பாகம் 6

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

தொடர்பியல்….. பாகம் -6


கேஸ் -1( சங்கவி- கிஷோர்)



உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் டி…. ஆனா உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில நீ நுழைஞ்சு உனக்கு எதாவது பிரச்சனை வந்திட போகுதுன்னு தான் டி நான் பயப்படறேன்.


நீ இருக்கும் போது…. எனக்கு பயம் இல்லைடா….


அம்மாடி…. நான் என்ன 24 மணி நேரமும் உன் கூடவே எஸ்கார்ட் மாதிரி சுத்தமுடியுமா என்ன?


மாதவா…. பிளீஸ்…. 


சரி ஓகே…. இதுதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்…. ஓகே வா….


ஓகே டா…. தேங்க்ஸ்…. தேங்க்ஸ்…. இந்தா ஃபோன்…. ஆர் டி ஓ ஆஃபீஸூக்கு கால் பண்ணி அந்த அட்ரெஸ் வாங்கி கொடு…. அவங்க வீட்டுக்கு போய் நான் பேசிட்டு வரேன்…. என்றாள் ராகினி.


ராகினி…. நீ ஏன் இவ்வளவு எக்ஸ்சைடெட்டா(excited) இருக்க?


இல்லடா…. அப்படி எல்லாம் இல்லை…. அது உண்மையா இருந்தா…. ஒரு உயிரை காப்பாற்றலாமே ன்னு….


ஓகே…. உன்னோட அவசரத்துக்கு நான் வேணும்னா வேலை செய்வேன்…. எல்லாரும் செய்ய மாட்டாங்க…. இப்போ கால் பண்ணா எந்த டீடெயில்ஸூம் கிடைக்காது…. நாளைக்கு மார்னிங் கேட்டு வாங்கி தரேன்…. ஓகே வா…..


அப்படியா?


அம்மாடி டிடெக்டிவ் ராகினி…. இப்போ அட்ரெஸ் கிடைச்சாலும் நாளைக்கு ஈவினிங் தான போய் பார்க்க முடியும்?


ஆமாம் ‌…. என்று வருத்தமாக கூறினாள் ராகினி.


எனக்கு ரொம்ப ரொம்ப பசிக்குது டி…. சீக்கிரமா வா டின்னருக்கு போகலாம்….. என்றான் மாதவன்.


இல்லடா…. நான் உனக்கு வீட்டிலேயே சமைத்து தரேன்….


ஏன்டி நாளைக்கு நான் வேலைக்கு போக வேண்டாமா?


ஏய்…. என்ன நீ…. என்னை அன்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டே இருக்க…. பைக் ஓட்ட தெரியுமா ன்னு கேக்குற…. சமையல் தெரியுமா ன்னு கேக்குற…. உனக்கு என்ன வேணும்னு சொல்லு…. சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், இத்தாலியன் ஃபுட் எல்லாமே எனக்கு சமைக்க தெரியும்….. என்றாள் ராகினி.


ரவா உப்புமா தெரியுமா?


என்னடா…. உப்புமா ன்னு சொன்னா எல்லாரும் அலறுவாங்க…. நீ அதை கேக்குற….


ஆமாம் டி…. எங்க அம்மா ரவை உப்புமா செய்வாங்க…. அதில பட்டானி, கேரட்…. எல்லாம் போட்டு நெய் விட்டு செய்வாங்க…. அவ்வளவு சூப்பரா இருக்கும்…. என்று சொல்லி கண்கள் கலங்கினான் மாதவன்.


அவனுடைய தோளைத் தடவி தேற்றினாள் ராகினி.


ரவை உப்புமா தானே…. அத்தை அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நல்லா செஞ்சு தரேன்…. என்று சொல்லி கிட்சனுக்கு சென்றாள் ராகினி.


நான் ஹெல்ப் பண்ணவா டி…..


அஃப்கோர்ஸ்…. யூ ஹேவ் டூ….( Ofcourse you have to)…. என்று சொல்லி அவனையும் அழைத்து சென்றாள்.


கேரட்டை துருவி தரும் படி அவனிடம் கொடுத்து விட்டு ரவையை வருத்து…. மற்ற பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டாள் ராகினி.


இருபது நிமிடங்களில் சூப்பரான ரவை உப்புமா செய்தாள் ராகினி.


வா…. சாப்பிடலாம் என்றாள்.


சோஃபாவில் அவன் அமர்ந்து இருந்தான்.


ஒரு பிளேட்டில் உப்புமாவை வைத்து எடுத்து வந்தாள் ராகினி.


உனக்கு எடுத்து கொண்டு வரலீயா டி?


இல்ல ஃபர்ஸ்ட் நீ சாப்பிடு….


அடிப்பாவி…. நான் தான் சோதனை எலியா…. நான் நல்லா இருந்தா அப்புறம் நீ சாப்பிடுவியா?….


ஏய்…. கரெக்டா கண்டுபுடிச்சிட்டியே….. என்று சொல்லி சிரித்தாள் ராகினி.


அவனருகில் அமர்ந்து அவனுக்கு கொடுத்தாள்…. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி மற்றும் சர்க்கரை வைத்து இருந்தாள். 


எடுத்து சாப்பிட்டான் மாதவன்.


நன்றாக இருந்தது…..


எப்படி டா இருக்கு….


நல்லா இருக்கு டி…. ஆனா அம்மா செய்யுற மாதிரி இல்ல…..


தெரியும் டா…. அம்மா சமையல் அம்மா சமையல் தான்….. யாராலையும் அவங்க அவங்க அம்மா மாதிரி சமைக்க முடியாது…. சின்ன வயசுல நமக்கு சுவையான உணவை கொடுத்தவங்க அவங்க…. அப்புறம் என்ன தான் நம்ம டிரை பண்ணாலும் அந்த மாதிரி டேஸ்ட் நமக்கு கிடைக்காது….


நீ இஞ்சி போட்டிருக்கன்னு நினைக்கிறேன்…. என்னோட அம்மா இஞ்சி போட மாட்டாங்க…. பச்சை மிளகாயை எடுத்து விட்டு தட்டில் ஆர வச்சு கையால எடுத்து ஊதி ஊதி ஊட்டுவாங்க… என்றான் மாதவன்.


எங்க அம்மா சொல்லி கொடுத்தது மாதிரி நான் செஞ்சேன்…. என்று சொல்லி சிரித்தாள் ராகினி.


எனிவேஸ் தேங்க்ஸ்…. ரொம்ப நாள் கழிச்சு ரவை உப்புமா சாப்பிடறேன்….நான் காலேஜ் படிக்க ஊர்ல இருந்து சென்னைக்கு வரும் போது அம்மா கையால செய்ய சொல்லி சாப்பிட்டு விட்டு வந்தேன்…. அப்புறம் நான் செகண்ட் இயர் படிக்கும் போது என் அம்மா இறந்ததிட்டாங்க…. என்று சொல்லி கண்கள் கலங்கினான் மாதவன்.


அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் ராகினி. அத்தை உன் கூடவே தான் இருப்பாங்க…. நீ கவலைப்படாதே டா…. என்றாள் ராகினி.


சரி டி…. நான் கிளம்பவா?…. நீ தனியா இருந்துப்பியா?…. என்றான் மாதவன்.


ஓகே டா…. நாளைக்கு ஜங்ஷன்ல மீட் பண்ணலாம்…. அந்த கார் நம்பர் டீடெயில்ஸ் கேட்க மறந்திடாதே….


சரி டி…. பை….


பை டா…. என்று சொல்லி விட்டு கதவை பூட்டி கொண்டு உள்ளே வந்து படுத்தாள் ராகினி.


வெகு நேரமாக தூக்கமே வரவில்லை….. சங்கவி நியாபகமாகவே இருந்தது…. பிறகு தூங்கிவிட்டாள் ராகினி.


***********


யாரு இந்த பொண்ணு ராகவி…. எதுக்கு நம்ம கிட்ட வந்து கிஷோர் பத்தி பேசினா…..

இடியட்…. எப்படி கிஷோரை பத்தி என் கிட்டேயே பேசினா….. எனக்கு வந்த கோபத்திற்கு அவளை ஒரு அரை விட்டிருக்கனும்…. கிஷோர் என் மேல உயிரையே வச்சிருக்காரு…. இந்த பொண்ணு என்னடா ன்னா அவரை பத்தி என் கிட்டேயே சொல்றா…. கடவுளே…. அவ என் மனசை போட்டு குழப்பியதால எனக்கு தூக்கமே வரல….. அவ சொன்ன விஷயம் என் மண்டைல ஏறக் கூடாது…. அதனால வீணா என் புருஷனை சந்தேக பட்டு அவரை வருத்தப்பட வைக்க கூடாது….. நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் முருகா…. என்று வேண்டிக் கொண்டு தூங்கச் சென்றாள் சங்கவி.


அப்போது கிஷோரிடம் இருந்து வீடியோ கால் வந்தது…..எடுத்து


 ஹாய் கிஷோர்….. 


ஹாய் சங்கவி…. சாப்பிட்டியா?


ஹாங்…. நீங்க….


இல்லடி செல்லம்…. இப்போ தான் சாப்பிட போறேன்….


ஏங்க…. இவ்வளவு நேரமா சாப்பிடல…. மணி பத்து ஆகுது…..


இப்போ உன் கிட்ட ஃபோன் பேசி வச்சிட்டு சாப்பிடறேன்….. 


எப்போ ரீச் ஆவீங்க?


நாளைக்கு ஈவினிங்….


ஓ…. ஓகே…. டேக் கேர்…. டைமுக்கு சாப்பிடுங்க…. என்றாள் சங்கவி.


ஓகே டி செல்லம்…. பை…. உம்மா…. என்றான் கிஷோர்.


ஏங்க…. பப்ளிக் பிளேஸ்ல இருக்கீங்க….. யாராவது பார்க்க போறாங்க….. என்று சொல்லி வெட்கப் பட்டாள் சங்கவி.


என் பொண்டாட்டிக்கு நான் முத்தம் கொடுத்தா…. யாரு என்னை என்ன சொல்லுவா?


ஓகே ஓகே…. பை…. என்று சொல்லி சிரித்தாள் சங்கவி.


மிஸ் யூ செல்லம்…. பை…. என்று சொல்லி ஃபோனை வைத்த அடுத்த நொடி ரோஸியை இழுத்து தன் மிக அருகில் அமர்த்திக் கொண்டான் கிஷோர்.


என்ன உன்னோட பொண்டாட்டி மேல அவ்வளவு பாசமோ?


ரோஸி…. நீ தான ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்த…. நான் ஹீரோவா அதை கரெக்டா நடிக்கிறேன். 


ஆமாம்…. இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை…. என்றாள் ரோஸி.


எப்பவுமே நீ மட்டும் தான் என்னோட உயிர்…. என்று சொல்லி அவளுடைய விரல்களில் தன் விரல்களை கோர்த்து கொண்டான் கிஷோர்.


இது யாரு எழுதி கொடுத்த டயலாக்கு?


நானே உன்னை இதயத்தில் வச்சு எழுதினேன்…. என்றான் அவளுடைய காதருகில்….


அதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவும் ரம்யாவின் செவிகளில் விழவில்லை…. புக்கை படிப்பது போல திறந்து வைத்து அவர்கள் பேசியதை ஃபோனில் ரெக்கார்டு செய்தாள். பிறகு அதை ராகினிக்கு அனுப்பி விட்டு…. நான் இதுக்கு மேல இதுல தலையிட விரும்பல…. இதுவே உனக்காக தான் செய்யறேன்…. நீ பார்த்த உடனே நான் என் ஃபோன்ல இருந்து டெலீட் பண்ணிடுவேன்…. என்று மெஸேஜ் அனுப்பினாள். ராகினி தூங்கி விடவே மெஸேஜ் பார்க்கவில்லை.


மெதுவாக அவர்களுக்கு தெரியாமல் சில ஃபோட்டோக்களை எடுத்து ராகினிக்கு அனுப்பினாள் ரம்யா.


நான் தான் தனியா கூப்பே புக் பண்ண சொன்னேன் இல்ல….


கிடைக்கல டி செல்லம்….


ஏய் அவளை செல்லம்னு சொல்லிட்டு…. என்னையும் அப்படி சொல்லாத….


சரி டியர்….. சாரி…. இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்….


சரி…. நம்ம சிக்ஸ்த் ஹனிமூன் இது…. என்ன ஸ்பெஷல் வெச்சிருக்க எனக்கு?


நம்ம ஸ்டே பண்ற ஐந்து நாளும் ஸ்பெஷல் தான்….


சீ…. போடா….யாருக்காவது கேட்க போகுது…. 


நம்ம பக்கத்தில உட்கார்ந்து இருக்கும் பையன் ஃபோன்ல கேம் விளையாடிட்டு இருக்கான் அவங்க அம்மா ஆப்போசிட்ல இருந்து கூப்பிடறதே கேட்கல…..எதிரே இருக்கும் ஆன்டி அங்கிள் வயசானவங்க…. ஸோ அவங்களுக்கு நாம பேசறது கேட்க வாய்ப்பில்லை…. அவங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்க பொண்ணு ( ரம்யா) வந்ததில் இருந்து ஃபோன்ல மெஸேஜ் பண்ணிக்கிட்டு ஹெட்ஃபோன்ல பேசிக்கிட்டே இருக்கா…. அதனால நீ யாரை பத்தியும் கவலைப்படாதே…. அவங்க அவங்க அவங்களோட வேலைல இருப்பாங்க…. நம்மல பார்க்க மாட்டாங்க…. என்று சொல்லி விட்டு அவளுடைய இடுப்பில் பின் பக்கமாக கை வைத்தான்.


உஷ்…….. நான் மேல் பர்த்ல படுத்துக்கிறேன்…. என்று சொல்லி ஏறி படுத்துக் கொண்டாள் ரோஸி.



தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.






















இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.