பாகம் 17
ரெபேக்கா அவ்வாறு பேசியது விஹானுக்கு என்னவோ போல இருந்தது.
போதுமா நீங்க ரெண்டு பேரும் ஹேப்பியா? இதுக்கு மேல என்கிட்ட அவளுக்கு கால் பண்ண சொல்லி கம்பெல் பண்ண மாட்டீங்க இல்ல? அவளும் இதுக்கு மேல கால் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா, அப்பாடா இதுக்கு மேல நிம்மதியா இருக்கலாம், என்று அவன் சொன்னாலும் மனதிற்குள் ஏதோ உருத்தலாக இருந்தது.
உடன் பிறந்த தங்கை ஆயிற்றே, அதனால் விருத்திகாவிற்கு தன் அண்ணனின் நிலைமை நன்றாகவே புரிந்தது. தன் அண்ணனின் மனதில் காதல் இருக்கிறது என்று அவன் கண்கள் கலங்கியதில் தெரிந்து கொண்டாள் விருத்திகா.
ரோஹித் விருத்திகாவிடம் சொல்வதற்கு முன்னரே தேவியும் பார்வதியும் விருத்திகாவிடம் சொல்லிவிட்டார்கள் ரெபேக்கா விஹானை பல வருடங்களாக காதலிக்கிறாள் என்று. விகானம் ரோஹித்தும் வருவதற்கு முன்னரே விருத்திகா அவளுடைய பிளானை சொன்னாள்.
அவள் சொன்னது போல தான் ரெபேக்கா விஹானிடம் ரிசெப்ஷனில் தனியாக பேசியதும் பிறகு தன் அண்ணன் கால் செய்தால் எப்படி பேச வேண்டும் என்றும் கூறியிருந்தாள். அவளுடைய பிளான் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்று நினைத்து சிறு புன்னகை சிந்தினாள். இருப்பினும் தன் அண்ணன் மனம் வருத்தம் கொண்டது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த வருத்தம் தற்காலிகமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததால் அமைதியாக இருந்து விட்டாள்.
பார்வதி ரோஹித்தையும் நம்முடைய பிளானில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதற்கு, விருத்திகா மறுத்து விட்டாள்.
எங்க அண்ணனும் ரோஹித்தும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அண்ணன் ஃபீல் பண்றான்னு தெரிஞ்சா ரோஹித் சும்மா இருக்க மாட்டாரு. உண்மை எல்லாம் சொல்லிடுவாரு. அப்புறம் நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா போயிடும். அதனால எனக்கு எந்த விஷயமும் தெரியாதது போல இருக்கிறேன். நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க என்றாள் விருத்திகா.
நான் அவர டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா கண்டிப்பா அவருக்கு என் மேல காதல் வருமா விருத்திகா என்றாள் ரெபேக்கா கண்கள் கலங்க.
கண்டிப்பா, நீங்க கவலைப்படாதீங்க அண்ணி என்றாள்.
அவள் அண்ணி என்று சொன்னதும் கலங்கிய தன் கலன்களை துடைத்துக் கொண்டு சிரித்தாள் ரெபேக்கா. அப்போது தான் சாப்பாடு பிளேட்டை எடுத்து வந்தனர் விஹான் மற்றும் ரோஹித். அதனால் அதோடு அந்த பேச்சை நிறுத்திவிட்டு வேறு ஏதோ பேச தொடங்கினார்கள். அங்கே நடந்தவற்றை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் நினைவுகளை கலைக்க அவளுடைய போனில் மெசேஜ் வந்தது.
விருத்திகா நீங்க சொன்ன மாதிரியே நான் பேசிட்டேன் என்று ரெபேக்காவிடமிருந்து மெசேஜ் வந்தது.
அண்ணி வாங்க போங்க எல்லாம் வேண்டாம். வா, போ ன்னு சொல்லுங்க அண்ணி என்று ரிப்ளை செய்தாள் விருத்திகா.
ஓகே ஓகே விரு,
ஸ்மைல் செய்தபடி கவலைப்படாதீங்க அண்ணி, கண்டிப்பா என் பிளான் சக்ஸஸ் ஆகும் என்று ரிப்ளை செய்தாள்.
காரை ஓட்டும் பொழுது கண்ணாடியில் பின்னால் அமர்ந்திருந்த விருத்திகாவை பார்த்தான் ரோஹித்.
அவள் சிரிப்பதினால், தீபக் தான் மெசேஜ் செய்கிறான் என்ற நினைத்து.
விருத்திகா தீபக் லைன் கிடைச்சுதா. மெசேஜ் பண்றாரா என்று கேட்டான் ஆர்வமாக.
தீபக் பெயரை கேட்டது தான் தாமதம், கண்கள் கலங்க அமைதியாக ஃபோனை பேகில் வைத்து விட்டு கண்ணாடி வழியாக வெளியே பார்த்து வந்தாள்.
அவளுடைய இந்த செயலை பார்த்த ரோஹித்துக்கு வருத்தமாக இருந்தது.
ஏன்டா நீ, அவளே இப்பதான் கொஞ்சம் அதையெல்லாம் மறந்துவிட்டு ரெண்டு மணி நேரம் நிம்மதியா இருந்தா, இப்போ நீ வேற, என்று தன் நண்பனை திட்டினான் விஹான்.
சாரி மச்சி நான் பின்னாடி வண்டி வந்துட்டு இருந்தது அதை பார்க்கிறதுக்காக கண்ணாடி பார்த்தேனா அப்ப மெசேஜ் பண்ணிட்டு சிரிச்சிட்டு இருந்தா விருத்திகா, ஒருவேளை தீபக் தான் மெசேஜ் பண்றாரோ என்று நினைத்து ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்டா. சாரி மச்சி, சாரி விருத்திகா.
பரவால்ல ரோஹித், என் மேல இருக்கிற அக்கறையினாலதானே கேட்டீங்க. நோ இஷ்யூஸ், விடுங்க என்றாள் விருத்திகா.
ரோஹித்துக்கு கில்டி ஃபீலிங் ஆக இருந்தது.
அதன்பின் யாரும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு போய் நகைகள் எல்லாம் கழட்டி வைத்துவிட்டு, டிரஸ் சேஞ்ச் செய்துவிட்டு, வந்து பெட்டில் படுத்தாள் விருத்திகா.
அப்போது தன் ஃபோனை எடுத்து தீபக்கிற்கு கால் செய்தாள். மறுபடியும் நாட் ரீச்சபிள்.
அவள் ஏற்கனவே செய்த மெசேஜும் டெலிவரி ஆகவில்லை. மிகவும் கவலையாக இருந்தாள்.
அப்போது தேவிக்கு மெசேஜ் செய்தாள்.
உடனே தேவி கால் செய்தாள்.
ஹாய் விருத்திகா நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன். என் ஹஸ்பண்ட் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரல, ஏதோ இம்போர்ட்டண்ட் வொர்க் இன்னும் மெசேஜ் பண்ணி இருந்தாரு. இன்னைக்கு நைட்டு லேட் ஆனாலும் வந்துருவாரு. மார்னிங் கேட்டுட்டு சொல்லட்டுமா?
ஓகே ஓகே தேங்க் யூ சோ மச் அக்கா.
அக்கா எல்லாம் வேண்டாம் தேவின்னே சொல்லுங்க.
ஓகே தேவி அக்கா என்றாள் விருத்திகா.
ஓகே, குட் நைட் பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் தேவி.
ஃபோனில் அவளிடம் சாதாரணமாக பேசினாலும், எப்பொழுது காலையாகும், எப்போது பேபி கால் செய்து பெங்களூர் ஆஃபீஸ் நம்பரை கொடுப்பாள். இவள் எப்பொழுது கால் செய்து தீபக்கிடம் பேசுவாள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
பிறகு தன் வயிற்றை தடவிக் கொண்டு பேசினாள்.
என்னாச்சு உங்க அப்பாவுக்கு. ஃபோனை தொலைத்து விட்டாரா? அப்படி இருந்தால் வேற ஏதாவது நம்பர்ல ஏதாவது எனக்கு கால் பண்ணி இருக்கலாமே.
ஒருவேளை ஃபோன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சா?
ஒருவேளை உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஏதாவது?, என்று என்னவெல்லாமோ யோசித்தவள். பின்னர் முகத்தை கழுவி விட்டு வந்து பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டாள்.
கடவுளே என் தீபக்கிற்கு ஒன்னும் ஆகக்கூடாது. நீ தான் உன் கூட இருந்து அவனை காப்பாத்தணும். சீக்கிரமா அவனை என்கிட்ட பேச வை, என்று கும்பிட்டு விட்டு, நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டு, கொஞ்சம் எடுத்து தன் வயிற்றில் பூசிக் கொண்டாள்.
பேபி நீயும் அப்பாவுக்காக பிரே பண்ணிக்கோ என்றாள் தன் வயிற்றில் விபூதியை பூசிக் கொண்டே. பிறகு தன் ரூமிற்கு வந்து பெட்டில் படுத்தாள். அரை மணி நேரத்திற்கு மேல் தூக்கமே வராமல் கஷ்டப்பட்டாள்.
அதன் பின்னர் தன்னுடைய ஃபோனில் கந்தர் சஷ்டி கவசம் போட்டுக்கொண்டு, அதைக் கேட்டுக் கொண்டே தூங்கினாள்.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் -18
விஹானுக்கும் தூக்கமே வரவில்லை. ரெபேக்கா இதுக்கு மேல கால் பண்ண மாட்டா. மெசேஜ் பண்ண மாட்டா என்று அதையே நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு ஒரு முறையும் அவளிடம் இருந்து மெசேஜ் வரும் போதும் கால் வரும் போதும் கடுப்பாக இருந்தது என்று நினைத்தான். ஆனால் இதற்கு மேல் அவள் தொல்லை பண்ண மாட்டாள் என்று நினைத்தபோது அவனுக்கு சுத்தமாக சந்தோஷம் இல்லை. மாறாக வருத்தமாகவே இருந்தது. என்னாச்சு நமக்கு என்று நினைத்துக் கொண்டான்.
ரோஹித்துக்கு கால் செய்தான் விஹான் .
சொல்லுடா மச்சி இன்னும் தூங்கலையா நீ? என்றான் ரோஹித்.
இல்லடா தூக்கம் வரல.
ஏன்டா என்ன ஆச்சு? தீபக் பற்றி பத்தி நெனச்சிட்டு இருக்கியா?
இல்லடா, எப்ப அவன் நகை எடுத்துட்டு போகலைன்னு தெரிஞ்சுதோ அப்பவே தெரிஞ்சிடுச்சு, அவன் பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ண போகலன்னு. ஒருவேளை டென்ஷன் ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பதற்கு சோலோ டிரிப் போயிருக்கானோ என்னவோ. இன்னும் 2 டேஸ் வெயிட் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா அதை பத்தி யோசிக்கலாம் என்று நினைத்தேன்.
சரி அப்போ இப்ப எதை நினைச்சு உனக்கு டென்ஷனா இருக்கு தூக்கம் வரல?
தெரியல மச்சி சரி நான் ஃபோனை வைக்கிறேன் பை.
மச்சி இருடா இரு.
என்னடா?
உண்மைய சொல்லு என்ன பிரச்சனை உனக்கு?
ஒன்னும் இல்லடா சும்மாதான் உன் கிட்ட பேசணும் போல இருந்தது அதனால பண்ணேன்.
உன்ன பத்தி எனக்கு தெரியாதா உண்மைய சொல்லு ஒழுங்கா.
ரெபேக்கா இதுக்கு மேல கால் பண்ண மாட்டேன்னு சொன்னது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சுடா.
அப்படின்னா நீ அவளை லவ் பண்றியா?
தெரியல டா.
மச்சி, இல்லன்னு சொல்லாம தெரியலன்னு சொல்றியே அதுல இருந்தே தெரியுது.
ஏய் நானே ஏற்கனவே குழப்பத்துல இருக்கேன் இந்த மாதிரி புரியாமல் பேசி என்னை இன்னும் குழப்பாத டா என்றான் விஹான்.
மச்சி, நீ ரெபேக்காவ லவ் பண்ற அதனாலதான் அவ அப்படி சொன்னது உனக்கு கஷ்டமா இருந்துச்சு.
இல்லடா எனக்கு சொல்ல தெரியல.
நாளைக்கு ரெபேகாகாவை நேரா போய் மீட் பண்ணி பேசு எல்லாம் சரியாகும்.
என்னடா சொல்ற?
ஆமா மச்சி நீ நேரா போய் பார்த்து மனம் விட்டு பேசு, அப்ப உனக்கே தெரிஞ்சிரும்.
இல்லடா இப்போ விருத்திகா இருக்கிற நிலைமையில நான் லவ் பின்னாடி போக விரும்பல. முதல்ல விருத்திகாவுக்கு எல்லாம் சரியாகட்டும். தீபக் வரட்டும். அவ அவங்க வீட்டுக்கு போகட்டும். அதுக்கு அப்புறம் பார்க்கலாம்.
அதுக்குள்ள ரெபேக்காவுக்கு கல்யாணம் ஆகிவிடும் பரவாயில்லையா?
என்னடா லூசு மாதிரி பேசுற.
பின்ன என்ன? அவளே பாவம் உனக்காக இத்தனை வருஷமா காத்து கிட்டிருந்தா. இன்னும் அவளை எவ்வளவு நாள் வெயிட் பண்ண சொல்லுவ. அதுவும் உனக்கு சம்மதமான்னு கூட தெரியாம அவ எப்படி வெயிட் பண்ணுவா? ஏற்கனவே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. அப்படின்னா என்ன அர்த்தம்?
என்ன?
நீ இதுக்கு மேல ஓகே சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சுகிட்டு, அவங்க அப்பா அம்மா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆயிட்டான்னு அர்த்தம்.
மச்சி இப்படி எல்லாம் பேசி என்னை கண்ஃபியூஸ் பண்ணாதடா.
இங்க பாரு மச்சி, விருத்திகா இதுல தப்பா நினைக்க எதுவும் இல்ல, இன்ஃபேக்ட் நீ லவ் பண்றன்னு தெரிஞ்சா முதல்ல சந்தோஷப் படுறவ அவ தான்.
ஆமாம் டா, இருந்தாலும் எனக்கு மனசு கேட்கல.
சரி மச்சி, நான் வேணும்னா விருத்திகா கிட்ட பேசி பர்மிஷன் கேட்க வா?
பர்மிஷன் கேட்கனும் எல்லாம் எதிர் பார்க்க மாட்டா டா அவ.
பின்ன என்ன?
உனக்கு புரியுதா இல்லையா, அவ தனிமையில கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அவளை இன்னும் தனிமையா ஆக்கிட்டு நான் ரெபேக்காவை பார்க்க போக மாட்டேன்.
சரிடா, நான் வேணும்னா விருத்திகாவை வெளியே கூட்டிக்கிட்டு போறேன், அவளுக்கு ஓகேன்னா அப்போ உனக்கு பிராப்ளம் இல்லல நீ ரெபேக்காவை மீட் பண்றதுக்கு.
மச்சி, நீ லூசா ஆயிட்டியா? நான் என்ன நாளைக்கு மட்டும் அவ தனியா இருப்பான்னா சொல்றேன்?.
பின்ன என்ன?
ஏய் விடு டா, நான் பார்த்துக்கிறேன் என் பிரச்சனையை. உன் கிட்ட ஹெல்ப் கேட்க நினைச்சது என் தப்பு தான்.
மச்சி மச்சி, சும்மா விளையாட்டுக்கு தான் டா சொன்னேன். நீ என்ன மீனிங்க்ல சொல்றன்னு என்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன?
உன்னால முடிஞ்சா எனக்கு ஒரு நல்ல யோசனை சொல்லு டா.
சரி, சொல்றேன் கேளு. என்கிட்ட பேசிட்டு ஃபோனை வச்ச உடனே ரெபேக்காவுக்கு கால் பண்ணு,
கால் பண்ணி?
இருடா என்னை முழுசா பேச விடு.
சரி சொல்லு.
கால் பண்ணி, எனக்கு இந்த வீக் எண்டு வரைக்கும் டைம் தரியா? உடனே அவ எதுக்குன்னு கேட்பாள்,
உனக்கு ரிப்ளை பண்றதுக்கு. அப்படின்னு சொல்லு. அதுக்குள்ள கண்டிப்பா தீபக் பத்தி விஷயம் தெரிஞ்சுரும். தீபக்கே வந்தாலும் வந்துடுவாரு. சோ நீ நிம்மதியா அவ கிட்ட உன் காதலை சொல்லலாம்.
சரிடா இது ஒரு நல்ல யோசனையா எனக்கு தோணுது. நான் அவ கிட்ட பேசுறேன். ஆனா இப்ப ரொம்ப லேட்நிட் ஆயிடுச்சு தூங்கிருப்பாளோ?
அதெல்லாம் தூங்கி இருக்க மாட்டா. அப்படியே உனக்கு டவுட்டா இருந்தா அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு. இப்ப பேசலாமான்னு கேளு. அவ ஓகே சொன்ன அப்புறமா கால் பண்ணு. இல்ல அவ உன் மெசேஜ் பார்க்கலைன்னா இழுத்து போர்த்தி கிட்டு தூங்கு, நாளை காலைல பேசிக்கோ. இப்ப நான் தூங்குறேன் எனக்கு தூக்கம் வருது, பை குட் நைட் மச்சி என்று சொல்லி அவன் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை வைத்து விட்டான் ரோஹித்.
ரோஹித் சொன்னது போலவே ரெபேக்காவுக்கு மெசேஜ் செய்தான் விஹான்.
ஹாய் ரெபேக்கா என்று அனுப்பினான்.
அவள் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால், ஃபோனை எடுத்து பார்க்கவில்லை. மேலும் அந்த நேரத்தில் அவளுடைய பிரண்ட்ஸ் யாரும் மெசேஜ் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து ஃபோனை எடுத்துப் பார்க்கவில்லை. ஐந்து நிமிடமாக ரிப்ளை வராததால், மறுபடியும் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு தூங்கலாம் என்று நினைத்தவன்.
ஓகே தூங்கிட்ட போல, நாளைக்கு காலைல பேசுறேன், பை, குட் நைட் என்று அனுப்பினான் விஹான்.
மறுபடியும் மெசேஜ் சவுண்ட் வந்ததால்,
ஃபோனை எடுத்து யார் என்று பார்த்தாள் ரெபேக்கா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.