பாகம் 2

Vaishnavi Vijayaraghavan | 03 May 2026 | Share


தொடர்பியல்…. பாகம் –2



எப்போ பார்த்தாலும் உனக்கு இதே வேலையா போச்சு டா…. ஒண்ணு லேட்டா வருவ…. இல்ல பாதியிலேயே விட்டுவிட்டு போயிடுவ…..

ஏய்…. பாதியில் விட்டிட்டு போறேன் வேணும்னா சொல்லு…. ஆனா லேட்டா எல்லாம் வரல…. நான் உன்கிட்ட ஃபோன்ல பேசின பிறகு தான் நீ கிளம்பின…. கரெக்டா…. 

அதெப்படி உனக்கு தெரியும்?

ஏய் நான் போலீஸ்காரன் டி….

சொல்லு டா…. எப்படி தெரியும்.?

அதை அப்புறமா சொல்றேன்…. டைம் ஆகுது பை…. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபர்ஸ்ட் டே ஜாப். உம்மா…. என்று ஃபிலையிங் கிஸ் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டான் மாதவன்.

தன் ஃபோனில் ஆட்டோ புக் செய்து லேபிற்கு சென்றாள் ராகினி.

ஹாய்…. வெல்கம் ராகினி…. என்றார் லேப் ஹெட் ஜார்ஜ் டேவிஸ்.

குட் மார்னிங் சார்…..

குட் மார்னிங்…. கம்…. ஐ வில் இன்டிரொடியூஸ் யூ டூ ஆல்…. என்று சொல்லி அங்கிருந்த ஐந்து பேரையும் அறிமுக படுத்தினார்.

தேவி, மம்தா, பிரவீன், சேகர், அன்பரசன்…. என்றார்.

ஹாய், ஹலோ…. என்றாள் ராகினி.

ஆல் ஆஃப் யூ…. மீட் மிஸ் ராகினி…. என்றார் டேவிஸ்.

அனைவருமே முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள் தான் சேகரை தவிர. அவனுக்கு 36 வயது…. திருமணம் ஆனவன். ஐந்து வயதில் ஒரு குழந்தை இருக்கிறாள். அன்பரசன் மற்றும் தேவி இருவரும் காதலர்கள். அனைவருமே ராகினியிடம் நன்றாக பேசினார்கள்.

முதல் நாள் வேலையில் டிஎன்ஏ டெஸ்டிங், பிளெட் டெஸ்டிங் எல்லாம் எப்படி செய்யவேண்டும் என்று மம்தா ராகினிக்கு சொல்லிக் கொடுத்தாள். ராகினிக்கு வேலை பிடித்திருந்தது. அன்று முழுவதும் பேசிக்கொண்டும்  வேலையில் கவனமாக இருந்ததால் சங்கவியை பற்றி மறந்து போனாள் ராகினி.

பிரவீன் மம்தா மற்றும் ராகினி இருவரிடமும் ஃபிலிர்ட் செய்தான். மம்தா ராகினியின் காதருகில் சென்று….

ராகினி…. அவன் ஒரு லூசு…. இப்படி தான் வழிவான்…. நீ இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத…. பை தி பை…. வா போ ன்னு பேசினா பரவாயில்லையா?

நோ இஷ்யூஸ் மம்தா….. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை…. உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி பேசுங்க….

நீயும் அப்படியே பேசு…. நீங்க வாங்க ன்னு நீ பேசினா எனக்கு அன்கம்ஃபோர்டபிளா இருக்கும்.

ஓகே மம்தா…. நானும் அப்படியே பேசறேன்.

இருவரும் ஹய் ஃபை கொடுத்து கொண்டனர். எனக்கு ஹய் ஃபை என்றான் பிரவீன். இரு பெண்களும் அவனை பார்த்து முறைத்தனர். 

ஹய் ஃபை தான கேட்டேன்…. முத்தம் கேட்ட மாதிரி முறைக்கிறீங்க…. என்று புலம்பிக் கொண்டே சென்று விட்டான்.

மாலை ஆறு மணிக்கு அனைவரும் கிளம்பினார்கள். அன்பரசன் மற்றும் தேவி இருவரும் பைக்கில் சென்றுவிட்டனர். லேப் ஹெட் ஜார்ஜ் டேவிஸ் சார் ஒன்பது அல்லது பத்து மணி வரை லேபிலேயே இருப்பார் என்று சொன்னாள் மம்தா. சேகரும் கிளம்பி விட்டான். அப்போது…. 

பியூட்டிஃபுல் லேடீஸ்…. உங்களை வீட்ல டிராப் பண்ணவா?….. என்றான் பிரவீன் ராகினி மற்றும் மம்தாவை பார்த்து.

ரெண்டு பேரையுமா?…. என்றாள் மம்தா.

ரெண்டு பேரையும் டிராப் பண்ண நான் ரெடி…. என்று சொல்லி சிரித்தான் பிரவீன்.

மிஸ்டர் பிரவீன்…. என்னோட லவ்வர் மாதவன் இப்போ வந்திடுவாரு…. ஸோ….யூ பிளீஸ் கோ….. என்றாள் ராகினி.

அச்சச்சோ…. என்னோட ஒரு ஹோப் போச்சா?…. என்றான் பிரவீன்.

இருவரும் சிரித்தனர்.

மம்தா டார்லிங்…. நீ தான் என்னோட லாஸ்ட் ஹோப்…. நீயும் யாரையாவது காதலிக்கிறேன்னு சொல்லிடாத மா…. என்றான் பிரவீன் கெஞ்சலாக.

இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணல….. இனிமேல் லவ் பண்ணனும் தோணுச்சுன்னா கூட உன்னை லவ் பண்ண மாட்டேன்….. என்று சொல்லி சிரித்தாள் மம்தா.

ஹூம்…. என்று பொய் கோபத்துடன் கிளம்பி சென்றான் பிரவீன்.

ஏய் ராகினி…. உண்மையிலேயே உனக்கு லவ்வர் இருக்காரா இல்லை இவனை அவாய்டு பண்ண அப்படி சொன்னீயா?…. என்றாள் மம்தா.

இல்ல மம்தா…. உண்மையிலேயே நானும் மாதவனும் த்ரீ இயர்ஸா லவ் பண்றோம்.

ஓ…. ஓகே…. எங்க?….. உன்னோட ஆளை காட்டு பார்க்கலாம்…. என்றாள் மம்தா.

ராகினி தன்னுடைய ஃபோனை எடுத்து மாதவனின் ஃபோட்டோவை ஓப்பன் செய்யும் போது மம்தாவின் அம்மா அவளுக்கு கால் செய்தார். 

ஒன் மினிட் ராகினி…. என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்து பேசினாள் மம்தா.

அப்படியா…. சரி நீங்க அவரை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போங்க…. நான் உடனே வரேன் என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் மம்தா.

என்னாச்சு மம்தா?

அது ஒண்ணும் இல்ல ராகினி…. எங்க அப்பாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும்…. அம்மா டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போவாங்க…. நான் போய் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போவேன்.

என்னாச்சு அப்பாவுக்கு?

அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது….. டைம் இல்ல…. அது பெரிய கதை…. நாளைக்கு சொல்றேன்…. என்று சொல்லி விட்டு
 பை ராகினி…. நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

ஓகே பை மம்தா….. என்று சொல்லி விட்டு தன் ஃபோனை ஆன் செய்தாள்.

அப்போது தான் கேலரியில் மாதவன் ஃபோட்டோவை ஓப்பன் செய்து வைத்திருந்ததை கவனித்தாள் ராகினி.

அச்சச்சோ…. மாதவனை மம்தாவிற்கு காட்டவில்லையே…. என்று நினைத்து கொண்டாள் ராகினி. மாதவனுக்கு கால் செய்தாள். 

சாரி டி …. பிக்கப் பண்ண வர முடியாது. நான் நீலாங்கரையில இருக்கேன். ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன்.

ஏய் என்னடா நீ…..

புரிஞ்சிக்கோ டி…. ஒரு சூசைடு கேஸ்….. அனேகமா உன்னோட ஃபர்ஸ்ட் கேஸ் கூட இதுவா இருக்கலாம். ஸாம்பில்ஸ் எல்லாம் கலெக்ட பண்ணி உங்க லேபுக்கு தான் அனுப்புவோம்…. என்றான் மாதவன்.

சூசைடா?….

ஆமாம்…..

மேலா? ஃபீமேலா?

ஃபீமேல்…

எப்படி இறந்திருக்காங்க?

வெயின் கட் பண்ணி…..சரி நான் வைக்கிறேன்.

ஒரு நிமிஷம் டா….

என்ன?

அவங்க பேர் என்ன?

தெரியல டி…..

பிளீஸ் கொஞ்சம் விசாரிச்சிட்டு சொல்லேன். 

சரி…. நேம் தெரிஞ்சதும்…. உனக்கு மெஸேஜ் பண்றேன்….. பை….

சரிடா…. என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து ஆட்டோ புக் செய்து தன் ரூமிற்கு சென்றாள்.

அதுவரையிலும் எதுவும் மெஸேஜ் வரவில்லை.

ஹாய் டி….. ஃபர்ஸ்ட் டே ஜாப் எப்படி இருந்துச்சு?…. என்றாள் ரூம் மேட் ரம்யா.

அமைதியாக யோசனையில் இருந்தாள் ராகினி.

என்னாச்சு டி…. ஏன் டென்ஷனா இருக்க?….. 

அதெல்லாம் ஒண்ணும் இல்லை டி…. டே வாஸ் குட்….. 

அப்புறம் ஏன் டல்லா இருக்க?

எனக்கு ஒரு கனவு வந்துச்சு டி…..அது கனவு மாதிரி இல்ல…. அப்படியே என் கண் முன்னே நடந்த மாதிரி இருக்கு…. இன்னும் கூட அவங்க ரெண்டு பேரோட முகமும் எனக்கு அப்படியே நினைவில இருக்கு.

என்ன கனவு?

கிஷோர் – சங்கவி…. ன்னு ரெண்டு பேர்….. என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

சரி அதுக்கு எதுக்கு நீ இப்போ டென்ஷனா இருக்க?

இல்ல மாதவன் ஒரு கேஸ் விஷயமா நீலாங்கரைல இருக்காரு….

சரி…. அதுக்கு?

என் கனவுல வந்த சங்கவியா இருக்குமோ ன்னு…. அதான் ஒரே டென்ஷனா இருக்கு.

ஏய்…. ரிலாக்ஸ் டி…. கனவு தான…. அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது…. டோண்ட் ஒரி…. என்றாள் ரம்யா.

அப்போது மாதவனிடம் இருந்து மெஸேஜ் வந்தது.

பயந்தவாறே ஃபோனை எடுத்து மெஸேஜ் ஓப்பன் செய்தாள் ராகினி.

விக்டிம் நேம் – ஏஞ்சல்…. என்று டைப் செய்து அனுப்பி இருந்தான் மாதவன்.

இப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது போல இருந்தது. 

என்னடி ஃபிரீ ஆயிட்டியா?

ஆமாம் டி…. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு….

சரி போய் சாப்பிட்டு விட்டு தூங்கு…. நாளைக்கு என் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு என்னை ரயில்வே ஸ்டேஷன்ல டிராப் பண்ணிட்டு அப்புறமா நீ வேலைக்கு போயிடு. நான் வர வரைக்கும் என் வண்டியை நீ யூஸ் பண்ணிக்கோ டி. 

ஒன் மன்த்ல வந்திடுவ இல்ல?

ஆமாம் டி….டெல்லிக்கு டிரெயினிங்க்கு தானே போறேன்…. அங்கேயே  ஸெட்டில் ஆகவா போறேன்?

ஒன் மன்த் நான் இங்கே தனியா இருக்கனுமே?

அதான் உன் ஹீரோ இருக்காரு இல்ல…. ஹவுஸ் ஓனர் தான் வெளியூர்ல இருக்காரே…. நீங்க ரெண்டு பேரும் லிவ்விங் டூகெதர்ல இருங்க…. என்று சொல்லி கண்ணடித்தாள் ரம்யா.

சீ… சீ…. நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டு தான் ஒண்ணா இருப்போம்.

ஏய்…. இப்போ இதுதான் டி டிரெண்டு….

சீ…. போடி….

எனக்கு மட்டும் உன்னை மாதிரி ஒரு சேன்ஸ் கிடைச்சா…. 

ஏய்… அது நம்ம கல்ச்சர் இல்ல டி…. நம்ம அம்மா அப்பா நம்ம மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு அனுப்பி இருப்பாங்க…. அவங்களுக்கு தெரியாம…. இப்படி நாம தப்பு பண்ணினா…. எப்படி சொல்லு….

அம்மா தாயே…. ஆளை விடு…. நீ விட்டா பேசிக்கிட்டே இருப்ப…. எனக்கு நாளைக்கு காலைல டிரெயின் பிடிக்கணும்…. பை…. குட் நைட்டு…. என்று சொல்லி விட்டு தூங்க சென்றாள் ரம்யா.


தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.






 




இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.