
பாகம் 4
“சரி சரி கோவிச்சுக்காத டா. அவங்க கட்டிப்பிடிக்கும் போது உனக்கு தப்பா ஏதாவது தோணிச்சா என்ன? எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? ” என்றான் விக்னேஷ்.
” அதெல்லாம் ஒன்னும் இல்லடா. மே பீ அவங்க பெங்களூர்ல வளர்ந்ததினால் கட்டிப்பிடிக்கிறது தப்பான விஷயமா தெரியல போல. அவ்வளவு ஏன் நம்ம சென்னையிலும் ஐடி ஃபீல்டுல கம்பெனியில் எல்லாம் அந்த மாதிரி தானே வரவேற்று கொள்கிறார்கள்.
இதுவே எனக்கு அவங்கள முதல் முறையாக பார்க்கும் போது அந்த அட்ராக்ஷன் இல்லாம இருந்திருந்தால் அவங்க கட்டிப் பிடிச்சது தப்பா தெரிஞ்சி இருக்காது.
ஏன்னு தெரியல. ஒரு ஸ்பார்க். இவங்க உன் லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு கடவுளே என் காதுல சொன்னது போல இருந்துச்சு. அதனாலதான் அவங்க கல்யாணம் ஆன அப்புறம் என்னை கட்டிப்பிடித்ததும் ஒரு மாதிரி இருந்துச்சு. மத்தபடி எனக்கு வேறு எந்த ஃபீலிங்கும் இப்போது இல்லை.”
” அவ ன்னு சொல்லிக்கிட்டு இருந்த. இப்ப அவங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்ட இல்ல? அதுலையே தெரிஞ்சிருச்சு உனக்கு கோபம் குறைஞ்சிடுச்சுன்னு. ஓகே மச்சி. சரி நீ பேக்கிங் எல்லாம் முடிச்சுட்டு சொல்லு நம்ம ஒரு கேம் விளையாடலாம் “
” இல்லடா எனக்கு இன்னைக்கு மூடு இல்ல “
” சரிடா விடு “
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சற்று சோகமாகவே இருந்தான் முகுந்தன்.
பிறகு சரியானவன் விக்னேஷிடம் ,
” சரி வா மச்சி. ஒரு கேம் விளையாடலாம். கிளம்பறதுக்கு முன்னாடி உன்னை தோற்கடிச்சிட்டு கிளம்ப நினைக்கிறேன்” என்றான் முகுந்தன்.
” பார்க்கலாமா யாரு ஜெயிக்கிறதுன்னு? “
என்று சொல்லிவிட்டு டிவியில் கனெக்ட் செய்து இரண்டு ஜாய் ஸ்டிக் எடுத்து ப்ளே ஸ்டேஷன் கேமை விளையாடினார்கள் இருவரும்.
அப்போது அவர்களுக்கு காஃபியை எடுத்து வந்த பிரேமலதா.
” பத்து வருஷத்துக்கு முன்னாடி காஃபி எடுத்துட்டு வரும்போது இந்த மாதிரி தான் கேம் விளையாடுனீங்க இப்பவும் இதே மாதிரி விளையாடுறீங்களேடா? எப்ப தாண்டா வளர்ந்து மெச்சூர் ஆவீங்க? ” என்று சொல்லி சிரித்தார்.
” அம்மா இது பெரியவங்க விளையாடுற விளையாட்டு தான் மா “
” ஆமாம் ஆன்ட்டி “
என்று சொல்லி இருவரும் பிரமலதாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் விளையாடிக் கொண்டே டிவியை பார்த்தபடியே சொன்னார்கள்.
” சரி என்னமோ பண்ணுங்க காஃபி ஆறிட போகுது குடிங்க” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்.
“ஓகே ஓகே” என்று சொல்லி இருவரும் கேமையே விளையாடிக் கொண்டிருந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் செய்வார்கள் என்று புரிந்து கொண்ட பிரேமலதா வேறு எதுவும் பேசாமல் கீழே இறங்கி சென்றார்.
சிறிது நேரம் விளையாடிய பிறகு பேசிக் கொண்டிருந்தனர் விக்னேஷ் மற்றும் முகுந்தன்.
பிறகு தன் அம்மாவின் குரல் கேட்க,
” இதோ வரேன் அம்மா ” என்று சொல்லி தன் நண்பனுடன் கீழே இறங்கினான் முகுந்தன்.
” என்னம்மா எதுக்கு கூப்பிட்டீங்க? “
” வாப்பா எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாம். இதுக்கப்புறம் மறுபடியும் உன் கூட சாப்பிடறதுக்கு ரெண்டு வருஷம் ஆகும்ல? ” என்று கண்கள் கலங்கியபடி சொன்னார் முகுந்தனின் அம்மா பிரேமலதா.
தன் அம்மா கண் கலங்கியதை பார்த்தவுடன் முகுந்தனுக்கும் கஷ்டமாக இருந்தது கண்கள் கலங்கியது. அதைப் பார்த்த கோபாலகிருஷ்ணன்,
” விக்கி, முகுந்த் ரெண்டு பேரும் போய் டைனிங் டேபிள்ல உட்காருங்க. இதோ நாங்க இப்ப வந்திடறோம்” என்று சொல்லி தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவருடைய ரூமுக்கு சென்றார்.
” என்ன பிரேமா, பையன் கிளம்பர நேரத்துல இப்படி எல்லாம் பண்ணுனா அவனுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும். டெய்லி நீ அவன் கூட ஸ்கைப் காலில் பேச தானே போற? அப்புறம் என்ன? ” என்று தன் மனைவியின் தோளை தடவி கொடுத்து சமாதானம் செய்தார்.
” நான் முகுந்தை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ங்க”
“நான் மட்டும்? அவனும் கூடத்தானே? ஏன் விக்கி மிஸ் பண்ண மாட்டானா?
எல்லாரும் தான் மிஸ் பண்ணுவோம்.
இங்கிலீஷ்ல ஒரு சேயிங் இருக்கு கேட்டிருக்க இல்ல? ‘நோ பெயின் நோ கெயின்’ அதுபோலத்தான். நம்மளாவது இங்கே எல்லாரும் ஒண்ணா இருக்கோம். பையன் அவன் மட்டும் அங்க தனியா இருப்பான். அவனுக்கு எவ்வளவு ஃபீலிங்ஸ் இருக்கும் சொல்லு. நம்ம தான் அவனுக்கு தைரியம் சொல்லணும். நீ இப்படி அழுவதை பார்த்துட்டு கிளம்பினால் அவன் எப்படி அங்க போய் சந்தோஷமா இருப்பான்? ” என்றார் கோபாலகிருஷ்ணன்.
“சாரிங்க. எனக்கு புரியுது இருந்தாலும் மனசு கேட்கல”
” என்னாலயும் புரிஞ்சுக்க முடியுது பிரேமா. நீ கவலைப்படு ஆனா அவன் முன்னாடி பண்ணாத. அது அவனை வீக்காக ஆக்கிடும்னு தான் சொல்ல வந்தேன்”
” சரிங்க”
” சரி வா நம்ம போய் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம் ” என்று சொல்லி பிரேமலதாவை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார் கோபாலகிருஷ்ணன்.
பின்னர் அனைவரும் அமர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள்.
“அப்பா அம்மா நீங்க தூங்குங்க கிளம்பும்போது நான் சொல்லிட்டு கிளம்புறேன்” என்றான் முகுந்தன்.
” எங்களுக்கு தூக்கம் எல்லாம் வராது பா நாங்களும் ஏர்போர்ட்டுக்கு வரோம். உன்னை சென்ட் ஆஃப் பண்ண” என்றார் கோபாலகிருஷ்ணன்.
” அன் டைம் ஆயிடும் பா. அம்மா வேற மாத்திரை எல்லாம் போடுறாங்க. சரியா தூங்கலைன்னா அது வேற பிரச்சனை ஆயிடும். வீட்டுக்கு திரும்ப வந்து உங்களுக்கு தூங்கவும் கஷ்டமா இருக்கும். நாளைக்கு காலைல நீங்க நம்ம கம்பெனிக்கு போகணும் இல்ல. எதுக்கு வீணா அலைஞ்சுகிட்டு. நான் பார்த்துக்கிறேன். அதுவுமில்லாம விக்கியும் என் கூட வரான். ஏர்போர்ட்ல என்னை செண்ட் ஆஃப் பண்ணிட்டு அப்படியே அவன் வீட்டுக்கு போயிடுவான்.”
முகுந்தன் சொல்வது சரிதான் என்று தோன்றியது கோபாலகிருஷ்ணனுக்கு.
பிரேமலதா ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று தன் கணவனிடம் கண் ஜாடையிலேயே கேட்டார்.
” இல்லம்மா நீ அங்க போனன்னா உன்னால கண்டிப்பா அழாமல் இருக்க முடியாது. அதனாலதான் வேண்டாம்னு நான் நினைக்கிறேன்” என்றார் கோபால கிருஷ்ணன் பிரேமலதாவின் காதல் மட்டும் கேட்கும் படி.
” சரிப்பா அப்படின்னா நம்ம எல்லாரும் இங்க உட்கார்ந்து பேசலாம் நீ கிளம்புற வரையிலும் நீ 11:00 மணிக்கு கிளம்புனதுக்கு அப்புறமா நாங்க போய் படுக்கிறோம் சரியா? ” என்றார் கோபாலகிருஷ்ணன்.
” சரிப்பா” என்று சொல்லி அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஏதேதோ விஷயங்கள் பேசும் பொழுது அப்படியே ராஜசேகர் மற்றும் தர்ஷினியை பற்றி பேசினார்கள்.
” தர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு. உண்மையிலேயே அந்த அஜய் ரொம்ப கொடுத்து வச்சவன். ” என்றார் பிரேமலதா.
“ஆமாம் பிரேமா. முகுந்த் கிளம்புறான்னு தெரிஞ்சு பார்த்திட்டு போகலாம்னு இன்னைக்கே வந்துட்டா பாரு. அதுவும் இன்னைக்கு அஜயோட ரிலேடிவ்வோட வீட்டுல விருந்துக்கு போறதா இருந்தாங்களாம். அதை கேன்சல் பண்ணிட்டு இங்க வந்துட்டு இருக்கா. அஜய் அதுக்கெல்லாம் ஓகே சொல்லி இருக்கானா அவனும் நல்ல பையன் தான் “
தர்ஷினியை பற்றி அவர்கள் பேசுவதால் அமைதியாக இருந்தான் முகுந்தன். அதை கவனித்த கோபாலகிருஷ்ணன்,
திருமண மண்டபத்தில் அன்று அஜய் நல்லவன் அதுவும் உன்னைவிட நல்லவன் என்று சொன்னதால் தான் இன்னும் கோபமாக இருக்கிறானோ நம் பையன் என்ற நினைத்து அந்த டாபிக்கை மாற்றினார்.
” எத்தனை மணிக்குப்பா ரீச் ஆவ? “
” யுஎஸ் போறது நாளன்னைக்கு தான்பா.
நாளைக்கு யுகே போயிட்டு அங்கே இருந்து அதுக்கப்புறம் தான் யூ எஸ் பிளைட்”
” யூ கே ல வெளியே எல்லாம் போக முடியாதா? “
” இல்லப்பா அதுக்கெல்லாம் டைம் இல்ல. ஃபோர் ஃபைவ் ஹவர்ஸ் என்னமோ தான் பிரேக். ”
“டைம் ஆயிடுச்சு கிளம்புறேன் அப்பா, அம்மா ” என்று சொல்லி இருவர் காலிலும் விழுந்தான் முகுந்தன்.
இருவரும் அவனை ஆசீர்வதித்து விட்டு கட்டிப்பிடித்து வழி அனுப்பி வைத்தனர்.
விக்கியின் தார் ஜீப்பில் அனைத்து பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு சென்றனர்.
ஜிப்பில் செல்லும் போதும் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர்.
ஏர்போர்ட் செக்கின் செய்வதற்கு முன்னால்
தன் நண்பனை கட்டிப்பிடித்து பை சொல்லிவிட்டு உள்ளே சென்றான் முகுந்தன்.
முகுந்தனுக்கு மனது பாரமாக இருந்தது. இதுதான் முதல் முறை அவன் இவ்வளவு நாள் வெளியே செல்ல போவது. தன் அப்பா அம்மா மற்றும் விக்கியை மிகவும் மிஸ் செய்தான்.
விக்னேஷும் ஜீப்பில் திரும்ப அவனுடைய வீட்டிற்கு செல்லும் வரை கண்கலங்கி கொண்டே சென்றான்.
பிளைட்டில் ஏறி அமர்ந்தான் முகுந்தன்.
கேபின் பேக்கேஜை வைத்து விட்டு, தன்னுடைய ஃபோனை கையில் வைத்து
பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது.
“ஹாய் முகுந்த். ரீச்சிடு ஏர்போர்ட்? ஹாப்பி அண்ட் சேஃப் ஜர்னி. மெஸேஜ் மீ ஒன்ஸ் யூ ரீச் யுவர் பிலேஸ். பீ இன் டச் டா”
-தர்ஷினி.
(முகுந்த், ஏர்போர்ட்க்கு போயிட்டியா? சந்தோஷமாகவும் பத்திரமாகவும் அமையட்டும் உன் பயணம். உன்னுடைய இடத்திற்கு சென்றதும் எனக்கு கட்டாயமாக மெஸேஜ் மூலம் தெரியப்படுத்தவும். தொடர்பில் எப்போதும் இருடா) -தர்ஷினி
என்று அனுப்பி இருந்தாள்.
ஏனோ அவனையும் அரியாமல் அவன் முகத்தில் கோபத்திற்கு பதிலாக புன்னகை மலர்ந்தது. பிறகு ரிப்ளை செய்தான்.
” ஹாய் தர்ஷினி. எனக்காக நீங்க இன்னைக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
அஜய் சார்க்கும் என்னோட தேங்க்ஸ் சொல்லிடுங்க” என்று ரிப்ளை செய்தான்.
” டேய், நீ வந்த உடனே என் கிட்ட உதை வாங்க போற பாரு” என ரிப்ளை செய்தாள் தர்ஷினி.
“அய்யோ எதுக்குங்க?”
“பின்ன, என்னை வாங்க போங்கன்னு சொல்ற. ஒழுங்கு மரியாதையா தர்ஷி வா போ இல்ல வாடி போடி கூட சொல்லு ஆனா வாங்க போங்க ன்னு சொல்லாத” என்று சில கோபமாக இருக்கும் எமோஜிகளை போட்டு அனுப்பினாள்.
முகுந்தனுக்கு சிரிப்பு வந்தது.
” இதனால் வரைக்கும் மரியாதைனா வாங்க போங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க, சாரி சாரி நீ வா போ தான் மரியாதைன்னு சொல்ற? “
” அதெல்லாம் பிரண்ட்ஸ்குள்ள அப்படித்தான். அங்க போய் உனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கலாம். ஆனா விக்னேஷுக்கு மட்டும் இல்லாம இந்தியால நானும் உனக்கு ஒரு பிரெண்டு இருக்கேன் என்பதை மறந்துவிடாதே. ஓகே? பை டேக் கேர்.”
“ஓகே தர்ஷி. பை, குட் நைட் ” என்று அவன் மெசேஜ் அனுப்பவும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் அல்லது ஏரோபிலேன் மோடில் போடுங்கள் என்று ஏரோஸ்டர்ஸ் கூறினார்.
முகுந்தன் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்தான்.
தன் ஆபீஸ் வேலைகளை முடித்துவிட்டு குளித்துவிட்டு டவலை மட்டும் கட்டிக் கொண்டு தன் மனைவி தர்ஷினியின் பக்கத்தில் அமர்ந்தான் அஜய்.
“அஜூ, டிரெஸ் போடுடா”
“எப்படி இருந்தாலும் இப்போ அவிழ்க்க தான போறோம். அதுக்கு எதுக்கு ஒரு டிரஸ் வீணா போடனும்” என்று சொல்லி தன் மனைவியை அணைத்தபடி போர்வைக்குள் புகுந்தான் அஜய்.
“அஜூ, இருடா நான் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். சுடிதாரிலேயே இருக்கேனே. நான் நைட் டிரெஸ் மாத்திட்டு வரேன்” என்று சொன்ன தர்ஷினியிடம்.
“அந்த கஷ்டம் உனக்கு வேண்டாம். நானே உனக்கு ஹெல்ப் பண்றேன்”
“என்ன ஹெல்ப். என்னோட நைட் டிரெஸ்ஸை கப்போர்டில் இருந்து எடுத்து வந்து கொடுக்க போறியா?”
” இல்ல, நானே உனக்கு டிரஸ் கழட்ட ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்தான்.
” உன்னோட ஹெல்ப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்லி சிரித்தாள் தர்ஷினி.
“பேசக்கூடாது ” என்று சொல்லி அவள் இதழில் முத்தம் கொடுத்தான்.
பின்னர் இருவரும் போர்வைக்குள் ஈருடல் ஓர் உயிர் ஆகினார்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு இருவரும் அணைத்து படி படுத்திருந்தனர்.
No comments yet.