பாகம் 5

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை
பாகம் 5

” நம்மள மாதிரி அவளும் நம்ம கிட்ட சொல்லாம  யாரையாவது லவ் பண்ணி இருந்தா ? ” என்றான் ஷியாம்.

” அவ அப்படி கிடையாது “

” அவளும் உன்னை பத்தி அப்படித்தான் நினைச்சிருப்பா “

” ஏய் எருமை உன் தங்கச்சிக்கு நான் சப்போர்ட் பண்றேன், நீ உன் தங்கச்சியை நம்ப மாட்டியா ? “

” எனக்கு என் ஷிவானி பத்தி தெரியும் டி, சும்மா உன்கிட்ட இப்படி சொன்னேன்”

” சரி சரி என்ன  இன்னும் அவளைக் காணும் ? “

” அவ வர அரை மணி நேரத்துக்கு  மேல ஆகும்னு சொன்னா. “

” ஏன்? “

” வீடெல்லாம் கிளீன் பண்ணி வச்சுட்டு ஏதோ கொஞ்சம் பாத்திரம் இருக்காம் அதெல்லாம் கழுவி வச்சிட்டு வரேன்னு சொன்னா”

” சரி வா நம்ம போய் ஹெல்ப் பண்ணலாம் “

” அதுவும் கேட்டேன் கொஞ்சம் தான் இருக்கு நானே முடிச்சுட்டு வந்துடுறேன்னு சொன்னா இப்ப வந்துடுவா. “

“ஓ, ஓகே ஓகே”

” சரி, அவ வரதுக்குள்ள இன்னும் ஒரே ஒரு” என்று சொல்லி நந்தினி அருகில் சென்றான் ஷியாம்.

” ஒரு நாளைக்கு ஒன்று போதும் ஆல்ரெடி கோட்டா ஓவர்” என்று சொல்லி கண்ணடித்தாள் நந்தினி .

“அப்ப டெய்லி கிடைக்குமா?”

” அச்சச்சோ தெரியாம சொல்லிட்டேன், ஒரு மாசத்துக்கு ஒன்னு”

” ஏய் அதுக்கு ரொம்ப நாள் ஆகும்டி, இரண்டு நாளைக்கு ஒரு முறை “

” நோ நோ, பத்து நாளைக்கு ஒன்னு”

“சரி, உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் வாரத்துக்கு ஒன்னு”

“சரி சரி, இன்னைக்கு சனிக்கிழமை. இதோட அடுத்த சனிக்கிழமை. ஓகேவா?”

“ஓகே” என்று சற்று சோகமாகவே சொன்னான் ஷியாம்.

அப்போது நந்தினியின் ஃபோன் அடித்தது.

” சொல்லுங்க அப்பா”

” சரிப்பா, சரி, சரி, அப்பா” என்று பேசி வைத்தாள்.

” என்ன சொல்றாரு என் மாமனார்? “

” ரொம்ப தாண்டா தைரியம் உனக்கு. வர லேட் ஆகும் நீங்க மூணு பேரும் பத்திரமா இருங்கன்னு கால் பண்ணாரு. “

” சரி இரு நான் ஷிவானிக்கு கால் பண்ணி பாக்குறேன்” என்று சொல்லி கால் செய்தான் ஷியாம்.

ஷிவானி ஃபோனை எடுக்கவில்லை. பாத்ரூம் சென்று இருக்கிறாளோ என்று நினைத்து பத்து நிமிடம் கழித்து மறுபடியும் கால் செய்தான்.

அப்போதும் அவள் ஃபோனை எடுக்கவில்லை.

“நந்து, ஷிவானி ஃபோனை எடுக்கல நான் என்னன்னு வீடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்”

“என்ன விளையாடுறியா?”

” என்னடி? “

” பின்ன என்ன? நான் தான் தனியா இருக்க மாட்டேன்னு தெரியும் இல்ல?  இரு நானும் வரேன் .” என்று சொல்லி தன் ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

அப்போது நந்தினியின் ஃபோன் அடித்தது.

“ஹலோ சொல்லு அண்ணா ” என்று பேசிக்கொண்டே ஷியாம் பின்னாடி நடந்து சென்றாள் நந்தினி.

தன் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை  அழுத்தினான் ஷியாம். ஷிவானி கதவை திறக்கவில்லை. “ஷிவானி ஷிவானி” என்ற குரல் கொடுத்தான். பதில் இல்லை.

கதவைத் தட்டினான். ஷிவானி கதவை திறக்கவில்லை. வேகமாக தட்டி குரல் கொடுத்தான். அப்படியும் பதில் இல்லை. தன் வண்டி சாவியில் இருக்கும் வீட்டு சாவியை வைத்து கதவை திறந்தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் சற்றே சத்தமாக.

என்னாச்சு இவளுக்கு என்று நினைத்துக் கொண்டே டிவி ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்துவிட்டு
“ஷிவானி” என்று கூப்பிட்டுக் கொண்டே கிச்சனுக்கு சென்றான்.

கிச்சனிலும் அவள் இல்லை. அவளுடைய ரூம் கதவு ஒருக்களித்து இருந்தது.

இரண்டு முறை தட்டிவிட்டு

ஷிவானி என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்தான்.

பெட்டில் ஷிவானி துணிகள் எல்லாம் விலகி அலங்கோலமாய் கிடந்தாள்.

ஷிவானி என்று கத்திக்கொண்டே அவள் அருகில் ஓடினான் ஷியாம்.

தன் அண்ணனிடம் ஃபோன் பேசிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்காமல் அவனை ஃபாலோ செய்து வந்து கொண்டிருந்தாள் நந்தினி.

ஷியாம் கத்தியதை கேட்டு

” நான் அப்புறமா பேசறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு ஹாலில் இருந்து ரூமிற்கு ஓடி சென்றாள் நந்தினி.

ஷிவானி நிலையை பார்த்த நந்தினி சத்தமாக கத்தினாள்.

ஷிவானியின் டிரஸ்ஸை சரி செய்தான் ஷியாம்.

ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள் நந்தினி.

போய் யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிடு என்ற நந்தினியை பார்த்து சொன்னான் ஷியாம்.

நந்தினி பயத்தில் அவ்வளவு கத்தியும் அவள் கத்தும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ஏனெனில் சிவஞானத்தினுடைய வீட்டின் இரு பக்கத்திலும் வீடுகள் கிடையாது. எதிர்புறம் இருக்கும் வீடுகள் தான் பக்கத்து பக்கத்தில் இருக்கும். இந்த பக்கம் இருக்கும் வீடுகள் எல்லாம் சற்று தள்ளி இருந்ததால் நந்தினி கத்தியது யாருக்கும் கேட்கவில்லை.

நந்தினிக்கு உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. பயத்தில் கை கால்கள் எல்லாம் உதறியது. கை கால்கள் உதறியபடி வெளியே ஓடி வரும்போது தடுக்கி கீழே விழுந்தாள். கால் சுளுக்கிக் கொண்டது. அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து தாங்கி தாங்கி வெளியே ஓடி வந்தாள்.

பிறகு எதிர்புறம் இருக்கும் அவளுடைய பக்கத்து வீட்டில் இருப்பவர்களை கூப்பிட அவர்களது காலிங் பெல்லை அழுத்தினாள்.

“என்னாச்சும்மா என்ன ஆச்சு?” என்று கேட்டார் உமா.

” ஆன்ட்டி ஆன்ட்டி, என்று பேச முடியாமல் மூச்சு வாங்கினாள்.”

” பதட்டப்படாமல் சொல்லுமா என்ன ஆச்சு? “

” சிவஞானத்தின் வீட்டைக் காட்டி தேம்பி தேம்பி அழுதாள் நந்தினி “

உமாவிற்கு பயம்  வந்தது. அதனால் வீட்டிற்குள் இருக்கும் தன் கணவர் சங்கருக்கு கால் செய்தார்.

” என்னங்க உடனே  நம்ம வீட்டுக்கு வெளியே வாங்க “

” என்னடி என்ன ஆச்சு? “

” சீக்கிரமா வாங்கன்னு சொல்றேன் இல்ல? ” என்று பதட்டமாக பேசிவிட்டு ஃபோனை வைத்தார் அந்த ஆன்ட்டி.

உடனே வேகமாக வெளியே வந்தார் அவருடைய கணவர் சங்கர் .

வீட்டு வாசலில் பதட்டமாக நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்துவிட்டு. தன் மனைவியிடம்.

” என்னாச்சு உமா, எதுக்கு இப்படி அவசரமா கூப்பிட்ட? ” என்றார்.

” என்னங்க, நந்தினி சிவஞானம் சார் வீட்ட காட்டிட்டு என்னமோ சொல்றா.  அவளால பேச முடியல, பயத்துல இருக்கா.  வாங்க என்னாச்சு என்று போய் பார்க்கலாம். எனக்கு தனியா போக பயமா இருக்கு ”

“சரி வாங்க” என்று சொல்லி சங்கர் முன்னே செல்ல உமாவும் நந்தினியும் அவரைத் தொடர்ந்து சென்றனர். நந்தினிக்கு காலில் அடிபட்டு இருந்ததால் நொண்டி நொண்டி நடந்து சென்றாள்.

உள்ளே சென்றபோது தன் தங்கையை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான் ஷியாம்.

” என்னாச்சுப்பா? ” என்று கேட்டார் சங்கர்.

” அங்கிள், மாடியிலிருந்து துணி எடுத்து கொண்டு கீழே வரும் பொழுது படிக்கட்டுல தடுக்கி உருண்டு கீழே விழுந்திட்டிருக்கா, மயக்கமாயிட்டா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். அப்பா அம்மா கார் எடுத்துக்கொண்டு ஊருக்கு போய்ட்டாங்க உங்க கார் கொஞ்சம் தரீங்களா?”

” இருப்பா நான் கார் சாவியை எடுத்துகிட்டு வரேன். ஹாஸ்பிடலுக்கு நானே கூட்டிக்கிட்டு போறேன்”

” இல்ல இல்ல வேண்டாம் அங்கிள். நான் இவளை ஹாஸ்பிடல்ல டிராப் பண்ணிட்டு வந்து உங்க காரை விட்டு விடுகிறேன்”

” அப்படி ஒன்னும் அவசரம் இல்லப்பா. நாளைக்கு காலையில தான் எனக்கு கார் வேண்டும். அதனால நீ பொறுமையாவே எடுத்து வந்து கொடு ” என்று அவர் பேசிக் கொண்டிருந்தார்.

“கார் தரீங்களா?” என்று அவன் கேட்ட உடனேயே வீட்டிற்கு வேகமாக சென்று கார் சாவியை எடுத்து வந்து கொடுத்தார் உமா.

“இந்தாப்பா முதல்ல கிளம்பு, தலையில் அடிபட்டு ரத்தம் வருது பாரு ”  என்றார் உமா.

” தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு கார் சாவியை நந்தினி இடம் கொடுக்க நந்தினி காரை அவர்கள் வீட்டு பார்க்கிங்கில் இருந்து ஷியாம் வீடு வரை ஓட்டிக்கொண்டு வந்தாள் .

தன் தங்கையை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு,

“நந்து, நீ இறங்கு. நான் காரை ஓட்டுறேன்” என்றான் ஷியாம்.

” இல்ல ஷியாம் நீ டென்ஷனா இருப்ப, நானே ஓட்டிக்கிட்டு வரேன்.”

” இல்ல உனக்கு கால்ல அடிபட்டு இருக்கு உன்னால வேகமாக ஓட்ட முடியாது நீ ஷிவானி கூட பின்னாடி உட்கார்ந்துகிட்டு வா “

” ஓகே ஷியாம் ” என்று சொல்லிவிட்டு  கார் பின் சீட்டில் அமர்ந்து ஷிவானியை தன் மடிமேல் படுக்க வைத்துக் கொண்டாள் நந்தினி.

” நானும் கூட வரவாப்பா? ” என்றார் உமா.

” பரவாயில்லை ஆண்ட்டி, வேண்டாம் ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்குச் சென்றான் ஷியாம்.

ஹாஸ்பிடலுக்கு சென்றவுடன் அவளை எமர்ஜென்சியில் அட்மிட் செய்தனர்.

சேரில் வந்து அமர்ந்தனர் நந்தினி மற்றும் ஷியாம்.

ஷியாமின் கண்களில் கோபமும் ஆத்திரமும் வருத்தமும் கண்ணீருடன் சேர்ந்து வெளியே வந்தது. நந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தாள்.

தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.