வசம் -2

ஓகே மேடம்….. என்று சொல்லி அவரிடம் பின் நம்பரை கேட்டு பே செய்தாள் நிஷா.
ஃபோனை திருப்பி கொடுத்து விட்டு….. தேங்க்ஸ் மேடம்….. என்றாள்.
தேங்க்ஸ் நான் தான் மா சொல்லனும்….. தேங்க் யூ…..
வெல்கம் மேடம்….. ஹேவ் எ நைஸ் டே….. பை….. என்று சிரித்துக் கொண்டே கூறினாள் நிஷா.
ஒருவழியாக லஞ்ச் டைம் வந்தது.
மூவர் மூவராக தான் சாப்பிட வேண்டும்.
இன்று நிஷா யாமினி மற்றும் வேலு மூவரும் சாப்பிடச் சென்றனர்.
சுமதி நிஷாவிடம் அவளுக்கு சாப்பாட்டை எடுத்துவைக்குமாறு சொல்லி அனுப்பினாள்.
வேலு….. என்ன லஞ்சு….. என்று வழிந்து கொண்டே கேட்டாள் யாமினி.
தயிர்சாதம் அக்கா…..
ஏய்…. நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன் என்னை அக்கா ன்னு கூப்பிடாத ன்னு….. என்றாள் யாமினி.
அக்கா ன்னு கூப்பிடாத….. ஆன்டி ன்னு கூப்பிடு….. என்று வேலுவின் காதில் கிசுகிசுத்தாள் நிஷா.
சிரித்தான் வேலு…..
ஏய்…. எதுக்கு டா சிரிக்கிற…..
ஒண்ணும் இல்ல அக்கா…..
மறுபடியும் அக்காவா…..
அக்கா….எனக்கு என்னை விட பெரியவங்களை அக்கான்னு சொல்லியே பழக்கம் ஆயிடிச்சு அக்கா…..
இப்போது நிஷா சிரித்தாள்.
எத்தனை முறை அக்கா ன்னு சொல்ற டா…..என்றாள் யாமினி.
மறுபடியும் சிரித்தாள் நிஷா…..
சே…. என்று சொல்லி விட்டு சற்று தள்ளி அமர்ந்து சாப்பிட்டாள் யாமினி.
இந்தா டா தக்காளி சாதம்….. என்று வேலுவிற்கு கொடுத்தாள் நிஷா.
சுமதி அக்காவுக்கு…..
இருக்குடா…..
அப்படின்னா கொடுங்க…..
ஏன் டா இப்படி பயப்படுற…..
நான் சாப்பிட போகப்போறேன் ன்னு தெரிஞ்சதுமே சுமதி அக்கா என் கிட்ட…..
மவனே நிஷா சாப்பாட்டை காலி பண்ணின்னா நான் உன்னை காலி பண்ணிடுவன் ன்னு சொல்லி அனுப்பினாங்க.
ஹா ஹா ஹா….. இந்த சுமதி இருக்காளே….. என்றாள்.
இந்தா நீ எடுத்துக்கோ….. அவளுக்கு வேற வச்சிருக்கேன்.
சரிக்கா என்று சொல்லி வாங்கி அதை சாப்பிட்டான்.
நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க அக்கா…..
ஏன்டா?
அம்மா கையால சாப்பிடறீங்களே….. என்னோட அம்மா ஊர்ல இருக்காங்க….. நான் விசேஷ நாள்ல தான் ஊருக்கு போவேன்…. அதான்…..
நீ கவலைப்படாதே டா….. இதுக்கு மேல உனக்கும் நான் டெய்லி எடுத்துக்கிட்டு வரேன்.
இல்லக்கா வேண்டாம்….. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்…..
சீ….. இதுல என்னடா இருக்கு….. நீ அக்கா ன்னு தான சொல்ற… என் தம்பிக்கு நான் சாப்பாடு கொடுக்கிறதுக்கு எனக்கு என்ன கஷ்டம் சொல்லு…..
தேங்க்ஸ் அக்கா….. என்று கண்கள் கலங்க சொன்னான் வேலு.
சாப்பிடு டா….. என்று சொல்லி அவளுடைய டிபன் பாக்ஸை அவனிடம் கொடுத்தாள் நிஷா.
உங்களுக்கு…..
உன்னோட தயிர் சாதம் இருக்கே…..
இல்லக்கா….. அது நல்லா இருக்காது….. நேத்து ராத்திரி சாதம் வச்சு மீதமான சாதத்தில் உப்பு போட்டு புளிச்ச தயிர் ஒரு சொட்டு விட்டு எடுத்து வந்தேன்…..
பரவாயில்லை டா…..
இல்லக்கா வேண்டாம்…..
ஏன் டா…..
இது ரேஷன் அரிசி….. நீங்க சாப்பிடுவீங்களா?
ஏய்….. நான் ஒண்ணும் பணக்காரி இல்ல….. எங்க வீட்லேயும் ரேஷன் அரிசி தான்….. அதை எப்படியோ காய் வச்சு சுத்தம் செஞ்சு எங்க அம்மா சமைக்கிறாங்க…..
ஓ….. அப்படியா?
சரி இந்தாங்க….. என்று சொல்லி கொடுத்தான்.
அதை வாங்கி இரண்டு உருண்டை சாப்பிட்டாள். நன்றாகவே இல்லை….. பாவம் இதை எப்படி சாப்பிடுகிறான்…… அம்மா கிட்ட சொல்லி இவனுக்கும் ஒரு டப்பாவில் எடுத்துக் கொண்டு வரணும்…. என்று நினைத்து கொண்டாள் நிஷா.
இவள் போய் பில்லிங் கவுண்டரில் நின்ற பிறகு சுமதி சாப்பிட சென்றாள்.
டீல் டே என்பதால் அன்று முழுவதும் நிறைய கஸ்டமர்கள் வந்தனர்.
மாலை ஆறு மணி அளவில் சூப்பர்வைசர் வந்தார்.
புதியதாக வேலைக்கு சேர்ந்த வேலுவையும் யாமினியையும் சூப்பர்வைசருக்கு அறிமுகப்படுத்தினாள் நிஷா.
யாமினி அவர் அருகில் சென்று…..
ஹலோ சார்….. என்று வழிந்தாள்.
என்னம்மா படிச்சிருக்க….
+2 சார்….. என்று சொல்லி மறுபடியும் வழிந்தாள்.
வீடு எங்க?
இங்க பக்கத்தில தான் சார்….. என்று சொல்லி மறுபடியும் வழிந்தாள்.
அதை கவனித்தவர்…..
சீ….. யாரு இந்த பொண்ணை வேலைக்கு சேர்த்தது….. என்றார்.
உடனே முகம் மாறியது யாமினிக்கு.
நிஷா…..
எஸ் ஸார்…..
எவ்வளவு டேஸ்ஸா ஒர்க் பண்றா இந்த பொண்ணு…..
டடிவென்டி டேஸ் சார்…..
ஸெட்டில் பண்ணி வீட்டுக்கு அனுப்பு…..
சார்…. சார் ….. சாரி சார்….. என்றாள் யாமினி கண்கள் கலங்க.
சார்….. என்றாள் நிஷா.
என்ன நிஷா?….. அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசறதுன்னா….. எதுவும் சொல்ல வேண்டாம்……
சாரி சார்…..
என்னது இது….. இந்த மாதிரி கஸ்டமர் கிட்டேயும் பேசினாளா?
அமைதியாக இருந்தாள் நிஷா…..
சொல்லு நிஷா…..
சாரி சார்….. இனிமே யார் கிட்டேயும் இப்படி பேச மாட்டேன்….. எங்க அம்மா உடம்பு சரியில்லாம இருக்காங்க….. வேற வழி இல்லாம தான் வேலைக்கு வந்திருக்கேன்.
அவள் அம்மா என்று சொன்னதும்…..
சார்….. என்றாள் நிஷா.
நோ நிஷா….. டோன்ட் சப்போர்ட் ஹர்…..
சார் பிளீஸ்….. நான் சொல்றதை கேளுங்க…..
வாட்…..
டென் டேஸ் ஒர்க் பண்ணட்டும்….. அவ கஸ்டமர் கிட்ட எப்படி பேசணும்னு நான் சொல்லி தரேன்…. அதுக்கு அப்புறம் நீங்க டிசைடு பண்ணுங்க….. என்றாள் சற்று கெஞ்சலாக.
ஓகே நிஷா….. உனக்காக ஓகே சொல்றேன்….. நெக்ஸ்ட் விசிட்ல இதே மாதிரி இருந்தா ன்னா அவ்வளவு தான் சொல்லிட்டேன்……
ஓகே சார்…. தேங்க்ஸ் சார்….. என்றாள் நிஷா
தேங்க் யூ ஸோ மச் சார்….. என்றாள் யாமினி கைகளை கூப்பி.
இங்கே கேமராக்கள் இருக்கு….. நான் வரலைன்னாலும் இங்கே என்ன நடக்குது ன்னு எனக்கு தெரியும்….. திஸ் ஈஸ் தி ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்……
ஓகே சார்…. என்றாள்.
அவர் சென்று மற்ற இடங்களை பார்வையிட வேலுவை அழைத்து கொண்டு சென்றார்.
யாமினி நிஷாவின் கைகளை பிடித்து கொண்டு…..
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நிஷா….. என்றாள்.
இட்ஸ் ஓகே….. நீ ஒழுங்கா பேசு இதுக்கு மேல……
ஓகே நிஷா….. என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் யாமினி.
நிஷா….. என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.
உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க….. என்றார் ரவி.
யாரு அண்ணா?
தெரியல மா….. சைக்கிளில் வந்த பொண்ணு ன்னு சொன்னாரு…..
அச்சச்சோ…. அவன் வந்திட்டான் போல….. சூப்பர்வைசர் வேற இருக்காறே….. என்ன பிரச்சனை ஆகப் போகுதோ என்று நினைத்து கொண்டே மெதுவாக ஆஃபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்தாள்.
அங்கே தினேஷ் நின்று கொண்டு இருந்தான்.
மெதுவாக அவன் அருகில் சென்று.
சார்….. சாரி சார்….. இப்போதைக்கு என்னால பே பண்ண முடியாது….. நெக்ஸ்ட் மன்த் சம்பளம் வாங்கின பிறகு உங்களுக்கு தரேன்….. என்று சொல்ல வாயெடுத்தாள்.
தேங்க்ஸ்….. சாரி….. என்றான்.
ஒன்றும் புரியாமல் விழித்தாள் நிஷா.
காலைல உன்னை திட்டியதுக்கு சாரி…..
அவ்வளவு திட்டியும் பொறுமையா இருந்த உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….. நான் முன் கோபக்காரன்…. …சாரி…… இன்னைக்கு ஒரு டீல் ஓகே ஆகி இருக்கு….. அதுக்கு காரணம் நீ தான் ன்னு எனக்கு தோணுச்சு….. அதான் தேங்க்ஸ் சொல்ல வந்தேன்.
நானா….. எப்படி…..
அதெல்லாம்….. நெக்ஸ்ட் டைம் நம்ம காஃபி குடிக்கும் போது பேசிக்கலாம்……
காஃபியா?….. என்று திருதிருவென விழித்தாள்.
அப்புறம் என் காருக்கு டென்ட் செலவு எதுவும் ஆகல….. ஏன்னா என்னோட மெக்கானிக் அதை சுடு தண்ணீர் விட்டு சரி செஞ்சிட்டாரு…..
உனக்கு எதாவது அடி பட்டுச்சா ன்னு கூட கேட்கல நான்…..
இல்ல அடி எதுவும் படல…..
தேங்க் காட்….. அடி பட்டிருந்துச்சுன்னா….. எனக்கு கில்டி ஃபீலிங் ஆகி இருக்கும்.
கையில கால்ல எதுவும் இல்லையே?
இல்ல சார்…..
பை தி பை….. என் பெயர் தினேஷ்….. உங்க பேரு?
நிஷா…..
ஓகே நிஷா…..சாரி ஒன்ஸ் அகெயின்….. பை….. நாளைக்கு மீட் பண்ணலாம்….. என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் தினேஷ்.
திருதிருவென விழித்தாள் நிஷா.
#############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
என் வசம் நானில்லை என் உயிரே……
வசம் -3
தினேஷ் வந்து பேசிவிட்டு போனதை நினைத்து பிரம்மையில் இருந்தாள் நிஷா.
ஏய்….. என்னாச்சு டி….. சூப்பர்வைசர் பார்க்கிறாரு….. பில்லிங் கவுண்டருக்கு போ….. என்று சொல்லி அவளை உளுக்கினாள் சுமதி.
சுயநினைவுக்கு வந்தவளாய்…..
சாரி டி….. என்றாள்.
எனக்கு எதுக்கு சாரி சொல்ற….. வீட்டுக்கு போகும் போது பேசிக்கலாம்….. என்றாள் சுமதி.
சூப்பர்வைசர் திட்டியதில் இருந்து அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள் யாமினி.
ஒன்பது மணி அளவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க ஒருவர் வந்தார்.
வெகு நேரமாக எதையோ தேடிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வேலு…..
சார்….. ஹெல்ப் பண்ணவா…..
இல்ல நீ வேண்டாம்….. அந்த பொண்ணை வரச் சொல்லு….. என்று யாமினியை கை காட்டினார்.
என்னன்னு சொல்லுங்க சார்….. நானே எடுத்து தரேன்.
ஏய் புரிஞ்சிக்க பா….. இது லேடீஸ் விஷயம்.
ஓ….. ஓகே சார்….. இப்போ வரச் சொல்றேன்.
அக்கா….. யாமினி அக்கா…..
சொல்லு வேலு…..
அந்த கஸ்டமரை அட்டெண்டு பண்ணுங்க….. என்றான்.
ஓகே டா….. என்று சொல்லி விட்டு அவர் அருகில் சென்று….
சொல்லுங்க சார்…..
என் ஒயிஃபுக்கு சேனிட்டரி பேட்ஸ் வேணும்….. பேர் என்னவோ சொன்னா மறந்திட்டேன்….. இப்போ கால் பண்ணினா ஸ்விட்சிடு ஆஃப்ன்னு வருது….. ஃபோன்ல சார்ஜ் இல்லன்னு நினைக்கிறேன்….. என்றார்.
இட்ஸ் ஓகே….. சார்….. நான் எடுத்து வந்து தரேன்….. நீங்க எந்த பிராண்டு ன்னு மட்டும் சொல்லுங்க…..
இல்ல நானே வரேன்….. என்று சொல்லி அவள் பின்னால் சென்றார்.
அவள் அந்த செக்ஷனில் தேடி எடுத்து கொண்டு இருந்தாள்.
அப்போது அங்கே சிசிடிவி இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த ஆள்….
அவளின் மிக அருகில் சென்று பின் பக்கமாக அவளை கட்டிப்பிடித்தான்.
அச்சோ சார்…. என்று சற்று தள்ளி நின்றாள்.
ரெண்டு நாளாக நான் வரேன்….. நீ தான் என் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசனீயே….. அந்த சிரிப்புக்கு எனக்கு அர்த்தம் தெரியாதுன்னு நினைச்சியா….. என்றான் அவளுடைய இடுப்பை தடவிக்கொண்டே.
யாமினிக்கு கண்கள் கலங்கியது.
சார்….. நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல சார்…..
சும்மா கதை விடாத….. இங்க யாருக்கும் தெரியாமல் நாம ஒரு ரெண்டு மணி நேரம் போய் முடிச்சிட்டு உன் வீட்டிலேயே விட்டிடறேன்.
இல்ல சார்….. சாரி சார்…..
ஏய்….. என்ன சும்மா ஓவரா பண்ற….. பணம் தான?….. நீ எதிர்பார்க்கிறதை விட டபுளா தரேன்….. இங்க பாரு ரெண்டு நாளாக நீ என் கூட பேசினதை ரெக்கார்டு பண்ணி வச்சு என் மூடை நல்லா ஏத்தி வச்சிருக்கேன்….. உன்னை பத்திரமா உன் வீட்டிலேயே விட்டிடறேன் பயப்படாத…..
சார்….. பிளீஸ் சார்….. என்னை விட்டிடுங்க….. என்று கையை எடுத்து கும்பிட்டாள்…..
ஓவரா பண்ற….. இரு உன்னை என்ன பண்றேன் பாரு…. என்று சொல்லி வெளியே வந்து….
தம்பி இங்க வா…..
சொல்லுங்க சார்…..
யாரு ஸ்டோர் இன்சார்ஜ்?
சூப்பர்வைசர் சார் வந்திருக்காரு சார்.
என்னை அவர் கிட்ட கூட்டிக்கிட்டு போ…..
சார்…. சார்….. வேண்டாம் சார்….. என்று கெஞ்சினாள் யாமினி.
டேய் நீ போடா….. என்று சொல்லி வேலுவை அனுப்பினான் அவன்.
சரி….. ஒத்துக்கறீயா?
எனக்கு ஒரே நாள் டைம் கொடுங்க சார்….. என்று கெஞ்சினாள்.
சரி….. நாளைக்கு நைட்டு வரேன்….. ரெடியா இரு….. இல்லன்னா இந்த சிரிச்சு பேசி மயக்குற வீடியோவை உன்னோட சூப்பர்வைசர் கிட்ட காண்பிச்சு உன்னை வேலையை விட்டு தூங்கிடுவேன்.
அழுதாள் யாமினி.
அவன் இரண்டு பொருட்களை பில் போட்டு பே பண்ணிவிட்டு சென்றான்.
வேலு ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான்.
கஸ்டமர்கள் சென்ற பிறகு நிஷாவிடம்.
அக்கா….. கொஞ்சம் வெஜிடபிள் ஸ்டோர் கிட்ட வரீங்களா?….. என்றான் வேலு.
சுமதி….. பார்த்துக்கோ….. என்று சொன்னாள் நிஷா.
என்னடி என்று கையால் சைகை செய்து கேட்டாள் சுமதி.
தெரியல….. என்று கண்களை சிமிட்டி பதில் சொன்னாள் நிஷா.
பின்னர் வேலுவின் பின்னால் சென்றாள் நிஷா.
சானிட்டரி பேட்ஸூகளை அடுக்கிக் கொண்டே அழுதுகொண்டு இருந்தாள் யாமினி.
என்னடா….. என்றாள் நிஷா.
அக்கா ஒரு கஸ்டமர் வந்து யாமினி அக்காவை கூப்பிட்டாரு….. கொஞ்ச நேரத்தில என்னை கூப்பிட்டு கம்ப்ளெயின்ட் பண்ணனும் யாரு கிட்ட சொல்லனும் ன்னு கேட்டாரு….. யாமினி அக்கா கெஞ்சினாங்க அந்த கஸ்டமர் கிட்ட….. அப்புறம் என்னை போக சொல்லிட்டு யாமினி அக்கா கிட்ட என்னவோ சொல்லிட்டு போனாரு……
எங்க அவ?
அங்கே அடுக்கிக் கொண்டு இருக்காங்க….. அழறாங்க ன்னு நினைக்கிறேன். நான் அந்த பக்கம் போகும் போது அவங்க கண்ணை துடைச்சிக்கிறதை பார்த்தேன்.
அப்படியா?
ஆமாம் அக்கா….. அந்த அக்கா எல்லார் கிட்டேயும் பேசுற மாதிரி சிரிச்சு பேசி இருப்பாங்க….. அதை பிடிக்காம அந்த கஸ்டமர் கம்ப்ளெயின்ட் பண்ண போனாரு ன்னு நினைக்கிறேன்.
இல்லடா….. அப்படி இருக்க வாய்ப்பு இல்லை…..
ஏன்னா அவளை இப்போ தான் சூப்பர்வைசர் திட்டினாரு….. அதனால மறுபடியும் அவ அந்த மாதிரி நடந்திருக்க மாட்டா…..
என்னவோ அக்கா….. தெரியல….. பார்க்க பாவமா இருந்துச்சு….. அதான் உங்க கிட்ட சொன்னேன்.
ஓகே டா…. நீ போ….. நான் யாமினி கிட்ட பேசிக்கிறேன்.
அவன் சென்ற பிறகு யாமினி அமர்ந்து அடுக்கி கொண்டிருக்கும் செக்ஷனுக்கு சென்றாள் நிஷா.
யாமினி…..
வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு…..
சொல்லு நிஷா…..
வேலை முடிஞ்சிடிச்சா?
இதோ இப்போ முடிச்சிடுவேன்……
சரி….. என்று சொல்லி திரும்பி சென்றாள்.
பத்து அடி தூரம் நடந்து சென்று திரும்பி பார்த்தாள் நிஷா.
யாமினி அழுதுகொண்டு இருந்தாள்.
அவளருகில் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவளுடைய தோளை தொட்டாள் நிஷா.
என்ன யாமினி…..
அழுதுகொண்டே நிஷாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் யாமினி.
பிறகு அங்கு நடந்தவற்றை கூறினாள்.
சத்தியமா சொல்றேன்….. நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல….. இங்கு வரவங்க கிட்ட சிரிச்சு பேசினா என்னை பத்தி நல்ல விதமா சொல்லுவாங்க எனக்கு வேலை நிரந்தரமா கிடைக்கும்….. இல்லன்னா வரவங்க யாராவது எனக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தருவாங்க ன்னு நினைச்சு தான் அப்படி பேசினேன். ஆனா இப்போ பிரச்சனைல மாட்டிக்கிட்டேன்….. என்று சொல்லி அழுதாள்.
சரி விடு….. இப்போதாவது புரிஞ்சிக்கிட்டியே….. நம்ம பண்ற வேலையை பார்த்து நம்மள பிடிக்க வைக்கனும்…. அப்படி நடந்தால் தான் இன்க்கிரீமேன்ட் பிரமோஷன் எல்லாம் கிடைக்கும்….. புரிஞ்சதா?
ஹூம்….. என்னை எப்படியாவது இதில் இருந்து காப்பாற்றி விடு நிஷா….. பிளீஸ்…..
ஹூம்….. கவலைப்படாதே….. நான் எதாவது பண்றேன்.
நாளைக்கு மட்டும் அவன் வந்து என்னை கூப்பிட்டா அவ்வளவுதான்….. நான் தற்கொலை பண்ணிக்குவேன்.
சீ….. லூசு மாதிரி பேசாதே….. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்…… என்றாள் நிஷா.
வீட்டிற்கு செல்லும் போது சுமதியிடம் அனைத்தையும் சொல்லி கொண்டே சென்றாள் நிஷா.
அப்பவே நினைச்சேன்….. இந்த பொண்ணு எதுலேயும் மாட்ட போகுது ன்னு….. என்றாள் சுமதி.
சீ பாவம் டி அவ……
பாவமா….. ஏய்….. நீ ஹெல்ப் பண்றேன்னு எதாவது சொல்லி நீ மாட்டிக்காத…..
ஏற்கனவே சொல்லிட்டேன்……
எதுக்கு உனக்கு தேவை இல்லாத வேலை…… நாளைக்கு லீவு போட்டிடு….. அவ பிரச்சனையை அவளே பார்த்துக்கட்டும்.
இல்லடி…. நான் ஷாலினி பர்த் டேவுக்கு லீவு கேட்க போறேன் ன்னு சொன்னேன் இல்ல…..
அப்போ நாளைக்கு வந்து உன் கிட்ட கேட்டான்னா…. எனக்கு எந்த ஐடியாவும் இல்லை…. சாரி ன்னு சொல்லிடு…..
ஏய்….. அவ சூசைடு பண்ணிக்கப் போறேன்னு சொன்னா டி…..
பண்ணிக்கிறவ சொல்லமாட்டா…..
நான் கேட்கவே தான் டி சொன்னா….. நானா தான் அவ அழகை பார்த்து விட்டு என்ன பிரச்சனை ன்னு கேட்டேன்.
மறுபடியும் சொல்றேன்….. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட்டுக்காத….. அப்புறம் உன் இஷ்டம்.
போடி….. எப்போ பார்த்தாலும் நீ செல்ஃபிஷ்ஷாவே இருக்குற…..
சரி மதர் தெரேசா….. நான் இப்படியே இருக்கேன்….
சரி சரி இதை விடு….. காலைல உன் கிட்ட சண்டை போட்டவன் ஈவினிங் வந்து பேசினாரு….. என்ன சொன்னான்.
அதான் டி எனக்கு ஒண்ணுமே புரியல….. காலைல அப்படி திட்டினான். அப்புறம் வந்து தேங்க்ஸ் சாரி எல்லாம் சொன்னான்.
ஏய்…. பார்ப்பதற்கு சூப்பரா இருக்கான்….. டிரை பண்ணு…..
என்ன டிரை பண்ணு?
லவ் தான்….. வேறு என்ன…..
ஏய்….. நம்ம லெவலுக்கு ஏத்த மாதிரி தான் ஆசை படனும்…..
சரி சரி வேதாந்தி….. என் வீடு வந்திடிச்சு….. பை….. நீ பார்த்து போ….
ஓகே டி…. பை ….. என்று சொல்லி விட்டு அவ்வளவு நேரமாக தள்ளி கொண்டு வந்த சைக்கிளில் ஏறி அமர்ந்து மிதித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள் நிஷா. ஏனோ செல்லும் வழியில் எல்லாம் தினேஷின் நினைவாகவே இருந்தது.
############
தொடரும்……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.