பாகம் -31,32

Vaishnavi Vijayaraghavan | 29 Apr 2026 | Share

பாகம் – 31


 விஹான் அவ்வாறு சொன்னதும் ரெபேக்காவின் அப்பாவிற்கு என்னவோ போல இருந்தது. தான் அவனை மாப்பிள்ளையாகத் தான் பார்த்தோம் ஆனால் அவன் நம்மை அப்பா ஸ்தானத்தில் பார்த்து இருக்கிறானே இவனை விட நல்ல பையன் தன் மகளுக்கு கிடைக்க மாட்டார்கள் என்று நினைத்து அவனுடைய தோளை தடவிக் கொடுத்து.


ரொம்ப சந்தோஷம் பா, நீ இப்படி பேசறது. உன்னோட தங்கச்சி நல்லா ஆகி வந்த பிறகு உங்களோட நிச்சயம் கல்யாணம் பத்தி பேசலாம் என்றார்.


சரிங்க அங்கிள், லேட் ஆகுது நீங்களும் ரெபேக்காவும் கிளம்புங்க என்றான் விஹான்.


இல்ல மாப்ள உங்க கூட இங்கேயே தங்கப் போறதா சொன்னா ரெபி.


இல்ல அங்கிள் வேண்டாம், நாங்க ரெண்டு பேரும் இருக்கோமே நாங்க பார்த்து கொள்கிறோம். நீங்க போங்க.


ரெபேக்காவிடம் விஹான்.


இப்போ வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு காலைல முடிஞ்சா வா. ஏன்னா நான் ஆஃபீஸூக்கு போய் டெல்லிக்கு வரலன்னு சொல்லிட்டு இன்னும் ஒன் வீக்கிற்கு மெடிக்கல் லீவு கேட்டு வரனும் என்றான்.


நான் இன்னைக்கே இருக்கேனே. விரு க்கு ஏதாவது வேணும்னா, லேடீஸ் கூட இருந்தா கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் இல்ல?


நீ சொல்றது சரி தான், ஆனா இப்போதைக்கு அவளை வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணல. அப்போது தான் லேடீஸ் இருந்தா பெட்டர். ஸோ இன்னைக்கு நீ வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வா.


ஓகே டா, அப்புறம் இன்னொன்னு.


என்ன?


டெல்லிக்கு போகப் போறதில்லைன்னு கண்டிப்பா சொல்ல போறியா?


விரு இப்படி இருக்கிற நிலைமையில நான் எப்படி அவளை தனியா விட்டுட்டு போவேன்.


 நான் தான் இருக்கேனேடா நான் பார்த்துக்குவேன் இல்ல?


 நானும் ரோஹித்தும் வீட்டிலேயே இருக்கும்போது இந்த மாதிரி நடந்துச்சு. நீ மட்டும் தனியா இருந்து எப்படி அவளை பார்த்துக்க முடியும்.


 அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள் ரெபேக்கா.


 ஓகே நான் நாளைக்கு வரேன் என்று சொல்லிவிட்டு ரெபேக்கா கிளம்பினாள்.


 அவர்கள் சென்றதும், வெயிட்டிங் லாபியில் படுத்துக்கொண்டனர் ரோஹித் மற்றும் விஹான்.


 இரண்டு முறை மருந்து மாத்திரைகள் வேண்டும் என்று கால் வந்தது. இரண்டாவது முறை வாங்கி கொடுத்துவிட்டு என் சிஸ்டரை பார்க்கலாமா என்று கேட்டான் விஹான்.


 இல்ல அவங்க தூங்கிகிட்டு இருக்காங்க. 


 ஓகே சிஸ்டர்.


 அவன் எழுந்த அப்புறம் வேணும்னா சொல்றேன், வந்து பேசிட்டு போங்க. லாபி லேண்ட் லைன்ல பேஷன்ட் நேம் சொல்லி அட்டெண்டரை வர சொல்றோம். அப்போ வந்து பாருங்க.


 ஓகே சிஸ்டர் என்று சொல்லிவிட்டு லாபிக்கு சென்றான் விஹான்.


 ரோஹித் லேப்டாப்பில் வேலையை முடித்தவுடன், அவனிடமிருந்து லேப்டாப் வாங்கி தன்னுடைய இமெயிலில் இருந்து அவனுடைய மேனேஜருக்கு மெசேஜ் செய்தான் விஹான்.


 மெடிக்கல் லீவ் வேண்டுமென்றும், தன்னால் டெல்லி மீட்டிங்கிற்கு செல்ல முடியாது என்றும் அந்த மெயிலில் எழுதி அனுப்பினான். மிகவும் டயர்டாக இருந்ததால் அப்படியே தூங்கி விட்டான். அவன் மடியில் இருந்து மெதுவாக லேப்டாப்பை எடுத்து மூடி வைத்தான் ரோஹித்.


 பின்னர் தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்.


 அப்போது லாபி ரிசப்ஷனில் பேஷன்ட் விருத்திக்கா அட்டெண்டர் என்று அழைத்தனர். மருந்து தான வாங்கி வர வேண்டும் தூங்குபவனை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து ரோஹித் சென்றான்.


 நர்ஸ் அவனிடம்,


 நீங்க யாரு? பேஷண்டோட அண்ணன்னு சொல்லி ஒருத்தர் வந்தாரே அவர் எங்க? என்றார்.


 நான் அவனோட ஃப்ரெண்ட் தான். அவன் தூங்கிட்டான், அதான் அவனை எழுப்பாமல் நான் வந்தேன். மருந்து தானே வாங்கிட்டு வரணும் சொல்லுங்க நான் வாங்கிட்டு வரேன்.


 இல்ல சார் மருந்து வேண்டாம் அவங்க கண் விழிச்சிருக்காங்க. அவர்தான் அவங்கள பார்க்கணும்னு கேட்டாரு அதனாலதான் வரச் சொல்லி சொன்னேன்.


 ஓகே நான் போய் அவனை எழுப்பி வர சொல்றேன்.


 நீங்க வேணும்னா பார்த்து பேசிட்டு போறீங்களா ?


 அவங்க கிட்ட கேளுங்க ரோஹித் தான் வந்து இருக்கான் பேசுறீங்களான்னு அவங்க ஓகேன்னு சொன்னா நான் வந்து பேசிட்டு போறேன் இல்லன்னா நான் போய் அவங்க அண்ணனை வர சொல்றேன்.


 ஓகே சார் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நர்ஸ் விருத்திகாவிடம் பேசிவிட்டு வெளியே வந்தார்.


 சார் அவங்க உங்களை தான் பார்க்கணுமாம்.


 ஓகே என்ற சொல்லிவிட்டு உள்ளே செல்ல வந்தவனை,


 ஒரு நிமிஷம் சார்.


சொல்லுங்க சிஸ்டர்.


 உங்க செப்பல் இங்க கழட்டி வச்சிட்டு, இந்த சாக்ஸ் அப்புறம் மேலே இந்த ஃபுல் கவரேஜ் கோட் அப்புறம் தலையில இந்த கேப், இதெல்லாம் போட்டுக்கிட்டு தான் இந்த வார்ட் குள்ள போகணும்.


 ஏன் விருத்திகாவுக்கு என்ன ஆச்சு?


 இல்ல சார் இது அவங்களுக்காக மட்டும் சொல்றது கிடையாது. உள்ள நிறைய பேஷண்ட்ஸ் இருக்காங்க. நீங்க வெளியே இருந்து வர்றதுனால மத்தவங்களுக்கு ஏதாவது இன்ஃபெக்சன் ஆயிட போகுது என்பதற்காக தான் என்றார் நர்ஸ்.


ஓகே சிஸ்டர், என்ற சொல்லிவிட்டு அவர் சொன்னபடி டிரஸ் செய்து கொண்டு உள்ளே சென்றான் ரோஹித்.


 அவன் உள்ளே சென்றதும், படுத்து இருந்த விருத்திகா மெதுவாக எழுந்து அந்த பெட்டில் அமர்ந்தாள்.


 இல்ல இல்ல நீ படு விருத்திகா. ஸ்ட்ரெயின் பண்ணிக்காத.


 அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்ப பரவாயில்ல.


 பெயின் ரொம்ப இருக்கா?


இல்ல ரோஹித், சாரி ரோஹித்.


 எதுக்கு என்கிட்ட சாரி சொல்ற விருத்திகா.


 சம்பந்தமே இல்லாம உங்களை தொல்லை பண்றேன்னு அதுக்காக.


அப்படி எல்லாம் நான் நினைக்கல விருத்திகா.


 தேங்க்ஸ் ரோஹித். அண்ணா என்ன சொன்னான்?


 ரொம்ப வருத்தப்பட்டான். நீ இப்படி பண்ணுவேன்னு அவன் சத்தியமா நினைக்கல. அதனால ரொம்ப டென்ஷனா இருக்கான். அவனுக்கு ஆஃபீஸ் விஷயமா நாளைக்கு டெல்லி போக வேண்டி இருந்தது, உனக்காக அதை கேன்சல் பண்ணிட்டான்.


 ஐயோ எதுக்கு?


 என்ன உன்னை எப்படி இந்த நிலைமையில விட்டுட்டு அவன் ஆபீஸ் போவான். அதுவும் ஒரு வாரம் டெல்லிக்கு எப்படி போவான்.


 எனக்காக அண்ணா அப்படி பண்ணா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.


 அதுக்கு நாங்க ஒரு ஐடியா பண்ணி இருந்தோம்.


 என்ன? என்றாள் விருத்திகா 


 ரெபேக்காவ வர சொல்லாம்னு இருந்தோம். அவளும் வரத்துக்கு ஓகே தான் சொன்னா. ஒரு வாரம் உனக்கு துணையாக உங்க வீட்ல இருக்கிறதா பிளான் என்றான் ரோஹித்.

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


பாகம் 32 



ஆனா நீ அதுக்குள்ள இப்படி பண்ணிட்ட, அதனால உங்க அண்ணா அவள வர வேண்டாம்னு சொல்லிட்டான். அவனே டெல்லிக்கு போகாமல் மெடிக்கல் லீவ் போட்டுட்டு உன்கூட இருக்கிறதா முடிவு பண்ணிட்டான் என்றான் ரோஹித்.


 இல்ல ரோஹித்தை நீங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்.


என்னை என்ன சொல்ல சொல்ற?


 அண்ணாவை டெல்லிக்கு போக சொல்லுங்க.


 நான் சொன்னா அவன் கேட்க மாட்டான்.


 நீங்க சொன்னா தான் கண்டிப்பா கேட்பாரு.


 சரி நீ ஏன் இப்படி பண்ண அதை முதல்ல சொல்லு.


 என்ன ரோஹித் நீங்களே என்னை புரிஞ்சுக்கலைன்னா எப்படி?


 தீபக் கண்டிப்பா வந்துருவான், சாரி வந்துருவாரு. அதுக்காக நீ ஏன் இப்படி பண்ற?


 இல்ல ரோஹித். எனக்கு தீபக் பத்தி தெரியும். அவன் ஒரு முடிவு பண்ணிட்டா அதிலிருந்து பின் வாங்க மாட்டான். 


 எல்லா விஷயத்திலும் அது நடக்காது. அவன் உன்னை உண்மையா லவ் பண்றான். உன்னோட கல்யாணத்து அன்னைக்கே நான் பார்த்தேன். அதனால அவனால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது.


 அந்த நம்பிக்கையில் தான் நானும் இருந்தேன். ஆனா இப்ப அந்த நம்பிக்கை போயிடுச்சு,


எதனால?


அவனுக்கு இப்ப என் மேல காதல் இல்லை.


என்ன சொல்ற?


 கையை நீட்டினாள் விருத்திகா.


 ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான் ரோஹித்.


 எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க.


 என்ன?


 நான் இப்ப சொல்ல போறதை எந்த காரணத்தை கொண்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் முக்கியமா எங்க அண்ணன் கிட்ட சொல்ல மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க.


 என்ன சொல்ற விருத்திகா எனக்கு ஒண்ணுமே புரியல.


 நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ணீங்கன்னா நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லுவேன். 


 வேறு வழி இன்றி,


 ஓகே ப்ராமிஸ் நான் சொல்லல என்ன விஷயம் சொல்லு.


 உங்க ஃபோனை ஒரு நிமிஷம் கொடுங்க என்றாள்.


 பிறகு ஃபேஸ்புக்கில் ஏதோ ஒரு ஐடியை போட்டு தேடி ஒரு புகைப்படத்தை காட்டினாள்.


 அதில் தீபக் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தான். அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தான். அந்தப் பெண் தீபக்கின் முகத்தோடு முகம் வைத்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்து இருந்தாள்.


 அதை ரோஹித்திடம் காட்டினாள் விருத்திக்கா.


 அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ரோஹித்.


 இந்த போட்டோவை பார்த்துவிட்டு நான் எப்படி, அதான் உடனே பிளேடை எடுத்து என் கைய அறுத்துகிட்டேன். ஆனா கொஞ்ச நேரத்துலயும் வயித்துல வளர குழந்தையை நெனச்சு சாகக்கூடாது என்று முடிவு பண்ணி வெளியே வந்து உங்ககிட்ட சொன்னேன். 


யார் இந்த பொண்ணு.


 தெரியல, ஆனா ஒன்னு மட்டும் தெரியுது. இந்த பொண்ணு ரொம்ப வசதியானவ. அதனால தீபக் பண்ண நினைக்கிற பிசினஸுக்கு இவளோட சேர்ந்தா தான் முடியும்னு நெனச்சு என்னை கழட்டி விட்டிட்டான்.


 யாராவது பிரண்ட்ஸ்ஸா இருக்கலாம், நீ ஏன் அதை தப்பா நினைக்கிற.


 இல்ல ரோஹித், பிரண்ட்ஸா இருந்தா யாரும் இந்த மாதிரி போட்டோ எடுக்க மாட்டாங்க. தோளில் வேணும்னா கை போட்டு இருப்பாங்களே தவிர யாரும் இடுப்புல கை போட மாட்டாங்க. தீபக் அந்த பொண்ணோட இடுப்புல கை வச்சுட்டு இருக்கான். 


 இங்க இருந்து போன இந்த நாலு நாள்ல தீபக்குக்கு வேற லவ் வந்து இருக்குன்னு சொல்றியா?


தெரியல, அவன் முதல்ல ரொம்ப பொசசிவ். அது உங்களுக்கே தெரியும்.


ஆமாம்.


 நானும் தான். அது அவனுக்கு நல்லாவே தெரியும்.


ஸோ.


 நான் இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கணும் என்பதற்காகவே வேணும்னே அந்த பொண்ணு கிட்ட சொல்லி ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணி என்னை டேக்(tag) பண்ணி இருக்கான்.    


 அன்னைக்கு உங்க கூட ஹாஸ்பிடல் போக சொல்லும் போதே எனக்கு தெரியும். 


 அது எப்படி லவ் பண்றவங்களால அடுத்த நிமிஷம் விட்டுட முடியும்னு நினைக்கிற?


 லவ் பண்ணி இருந்தா தானே விட முடியாது.

 இன்ஃபேக்சுவேஷனா இருந்தா?


 எந்த வயசுல இன்பாக்சுவேஷன் வரும்னு நினைக்கிறேன் நீ?


 அதுக்கு வயசு இருக்கா என்ன?


 நீ அவசரப்பட்டு முடிவெடுக்கிறியோன்னு தோணுது. 


 இல்ல ரோஹித். இதுக்கு மேல தீபக் வந்து என் கூட சேர்ந்து வாழ்றேன்னு சொன்னாலும் நான் முடியாது என்று தான் சொல்ல போறேன்.


 தயவு செஞ்சு இந்த விஷயத்தில் அவசரப்படாத விருத்திகா.


இல்ல ரோஹித், நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை சொல்றேன்.


 இந்த முடிவால பாதிக்கப்பட்ட போறது நீ மட்டும் இல்லை, உன் வயிற்றில் வளருர குழந்தையும் தான் அதை முதலில் புரிஞ்சுக்கோ.


 அதனாலதான் இப்பவே இந்த முடிவு எடுக்கிறேன்.


 என்ன சொல்ற?


 தீபக் திரும்பி வந்து எங்களோட வாழ்ந்து, நாளைக்கு மறுபடியும் அவனுக்கு பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் வந்து. அப்போ என்னால சப்போர்ட் பண்ண முடியாத நிலைமையில் இருந்தா மறுபடியும் விட்டுட்டு போயிடுவான். இப்பவாது என் வயித்துல இருக்க குழந்தைக்கு அப்பா எப்படி இருப்பான்னு தெரியாது. நாளைக்கு அவன் கொஞ்ச நாள் கூட இருந்துட்டு விட்டுட்டு போனான்னா என்னோட சேர்ந்து என் குழந்தையும் அவனோட அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கும். அந்த நிலைமையை குழந்தைக்கு தர விரும்பல. அவனோட முகத்தையே என் குழந்தைக்கு காட்ட மாட்டேன் என்றாள் விருத்திகா.


 சரி ஏன் இந்த விஷயத்தை உங்க அண்ணன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்ற?


 நான் இப்படி தனியா இருக்கும்போது எப்படி எங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்குவான். அவனுக்கு கல்யாணம் முடிகிற வரைக்கும் சொல்ல வேண்டாம். அதுக்கு அப்புறமா நானே சொல்றேன்.


 ஆனா இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சு நான் சொல்லாம இருக்கேன்னு தெரிஞ்சா அவன் ரொம்ப வருத்தப்படுவானே.


 அவனோட நல்லதுக்கு தான் நீங்களும் நானும் ஆசை படுவோம். அது நடக்கணும்னா என்னோட ப்ராமிஸ நீங்க பிரேக் பண்ண கூடாது.


 ஓகே, ஆனா எதுக்கும் நீ ஒரு முறை யோசிச்சா நல்லா இருக்கும்னு தோணுது.


 ஸ்மைல் செய்தாள் விருத்திகா அந்த சிரிப்பில் அவள் முடிவில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிந்தது ரோஹித்திற்கு.


 ஓகே நான் போய் உங்க அண்ணன அனுப்பட்டுமா?


 இல்ல இல்ல வேண்டாம் நாளைக்கு நான் பேசிக்கிறேன். நானே உங்கள கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்லணும்னு நினைச்சேன். 


ஆனா அண்ணன் இருக்கும்போது எப்படி உங்களை கூப்பிட்டு பேசறதுன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க என்றாள் விருத்திகா.


தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.