தொடர்பியல்….. பாகம் –4கேஸ் -1 ( சங்கவி – கிஷோர்)
கார் பார்க்கிங்கில் சங்கவி காரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு இருந்தாள்.
மேடம் மேடம்…. ஒன் மினிட் பிளீஸ்….. என்றாள் ராகினி.
போதும் ராகினி…. என்னை டென்ஷன் ஆக்காதீங்க…. என்னால முடியல….. எதுக்காக இப்படி பொய் சொல்றீங்க….. என்று கெஞ்சும் குரலில் சொன்னாள் சங்கவி.
பிளீஸ்…. எனக்கும் உங்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?…. நான் ஏன் உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்…. அதனால எனக்கு என்ன லாபம்…. சொல்லுங்க?….
அதான் எனக்கும் தெரியல….
நான் சொல்றதை கேளுங்க சங்கவி.
சரி சொல்லுங்க…. என் ஹஸ்பண்ட்டுக்கும் வேற ஒரு பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்கு ன்னு சொன்னீங்க இல்ல?
ஆமாம்…. ரோஸி….
நீங்க பார்த்தீங்களா?…. அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்ததை?….
இல்ல….
பின்ன உங்களுக்கு எப்படி தெரியும்?
கனவுல பார்த்தேன்….
வாட்…. சே…. இவ்வளவு நேரமா ஒரு லூசு கிட்ட பேசி என் டைமை வேஸ்ட் பண்ணி இருக்கேன்…. என்று சொல்லி விட்டு காரில் ஏறினாள் சங்கவி.
மேடம்…. ஒரே நிமிஷம்…. என் ஃபிரெண்டு உங்க ஹஸ்பண்ட் போயிருக்க அதே டிரெயின்ல தான் போயிருக்கா…. அவளோட ஆப்போஸிட்ல தான் உங்க ஹஸ்பண்ட் கிஷோரும் ரோஸியும் உட்கார்ந்து இருக்காங்க…. ஃபோட்டோ அனுப்ப சொல்லி இருக்கேன்…. என்றாள் ராகினி.
ராகினியை முறைத்து விட்டு சங்கவி சென்று விட்டாள்.
காரின் நம்பரை நோட் செய்து கொண்டாள் ராகினி.
அப்போது ஃபோட்டோ வந்தது. கிஷோர் மற்றும் ரோஸியின் படம் இருந்தது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வந்திருந்தா…. சங்கவி கிட்ட காட்டியிருக்கலாமே….சே…. என்று நினைத்து கொண்டாள் ராகினி.
மணியை பார்த்தாள். 9.30. அடச்சே…. என்று புலம்பிக் கொண்டே கிளம்பினாள் ராகினி. டைம் ஆகிவிட்டதே என்று நினைத்து கொண்டே லேபை சென்று அடையும் போது மணி பத்து.
ஹாய் ராகினி…. ஒய் லேட்….. நல்லவேளை ஜார்ஜ் சார் இன்னும் வரலை…. அதனால பிரச்சனை இல்லை…. இல்லன்னா கண்டிப்பா திட்டி இருப்பாரு…. என்றாள் தேவி.
ஆமாம் ராகினி…. ஷீ ஈஸ் ரைட்…. என்றாள் மம்தா.
இல்ல ஒரு இம்பார்ட்டண்ட் ஒர்க்…. அதான்…. சாரி…. என்றாள் ராகினி.
எங்களுக்கு எது சாரி….. என்றாள் தேவி.
அதான…. என்று சொல்லி சிரித்தாள் மம்தா.
அமைதியாக இருந்தாள் ராகினி.
ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்ட இருவரும்….
இட்ஸ் ஓகே ராகினி…. தண்ணி குடிங்க…. என்று சொல்லி விட்டு சென்றாள் தேவி.
ராகினியின் அருகில் அமர்ந்து….
என்னாச்சு ராகினி…. என்றாள் மம்தா.
கண்களை சிமிட்டி ஒண்ணும் இல்ல…. என்றாள் ராகினி.
ஓகே…. டவுட்ஸ் இருந்தா கேளு…. இந்தா புக்ஸ் ஃபார் யுவர் ரிஃபரன்ஸ்…. என்று சொல்லி விட்டு தன் டேபிளுக்கு சென்றாள் மம்தா.
புக்கை திறந்து வைத்தாள் ராகினி. ஆனால் அவளின் கவனம் முழுவதும் சங்கவியின் மேலேயே இருந்தது. ஃபோனை எடுத்து பார்த்தாள். 15 மிஸ்டுகால்கள் இருந்தது. அனைத்துமே மாதவனிடம் இருந்து வந்திருந்து. சாரி டா செல்லம் என்று டைப் செய்து அனுப்பினாள்.
ரிப்ளை வரவில்லை. ஒண்ணு கோபமா இருப்பான் இல்ல பிஸியாக இருப்பான் என்று நினைத்து கொண்டாள். பாவம் ரொம்ப நேரம் ஜங்ஷன்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருப்பானோ…. என்று நினைத்தவள் தன் ஃபோனில் வாட்ஸ்அப் பார்த்தாள்…. அதில் ஆர் டி ஓ டிபார்ட்மெண்ட்ல இருக்கும் விஷ்ணு நம்பர் இருந்தது. உடனே அவருக்கு மெஸேஜ் செய்தாள் ராகினி.
ஹாய் அண்ணா…. எப்படி இருக்கீங்க….. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?…. என்று அனுப்பினாள். மெஸேஜ் டெலிவர் ஆகவில்லை. பிறகு ஃபோனை வைத்து விட்டு வேலையைத் தொடங்கினாள். ஒருமணி நேரத்திற்கு பிறகு ஃபோனை எடுத்து பார்த்தாள். அப்போதும் மெஸேஜ் டெலிவர் ஆகவில்லை. பின்னர் கால் செய்தாள். நெட்வொர்க் கவரேஜ் ஏரியாவுக்கு வெளியே இருப்பதாக வாய்ஸ் மெஸேஜ் வந்தது. ஆர் டி ஓ டிபார்ட்மெண்டிற்கு கால் செய்தாள் ராகினி.
ஹலோ…. நான் ராகினி…. விஷ்ணு சார் இருக்காரா?
இல்லீங்க…. அவரு ஒன் வீக் லீவுல இருக்காரு….
ஓ…. ஓகே…. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா சார்.
நான் அவரோட கசின் சிஸ்டர்…. எனக்கு ஒரு கார் டீடெயில்ஸ் வேணும். நம்பர் சொல்லவா?
இல்ல மா…. அந்த மாதிரி நம்பர் வச்சு டீடெயில்ஸ் கொடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை. நீங்க போலீஸ் கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வந்தா டீடெயில்ஸ் தரேன்…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார்.
ஓகே சார்….. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு மாதவனுக்கு கால் செய்தாள்.
மாதவன் ஃபோனை எடுக்கவில்லை. மறுபடியும் சாரி டா….. என்று மெஸேஜ் டைப் செய்து அனுப்பினாள்.
வாய்ஸ் மெஸேஜ் வந்தது. நீ சொன்ன இல்ல லேட்டா வந்தா…. ஃபுல் டே உன் கிட்ட பேச மாட்டேன் மெஸேஜ் கூட அனுப்ப மாட்டேன்னு…அதே தான் நானும் பண்ண போறேன்….. நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?…….. இன்னைக்கு ஃபுல் டே பேசமாட்டேன், மெஸேஜூம் அனுப்ப மாட்டேன். டோன்ட் கால் மீ டுடே…. என்று அனுப்பினான்.
இவன் வேற ஒரு லூசு….. நிலைமையை புரிஞ்சிக்காம…. என்று சற்று சுத்தமாகவே திட்டினாள்.
அம்மாடி…. நார்மலா ஆயிட்டியா…. என்று சொல்லி சிரித்தாள் மம்தா.
அப்படி இல்ல மம்தா…. காலைல ஒரு டென்ஷன் அதான்.
இட்ஸ் ஓகே…. விடு…. ஆமாம் நீ நேத்தே உன் லவ்வரை காட்டறேன்னு சொன்னீயே….
ஆமாம் மம்தா…. நீ அவசரமா கிளம்பவே மறந்திட்டேன்….. ஆமாம்….. உங்க அப்பா எப்படி இருக்காரு….
ஹீ ஈஸ் ஃபைன்…. உன்னோட ஹீரோவை காட்டு.
இதோ…. என்று மாதவனின் ஃபோட்டோவை காட்டினாள் ராகினி.
ஃபோட்டோவை பார்த்து
இவனா?….. என்றாள் மம்தா.
என்னாச்சு மம்தா….. மாதவனை உனக்கு தெரியுமா?
ஒண்ணும் இல்ல…. எனக்கு வேலை இருக்கு…. அப்புறமா பேசுறேன்…. பை…. என்று சொல்லி விட்டு மம்தா தன் கேபினுக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
ராகினிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னாச்சு….. ஏன் மம்தா மாதவனுடைய ஃபோட்டோவை பார்த்து இவனா ன்னு சொன்னா?…. ஏற்கனவே சங்கவியை பார்த்தது தலைவலி ன்னா இது வேறவா?…. என்று நினைத்து மிகவும் வருந்தினாள். டென்ஷனில் தலைவலியே வந்துவிட்டது. மம்தாவை மூன்று முறை பார்த்தாள். அவள் ராகினி பக்கம் திரும்பவே இல்லை. மேலும் அவளும் டென்ஷனாக தான் வேலை செய்கிறாள் என்று நன்றாகவே தெரிந்தது ராகினிக்கு.
லஞ்ச் டைம் வந்தது.
அனைவருமே முன்னாள் போல பெரிய டேபிளில் அமர்ந்து சாப்பிட்டனர். ராகினி மட்டும் இரண்டு நாளுமே ஓட்டலில் ஆர்டர் செய்து அனைவருடனும் ஷேர் செய்து சாப்பிட்டாள். இன்று மம்தா சாப்பிட வரவில்லை. ராகினி கூப்பிட்டதற்கு…. இல்ல ராகினி நீ சாப்பிடு…. எனக்கு பசிக்கல…. இந்தா என்னோட லஞ்ச்…. எல்லாரும் எடுத்துக்கோங்க…. நான் பசிச்சா ஆர்டர் பண்ணிக்கிறேன்…. என்றாள்.
கொஞ்சமா சாப்பிடு மம்தா…. சாப்பிடலைன்னா தலைவலி வந்திடும்.
இல்ல ராகினி…. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை…. யூ கோ அன்ட் ஹேவ் லஞ்ச். ஐ ஹேவ் டூ கம்பிளீட் திஸ் ரிப்போர்ட்…. என்றாள் மம்தா.
தேங்க்ஸ் மம்தா…. என்று சொல்லி அவள் கொடுத்த டிபன் பாக்ஸை வாங்கி கொண்டு டேபிளில் போய் அமர்ந்தான் பிரவீன்.
நீ சொன்னது சரிதான் மம்தா…. பாரு இந்த பிரவீன் எப்படி லூசு மாதிரி நடந்துக்கிறான்…. என்றாள் ராகினி.
ஆமாம்…. என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினாள் மம்தா.
அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு சங்கடமாக இருந்தது ராகினிக்கு. பிடி கொடுக்காமல் அவளை மம்தா அவாய்டு பண்ணுகிறாள் என்பது நன்றாகவே புரிந்தது.
அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டாள் ராகினி.
சேகரிடமும் மற்றும் தேவியுடன் சேர்ந்து சில ஃபைல்களை கம்பிளீட் செய்தாள் ராகினி.
மூன்று மணி அளவில் டீ குடிக்க வெளியே சென்றாள் மம்தா. ராகினியும் எழுந்து சென்றாள். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய காஃபி ஷாப்பில் அமர்ந்து இருந்தாள் மம்தா. அவளை பார்த்து அவளுடைய பக்கத்தில் இருக்கும் சேரில் அமர்ந்தாள் ராகினி.
மம்தா…. என்றாள் ராகினி.
நீ என்ன கேட்க போற ன்னு எனக்கு தெரியும். வேற எதாவது பேசலாமா?
பிளீஸ் மம்தா…. நீ என்னோட இடத்தில இருந்தா என்ன பண்ணுவ?…. நினைச்சு பாரு…. எனக்கு மண்டையே வெடிக்குது. உனக்கு மாதவனை தெரியும் ன்னு மட்டும் இருந்தா நான் டென்ஷன் ஆக மாட்டேன்….. அவனை பார்த்து விட்டு நீ கொடுத்த ரியாக்ஷனால தான் எனக்கு டென்ஷன். அப்படி என்ன தப்பு பண்ணினான் மாதவன்.
அதை அவன் கிட்டேயே கேளு….
நீ சொல்லு…. பிளீஸ்…. உன்னோட பக்கத்தில இருக்குற நியாயம் நீ சொன்னா தான தெரியும்.
இல்ல ராகினி…. எனக்கு இப்போ மனசு சரியில்லை. உனக்காக ஒண்ணு சொல்றேன்…. உன்னோட மாதவன் கிட்ட மனீஷா கேஸ் நியாபகம் இருக்கா ன்னு கேளு…. அப்போ தெரியும்…. என்று கண்கள் கலங்க சொல்லி விட்டு எழுந்தாள் மம்தா.
மனீஷா வா….. யாரு மம்தா அது….
என்னோட தங்கச்சி…. இன்னைக்கு எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கும் காரணம் உன்னோட மாதவனும் தான்…. என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் மம்தா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.