பாகம்-27,28

Vaishnavi Vijayaraghavan | 28 Apr 2026 | Share

பாகம் 27 


 விருத்திகா வெளியே வந்தவுடன்,


 போலாமா என்றான் விஹான்.


 இல்ல அண்ணா, டாக்டர் உன்னை வரச் சொன்னாங்க.


அப்படியா, சரி நீ இங்க வெயிட் பண்ணு நான் பார்த்துட்டு வரேன் என்று சொல்லி உள்ளே சென்றான் விஹான்.


ரோஹித் அமர்ந்து இருந்த சேரின் பக்கத்து சேரில் அமர்ந்தாள் விருத்திகா.


 ஏதாவது சாப்பிடுறீயா இல்ல குடிக்கிறீயா விருத்திகா? என்றான் ரோஹித்.


 இல்ல வேண்டாம் ரோஹித் என்று சொன்னாலும் அவளுக்கு பசி இருந்தது. தன் அண்ணன் வந்த உடன் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து காத்துக் கொண்டிருந்தாள் விருத்திகா.


 அவள் முகத்தைப் பார்த்தே அவனுக்கு தெரிந்து விட்டது அவளுக்கு பசிக்கிறது என்று. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து கேண்டீனுக்கு சென்று மூன்று மாதுளை ஜூஸ் வாங்கி வந்தான் ரோஹித்.


 எடுத்து வந்தவன் அவளிடம் ஒரு ஜூஸ் டம்பளரை கொடுத்தான்.


 இல்ல ரோஹித் எனக்கு வேண்டாம்.


பிடி விரு, முதல்ல குடி என்றான் ரோஹித்.


 முதல்முறையாக அவளை விரு என்று அழைத்தான் ரோஹித்.


 எதுவும் பேசாமல் அவனிடமிருந்து அந்த ஜூஸை வாங்கி குடித்தாள் விருத்திகா.


 உன் முகத்தை பார்த்தாலே தெரியுது உனக்கு எவ்வளவு பசி இருக்குன்னு. என்கிட்ட சொல்றதுக்கு ஏன் தயங்குற?


 இல்ல அவ்வளவு எல்லாம் பசி இல்லை.


 ஸ்மைல் செய்தான் ரோஹித்.


 சரி பரவாயில்லை, குடி என்று சொல்லிவிட்டு, விஹான் வந்தவுடன் அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காக இரண்டு ஜுஸ் டம்பளரை வைத்துக் காத்துக் கொண்டிருந்தான் ரோஹித்.


 டாக்டரிடம் பேசிவிட்டு வெளியே வந்தான் விஹான்.


 வெளியே வரும்போது மிகவும் சோகமான முகத்துடன் வந்தான். பிறகு விருத்திகா அதை பார்த்து விடுவாள் என்று நினைத்து முகத்தை சரி செய்து கொண்டு தன் கர்ச்சிஃப்பினால் முகத்தை துடைத்துக்கொண்டு போகலாம் வாங்க என்று சொன்னான் இருவரையும் பார்த்து. அவன் முகம் மாறியதையும் அதை சரி செய்து கொண்டதையும் பார்த்து விட்டான் ரோஹித். விருத்திகா முன்னால் எதையும் கேட்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டான்.


விஹானிடம் ஒரு ஜூசை கொடுத்து விட்டு தானும் குடித்தான் ரோஹித்.


 காரில் ஏறிய உடன் விருத்திகா விஹான் இடம் பேசினாள்.


 அண்ணா டாக்டர் என்ன சொன்னாங்க?


 நீ ரொம்ப வீக்கா இருக்கியாம், நல்லா ஹெல்தியா சாப்பிட சொன்னாங்க. 


 ஓ அவ்வளவுதானா நான் கூட என்னமோ ஏதோ ஒன்னு பயந்துட்டேன்.


 ஏன் பயப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன சொன்னாங்க டாக்டர்?


 இல்ல இல்ல ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம் னு சொன்னாங்க, அது குழந்தையோட ஹெல்த் பாதிக்குமாம். ஸ்டிரெஸ் குறைப்பதற்காக என்னை ஏதாவது வேலைக்கு போக சொன்னாங்க.


 இந்த டைம்ல நீ எந்த வேலைக்கு போக முடியும்?


 ஆன்லைன்லயோ இல்ல ஸ்கூல்ல ஏதாவது ஒரு வேலை பண்ண சொன்னாங்க. அப்பதான் என்னால டிப்ரஷன்ல இருந்து வெளியே வர முடியுமாம்.


 என்னடா மச்சி டாக்டர் எப்படி சொல்லி இருக்காங்க என்றான் ரோஹித்.


 ஆமா மச்சி என்கிட்டயும் அதே தான் சொன்னாங்க.


 ஓ உங்ககிட்டையும் சொன்னாங்களா அண்ணா.


 ஆமாம்மா.


 அண்ணா பசிக்குது போற வழியில லஞ்ச் சாப்பிட்டுட்டு போகலாமா?


 நான் கேட்டதுக்கு பசிக்கலைன்னு சொன்ன?


 சிரித்தாள் விருத்திகா.


 அப்ப என்னை இன்னும் மூணாவது மனுஷனா தான் நினைக்கிற இல்ல?


 ஐயோ அப்படியெல்லாம் இல்ல ரோஹித்.


 எனக்கு எங்க அண்ணனையும் தீப்பக்கையும் தவிர வேற ஒருத்தர பிடிக்கும்னா அது நீங்க தான். உங்கள மாதிரி கேர் எடுத்துகிறவர்களை நான் பார்த்ததே இல்லை.


 ஸ்மைல் செய்தான் ரோஹித்.


 இவர்கள் இவ்வளவும் பேசும்போது அமைதியாகவே இருந்தான் விஹான்.    


 என்னடா மச்சி சைலன்டா வர?


 ஒன்னும் இல்லடா லைட்டா தலை வலிக்குது?


 ஏதாவது மாத்திரை போட்டுக்கிறீயா இல்ல டாக்டரை பார்க்கலாமா?


 இல்ல இல்ல டாக்டர பாக்குற அளவுக்கு எல்லாம் ரொம்ப அதிகமா எல்லாம் பெயின் இல்லை. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.


அதற்குப் பின் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.


அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் விஹான்.


 வீட்டிற்கு சென்றவுடன்,


 விஹான் இறங்கி தன் ரூமிற்கு சென்றான். 


 காரை எடுத்து கிளம்ப இருந்த ரோஹித்திடம்,


 ஒரு நிமிஷம் இருங்க வந்துடுறேன் என்று மிக மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் விருத்திகா.


 எதற்கு இப்படி சொல்கிறாள் என்று நினைத்து காரை விட்டு விட்டு வெளியே வந்து நின்று கொண்டு இருந்தான் ரோஹித்.


 உள்ளே சென்ற தன் அண்ணனிடம் விருதிக்கா,


 அண்ணா ஃபைல் கார்லயே வச்சுட்டேன் எடுத்துட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். 


இரு நான் போய் எடுத்துட்டு வரேன் என்று சோஃபாவில் இருந்து எழுந்தவாறு சொன்னான் விஹான்.  


 இல்ல அண்ணா வேண்டாம் நீங்க உட்காருங்க நான் போய் எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வெளியே நின்று கொண்டிருந்த ரோஹித் இடம் போய் பேசினாள் விருத்திகா.


சொல்லு விருத்திகா, 


 நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல, உங்களுக்கே இது தெரிஞ்சிருக்கும். என் அண்ணன் ஏன் இப்படி இருக்காருன்னு தெரியல. கண்டிப்பா டாக்டர் ஏதோ பெரிய விஷயம் சொல்லி இருக்கிறார் அவர் கிட்ட, அதனால ஆஸ் எ ஃபிரண்டா நீங்க அண்ணா கிட்ட பேசுங்க.


 இல்ல நானும் கவனிச்சேன் நானே பேசலாம் தான் நினைச்சேன் வீட்டுக்கு போய் கால் பண்ணி பேசலாம் என்று நினைத்தேன்.


இல்ல, நீங்க இப்பவே அவர் கிட்ட நேரா பேசுங்க.

அண்ணா ரிலாக்ஸா இருக்கணும்னா முடிஞ்சா நீங்க அவர் கூட இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணிடுங்க.


இல்ல வேண்டாம், நான் பேசிட்டு போயிடறேன். ஏற்கனவே உனக்கும் தீபக்கிற்கும் பிரச்சனை இந்த நேரத்தில நான் இங்கே ஸ்டே பண்ணி இன்னும் உனக்கு பிரச்சனை ஆகுறதை விரும்பல.


நீங்க அவன் பேசின ஆடியோ மெஸேஜை கேட்டீங்க இல்ல? அவன் திரும்ப வரமாட்டான். எனக்கு அவன பத்தி நல்லா தெரியும். இருந்தாலும் மனசோரத்தில ஏதோ ஒரு நம்பிக்கை அதையும் தாண்டி ஒரு தப்புமே பண்ணாத என் அண்ணனையும் என் வயிற்றில் வளரும் குழந்தையையும் நான் கஷ்டப்படுத்த கூடாது என்ற ஒரே ஒரு எண்ணத்தினால தான் நான் இன்னும் இருக்கேன் என்றாள் விருத்திகா.


ஏன் விரு இப்படி எல்லாம் பேசுற? என்றான் ரோஹித். 

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


பாகம் 28



ரோஹித், நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?


என்ன சொல்லு?


 தயவுசெஞ்சு என்னை விரு ன்னு கூப்பிடாதீங்க.


சாரி, ஏதோ தெரியாம, இப்பதான் நான் அப்படி, இது தான் இரண்டாவது முறை நான் அப்படி கூப்பிடறேன்னு நினைக்கிறேன்.


 அச்சச்சோ தயவு செஞ்சு சாரி எல்லாம் சொல்லாதீங்க. நீங்க அப்படி கூப்பிட்டா எனக்கு என் தீபக் ஞாபகம் வருது. அவன் எப்படி எல்லாம் இருக்கணும் நான் நினைச்சேனோ அப்படியெல்லாம் நீங்க நடந்துக்கிறீங்க. அதனாலதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுக்காகத்தான் அப்படி கூப்பிடாதீங்கன்னு சொன்னேன்னே தவிர மத்தபடி வேற எதுவும் இல்லை.


 இட்ஸ் ஓகே ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.


 சரி நீங்க போய் அண்ணா கிட்ட பேசுங்க நான் என்னோட ரூமுக்கு போறேன் என்றாள் விருத்திகா. 


 ஓகே என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் ரோஹித்.


 விருத்திகா அவளுடைய ரூமுக்கு சென்றவுடன்,


 விஹானிடம் பேச அவனுடைய ரூமுக்கு சென்றான் ரோஹித்.


ஆனால் அதற்குள் அவன் தூங்கி விட்டிருந்தான்.


வெளியே வந்து விருத்திகாவிடம்.


விஹான் தூங்கிட்டான், நான் போய் என் ஆஃபீஸ் வேலையை முடிச்சிட்டு நைட்டு வரட்டுமா? என்றான் ரோஹித்.


இல்ல ரோஹித், உங்களால முடியும்னா இங்கிருந்தே வேலை பண்றீங்களா? ஏற்கனவே தீபக்னால நான் டென்ஷனா இருக்கேன் இப்ப என்னோட அண்ணாவுக்கும் ஏதோ பிரச்சனைன்னா என்னால தாங்க முடியாது. தலைவலின்னு தான சொன்னாரு, கொஞ்ச நேரத்தில தூங்கி எழந்திடுவாரு, உங்க கிட்ட மட்டும் தான் என்னோட அண்ணன் மனசை விட்டு பேசுவாரு அதனால தான் உங்கள தொல்லை பண்றேன், சாரி.


அச்சோ ஏன் சாரி எல்லாம் சொல்ற விருத்திகா.

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அவன் மேல எனக்கும் அக்கறை இருக்கு. ஸோ டோண்ட் ஒரி நான் பார்த்துக்கிறேன் என்றான் ரோஹித்.


தேங்க்ஸ் ரோஹித்.


டோண்ட் மென்ஷன், நான் போய் வீட்ல இருந்து லேப்டாப் எடுத்து வந்திடறேன். ஒர்க் ஃபரம் ஹோம் பண்ணனும் இல்ல?


ஓகே ரோஹித், சீக்கிரமா வந்திடுங்க.


ஓகே ஷியூர், டோண்ட் ஒரி என்று சொல்லிவிட்டு சென்றான் ரோஹித்.


அடுத்த அரைமணி நேரத்தில் விஹானின் வீட்டிற்கு வந்தான் ரோஹித்.


அப்போதும் விஹான் தூங்கிக் கொண்டிருந்தான்.


ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டு தன் லேப்டாப்பை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான் ரோஹித்.


 டீ காஃபி ஏதாவது குடிக்கிறீங்களா? போடட்டுமா? என்று கேட்டாள் விருத்திகா.


இல்ல வேண்டாம். நீ போய் வேணும்னா தூங்கு இல்ல ரெஸ்ட் எடு.


 ஓகே உங்களுக்கு ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்றாள் விருத்திகா.  


 தீபக்கிற்கு கால் செய்து பார்த்தாள். தி நம்பர் இஸ் நாட் ரீச்சபிள் என்று வந்தது. பெருமூச்சு விட்டபடி தன் ஃபோனில் ஜாப் வேகன்ஸி மற்றும் லிங்க்டுனில் வேலை தேடினாள். டீச்சிங் ஜாப் தான் பெஸ்ட் என்று நினைத்து அந்த பிரிவில் தேடினாள். 


இரண்டு மூன்று ஸ்கூல்களில் மேத் டீச்சருக்கான வேலை இருந்தது. தனது ரெஸ்யூமை ரெடி செய்து ஈமெயிலில் அப்லோடு செய்யலாம் என்று நினைத்து அந்த ஸ்கூல் டீடைல்ஸை விவரங்களை மட்டும் தனியாக எடுத்து எழுதிக்கொண்டாள்.

பின்னர் படுத்து தூங்கி விட்டாள்.


வேலை செய்து கொண்டிருந்தான் ரோஹித். அப்போது தூங்கி எழுந்து வெளியே வந்தான் விஹான்.


மச்சி, நீ எப்போ டா வந்த? என்றான்.


 நான் எப்படா போனேன் வரத்துக்கு? இங்கே தான் டா இருக்கேன்.


 என்னையும் விருவையும் இறக்கி விட்டுட்டு நீ வீட்டுக்கு போகலையா?


 இல்ல மச்சி ஏதோ விஷயத்துக்காக நீ டல்லா இருக்குன்னு தெரிஞ்சிருச்சு என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு காரை பார்க் பண்ணி விட்டு வந்தேன் அதனால் என் வீட்டுக்கு போய் லேப்டாப் எடுத்துட்டு வந்து நீ தூங்கி எழுந்துக்கிற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு நினைச்சேன்.


விரு? அவ எதுவும் சொல்லலையா நீ இங்க இருக்கறதுக்கு?


இல்ல மச்சி, இன்ஃபேக்ட் அவ தான் இங்க இருக்க சொன்னா.


 ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு விருத்திகா தூங்குகிறாளா என்று பார்த்துவிட்டு வந்தான் விஹான்.


பின்னர் ரோஹித்திடம் வந்து


மச்சி, ஒரு நிமிஷம் என் ரூமுக்கு வாடா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்றான் விஹான்.


 என்னடா என்ன ஆச்சு?


 சொல்றேன் வா.


 ரூமுக்கு சென்று கதவை சாத்திவிட்டு,


சொல்லுடா, நான் அப்பவே நினைச்சேன் ஏதோ பிரச்சனை இருக்குன்னு. டாக்டர் என்ன சொன்னாங்க?


 செகண்ட் ஸ்டேஜ் ஆப் டிப்ரஷன்ல இருக்காளாம் விருத்திகா.


அதனால எதாவது பிரச்சனையா?


 ஆமாண்டா.


என்ன?


 ஸ்டிரெஸ் அண்ட் டிப்ரெஷன் அதிகமாக அதிகமாக சூசைடல் தாட்ஸ் கூட வருமாம்.


வாட்?


 ஆமாண்டா. டாக்டர் அப்படித்தான் சொன்னாங்க.


 இப்ப என்னடா பண்றது.


 ரெண்டு வழி தான் நம்ம கிட்ட இருக்கு.


என்ன?


 ஒன்னு அவன தேடி கண்டுபிடிக்கணும் இல்ல இவளுக்கு டைவெர்ஷன் கொடுக்கணும்.


 அதான் டாக்டர் சொன்னாங்க வேலைக்கு போகலாம்னு சொன்னாளே.


வேலை எல்லாம் ஈஸியா கிடைச்சிடுமாடா?

 அதுவும் இந்த நிலைமையில் எப்படி அவ வேலைக்கு போவா?


 நீ சொல்றதும் சரிதான் ஆனா என்ன பண்றது, வேற ஆப்ஷன் இல்லையே நம்மளால தீபக்கை தேடி கண்டுபிடிக்க முடியாதே.


 அதான் எனக்கும் ஒன்னும் புரியல. எனக்கு நாளைக்கே கண்டிப்பா ஆபீஸ் போயே ஆகணும். ஆபீஸ் விஷயமா ஒன் வீக் டெல்லி போக வேண்டி இருக்கு. இந்த நிலைமையில் இவளை வீட்ல தனியா விட்டுட்டு போகவும் பயமா இருக்கு.


 நான் ஒன்னு சொல்லவா?


 என்ன?


ரெபேக்கா கிட்ட ஹெல்ப் கேளு.


 என்னடா லூசு மாதிரி பேசுற. அவ என்ன பண்ண முடியும்.


 நான் சொல்றத முழுசா கேளு.


சரி சொல்லு.


 மினிமம்மா ஒன் வீக் ஆகும் விருத்திகாவிற்கு வேலை கிடைக்க. அதுவரைக்கும் நீயும் இங்கே இருக்க முடியாது. ஆபீஸ் விஷயமா டெல்லி போகணும்னு சொல்ற, நீ இல்லாம நானும் அவளை இங்கு வந்து பார்த்துக்க முடியாது. கண்டிப்பா யாராவது ஒரு லேடிஸ் வேணும். நர்ஸ் அப்பாயிண்ட் பண்ண முடியாது. அவளுக்கு இன்னும் டிப்ரஷன் வந்துரும். 

  

 சோ ஆஸ் எ ஹெல்ப்பா நீ ரெபேக்கா கிட்ட பேசு. ஒரு ஒன் வீக் தான, எனக்கு தெரிஞ்ச அவ கண்டிப்பா ஒத்துக்குவா. அவளே ஏதாவது வேலைக்கு கூட ஏற்பாடு பண்ணுவா என்றான் ரோஹித்.



தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


 


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.