பாகம் 33
ஓகே நீ தூங்கி ரெஸ்ட் எடு, என்று சொல்லிவிட்டு திரும்பிய ரோஹித்தை.
ஒரு நிமிஷம் ரோஹித் என்றாள் விருத்திகா.
சொல்லு.
எப்படியாவது எங்க அண்ணனை டெல்லிக்கு போக சொல்லுங்க. என்னால எங்க அண்ணனோட கரியர் கிரோத்துக்கு பிரச்சனைனா அது எனக்கு இன்னும் ஸ்ட்ரெஸ் தான்.
சரி நான் கேட்டு பார்க்கிறேன்.
ரெபேக்கா அண்ணி என் கூட இருக்கட்டும். எனக்கு ஓகே. என் வயித்துல வளர குழந்தை மேல சத்தியமா சொல்றேன் இதுக்கு மேல நான் சூசைட் பண்ணிக்கணும் நினைக்க மாட்டேன். ப்ளீஸ், அண்ணா கிட்ட போக சொல்வீங்களா?
ஓகே, என்று சொல்லி விட்டு வெளியே வந்தான் ரோஹித்.
தன் ஃபோனில் தீபக் மற்றும் அந்தப் பெண் இருந்த ஃபோட்டோவை பார்த்துக் கொண்டே லாபி வரை நடந்து வந்தான். அப்போது விஹான் எழுந்து அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு ஃபோனை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
என்ன மச்சி எங்கடா போன? என்றான் விஹான்.
பேஷண்ட் அட்டெண்டர்னு கூப்பிட்டாங்க நீ தூங்கிகிட்டு இருந்த அதனால நான் போனேன்.
மருந்து வாங்கி கொடுத்தியா?
இல்ல மச்சி, விருத்திகா கண்ணு விழிச்சிட்டா பேசணும்னா பேசலாம்ன்னு சொன்னாங்க.
நீ போய் பாத்தியா பேசுனியா?
ஆமா மச்சி.
சரி இரு நான் போய் பார்த்து பேசிட்டு வரேன்.
இல்ல மச்சி நாளைக்கு பேசுறேன்னு சொன்னா. இப்போ சாப்பிட்டு விட்டு தூங்கப் போறாளாம்.
நல்லா இருக்கா இல்ல?
ஆமாண்டா நல்லா இருக்கா.
அதுவே போதும் எனக்கு.
அப்புறம் ஒரு விஷயம்,
சொல்லுடா.
நீ நாளைக்கு டெல்லிக்கு போடா.
நீ என்ன லூசா ஆயிட்டியா. இப்பதானே பேசணும் அவளை விட்டுட்டு போக முடியாதுன்னு, உன் முன்னாடி தானே மெயில் அனுப்பிச்சேன் என்னோட மேனேஜருக்கு.
இல்லடா நீ டெல்லிக்கு போகலனா அவ இன்னும் ஃபீல் பண்ணுவா.
அவளுக்கு தெரிஞ்சா தானே டெல்லிக்கு என்னை போகச் சொல்லி இருக்காங்கன்னு அவ கிட்ட சொல்லாம விட்டுடலாம்.
சாரி மச்சி நான் சொல்லிட்டேன்.
ஏண்டா இப்படி பண்ற.
விருத்திகாவுக்கு சத்தியம் செய்து கொடுத்ததை தவிர மற்ற அனைத்தையும் சொன்னான் ரோஹித்.
ஏன் இப்படி பண்ணனு சொன்னாளா?
டாக்டர் உன்கிட்ட அவ அப்படி பண்றதுக்கு சான்சஸ் இருக்குன்னு சொன்னதா நீயே தானடா என்கிட்ட சொன்ன, அதனால நான் அவகிட்ட அதை பத்தி எதுவும் கேட்கவில்லை.
சரி விடு. அப்புறம் ரெபேக்கா வந்து அவளை ஒரு வாரம் பார்த்துக்கொள்வதற்கு அவள் சம்மதம் சொன்னாளா?
அண்ணி வாரத்துல எனக்கு முழு சம்மதம்னு சொன்னா. போதுமா.?
ஆனா.
மச்சி அவ வயித்துல வளர்ர குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்றா இதுக்கு மேல அப்படி பண்ண மாட்டேன்னு. அப்படியும் நீ அவளை நம்பலைன்னா தான், அவ இன்னும் கஷ்டப்படுவா.
ஓகே மச்சி. நான் டெல்லிக்கு போயிட்டு வரேன். நீயும் ரெபேக்காவும் தான் அவளை பத்திரமா பாத்துக்கணும்.
கண்டிப்பா மச்சி நீ கவலைப்படாதே.
தேங்க்ஸ் டா.
பிறகு இருவரும் லாபியில் தூங்கினார்கள்.
மறுநாள் காலை விஹான் விருத்திகாவை பார்க்க சென்றான்.
எப்படி இருக்க விரு?
சாரி அண்ணா என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள் விருத்திகா.
என்னைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் இப்படி பண்ணிட்ட இல்ல?
அண்ணா, முதல்ல என் வயித்துல வளர குழந்தையை பத்தி யோசிச்சேன் அடுத்ததா நான் உன்னை தான் அண்ணா யோசிச்சேன். நான் போனா என் வயிற்றில் இருக்கும் குழந்தையும் சேர்ந்து போயிடும். ஆனா நீ எப்படி யாருமே இல்லாம தனியா இருப்பேன்னு யோசிச்சேன். ஒரு பாவமும் பண்ணாத உங்க ரெண்டு பேரையும் தண்டிக்க கூடாதுன்னு தான், நான் வெளியே வந்து என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகச் சொல்லி ரோஹித் கிட்ட கேட்டேன்.
கண்கள் கலங்க அவள் தோளை தடவி கொடுத்து சமாதானம் செய்தான் விஹான்.
எனக்கு சத்தியம் பண்ணு, இதுக்கு மேல இந்த முட்டாள் தனமான வேலையை பண்ண மாட்டேன்னு.
சத்தியமா அண்ணா, இனிமே இப்படி யோசிக்கக்கூட மாட்டேன்.
அவளுடைய தலையை கோதி விட்டான் விஹான்.
தன் அண்ணனின் தோளில் ஆதரவாக சாய்ந்து கொண்டாள் விருத்திகா.
அண்ணா, நீ டெல்லிக்கு போயிட்டு வா அண்ணா.
ரோஹித் என்கிட்ட சொன்னான் என்று விஹான் சொன்னதும். சட்டென்று அவன் தோளிலிருந்து எழுந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
நீ ஃபீல் பண்ண கூடாதுன்னு என்னை கம்பெல் பண்ணி போக சொல்றான்.
எனக்கு தெரியும் அவர் சொன்னாதான் நீ கேட்பன்னு.
சிரித்தான் விஹான்.
அதுவரைக்கும் அண்ணி என் கூட இருக்கட்டும், அவங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?
தாராளமா இருக்கட்டும் மா, எங்க ரெண்டு பேருக்கும் எந்த அப்ஜக்ஷனும் இல்ல என்று சொல்லிக் கொண்டே ரெபேக்காவின் அப்பா உள்ளே நுழைய பின்னால் ரெபேக்காவும் அவளுடைய அம்மாவும் வந்தார்கள்.
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் என்றாள் விருத்திகா கண்கள் கலங்க.
இதுல என்னமா இருக்கு நீயும் எங்க பொண்ணு மாதிரி தான் என்றார் ரெபேக்காவின் அம்மா.
அவர்களைப் பார்த்து ஸ்மைல் செய்தாள் விருத்திகா.
எப்படி இருக்க என்று சொல்லி அவள் கையை பிடித்தாள் ரெபேக்கா.
நல்லா இருக்கேன் அண்ணி. என்னால உங்க எல்லாருக்கும் தொல்லை இல்ல?
அப்படி எல்லாம் சொல்லாத விரு. உனக்காக தான் உங்க அண்ணன் முதல்ல என்கிட்ட பேசினாரு. அதனால நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
வாங்கி வந்த பழத்தை விருத்திகாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள் ரெபேக்காவின் அப்பாவும் அம்மாவும்.
விஹான் மற்றும் ரோஹித்தும் ஆஃபீஸ் கிளம்பினார்கள்.
ரெபேக்கா, விருத்திகாவிற்கு ஹாஸ்பிடல்லேயே ஃபுட்டு கொடுத்துடுவாங்க. அட்டெண்டருக்கும் வரும். உனக்கு அந்த ஃபுட்டு புடிக்கலனா சொல்லு நான் ஆர்டர் பண்றேன்.
இல்ல இல்ல அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல நான் பார்த்துக்குறேன் நீ கிளம்பு.
என் தங்கச்சியை பத்திரமா பாத்துக்கோ.
கண்டிப்பா நீ கவலைப்படாதே.
பின்னர் விருத்திக்கா அருகில் சென்ற விஹான். வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு ஆஃபீஸ்க்கு போறேன் மா. இன்னைக்கு டெல்லி போறதா இருந்தா நைட்டு தான் ஃப்ளைட். எல்லாம் பேக் பண்ணிட்டு அதுக்கு முன்னாடி வந்து உன்னை பார்த்து விட்டு போறேன்.
கண்டிப்பா போயிட்டு வா அண்ணா. நானும் அண்ணியும் ஜாக்கிரதையா இருப்போம். ரோஹித் தான் இருக்கார் இல்ல? அதனால நீ எதுக்கும் கவலைப்படாதே என்றாள் விருத்திகா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் -34
அவள் அவ்வாறு சொன்னதை கேட்ட விஹானுக்கு சந்தோஷமாக இருந்தது.
அவளை கட்டிப்பிடித்து, ஜாக்கிரதை மா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் விஹான்.
வெளியே வந்தனர் ரோஹித்தும் விஹானும்.
மச்சி நீங்க இங்கேயே நில்லுடா நான் போய் கார் எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்றான் ரோஹித்.
ரெபேக்காவிடம் எதுவும் காசு கொடுக்காமல் வந்து விட்டோமே என்று நினைத்த விஹான் திரும்ப உள்ளே நடந்தான்.
அண்ணி அண்ணா சாவியை எங்க கொடுத்துட்டு போறாருன்னு கேளுங்க என்று சொல்லி அனுப்பினாள் விருத்திகா.
ஓகே என்று சொல்லி வேகமாகச் சென்றாள் ரெபேக்கா.
காரிடர் திருப்பத்தில் எதிர்பாராமல் எதிர் எதிரே வந்த இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டனர்.
சாரி சாரி என்று இருவரும் சொல்லிக் கொண்டனர்.
விருத்திகா உன்கிட்ட சாவி எங்க குடுத்துட்டு போறன்னு கேட்க சொன்னா?
விமலா ஆன்ட்டி கிட்ட கொடுத்துட்டு போறேன்னு சொல்லு.
சரி நீங்க என்ன மறந்துட்டீங்க திரும்பி வந்து இருக்கீங்க.
உன்கிட்ட காசு கொடுக்காமல் போயிட்டேனே,
அதான் வந்தேன். இந்தா இதுல 5000 இருக்கு. இதுக்கு மேல ஆச்சுன்னா எனக்கு கால் பண்ணு நான் ஜிபே ல அனுப்புறேன். டிஸ்சார்ஜ் பண்றதுக்கு ரோஹித் கிரெடிட் கார்டுல பே பண்ணிடுவான் நான் அடுத்த மாசம் ரோஹித்துக்கு கொடுத்து விடுவேன் என்றான் விஹான்.
ஸ்மைல் செய்தபடி வாங்கிக் கொண்டாள்.
நான் உன்னை ஃபிரண்டா நினைச்சு தான் கேட்கிறேன் தப்பா நினைக்காத,
என்ன சொல்லு.
வேண்டாம் நான் பாத்துக்குறேன் எதுவுமே சொல்லாம, கொடுத்த உடனேயே வாங்கிகிட்டேயே காசை? நீ வேணான்னு சொல்லுவேன் நான் கம்பெல் பண்ணி கொடுக்கணும்னு நினைச்சேன்.
நான் வேண்டாம்னு சொல்லி இருந்தா தான் மூணாவது மனுஷியா ஆகி இருப்பேன். இப்ப நீ கொடுக்கிற காசு உரிமையோடு வாங்கிக்கிறேன், நான் உன் பொண்டாட்டி. அப்படி இருக்கும்போது நான் ஏன் அப்படி எல்லாம் பேசணும்? நீதான் இன்னும் என்னை ஃபிரண்டா மட்டும் நினைக்கிற என்றாள் ரெபேக்கா.
அவள் அவ்வாறு சொன்னதை கேட்டு மிகவும் வருந்தினான்.
சாரிடி என்று சொல்லிவிட்டு, அது பொது இடம் என்று கூட பார்க்காமல் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரெபேக்காவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.
பிறகு யாரோ வருவதை பார்த்துவிட்டு இருவரும் விலகி நின்றனர்.
ஓகே டி எதுவா இருந்தாலும் கால் பண்ணு, பை. ஈவினிங் உங்க ரெண்டு பேரையும் வந்து பார்த்துட்டு தான் போவேன்.
ஓகே டா, டேக் கேர் பை. என்று சொல்லிவிட்டு காசை எடுத்துக் கொண்டு வார்டு ரூமிற்கு வந்தாள் ரெபேக்கா.
ஆபீஸ்க்கு சென்ற விஹான் மேனேஜரை பார்க்கச் சென்றான்.
என்ன மிஸ்டர் விஹான் டெல்லிக்கு போக முடியாதுன்னு எனக்கு மெயில் அனுப்பி இருந்தீங்க.
இல்ல சார் சிஸ்டருக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காங்க. உங்களுக்கே தெரியும் இல்ல எனக்கு வேற யாரும் இல்லைன்னு அதனால என்னால வர முடியாதுன்னு நினைச்சேன். ஆனா இப்போ என் சிஸ்டர் கம்பெல் பண்ணி போக சொல்றா.
என்ன விஹான், முதல்ல வேண்டான்னு மெயில் போட்ட நீங்க உடனே ஓகேன்னு போட்டு இருக்கணும் இல்ல. நீங்க வேண்டாம்னு சொல்லவே நான் வேற ஒருத்தரை அசைன் பண்ணிட்டேன். அதனால நீங்க இங்க இருக்குற வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றார் மேனேஜர்.
சார் அந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு வந்தா என் கரியர்ல குரோத் இருக்கும் சார்.
அது இப்பதான் உங்களுக்கு தெரியுதா சார்?
சாரி சார், என் சிச்சுவேஷன் அப்படி.
ஐ காண்ட் ஹெல்ப் மிஸ்டர் விஹான்.
சார் ப்ளீஸ் சார்.
வேணும்னா நீங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க.
யார்கிட்ட.
உங்களுக்கு பதிலா நான் அசைன் பண்ண ஆள் கிட்ட.
ஓகே சார் யாரை அசைன் பண்ணி இருக்கீங்க?
தீபா.
வாட் தீபாவா?
ஆமாம் ஏன்?
இல்ல சார் அவங்க வேலைக்கு சேர்ந்து சிக்ஸ் மன்த்ஸ் கூட ஆகல அவங்களுக்கு அந்த அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல எப்படி நீங்க அவங்களை செலக்ட் பண்ணிங்கன்னு நெனச்சேன்.
ஓ என் வேலையே நீங்க குறை சொல்றீங்களா?
இல்ல சார் அப்படி இல்ல?
பின்ன வேறென்ன சொல்ல வரீங்க?
சாரி சார், நான் அப்படி மீன் பண்ணல.
ப்ளீஸ் கோ மிஸ்டர் விஹான். நீங்க வேணும்னா அவங்க கிட்ட பேசிக்கோங்க இதுக்கு மேல இந்த விஷயமா என்கிட்ட பேசாதீங்க.
ஓகே சார் சாரி ஒன்ஸ் அகைன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் விஹான்.
அப்போது தீபா லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
எக்ஸ்க்யூஸ் மீ தீபா, என்றான் விஹான்.
எழுந்து நின்று,
சொல்லுங்க விஹான் என்று வழிந்து கொண்டே பேசினாள். ஏற்கனவே அவன் மேல அவளுக்கு ஒரு ஈர்ப்பு.
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
சொல்லுங்க.
இங்க வேண்டாம், கேஃப்பிட்டேரியா போய் பேசலாமா?
ஷியூர், வாங்க போகலாம் என்று சொல்லி அவன் பின்னால் கேண்டேனுக்கு சென்றாள் தீபா.
இரண்டு காஃபியை வாங்கிக் கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்தனர் இருவரும்.
சொல்லுங்க விஹான்.
என் சிஸ்டருக்கு உடம்பு சரியில்ல,
அச்சச்சோ என்ன ஆச்சு?
மனதிற்குள் அவனுடைய பர்சனல் விஷயங்களை அவளிடம் சொல்கிறானே என்று சந்தோஷப்பட்டாள் தீபா.
இல்ல பரவால்ல இப்போ அவ நல்லா தான் இருக்கா, அவ பிரக்னண்டா இருக்கா அதனால,
சரி ஓகே சொல்லுங்க.
அவள தனியா விட்டுட்டு போக முடியாதுன்னு நான் டெல்லிக்கு போகலைன்னு சொன்னேன்.
இப்போது அவளுக்கு நன்றாக புரிந்தது அவன் எதற்காக அவளிடம் பேச வந்திருக்கிறான் என்று. இதுதான் சந்தர்ப்பம் இதை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.
இட்ஸ் ஓகே நான் போய் டெல்லி மீட்டிங்கை பார்த்துக்குறேன் நீங்க உங்க தங்கச்சியை பார்த்துக்கோங்க என்றாள் தீபா.
கரியர் குரோத் ஆகும் இந்த மீட்டிங்க அட்டென்ட் பண்ணா.
சரிதான், ஆனா நீங்க உங்க சிஸ்டரை பாத்துக்கணும் இல்ல? ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட் கரெக்டா?
கரெக்டு தான், ஆனா என் சிஸ்டர் நான் கண்டிப்பா போயே ஆகணும்னு விருப்பப் படுறாங்க.
ஓகே, இப்ப நான் என்ன பண்ணனும் நினைக்கிறீங்க? என்றாள் தீபா.
மேனேஜர் உங்களுக்கு ஓகேன்னா என்னை டெல்லி அனுப்புறதுக்கு சரின்னு சொல்றாரு. என்றான் விஹான்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.