
பாகம் 3
“என்னடா சொல்ற?” என்றான் ஆதித்யா தன் நண்பன் விக்னேஷிடம்.
“அவங்க ஆசைப்பட்ட மாதிரி அவங்க கூட போய் அவங்க அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்குடா மச்சி” என்றான் விக்னேஷ்.
“இது என்ன உண்மையான கல்யாணமா. அவங்களோட காலுல எல்லாம் போய் விழறதுக்கு?”
“இப்படி நீ வெறுப்பா நடந்துகிட்டனா, அந்த பொண்ணு நீ கேக்குறதுக்கு சம்மதம் சொல்லவில்லை, என்றால் என்ன பண்ணுவ?”
ஒரு நிமிடம் யோசித்தான் ஆதித்யா.
“நீ சொல்றதும் சரிதான். சாவியை கொடு” என்று சொல்லிவிட்டு வசுந்தரா இருக்கும் ரூம் கதவை தட்டினான்.
“வாங்க மாப்ள” என்றார் தனலட்சுமி.
“வசு, அவங்க அப்பாவ பாக்கணும்னு சொன்னாங்க. எனக்கு ஆபீஸ்ல இருந்த மீட்டிங் போஸ்ட்போன் ஆயிடுச்சு. ஸோ நானே கூட்டிட்டு போறேன்”
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை”
என்று சொல்லி தன் மகளை அனுப்பி வைத்தார் தனலட்சுமி.
காரில் செல்லும் போது இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
ஏறும்போதே ஹாஸ்பிட்டலை பெயரை கேட்டு தன் ஃபோனில் கூகுள் மேப்பில் போட்டு கொண்டு அதைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.
அடுத்த அரைமணி நேரத்தில் ஹாஸ்பிட்டலை அடைந்தனர்.
கல்யாண உடையில் இருவரும் உள்ளே சென்றதால் அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருந்தது.
‘வாவ். சேரி சூப்பர்.பிளௌஸ் அதை விட சூப்பர். ஆரி ஒர்க் பாருடி. கல்யாண பொண்ணு எல்லாத்தையும் விட சூப்பர்’ என்று நர்ஸூகள் பேசிக் கொண்டனர்.
இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லாத வசுந்ரா வேகமாக தன் அப்பாவை பார்க்கச் சென்றார். பின்னால் நடந்து சென்ற ஆதித்யாவுக்கு அவர்கள் பேசுவது கேட்டது.
“ஏய், மாப்பிள்ளை ரொம்ப லக்கி டி”
“ஏய், அவரும் செம ஹாட்டா தான் இருக்காரு” என்று பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே நடந்து சென்றான்.
கேஷ்வாலிட்டி வார்டில் படுத்திருந்தார் வசுந்ராவின் அப்பா பாலமுருகன்.
அப்பா என்று சொல்லி அவருடைய கையை பிடித்தாள் வசுந்ரா.
கண்களை மெல்லத் திறந்தவர்.
“வசு” என்று கண்கள் கலங்கினார்.
“அப்பா, இவர் தான் அப்பா என்னோட கணவர்” என்று சொன்ன போது திரும்பி பார்த்தால் அங்கே ஆதித்யா இல்லை.
“எங்கம்மா?”
“ஒரு நிமிஷம் அப்பா” என்று சொல்லி விட்டு வெளியே வந்து பார்த்தால் அங்கே இருந்த வெயிட்டிங் ஹாலில் சேரில் அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆதி” என்று கூப்பிட்டுக் கொண்டே அவனருகில் வந்தாள்.
“ஒரு நிமிஷம், என் அப்பாவை பார்த்து விட்டு வந்திடறீங்களா?”
“ஓகே” என்று சொல்லி அவளை பின் தொடர்ந்தான்.
‘உங்க அப்பாவை பார்க்க போற சந்தோஷத்தில நீ ஓடி போயிட்ட . நான் படி ஏறி வந்தா நீ எந்த ரூமுக்குள்ள போனன்னு தெரியல, நான் என்ன ஒரு ஒரு ரூமா திறந்து பார்க்கனுமா? அவர் பேரு கூட எனக்கு தெரியாது. அப்புறம் எப்படி கண்டுபகடிக்கிறது, அதான் நீயே வருவன்னு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன்’ என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.
‘அப்பாவை பார்க்கனும்னு சொல்லியும் உள்ளே வராம உட்கார்ந்துக்கிட்டு இருக்கானே, பணக்கார திமிர் பிடித்தவன்’ என்று நினைத்துக் கொண்டே நடந்து சென்றாள் வசுந்ரா.
இருவரையும் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டார் பாலமுருகன்.
வசுந்தரா அவர் காலை தொட்டாள். உடனே ஆதித்யாவும் இன்னொரு காலை தொட்டு வணங்கினான்.
ஆச்சரியமாக அவனை திரும்பி பார்த்தாள் வசுந்ரா.
“ரெண்டு பேரும் நல்லா இருங்க. ஆயுள் ஆரோக்கியத்தோட பல்லாண்டு காலம் நல்லா வாழனும்” என்று வாழ்த்தினார் பாலமுருகன்.
அப்போது அங்கே வந்த நர்ஸ்.
“இவரோட அட்டெண்டர் எப்பமா வருவாங்க. மருந்து மாத்திரை எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. நாங்க மத்த பேஷண்ட் பார்ப்போமா இல்ல இவருக்கு வாங்கி கொடுத்துட்டு இருப்போமா?”
“சாரி சிஸ்டர், இன்னைக்கு எனக்கு கல்யாணம். அதனாலதான் எங்க அம்மா அங்க வந்துட்டாங்க. ஒரு அண்ணா இருந்தாரு அவர்கிட்ட சொல்லிட்டு தான் வந்தாங்க”
“யாரு வார்டு பாய் வேலு தான. அவனுக்கு இதே வேலையா போச்சு. எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு ஒரு வேலையும் பண்ண மாட்டான். இப்ப இந்த மருந்த வாங்கிட்டு வரணும். நீங்க வாங்கிட்டு வந்து கொடுக்குறீங்களா சார்?” என்று ஆதித்யாவை பார்த்து கேட்டார் அந்த நர்ஸ்.
அப்படி அவர் கேட்டதால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “சரி” என்று சொல்லி அந்த பிரிஸ்கிரிப்ஷனை வாங்க வந்த ஆதித்யாவிடம் இருந்து வசுந்ரா வாங்கிக்கொண்டு.
“நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி வேகமாக நடந்து சென்றாள்.
அவள் சென்றதும் ஆதித்யாவின் கையைப் பிடித்துக் கொண்டார் பாலமுருகன்.
“மாப்பிள்ளை, என் பொண்ணு ரொம்ப தங்கமானவ. அவளை கண்களங்காம பார்த்துக்கோங்க. நானே என் பொண்ணை பத்தி பெருமையா பேசறேன்னு நினைக்காதீங்க அவ ரொம்ப அட்ஜஸ்ட்டிங் டைப். அவளுக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவர்களுக்காக அவளோட உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டாள். நீங்க அவளை நல்லா பாத்துப்பீங்கன்னு நம்புறேன்” என்று சொல்லி கண்கள் கலங்கினார்.
“சார், எதுக்கு அழறீங்க உங்க பொண்ணு நல்லா இருப்பாங்க”
“மாப்பிள்ள என்னை மாமான்னு கூப்பிடுங்களேன்”
“சரிங்க”
“கல்யாணத்தை என்னால பார்க்க முடியல ஃபோட்டோ எதாவது இருக்கா?”
“ஹாங், வசுவோட ஃபோன்ல இருக்கு. உங்களுக்கு அனுப்ப சொல்றேன்”
“தேங்க்ஸ் மாப்ள”
“நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க”
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மாப்பிள்ளை.
கடவுளா பார்த்து என் பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்காரு. என் பொண்ணு எதுவும் தப்பு பண்ண மாட்டா. அப்படியே தெரியாம ஏதாவது பண்ணிட்டாலும் எனக்காக அவளை மன்னிச்சிடுங்க. நீங்க பொறுமையா சொன்னீங்கன்னா கேட்டுப்பா”
“சரிங்க மாமா” என்று ஆதித்யா பாலமுருகனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தாள் வசுந்ரா.
ஆதித்யாவை ஆச்சரியமாக பார்த்தாள். ‘மாமா ன்னு சொல்றானே?’ என்று நினைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் கிளம்பினார்கள். அப்போது டாக்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தான் ஆதித்யா.
“வசு, கல்யாண ஃபோட்டோ உன் ஃபோன்ல இருக்குன்னு மாப்பிள சொன்னாரு. வீட்டுக்கு போயிட்டு என் ஃபோனுக்கு அனுப்பி விடுமா”
“சரி அப்பா. கண்டிப்பா. நாளைக்கு மறுபடியும் வந்து உங்களை பார்க்கிறேன். பை” என்றாள் வசந்ரா.
‘நாளைக்கும் நம்மள வரச் சொல்வாளா?’ என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.
ஆதித்யாவின் வீட்டிற்கு சென்றனர். காரில் செல்லும் போது மறுபடியும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருவரும் அமைதியாக சென்றனர்.
பாகம் 4
முந்தைய நாள் தூக்கம் சரியாக இல்லாததால் லேசாக கண் அயர்ந்தாள் வசுந்ரா.
அவன் வீட்டை அடைந்தனர். வசுந்தரா எழுந்திருக்கவில்லை. வாட்ச்மேன் கேட்டை திறந்து இருந்தான். இருப்பினும் வசுந்தராவை எழுப்புவதற்காக ஹார்னை அழுத்தினான்.
திடுக்கிட்டு கண் விழித்தாள் வசுந்தரா.
கேட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்தது அவனுடைய பங்களா. இதுவரை சினிமாவிலேயே பார்த்த அந்த மாதிரியான பங்களாவிற்கு முதல்முறையாக செல்கிறாள் வசுந்தரா.
ஏனோ அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.
வீட்டு வாசலில் காரை நிறுத்தினான். இருவரும் கீழே இறங்கினார்கள். உடனே வேகமாக ஒரு டிரைவர் வந்து சாவியை வாங்கிக்கொண்டு கார் பார்க்கிங்கில் காரை விடச் சென்றார்.
ஆதித்யாவின் அம்மா மகேஸ்வரி ஆலம் கரைத்து வைத்து நின்று கொண்டிருந்தார்.
புன்னகை முகத்துடன் “வாங்க” என்று இருவருக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இட்டார்.
இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அந்த ஆரத்தி தட்டை வேலையாட்களிடம் கொடுத்துவிட்டு தன் மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்றார்.
பிரம்மாண்டமான ஹால், அதை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.
அப்போது அங்கே சோஃபாவில் அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்தார் ஆதித்யாவின் அப்பா வாசுதேவன்.
“வாம்மா, இதுதான் உங்க மாமா ஆதித்யா ஓட அப்பா” வசுந்தரா அவரிடம் ஆசிர்வாதம் வாங்கலாம் என்று நினைத்து ஆதித்யாவை பார்க்க அவன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவள் மட்டும் சென்று வாசுதேவனின் காலில் விழுந்தாள்.
“நல்லா இரு மா, எழுந்திரு” என்றார்.
“அர்ஜுன், அஸ்வினி” என்று கூப்பிட்டார் மகேஸ்வரி.
ஆதித்யாவின் தம்பி தங்கை இருவரும் வந்தனர்.
“இது ஆதியோட தங்கச்சி அஸ்வினி, இது ஆதியோட தம்பி அர்ஜுன்”
இருவரும் வசுந்தராவை பார்த்து “ஹாய் அண்ணி” என்றனர்.
“ஹாய்” என்றாள் வசுந்தரா.
“நீங்க காலேஜ் படிக்கிறீங்களா?” என்றாள் வசுந்தரா அஸ்வினியை பார்த்து.
“ஆமாம் அண்ணி, பிபிஏ செகண்ட் இயர்”
“நீங்க?” என்ற அர்ஜுனை பார்த்து கேட்டாள்.
“நான் எம்பிஏ ஃபைனல் இயர், அண்ணா கூட நம்ம கம்பெனியில் தான் இன்டர்ன்ஷிப் பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணி”
‘நம்ம கம்பெனி என்று உரிமையோடு பேசுகிறானே’ என்று சந்தோஷமாக இருந்தாலும், ‘எல்லாம் இன்னும் ஒரு வருடம் காலம் மட்டுமே’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
“ஆதித்யா, வசுந்தரா வாங்க பூஜை அறைக்கு, விளக்கேத்தனும்” என்று அனைவரையும் அழைத்து சென்றார் மகேஸ்வரி.
பிறகு தன் மருமகளை விளக்கேற்ற சொல்லி. பூஜை செய்தார் மகேஸ்வரி.
‘ஆதித்யாவை தவிர இந்த வீட்ல இருக்கவங்க எல்லாருமே நல்லவங்க தான் போல’ என்று நினைத்துக் கொண்டாள் வசுந்தரா.
பூஜை முடித்தவுடன்.
“ஆதித்யா, வசுந்தராவை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போப்பா. நான் பால் பழம் கொண்டு வரேன்” என்றார் மகேஸ்வரி.
“அம்மா, எனக்கு இப்போ கிளையண்ட் கால் இருக்கு” என்று சொல்லிவிட்டு தன் ஃபோனை எடுத்துக் கொண்டு நடந்து வெளியே சென்றான்.
“அஸ்வினி”
“சொல்லுங்கம்மா”
“அண்ணனோட ரூமுக்கு, அண்ணியை கூட்டிட்டு போமா”
“சரிங்கமா”
“வாங்க அண்ணி” என்று சொல்லி ஹாலின் நடுவே இருந்த அந்த படிக்கட்டில் ஏறி ஒரு பெரிய ரூமுக்கு அழைத்து சென்றாள்.
வசுந்தராவின் வீடு மொத்தமுமே சேர்த்தால் கூட ஆதித்யாவின் அந்த அறையை விட சிறியதாக இருக்கும்.
ரூமிலேயே ஒரு பக்கமாக சோஃபா மற்றும் டீ பாய் இருந்தது. பால்கனியே ஒரு ரூம் அளவிற்கு பெரியதாக இருந்தது. அங்கேயும் சேர்கள் மற்றும் ஈசி சேர் இருந்தது.
“ரூம் ரொம்ப அழகா இருக்கு”
“அண்ணி எல்லாம் அண்ணாவே பார்த்து பார்த்து ரெடி பண்ணினார். ரூம்ல இருக்கிற இன்டீரியர் டிஸைன்ஸ் எல்லாமே அண்ணாவோட டேஸ்ட் தான்”
“அஸ்வினி, அது என்ன ரூம்?”
என்று அந்த ரூமிலேயே ஓரமாக ஒரு சிறிய ரூம் இருந்ததை காட்டி கேட்டால் வசுந்தரா.
“அது அண்ணாவோட ஆஃபீஸ் ரூம் அண்ணி. லேப்டாப், ஃபைல்ஸ், இம்போர்ட்டண்ட் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அதுல வச்சிருப்பாரு. யாரையும் அந்த ரூமுக்குள்ள அலோ பண்ண மாட்டாரு. நாங்க யாராவது வந்தா கூட ரூம் டோரை நாக் பண்ணனும், அவரே வெளிய வருவாரு. அப்ப கூட எங்களை உள்ளே விட்டதில்ல. எனக்கு கூட பார்க்க ஆசைதான் அப்படி என்னதான் அந்த ரூம்ல வச்சிருக்கார்ன்னு.
ஏன்னா இங்க இருக்க பெயிண்டிங்ஸ் வுட் வொர்க் ஈசி சேர் வுட் ஒர்க் சோஃபா வுட் ஒர்க் ராக்கிங் சேர் எல்லாமே ஆன்டிக் பினிஷ்ல சூப்பரா இருக்கும். அந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா அந்த ரூம்லயும் வச்சிருக்கறான்னு பாக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா அண்ணா ரொம்ப கோபக்காரர். அதுக்கு பயந்துட்டே நாங்க யாரும் உள்ள போனதில்ல”
“ஓ. ஓகே”
“நீங்க வேணும்னா உள்ள போய் பாருங்க அண்ணி. எனக்கு என்னவோ உங்கள அலோ பண்ணவாருன்னு தோணுது. உங்கள திட்ட மாட்டாரு என்று நினைக்கிறேன்”
“இல்ல இல்ல, வேண்டாம். ஒருத்தருக்கு ஒன்னு பிடிக்காதுன்னு அதை நம்ம செய்யக்கூடாது. கண்டிப்பா அதை நான் செய்ய மாட்டேன்”
“என்ன அண்ணி, உங்க பேரை சொல்லி உங்க கூட நான் உள்ள வந்து பார்க்கலாம்” என்று நினைத்தேன் என்று சொல்லி சிரித்தாள் அஸ்வினி.
“உனக்கு என்ன? அந்த ரூம் தானே பார்க்கணும். உங்க அண்ணன் கிட்ட பர்மிஷன் கேட்டு நானே உன்னை பார்க்க விடுறேன்”
“தேங்க்ஸ் அண்ணி”
“அண்ணா வரும் வரையில இங்கே உட்கார்ந்து இருக்கீங்களா? இல்ல என் ரூமுக்கு வந்து பாக்கறீங்களா?”
“நான் இங்க தனியா உட்கார்ந்து என்ன பண்ண போறேன், வா” என்று சொல்லி அஸ்வினியுடன் நடந்து சென்றாள் வசுந்தரா.
ஆதித்யாவின் ரூமிற்கு எதிர்ப் பக்கமாக இருந்தது அஸ்வினி மற்றும் அர்ஜுனின் ரூம்.
அர்ஜுனின் ரூமை தாண்டியே அஸ்வினி ரூம் இருந்தது.
அந்த ரூமை கடந்து செல்லும் போது.
“வாங்க அண்ணி என் ரூமையும் பார்த்துட்டு போங்க” என்றான் அர்ஜுன்.
உள்ளே சென்று பார்த்தாள். ஆதித்யாவின் ரூம் போலவே பெரியதாக இருந்தது. ஆனால் அந்த ஆபிஸ் ரூம் மட்டும் அதில் இல்லை.
“அண்ணி போதும் இவன் ரூமை பார்த்தது, வாங்க என் ரூமை பாருங்க” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் அஸ்வினி.
ஸ்மைல் செய்து கொண்டே அவள் பின்னால் சென்றாள் வசுந்திரா.
அவள் ரூம் கதவை திறக்கும் போது.
“அஸ்வினி” என்று தன் அம்மாவின் குரல் கேட்க.
ஆதித்யா படி ஏறி வரும் சத்தம் கேட்டது.
No comments yet.