
தித்திக்கும் தேன்பாவை
பாகம் 17
நந்தினி ஹாஸ்பிடல் வருவதற்குள்,
அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஷியாம்.
தன் பைக்கை ஹாஸ்பிடலிலேயே வைத்து விட்டு அங்கிருந்து ஆட்டோ புக் செய்து ரோஹித் வீட்டிற்கு சென்றான்.
ஷியாமும் ரோஹித்தும் திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கும் ஜவ்வாது மலைக்கு சென்றனர்.
அங்குதான் கிஷோர் இருப்பதாக ரோஹித்திற்கு தகவல் கிடைத்தது. ஏதோ சாங் கம்போசிங் காக ஆல்பம் தயார் செய்ய அங்கு சென்று இருப்பதாக அவனுடைய ஃபிரண்டுடைய ஃபிரண்டுடைய ஃபிரண்டின் மூலமாக தெரிந்து கொண்டான்.
ரோஹித்தின் பள்ளி நண்பனின் புல்லட் பைக் வாங்கி அதிலேயே இருவரும் சென்றனர். இருவரும் தங்களுடைய ஃபோனை சைலன்டில் போட்டு ரோஹித் தன் வீட்டிலேயும் ஷியாம் ஹாஸ்பிடலில் இருக்கும் தன்னுடைய பைக்கிலும் வைத்துவிட்டு வந்தனர்.
அங்கே இருக்கும் ஹோம் ஸ்டேவில் அவன் தங்கி இருப்பதாக தெரிந்தது.
கிஷோரும் அந்த இடத்திற்கு பைக்கிலேயே வந்திருந்தான்.
தான் வெளியே செல்வதாகவும். மதியம் தனக்கு லஞ்ச் வேண்டாம் இரவு கோழி சமைத்து வைக்குமாறு அந்த ஹோம் ஸ்டே குக்கிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
தூரமாக நின்று அவனை கண்காணித்து கொண்டிருந்த ஷியாமும் ரோஹித்தும் அவனை ஃபாலோ செய்தனர்.
மலை உச்சி வியூ பாயிண்ட்டில் வண்டியை நிறுத்திவிட்டு தன்னிடம் இருக்கும் கஞ்சாவை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பாறையில் அமர்ந்து சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அந்தப் பொடியை தன் மூக்கினுள் சுவாசித்தான்.
வெகு தூரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவன் இருக்கும் இடத்திற்கு மெதுவாக நடந்து வந்தனர் ஷியாம் மற்றும் ரோஹித்.
போதை மயக்கத்தில் இருந்ததால் முதலில் யார் இவர்கள் என்று தெரியாமல்,
“ப்ரோ என்கிட்ட ஒரு பாக்கெட் இருக்கு உங்களுக்கு வேணுமா?” என்று கேட்டான் கிஷோர்.
வேகமாக சென்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் ஷியாம். சற்றே மயக்கம் தெளிந்தவன் இருவரையும் அடையாளம் தெரிந்து கொண்டு அங்கிருந்து ஓட பார்த்தான்.
ரோஹித் அவனைப் பிடித்துக் கொள்ள அவனை சரமாரியாக அடித்தான் ஷியாம்.
” போதும் மச்சி ” என்றான் ரோஹித்.
” இவனையெல்லாம் உயிரோடவே விடக்கூடாது ” என்றான் ஷியாம்.
” ஒரு நிமிஷம் இவனை நீ பிடி ” என்றான் ரோஹித்.
” என்னடா பண்ணப் போற? நீ அடிக்க போறியா? சொல்லு அப்பதான் நான் பிடிப்பேன். “
” ஆமாண்டா புடி ” என்று சொல்லிவிட்டு கீழே இருந்த பெரிய பாறை ஒன்றை எடுத்து அவனுடைய ஆணுறுப்பை சிதைத்தான் ரோஹித்.
வலி தாங்காமல் கத்தினான் கிஷோர்.
” என் ஷிவானி எவ்வளவு துடிச்சிருப்பா? இந்த வலியோடவே சாகு டா ” என்றான் ரோஹித்.
ஷியாமிற்கும் ஷிவானியை நினைத்து கண்கள் கலங்கியது.
ரோஹித்தும் ஷியாமும் கையில் கிளவுஸ் போட்டு இருந்ததால் எந்த கைரேகையும் பதியவில்லை. அவர்கள் இருவரும் அவனுடைய பைக்கை பாறை மீது இடித்து ஆக்சிடென்ட் ஆனது போல செய்துவிட்டனர். மேலும் அவன் பாறையில் போய் விழுந்து தலையிலும் அவனுடைய உறுப்பிலும் அடி பட்டது போல செட் செய்தனர்.
” ஒருவேளை இவன் பிழைத்துக்கொண்டால் என்ன பண்றது? ” என்றான் ஷியாம்.
” கண்டிப்பா பிழைக்க மாட்டான். எதுக்கும் நம்ம ஒரு 20 நிமிஷம் கழிச்சு போகலாம் “
” அது என்ன 20 நிமிஷம் “
” அவனுடைய நரம்பை நசுக்கி விட்டேன். அதனால் நரம்பு அறுபட்டு ரத்தம் வழிகிறது. அவன் இன்னும் கால் மணி நேரத்தில் துடித்துடிச்சி சாவான் “
பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள் ரோஹித் மற்றும் ஷியாம்.
ரோஹித் சொன்னது போலவே 20 நிமிடத்தில் உயிரிழந்தான் கிஷோர்.
“என் வேலை முடிஞ்சிடுச்சு உன் வேலை தான் பாக்கி இருக்கு” என்றான் ரோஹித்.
” நானும் இன்னைக்கு ராத்திரி குள்ள முடிச்சிருவேன்” என்றான் ஷியாம்.
ஷியாமை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விட்டான் ரோஹித்.
“ஓகே டா பை, உன்னுடைய காலுக்காக காத்திருப்பேன் ” என்றான் ரோஹித்.
” சரிடா மச்சான், பை” என்றான் ஷியாம்.
ரோஹித் கிளம்பி சென்றதும், ஷியாம் பப்ளிக் பூத்தில் இருந்து நந்தினிக்கு கால் செய்தான்.
“ஹலோ நந்து,”
” ஷியாம் நீயா? யாருடைய நம்பர் இது? உன்னோட ஃபோன் என்ன ஆச்சு? “
” உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நான் சொல்ற இடத்துக்கு வந்து என்னை பிக்கப் பண்ணிக்கிறியா? “
” கண்டிப்பாடா, எங்கன்னு சொல்லு “
” ரயில்வே ஸ்டேஷன்”
” அங்க என்ன பண்ற நீ? “
” நீ நேரா வா. நீ முதல் முதலில் என்கிட்ட காதலை சொன்ன இல்ல அந்த பெஞ்சுக்கு வா “
” ஓகேடா ” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு நர்ஸிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் நந்தினி.
நந்தினி வருவதற்காக காத்திருந்தான் ஷியாம்.
நந்தினி வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“நந்தினி ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்ட இல்ல?”
” நான் ஏண்டா கோச்சுக்க போறேன்?,
என்ன சொல்லு?”
” ரொம்ப டென்ஷனா இருக்கு ஒரே ஒரு கிஸ் கொடுக்குறியா? “
” அடப்பாவி அதுக்கு தான் இங்க வர சொன்னியா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் “
” ப்ளீஸ் நந்து”
“சரி இரு தரேன், ” என்று சொல்லி அக்கம் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு யாரும் இல்லாமல் தனியாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, சிரித்தபடியே அவனை அணைத்து அவன் இதழில் முத்தம் கொடுத்தாள்.
இரண்டு நிமிட முத்தத்திற்கு பிறகு,
“ஒரு மாசம் இருக்கும் இல்ல நம்ம இங்க வந்து? ” என்றாள் நந்தினி.
அமைதியாக இருந்தான் ஷியாம்.
அவன் அருகில் அமர்ந்து அவனுடைய கை விரல்களுக்குள் தன் கைவிரலகளை கோர்த்துக்கொண்டு
“என்னடா? இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கியா? விடு. அதான் நீ கேட்டபடி நான் கிஸ் பண்ணிட்டேன்ல? எப்படியாவது நம்ம ஷிவானியை சரி பண்ணிடலாம். நீ டென்ஷன் ஆகாத ” என்றாள் நந்தினி.
” ஏன் நந்து இப்படி பண்ண? ரோஹித் கிட்ட எதற்கு ஷிவானியை பத்தி சொன்ன? ” என்றான் ஷியாம்.
” சாரி ஷியாம், என்னோட வீட்டு கிட்ட வந்து ஷிவானிக்கு என்ன ஆச்சுன்னு சொல்லியே ஆகணும்னு ரோஹித் கேக்கும்போது என்னால சொல்லாம இருக்க முடியல. அதுவும் இல்லாம ரோஹித் ஷிவானியை லவ் பண்றாரு. தெரியுமா உனக்கு?. அவளை அவர் நல்லா பார்த்துக்கனும்னா.
அவளுக்கு என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரிஞ்சே ஆகணும் இல்ல. இல்லன்னா பின்னாடி அவங்களுக்குள்ள பிரச்சனை வரும். அதனாலதான் சொன்னேன். கண்டிப்பா நீ இதுக்கு கோச்சிப்பன்னு எனக்கு தெரியும். ஆனா என்னைப் பொருத்தவரை நான் பண்ணது தப்பு கிடையாது ” என்றாள் நந்தினி.
” நீ தப்பே பண்ணலையா நந்தினி? ” என்றான் ஷியாம்.
அவனை ஆச்சரியமாக பார்த்தாள் நந்தினி.
“என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல? “
என்றாள் நந்தினி.
அமைதியாக இருந்தான் ஷியாம்.
” இந்த விஷயத்துக்காக என் கிட்ட பேச மாட்டியா? என் மேல கோபப்படுவியா? ” என்று கெஞ்சுவது போல பேசினாள் நந்தினி.
” சரி அன்னைக்கு எதுக்கு நீ என்னை ஃபர்ஸ்ட் கிஸ் பண்ண வந்த? “
” ஏன்டா என்ன ஆச்சு? ”
“சொல்லு, எதுக்கு? நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டே தானே இருந்தோம். திடீர்னு எதுக்கு கிஸ் பண்ண கிட்ட வந்த?”
“கிஸ் பண்ணனும் தோணுச்சு”
“பொய் சொல்லாத டி, எனக்கு எல்லாம் தெரியும். கிஷோர் எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் தான் என் தங்கச்சியை பலாத்காரம் செஞ்சான்னு தெரிஞ்சிடிச்சு” என்று கிஷோரை அடித்து அவனிடம் பேசியதை நந்தினியிடம் கூறினான்.
“உண்மையை சொல்லு” என்று சொல்லி கிஷோரை அடித்து உதைத்தான் ஷியாம்.
“சொல்லிடறேன், சொல்லிடறேன்” என்று பேச ஆரம்பித்தான் கிஷோர்.
“என் கிட்ட இருந்த சாவியை வைத்து பின் கதவை திறந்தேன். ஆனாலும் கதவை திறக்க முடியல. அப்போது தான் கதவோட உள் பக்கம் இருக்கும் தாழ்ப்பாளை நெம்பி உடைச்சேன்.
அந்த சத்தத்தை கேட்டுட்டு ஃபோன் பேசிக்கிட்டு இருந்த ஷிவானி ஃபோனை வச்சிட்டு தெரு கதவு கிட்ட போனா. ஆனா அப்புறம் தான் சத்தம் பின் கதவில் இருந்து வருவது தெரிஞ்சு அவ கிட்சனுக்கு வருவதற்கும் நான் உள்ளே நுழைவதற்கும் சரியா இருந்துச்சு.
நான் ஃபேஸ் மாஸ்க் கிளௌஸ் எல்லாம் போட்டிருந்ததால என்னை அவளுக்கு அடையாளம் தெரியல. அதனால திருடன் திருடன்னு கத்தினா.
உடனே என் கையில் இருக்கும் ராடை வச்சு அவ தலையில அடிச்சேன். அவ கீழே விழுந்திட்டா. அப்புறம் அவளை பெட் ரூமுக்கு தூக்கிட்டு போய் என் வேலையை முடிச்சிட்டேன். அவ அந்த மயக்கத்திலேயும் என்னை தடுக்க போராடின போது தான் என் கையில் இருந்த பிரேஸ்லெட் கீழ எங்கேயோ விழுந்திடிச்சு. அதை நான் அப்போது கவனிக்கல. அங்கிருந்து கிளம்பிட்டேன்”
“என்னோட வீட்டு பின் கதவோட சாவி உனக்கு எப்படி கிடைச்சது?
அப்படின்னு அவனை நான் கேட்டபோது அவன் சொன்ன பதில்ல என் உயிரே போயிடிச்சு” என்றான் ஷியாம்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்,
“ஓ, விஷயம் தெரிஞ்சு தான் பேசறீயா?
அப்போ இதுக்கு மேல மறைச்சு பிரயோஜனம் இல்ல” என்று சொல்லி சிரித்தாள் நந்தினி.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்
No comments yet.