாம் இல்ல?”

“இல்ல என் அம்மா மாதிரியே நீங்களும் இட்லி இல்லன்னா தோசை தரேன்னு சொல்லுவீங்க. அதான். எனக்கு தோசையும் வேண்டாம்”

“சரி, அப்போ உனக்கு என்னதான் வேணும்?”

“எனக்கு நூடுல்ஸ், பாஸ்தா இதெல்லாம் தான் பிடிக்கும்”

“அதெல்லாம் ஹெல்தி இல்லம்மா”

“தெரியும் ஆன்டி, அம்மாவும் இதே தான் சொல்லுவாங்க. அதான் நான் பசிக்கில ன்னு மட்டும் சொன்னேன்”

“விவரம் தான்” என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.

சிரித்தாள் நித்திலா.

‘என்ன இவ இவ்வளவு மெட்சூர்டா பேசுறா?’

என்று நினைத்து கொண்டாள் சங்கீதா.

பீச்சில்

“டேய் மச்சி, நீ சொல்றது போல வினோதா இங்கு வந்திருந்தாலும், இருட்டின பிறகுமா இங்கே இருப்பா?”

“அவ தைரியமானவ‌ டா. கோவம் வந்தா எந்த நேரமாக இருந்தாலும் வந்திருப்பா. ஆனா நான் இப்போது இங்கே பார்க்க வந்தது அவளை இல்ல”

“பின்ன?”

“அவளுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டிருந்திருக்கா ன்னு செக் பண்ண”

“புரியல டா?”

“மச்சி, அவ பீச்ல எப்பவுமே யாருமே இல்லாத இடத்தில் தான் உட்காருவா. அதைப் பார்த்த யாராவது அவளை” என்று சொல்ல முடியாமல் திக்கி திணறினான் அருண்.

“டேய், தேவை இல்லாததை எல்லாம் கற்பனை செய்யாத. வினோதாவிற்கு ஒண்ணும் ஆகி இருக்காது. நீ தான் அவ தைரியமானவ ன்னு சொல்ற இல்ல? அதனால அவளுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டாலும் எப்படியாவது தைரியமா அதை எதிர்த்து சமாளித்து வந்திடுவா. நீ கவலைப்படாதே டா. வேற எங்கேயாவது அவ வழக்கமா போற இடங்கள் இருக்கா?”

“காய்கறி மார்க்கெட், ஸ்கூல்,

பீச், பிரொவிஷன் ஸ்டோர்ஸ், மாவு கடை, பார்லர், பால் பூத், ஸ்டேஷனரி ஷாப், ஃபுரூட்ஸ் ஷாப்” 

“டிரெஸ், நகை கடை விட்டுட்ட”

“இல்ல டா அது ரெண்டுத்துக்கும் அவ தனியா போக மாட்டா. நானும் கூட வரனும்ன்னு அடம்பிடிப்பா”

“அப்போ, நீ வீட்டு வேலை எதுவும் பண்ண மாட்ட? அவ தான் எல்லாம் செய்யனும்? ஆனா சட்னீல உப்பு அதிகம். சாம்பார்ல புளி அதிகம் ன்னு குறை மட்டும் சொல்லுவ, அப்படித்தானே?”

“டேய், நானே கில்டி ஃபீலிங்ல இருக்கேன். நீ வேற குத்தி காட்டி பேசாத டா”

“சரி சரி, இப்போ என்ன பண்ணலாம்?”

“போலீஸ் ஸ்டேஷனிற்கு போய் கம்ப்ளெயின்ட் கொடுத்திடலாம் டா. எனக்கு நேரம் ஆக ஆக பயமா இருக்கு”

“போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திடலாம்னு சொல்லிடறீயா டா?”

“ஆமாம் டா, அவளுடைய எல்லா செருப்புமே வீட்டுல தான் இருக்கு. எந்த செருப்பும் போடாம எப்படி அவ வெளியே போய் இருப்பா?” என்றான் அருண்.

ஒரு நிமிஷம் யோசித்த ஹரி.

“ கரெக்ட் டா மச்சி வா, நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்பளைண்ட் கொடுத்திடலாம்” என்றான் ஹரி.

அடுத்த கால் மணி நேரத்தில் அருண் வீடு இருக்கும் எல்லைக்குள் வரும் காவல்நிலையத்திற்கு சென்றனர் அருண் மற்றும் ஹரி.

அங்கே டியூட்டியில் இருவர் இருந்தனர். ஒருவர் வயதானவர் 55 வயது இருக்கலாம் அவர் பேட்ஜில் பி.சி. சீனிவாசன் என்று எழுதி இருந்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் பெயர் ஏ.எஸ்.ஐ.சங்கர் ராம் என்றிருந்தது.

“வணக்கம் சார்” என்றான் ஹரி.

“வாங்க, உட்காருங்க” என்று இருவரையும் பார்த்து சொன்னார் சங்கர் ராம்.

“சார், என் பேரு ஹரிஹரன். இவன் என் ஃபிரெண்டு அருண் சுந்தரம். இவனோட ஒயிஃபை காணோம்”

“எத்தனை நாளா காணோம்?”

இன்னைக்கு மதியத்திலிருந்து,

“இன்னைக்கு தானா?”

“ஆமாம் சார், எங்கேயும் தேடாம அதுக்குள்ளயே கம்ப்ளெயின்ட் கொடுக்க வந்திட்டீங்களா?”

“சார், அவ போற இடத்திற்கு எல்லாம் போய் பார்த்து விட்டு, அங்கே எங்கேயும் அவ இல்லாததால் தான் இங்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க வந்திருக்கோம்” என்றான் அருண் சற்றே எரிச்சலுடன்.

“வீட்டில நல்லா தேடிப் பார்த்தீங்களா?” என்றார் சங்கர் ராம்.

“என்ன சார்? இப்படி கேட்கறீங்க?” என்றான் ஹரி.

அருணிற்கு அந்த ஏ.எஸ்.ஐ. பேசுவது மிகவும் கடுப்பாக இருந்தது. வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்து இருந்தான்.

பாகம் -7

“இல்ல சார், இந்த மாதிரி தான் போன வாரம் ஒரு கேஸ் வந்துச்சு. நாங்களும் எல்லா இடங்களிலும் தேடினோம். அப்புறம் பார்த்தா அந்த லேடி லோ ஷூகர் ஆகி வீட்டு பாத்ரூம்ல விழுந்து இருந்தாங்க. அதை கவனிக்காம அவங்க புருஷன் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டாரு. 

இருக்கிற கேஸ் எல்லாம் விட்டுட்டு அவங்க கூட ஒரு நாளெல்லாம் சுத்திக்கிட்டு இருந்தோம். அப்புறமா ஃபோன் வருது கிடைச்சிட்டாங்கன்னு. அங்கே போய் பார்த்து விட்டு நாங்க எல்லாம் கடுப்பாகிட்டோம். 

இங்க பார்க்கலீயா ன்னு கேட்டதற்கு, நாங்க யாரும் இந்த பாத்ரூமை யூஸ் பண்ண மாட்டோம். அதனால, அவ அங்கே போயிருக்க மாட்டான்னு நினைச்சேன்னு அல்ப்பமா ஒரு காரணத்தை சொல்றார் அவங்க புருஷன். வந்த கோவத்தில அப்படியே அந்த ஆளை தூக்கி உள்ள போடனும்ன்னு தோணுச்சு. 

இது எல்லாம் எங்களுக்கு தேவையா சொல்லுங்க. அதான் முதல்லையே வீட்டை செக் பண்ணிட்டீங்களான்னு எல்லார் கிட்டேயும் கேட்டுக்கிறோம்” என்றார் சங்கர் ராம்.

“இல்ல சார். வீட்ல இல்ல சார். நாங்க ஃபுல்லா தேடிப் பார்த்திட்டோம்” என்றான் ஹரி.

“ஓகே, கம்ப்ளெயின்ட் எழுதி கொடுத்திட்டு போங்க”

அருண் கம்ப்ளெயின்ட் எழுதும் மனநிலையில் இல்லாததால் ஹரி எழுதினான். அருண் கையெழுத்து போட்டான். பின்னர் தன் பர்ஸில் இருந்த தன் மனைவி வினோதாவின் ஃபோட்டோவை ஹார்டு காப்பிக்காக கொடுத்தான்.

பின்னர் இருவரும் கிளம்பினார்கள். அருண் மற்றும் ஹரி இருவரது ஃபோன் நம்பரையும் வாங்கி கொண்டு அனுப்பினார்கள்.

“ஹரி, என் வீட்டுல என்னை டிராப் பண்ணிட்டு போயிடிறியா டா? காலையில வந்து நித்திலாவை கூப்பிட்டுகிறேன் ” என்றான் அருண்.

“சரிடா, நான் சங்கீ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்”

“சரி மச்சி” என்று சொல்லி காரில் ஏறி அமர்ந்தான் அருண்.

ஹரி தன் மனைவி சங்கீதாவிற்கு கால் செய்தான். 

“சொல்லு ஹரி”

“சங்கீ, அருண் அவனோட வீட்ல அவனை விட்டுட்டு போகச் சொல்றான். நான் அவனை டிராப் பண்ணிட்டு வரேன். நீ தூங்கு, என் கிட்ட கீஸ் இருக்கு. நானே டோர் ஓப்பன் பண்ணி வந்துக்கிறேன்”

“டேய் லூசாடா நீ? “

“என்னடி? “

“பின்ன என்ன? அவனே டென்ஷனா இருக்கான். நீ அவனை தனியா விட்டுட்டு வரேன்னு சொல்ற? ஒண்ணு நீயும் அவன் கூட அங்கேயே ஸ்டே பண்ணு. இல்லன்னா அவனையும் நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திடு. நீயும் அவனும் கெஸ்ட் ரூம்ல தூங்குங்க” என்றாள் சங்கீதா.

“உண்மையிலேயே, நீ கிரேட் டி”

“என்னை புகழுறது எல்லாம் அப்புறம் வச்சிக்கோ. அவன் கிட்ட பேசு”

“அருண், சங்கீ என்னை திட்டுறா டா. ஒண்ணு நீ என் வீட்டுக்கு வா இல்ல என்னை உன் கூட உங்க வீட்ல ஸ்டே பண்ண ஓகே சொல்லு”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் டா. சங்கீயும் பசங்களும் தனியா இருக்காங்க. நீ கிளம்பு”

“டேய், உனக்கு சங்கீ பத்தி தெரியும் இல்ல? அவ சும்மா இருப்பாளா நான் மட்டும் போனா?”

அருணுக்கும் அவளை பற்றி தெரிந்திருந்தால், “சரி சரி உனக்கு எது ஓகேவோ அதையே செய்யலாம்” என்றான் அருண்.

அருணையும் அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு சென்றான் ஹரி.

“அப்புறம் என்னாச்சு அண்ணே? சொல்லுங்க” என்று ஆவலுடன் மனோகரின் காதல் கதையை கேட்டான் வேலன்.

அன்று மாலை,

“டேய், நில்லுடா” என்றாள் வினோதா.

“என்ன வினோ?” என்றேன்.

“எதுக்கு டா, என்னை கட்டிப் பிடிச்ச?”

“நீ தான பெஸ்ட் ஃபிரெண்டு ன்னு சொன்ன? அதனால தான்”

“அதுக்கு கட்டிப்பிடிப்பியா?”

“ஆமாம், நான் பெஸ்ட் ஃபிரெண்டுன்னா கட்டி தான் பிடிப்பேன்”

“அப்படின்னா இப்போதிலிருந்து நீ என் பெஸ்ட் ஃபிரெண்டு இல்ல”

“அப்போ யாரு?”

“நீ யாரோ நான் யாரோ, இதுக்கு மேல என் கிட்ட பேசாத. நீ என் கிளாஸ்ல ஒரு ஆள் அவ்வளவுதான்”

“அப்பாடா?”

“என்ன? ஏன் அப்படி சொல்ற?”

“எனக்கு முதல்ல ஃபிரெண்டு, அப்புறம் பெஸ்ட் ஃபிரெண்டு, அப்புறம் அதுக்கும் மேல, அப்புறம் லவ் வந்திடிச்சு ன்னு சொல்ல பிடிக்காது”

“என்ன சொல்ற, எனக்கு புரியல?”

“நீயும் நானும் ஃபிரெண்ட்ஸ் இல்ல தான?”

“ஆமாம்”

“அது போதும். இன்னைக்கே எல்லாம் சொன்னா தாங்க மாட்ட. நெக்ஸ்ட் மன்த் சொல்றேன்”

“என்ன சொல்ற?”

“நெக்ஸ்ட் மன்த் வரைக்கும் வெயிட் பண்ணு. அதுக்குள்ள என்ன அவசரம்?”

“ஏய் மனோகர், இந்த மாதிரி எல்லாம் பண்ணாத பிளீஸ். எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசிடு”

“நீ தான் சொன்ன இல்ல? உன் கூட‌ பேச வேண்டாம்ன்னு. ஒன் மன்த் கண்டிப்பா பேசமாட்டேன். பை” என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டான் மனோகர்.

வினோதாவின் தோழிகள் ஷீலா, ரம்யா, தீபா மற்றும் உமா அனைவரும் அவளை வந்து சூழ்ந்து கொண்டு,

“என்னடி சொன்னான்?” என்றனர்.

அமைதியாக இருந்தாள் வினோதா. யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

“என்னடி இவ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கா? மதியம் எல்லார் முன்னாடியும் கட்டிப்பிடிச்சவன், இப்போ யாரும் பார்க்காத போது கிஸ் பண்ணிட்டானா? இப்படி உறைஞ்சு போய் நிக்கிறா இவ” என்று கிண்டல் செய்தனர்.

“மிச்” என்று சொல்லி அவர்களை பார்த்து முறைத்தாள் வினோதா.

ஒரு மாதம் எப்போது முடியும் என்றிருந்தது அவளுக்கு. தினமும் வினோதாவை பார்பேனே தவிர அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். அப்போது தான் பீரியாடிக் டெஸ்ட் வந்தது. நான் நல்லா படிப்பேன். என்னோட கிளாஸ்லேயே நான் தான் முதல் மார்க் வாங்கினேன். அதன் பிறகு என்னுடைய மதிப்பு காலேஜ் பிரொஃபசர்களிடமும் என் நண்பர்களிடமும் உயர்ந்துச்சு.

“யாரு? உங்களை முதல்ல கிண்டல் பண்ணாங்களே அவங்களா?” என்றான் வேலன்.

“ஆமாம் டா” என்றான் மனோகர்.

“சூப்பர் அண்ணே, நீங்க என்ன சொன்னீங்க?”

நான் எப்பவும் போல தான் எல்லார் கிட்டேயும் நடந்துக்கிட்டேன்.

“வினோதா அண்ணி என்ன சொன்னாங்க?”

“பார்ரா, அண்ணி ன்னு சொல்ற?”

“ஆமாம் அண்ணே, அதான் நீங்க லவ் பண்றேன்னு சொல்ல போறீங்க இல்ல?”

“அதெப்படி டா உனக்கு தெரியும்?”

“அதான் ஒரு மாசம் கழிச்சு பேசறேன்னு சொன்னீங்க இல்ல? அப்பவே தெரிஞ்சிடிச்சு நீங்க லவ்வை தான் சொல்லப் போறீங்கன்னு” என்றான் வேலன் சிரித்துக் கொண்டே.

“உனக்கு என்னடா வயசாகுது?”

“எனக்கா? 22 ஆகுது, உங்களுக்கு?”

“எனக்கு 26”

“சரிண்ணா”

“டேய், எனக்கு அவளை பிடிச்சிருந்துச்சு. ஆனா லவ் பண்றேன்னு சொல்ற தைரியம் எல்லாம் இல்ல. எங்கே என் கன்னத்தில் ஓங்கி அறைஞ்சிடுவாளோன்னு ஒரு பயம். அதனால அவளா பேசட்டும்ன்னு காத்துக் கொண்டு இருந்தேன்”

“சரிண்ணா, எதுக்கு இப்போ என் வயசை கேட்டீங்க?”

“இல்ல ரொம்ப விவரமா பேசறீயா? பார்க்கிறதுக்கு சின்ன பையன் மாதிரி இருக்கீயா? அதான் உன் கிட்ட மேற்கொண்டு பேசலாமா? பேச வேண்டாமான்னு நினைச்சேன்”

“அண்ணா அண்ணா, எனக்கு வயசு அதிகம் தான். ஒல்லியாக இருக்கிறதால நிறைய பேர் உங்களை மாதிரி தான் என்னை ஸ்கூல் படிக்கிற பையன் நினைச்சிக்கிட்டு எப்படி நீ வேலைக்கு சேர்ந்தன்னு கேட்பாங்க” என்றான் வேலன்.

“ஓ, ஓகே ஓகே” என்றான் மனோகர்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.