பாகம் -19
ஃபோனை எடுத்துப் பார்த்த ரெபேக்காவிற்கு ஒரே ஆச்சரியம். விஹான் மெசேஜ் பண்ணி இருக்கானா? என்று தன்னிடமே பேசிக் கொண்டு.
ரிப்ளை செய்தாள்.
ஹாய் விஹான் நான் தூங்கல, டிவி தான் பார்த்து கிட்டு இருந்தேன். நீ முதல்ல பண்ண மெசேஜை கவனிக்கல. சொல்லுடா என்ன விஷயம்?
அவளிடமிருந்து மெசேஜ் வந்ததும் உடனே,
நான் இப்போ உனக்கு கால் பண்ணவா என்று மெசேஜ் அனுப்பினான் விஹான்.
மெசேஜை பார்த்துவிட்டு ரெபேக்காவை விஹானுக்கு கால் செய்தாள்.
சொல்லு விஹான்.
அது வந்து, சாரி.
நான்தான் சாரி எல்லாம் சொல்லாதன்னு சொன்னேன் இல்ல?
எனக்கு ஒரு ஒன் வீக் டைம் தரியா?
எதுக்கு?
கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.
என்ன சொல்ல போற?
நீ கேட்ட கேள்விக்கு பதில்.
நான் என்ன கேள்வி கேட்டேன்.
சரி ஓகே நான் ஃபோன வைக்கிறேன், பை.
சரி சரி புரிஞ்சிடுச்சு, சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்.
ரோஹித்துக்கும் இவளுக்கும் வித்தியாசமே இல்ல, எந்த நேரத்தில் விளையாடுவதுன்னு விவஸ்த்தையே இல்லை என்று நினைத்துக் கொண்டான் விஹான்.
என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற.
அதுக்கு தான் டைம் கேட்டு இருக்கேன் இல்ல.
வேற ஏதாவது பேசலாம் இல்ல.
தொடர்ந்து பேசலாமா வேண்டாமான்னு டிசைட் பண்றதுக்கு தான் ஒன் வீக் பிரேக் கேட்டிருக்கேன்.
அப்ப ஃபோன வெச்சிடவா?
அமைதியாக இருந்தான் விஹான்.
சாப்டியா?
உம்.
என்ன சாப்பிட்ட?
பதில் சொல்லவில்லை.
நீ என்னை சாப்பிட்டியானு கேக்க மாட்டியா?
இதோ பாரு ரெபேக்கா, நீ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி ஆள் கிடையாது நானு. ரொமான்டிக்கா பேசுறது, ரொமான்டிக்கா நடந்துக்கிறது இதெல்லாம் எனக்கு தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நான் அதெல்லாம் செய்ய மாட்டேன். நான் இப்படித்தான் இருப்பேன். ஆனா ஒன்னு, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. இதன் மேல் கொண்டு தொடரலாமான்றதுக்கு தான் ஒன் வீக் டைம் கேட்டேன். எனக்கு செட் ஆகுமா?. என் கூட உனக்கு செட் ஆகுமா? இதையெல்லாம் யோசிச்சு அதுக்கு அப்புறமா உனக்கு ஒரு பதிலை சொல்றேன். எனக்காக இத்தனை வருஷமா பொறுத்துக்கிட்ட. இந்த ஒன் வீக் மட்டும் வெயிட் பண்ணு.
விஹான்.
சொல்லு ரெபேக்கா.
அஞ்சு வருஷம் மட்டும் இல்ல, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ண தயார். ஆனா நீ என்னை காதலிக்கிறேன் னு மட்டும் சொல்லு போதும்.
அவள் அப்படி சொன்னது விஹானுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தன் மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிறாளா அவள் என்று நினைத்துக் கொண்டான்.
ஓகே, சீக்கிரமா சொல்றேன்.
பாசிட்டிவா சொல்லுவியா?
பை,
ஐ லவ் யூ விஹான், பை.
அவள் சொன்னது கேட்டாலும் அதை கேட்காதது போல் அமைதியாக ஃபோனை வைத்து விட்டான் விஹான்.
ரெபேக்காவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனதிற்குள் விருத்திகாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டாள். அவளுடைய இந்த யோசனையால் தான் இன்று விஹான் இந்த அளவிற்கு பேசி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
சந்தோஷமாக விருத்திகாவிற்கு மெசேஜ் செய்தாள்.
தேங்க்யூ சோ மச் விரு. உன் பிளான் சக்ஸஸ் ஆயிடும்னு நினைக்கிறேன் என்று ஆரம்பித்து அவர்கள் மெசேஜ் செய்ததும் பேசிக் கொண்டதையும் வாய்ஸ் மெசேஜ் இல் விருத்திகாவுக்கு அனுப்பினாள் ரெபேக்கா.
விருத்திகா தூங்கி விட்டதால் ரெபேக்கா அனுப்பிய மெசேஜ் பார்க்கவில்லை.
விஷானுக்கு கடைசியாக ரெபேக்கா சொன்ன ஐ லவ் யூ என்ற வார்த்தையே காதில் ஒலித்தது.
கண்ணாடி முன் நின்று, தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். தன்னிடம் என்ன இருக்கிறது என்று இந்தப் பெண் ரெபேக்கா இத்தனை வருடமாக காதலிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். அவள் காதலை ஏற்றுக் கொண்டு தன்னுடைய காதலையும் அவளிடம் அடுத்த வாரம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இந்த ஒரு வாரத்தில் தன் தங்கையின் பிரச்சனையை சரி செய்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை விஹான் ஆபீசுக்கு கிளம்பினான்.
விருத்திகா எழுந்திருக்கவில்லை தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு டிபன் மற்றும் லஞ்சுக்கு தக்காளி சாதம் சரி ரெடி செய்து வைத்து விட்டு கிளம்பினான் விஹான்.
அவன் ஷூ போடும்போது எழுந்து வந்தாள் விருத்திகா.
அண்ணா கிளம்பிட்டியா?
ஆமாம்மா. நீ தூங்கிட்டு இருந்த அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று நானே எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டேன்.
ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்றியா? அண்ணா, நானும் குளிச்சிட்டு வந்துடறேன்.
எதுக்கு?
என்ன அண்ணா மறந்துட்டியா? இன்னைக்கு தீபக் ஓட ஆபீஸ்ல எல்லாரும் இருப்பாங்க இல்ல. நம்ம நேரா போய் பார்த்து அவனுடைய டீம் லீடர் கிட்ட பேசலாம்.
நான் தான் விசாரிச்சுட்டு வரேன்னு சொன்னேன் இல்லம்மா?
இல்லன்னா எனக்கு மனசு கேட்கல. நானும் உங்க கூட வரேனே?
ஆனா விரு,
ப்ளீஸ் அண்ணா.
நான் இப்ப போகலையே மா. என்னோட லஞ்ச் பிரேக்ல தான் போகலாம்னு இருக்கேன்.
ஓகே அண்ணா லஞ்ச் பிரேக் டைம் சொல்லுங்க நான் அப்போ உங்க ஆபிஸ்க்கு வந்துடறேன் அதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் போலாம்.
அதற்கு மேல் விஹானால் அவளிடம் மறுப்பு சொல்ல முடியவில்லை.
ஓகே, நான் என்னோட ஆஃபீஸ்ல வேலைய முடிச்சுட்டு உனக்கு கால் பண்றேன். நீ ஆட்டோ புக் பண்ணி வந்துடு.
ஓகே அண்ணா, பை என்று சந்தோஷமாக கூறினாள்.
சரிமா பை, வீட்டை பூட்டிக்கோ என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
அவன் சென்றதும், தன் ரூமில் அமர்ந்து சிறிது நேரம் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ரெபேக்காவிடமிருந்து வந்த மெசேஜை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.
உடனே அவளுக்கு கால் செய்து பேசினாள்.
முன்னாள் நடந்தவற்றை கூறினாள் ரெபேக்கா.
தன் அண்ணனுக்காகவும் ரெபேக்காவிற்காகவும் சந்தோஷப்பட்டாள் விருத்திக்கா.
ஒன் வீக் டைம் கேட்டு இருக்காரு என்றாள் ரெபேக்கா .
அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி, சும்மாதான். எங்க அண்ணனுக்கு உங்க மேல எப்போ லவ் வந்துருச்சு. இத்தனை வருஷமா இல்லாம இப்ப திடீர்னு ஓகே சொன்னா நீங்க ஏதாவது தப்பா நினைக்க போறீங்கன்னு, இந்த ஒன் வீக் டைம் கேட்டு இருக்காரு. அதனால நீங்க ரிலாக்ஸா இருங்க. கண்டிப்பா உங்க கிட்ட வந்து அவரோட காதலை சொல்ல போறாரு பாருங்க என்ற சொல்லி சிரித்தாள் விருத்திகா.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் -20
ரெபேக்காவும் சிரித்தாள்.
பிறகு ஓகே விரு, தேங்க் யூ ஸோ மச் என்றாள்.
தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் அண்ணி.
நீ அண்ணின்னு கூப்பிடறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு விரு.
என்னோட அண்ணனை மாதரியே நீங்களும் விரு ன்னு உரிமையோட சொல்றது எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி.
இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு குட் டே சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டனர்.
பிறகு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் விருத்திகா.
அப்போது தேவி கால் செய்தாள்.
ஹலோ சொல்லுங்க தேவி அக்கா.
என் ஹஸ்பண்ட் கிட்ட பேசிட்டேன் விருத்திகா.
சொல்லுங்க என்ன சொன்னாரு? என்று ஆர்வமாக கேட்டாள்.
ஒரு நம்பர் கொடுத்திருக்காரு,
பெங்களூர் ஆஃபீஸ் நம்பரா?
இல்ல தீபக் பிரெண்ட்ஸ் நம்பர்.
பிரண்ட்ஸ் நம்பரா?
ஆமா அவங்களுக்கு தெரியுமாம் தீபக் எங்கே போய் இருக்காருன்னு.
ஆபீஸ் விஷயமா தானே போயிருக்காரு.
இல்ல விருத்திகா, தீபக் ஆபீஸ் ல இருந்து ரிலீவ் ஆகி டூ மந்த்ஸ் ஆகுதாம். ஏதோ பிசினஸ் செய்யப் போறதா சொல்லி ரிலீவ் ஆயிட்டார்ன்னு என்னோட ஹஸ்பண்ட் சொன்னாரு.
வாட், இம்பாசிபிள். என்கிட்ட சொல்லாம இந்த மாதிரி ஒரு பெரிய வேலையை செய்யவே மாட்டான் தீபக்.
சாரி விருத்திகா, இதுதான் உண்மை. நீ வேணும்னா கம்பெனியிலே கூட கால் பண்ணி கேட்டுக்கோ.
விருத்திகாவிற்கு கண்கள் கலங்கியது.
அவரோட ரெண்டு பிரெஞ்சுல யாரோ ஒருத்தரோட நம்பர் இருக்குன்னு சொன்னாரு அந்த நம்பரை நான் உனக்கு சென்ட் பண்றேன் நீ வேணும்னா அவருக்கு கால் பண்ணி கேட்டுக்கோ.
ஓகே தேங்க் யூ தேவி அக்கா இன்று அவள் சொல்லும் பொழுதே அவள் வார்த்தையில் வருத்தம் தெரிந்ததை உணர்ந்தாள் தேவி.
பை என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு அந்த நம்பரை அனுப்பினாள் தேவி.
ராஜா என்று ஒரு நம்பர் வந்தது.
அந்த நம்பருக்கு கால் செய்தாள் விருத்திகா.
ஹலோ நான் விருத்திகா பேசுறேன்.
சொல்லுங்க,
நான் உங்க ஃபிரண்டு தீபக் ஓட வைஃப்.
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க.
நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க.
நல்லா இருக்கேன் சிஸ்டர். சொல்லுங்க.
அண்ணா சுத்தி வளைக்காமல் நான் கேட்பதற்கு உண்மையை சொல்லுங்க.
அமைதியாக இருந்தான் ராஜா.
தீபக் ரெண்டு மாசம் முன்னாடி வேலையை விட்டுட்டானா?
ஆமாம்மா.
பிசினஸ் ஸ்டார்ட் பண்றேன்னு சொன்னான்னா?
ஆமாம்.
இப்ப அந்த விஷயமா தான் பெங்களூர் போய் இருக்காரா?
அப்படித்தான் நினைக்கிறோமா எதுவும் என்கிட்ட சொல்லல எனக்கு தெரியல.
அழுதாள் விருத்திகா.
சிஸ்டர் தயவு செஞ்சு அழாதீங்க. இதனால தான் உங்க அண்ணன் கிட்ட நான் சொன்னேன் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு. அவர் ஏன் சொன்னாரு?
வாட் இந்த விஷயம் எல்லாம் எங்க அண்ணனுக்கு தெரியுமா?
ஆமா சாட்டர்டே அவர் நேரா பார்த்து நான் பேசினேன்.
எங்க பார்த்து பேசினீங்க?
அவரோட ஃப்ரெண்ட் வீட்டுல.
ஃபிரெண்டா?
ஆமா அப்படித்தான் சொன்னாரு.
யாரு ரோஹித்தா?
ஆமா அந்த பேரு தான் சொன்னார் என்று நினைக்கிறேன்.
தீபக்கை காண்டாக்ட் பண்ண ஏதாவது நம்பர் இருக்கா.
இல்ல சிஸ்டர் சாரி,
தேங்க்ஸ் அண்ணா,
என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள்.
ஏதோ யோசனை வந்தவளாய் தன்னுடைய நகைகளை எடுத்துக்கொண்டு ஆட்டோ புக் செய்து அடகு கடைக்குச் சென்றாள்.
அந்தக் கடைக்காரரிடம், அந்த நகைகளை கொடுத்து.
எல்லாம் ஒரிஜினலா என்று செக் செய்ய சொன்னாள் விருத்திகா.
பத்து நிமிடத்திற்கு பிறகு, செக் செய்துவிட்டு.
இல்லம்மா எதுவுமே ஒரிஜினல் தங்கம் கிடையாது. எல்லாமே டூப்ளிகேட் என்று சொல்லி நகைகளை கொடுத்து விட்டார்.
விருத்திகாவிற்கு கண்கள் கலங்கியது.
வீட்டிற்கு திரும்ப வந்தாள்.
அப்போதுதான் புரிந்தது அன்று தீபக் ஏன் அவளிடம் சரியாக பேசவில்லை என்று. அவன் அருகில் அவள் அமர்ந்ததும் சட்டென்று அவன் எழுந்ததும், அவள் முகத்தைப் பார்த்து சரியாக பேசாததும் அதுதான் காரணம் என்று தெரிந்து கொண்டாள்.
விருத்திகாவின் உண்மையான தங்கை நகைளை விற்றுவிட்டு அதேபோல் போலியாக செய்து லாக்கரில் வைத்து விட்டான்.
அந்த குற்ற உணர்ச்சி காரணமாகவே அவளிடம் அன்று அவன் சரியாக பேசவில்லை.
ஒருமுறை தீபக் அவளிடம் பேசியது ஞாபகம் வந்தது.
விரு,
சொல்லு தீபு,
வேலைய விட்டுட்டு பிசினஸ் ஆரம்பிக்கவா டி?
உனக்கு என்ன பைத்தியமாடா? யாராவது இப்படி ரிஸ்க் எடுப்பாங்களா? அதுவும் நான் பிரக்னண்டா வேற இருக்கேன். இப்ப போய் இப்படி சொல்ற.
அமைதியாக இருந்தான் தீபக்.
சரிடா, உடனே மூஞ்ச தூக்கி வைத்துக்கொள்ளாதே. நீ வேலைய விடாத. சைடுல பிசினஸ்சும் பண்ணு. சப்போஸ் நமக்கு பிசினஸ்ல செட் ஆகலன்னா கூட நமக்கு கைவசம் வேலை இருக்கும் இல்ல. நான் மட்டும் பிரக்னண்டா இல்லைன்னு வச்சுக்கோயேன் நான் வேலைக்கு போறேன் டா, நீ உன் விருப்பப்படி பிசினஸ் ஆரம்பி என்று சொல்லுவேன். ஆனா இப்போதைக்கு என்னால வேலைக்கு போக முடியாது. அதனால சைட் பிசினஸா பண்ணலாம்.
இல்லடி, அது செட்டாகாது. கண்டிப்பா நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும். வேலைக்கும் போய்க்கிட்டு இதிலேயே கான்சென்டிரேட் பண்ண முடியாது. அதுவுமில்லாம பணத்தை இன்வெஸ்ட் பண்ணிட்டு நான் சும்மா இருக்க முடியாதுல்ல. போட்ட பணத்தை எடுக்கணும் இல்ல.
இன்வஸ்ட் பண்ண போறியா?
பிசினஸ் நா இன்வெஸ்ட் பண்ணி தானடி ஆகணும்?
எவ்வளவு அமவுண்ட் இன்வெஸ்ட் பண்ண போற?
மினிமம் 22 டூ 30 லேக்ஸ்.
அவ்வளவு பணம் நம்மகிட்ட எங்கடா இருக்கு?
பணமா இல்ல, நகையா இருக்கு இல்ல?
என்ன சொல்ற?
ஆமாண்டி, உன்னோட நகையை கொடு, நான் என்னோட பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணி , பிராஃபிட் வந்ததும் அதை விட டபுள் உனக்கு நான் செஞ்சு தரேண்டி.
இல்ல தீபக், என்ன தப்பா நினைக்காத டா.
என்னடி சொல்ற.
அது எங்க அம்மா நகைகள் டா. அதனால அத பிளட்ச் பண்ண வேண்டாம்,
சேல் பண்ணா தாண்டி பிரச்சனை, எப்படியாவது சீக்கிரமா நான் உனக்கு அதை மூட்டு கொடுத்துடறேன்.
இல்ல தீபக் இத பத்தி இதுக்கு மேல பேசாத ப்ளீஸ் என்று ஒரு முறை அவள் தீபக்கிடம் பேசியது நினைவுக்கு வந்தது. அவள் நகைகளை பிளட்ஜ் செய்ய சம்மதிக்காததால், அதை எடுத்துக்கொண்டு அதேபோல் டுப்ளிகேட் செய்து லாக்கரில் வைத்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்த பிறகு வெகு நேரமாக அழுது கொண்டே இருந்தாள் விருத்திகா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.