பாகம் 15,16

Vaishnavi Vijayaraghavan | 04 Jun 2026 | Share

பாகம் 15 

ஒரு நிமிடம் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவை சுயநினைவுக்கு கொண்டு வர தன் 

கையை அவள் கண் முன்னால் ஆட்டினான் ஆதித்யா.

“வசு என்ன ஆச்சு, மாத்திரையை போட்டுக்கோ” என்றான் ஆதித்யா.

உரிமையுடன் அவ்வாறு அவன் பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஸ்மைல் செய்து கொண்டே அதை வாங்கி போட்டுக் கொண்டாள் வசுந்தரா.

“வசுந்தரா உங்களுக்கு தூக்கம் வர வரைக்கும் நான் உங்ககிட்ட பேசலாமா?”

சரி என்று தலை அசைத்தாள்.

“உங்களோட ஸ்கூல் லைஃப் காலேஜ் லைஃப் உங்க பாஸ்ட் பத்தி சொல்லுங்க, நம்ம வேற அரேஞ்சிடு மேரேஜ். எனக்கு உங்கள பத்தி  ஒண்ணுமே தெரியாது”

“எனக்கும்  உங்களை பத்தி ஒன்னும் தெரியாது. அதனால நீங்க முதல்ல சொல்லுங்க”

“இல்ல இல்ல நீங்க ஃபர்ஸ்ட் சொல்லுங்க”

“நீயே முதல்ல சொல்லு ஆதித்யா” என்று சொன்னதும் தான் புரிந்தது அவனும் அவளை வாங்க போங்க என்று தான் கூப்பிட்டு கொண்டு இருக்கிறான் என்று.

“ஓகே வசு, நானே சொல்றேன்”

“எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிவாத குணம் மிக அதிகம். என்னை பொறுத்த வரைக்கும் நான் எது செஞ்சாலும் அது ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சு செய்வேன். அதுவும் சரியா தான் செய்வேன். 

அதனால அது எந்த விதத்திலும் தப்பாகாதுன்னு எனக்கு ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருக்கு. எங்க குடும்பத்துல இருக்கும் எல்லாருமே எனக்கு நேர் எதிர். என்னை முரடன், கோபக்காரன், பிடிவாதக்காரன், டாமினேட்டிங் பெர்சன் அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க”

ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.

“எதுக்கு சிரிக்கிற வசு”

“இல்ல ஒன்னும் இல்ல”

“இல்ல, நீ எதையோ யோசிச்சு சிரிக்கிற அது என்னன்னு சொல்லு”

“உண்மையிலேயே உன்னை பார்த்தா நீ சொன்ன எதுவுமே எனக்கு தோணல”

“அப்ப என்ன தோணுது?”

“அப்பாவின்னு  சொல்ல முடியாது. 

நீ நல்லவன்னு  தோணுது”

“முதல்முறையா இந்த மாதிரி ஒரு பாசிட்டிவான ஒரு ரிவ்யூ கேக்குறேன் என் கேரக்டர் பத்தி”

“எனக்கு தெரிஞ்சு, எல்லாருக்கும் அது தெரியும். யாரும் உன் கிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க”

“நான் காலேஜ் படிக்கும் போது, ஃபர்ஸ்ட் இயர்ல படிப்புல சுமாரா தான் இருந்தேன். கல்ச்சுரல்ஸ் ஸ்போர்ட்ஸ்னு அதுல எல்லாம் பார்ட்டிசிபேட் பண்ணி  எக்ஸாம்ஸ்ல கோட்டை விட்டுட்டேன். எழுதின எட்டு பேப்பர்ல அஞ்சு பேப்பர் அரியர்ஸ். எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அடுத்த முறை தீவிரமா படிச்சு செகண்ட் செமஸ்டர் பேப்பர்ஸோட அரியர்ஸையும்  சேர்த்து  எல்லாத்தையும் 80% க்கு மேல எடுத்து கிளியர் பண்ணினேன்.

காலேஜ் செகண்ட் இயர்ல தான் எனக்கு சைலஜாவோட அறிமுகம் கிடைச்சது” 

‘யாரு சைலஜா?’ அப்படின்னு கேட்பானு நெனச்ச ஆதித்யாவுக்கு ஏமாற்றம் தான். அவன் அவளை திரும்பி பார்க்கும் போது வசுந்தரா தூங்கி விட்டிருந்தாள்.

ஸ்மைல் செய்து கொண்டே அவளுக்கு போர்த்தி விட்டு விட்டு தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அவன் ரூமிலேயே இருந்த அந்த சிறிய ஆபீஸ் ரூமுக்கு சென்றான். கதவை சாத்திவிட்டு அந்த சேரில் அமர்ந்து லேப்டாப்பை ஓப்பன் செய்தான்.

“என்ன ஆதி,உனக்கு அவ மேல லவ் வந்துருச்சா?” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

அந்த லேப்டாப்பின் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள் சைலஜா.

“சைலஜா உனக்கு எத்தனை முறை சொல்றது. நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்னு”

“அப்ப அவளுக்கு விழுந்து விழுந்து செய்யற. தூக்கிட்டு போற, மருந்து எடுத்துட்டு வந்து கொடுக்கிற, போர்த்தி விடற, இதுக்கெல்லாம் பேர் என்னவாம்?”

“என் தங்கச்சியை கூடத்தான் நேத்து தூக்கிட்டு போனேன். அதையும் தான நீ பார்த்துட்டு இருந்த?”

“உனக்கு அஸ்வினியும், இந்த பொண்ணு வசுந்தராவும் ஒண்ணா?”

“இல்ல, ஆனா ரெண்டு பேரும் என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ்”

“அப்போ நான்”

“நீ என் உயிர் டி, நீ என் காதலி. நீ என் மனைவி”

“ஆனா தாலி நீ அவளுக்கு தானே கட்டி இருக்க?”

“தாலி கட்டவே தான் அவளை தங்கச்சி என்று சொல்ல முடியவில்லை. அவ எனக்கு ஒரு நல்ல ஃபிரண்டா இருப்பா”

“இன்னைக்கு பிரெண்டுனு சொல்லிட்டு, நாளைக்கு உனக்கு அவ மேல லவ் வந்துருச்சுன்னா?”

“வராது. இன்னும் ஒரு வருஷம் தானே அதுக்கப்புறம் அவ டைவர்ஸ் வாங்கிட்டு போயிடுவா”

“அதான் சொல்லிட்டாளே, குழந்தை வேணும்னா டைவர்ஸ் தர மாட்டேன்னு”

“சரி அவதான் வாழ்நாள் பூராவும் பிரண்டாகவே இருக்கலாம் என்று சொல்லிட்டா இல்ல?”

“இதெல்லாம் நடைமுறை ஒத்துவரும் என்று நினைக்கிறாயா?”

“என்ன சொல்ற ஷைலு நீ?”

“இத பாரு ஆதி, என்ன தவிர நீ வேற எந்த பொண்ணையும் காதலிக்கக் கூடாது. நீ என்னோட சொத்து, உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா ஷைலு?”

“ஐ லவ் யூ ஆதி”

“ஐ லவ் யூ ஷைலு”

என்று சொல்லி கட்டிபிடித்து அவள் இதழில் முத்தம் கொடுத்தான்.

ஆதிக்கு அவள் கட்டி பிடிப்பது போல இல்யூஷன். உண்மையில் அவன் ஒரு பெரிய டெடிபேரை கட்டிப்பிடித்து அதற்கு முத்தம் கொடுத்தான்.

“ஆதி, எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் நீ உன் வேலைய முடிச்சுட்டு போ”

என்று சொல்லிவிட்டு அங்கு இருந்த சோஃபாவில் படுத்து அவள் உறங்குவது போல  கற்பனை செய்து கொண்டான் ஆதித்யா.

பிறகு தன் கம்பெனி வேலைகளை, மூன்று மாதம் கழித்து சிஇஓ ஆன பிறகு க்ளோஸ் செய்ய வேண்டிய வேலைகளையும், புதிதாக எடுக்க வேண்டிய ஆடர்களையும், நியூ ப்ராஜெக்ட் பற்றியும் ரிசர்ச் செய்து டாக்குமெண்டேஷன் ரெடி செய்து கொண்டிருந்தான்.

மூன்று மணி நேர வேலைக்குப் பிறகு டைம் பார்த்தான். மணி மதியம் 1:30.

லேப்டாப்பை க்ளோஸ் செய்துவிட்டு சோஃபாவில் இருந்த சைலஜாவை பார்த்தான்.

அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று பார்த்துவிட்டு ஒரு போர்வையை எடுத்து போர்த்தி விட்டான்.

பின்னர் சத்தம் போடாமலேயே மெதுவாக வெளியே வந்து அந்த கதவை பூட்டினான்.

வசுந்தரா எழுந்து பெட்டில் அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாரி ஆதி, நீங்க என்னமோ சொல்லிகிட்டு இருந்திங்க. நான் அப்படியே தூங்கிட்டேன்”

“இட்ஸ் ஓகே நோ இஷ்யூஸ்”

“ஆதி, ஒன்னு கேட்கவா?”

“சொல்லு வசு” என்றான் ஆதித்யா.

“அந்த ரூம்ல யாராவது இருக்காங்களா என்ன?” என்று அந்த ஆபீஸ் ரூமை கைகாட்டி கேட்டாள் வசுந்தரா.

பாகம் 16

“இல்லையே ஏன் அப்படி கேக்குற?” என்று பயந்தவாறு கூறினான் ஆதித்யா.

“வெளிய வரும்போது, உள்ளே பார்த்து பார்த்து மெதுவா கதவு சாத்தனீங்களே? அதனால கேட்டேன்”

“இல்ல வெளிய நீ தூங்கிட்டு இருந்தல்ல. அதான் நீ எழுதுற போறன்னு நெனச்சு மெதுவா சாத்தினேன்”

“ஓ ஓகே, அந்த ரூம்ல அப்படி என்ன வச்சிருக்கீங்க?”

“ஆஃபீஸ் ஃபைல்ஸ் அண்டு திங்க்ஸ் தான். என்ன மறுபடியும் வாங்க போங்கன்னு பேசுற?”

“இல்ல ஆதி, அது கொஞ்ச நாள் ஆகும் எனக்கு சரளமாக அந்த மாதிரி பேசுறதுக்கு”

“ஓகே நீ இரு நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”

“இல்ல இல்ல வேண்டாம் ஆதி. நானே கீழ வரேன். ரூம்லேயே உட்கார்ந்திருப்பதற்கு போரடிக்குது”

“சரி வா கீழ போகலாம்”

“உனக்கு பசிக்குதா, நீ என் கூட சாப்பிடுவியா?”

“சாப்பிட சொல்றியா இல்ல வேண்டாம்னு சொல்றியா?”

“இல்ல எனக்கு கம்பெனி குடுக்க சொல்றேன்”

“நீ எனக்கு கம்பெனி கொடு. காலையில ஆசையா மருமகளுக்கு ஊட்டி விட்ட எங்க அம்மா, என்னை மறந்துட்டாங்க. நான் காலையில இருந்து சாப்பிடவே இல்ல. ரொம்ப ரொம்ப பசிக்குது” என்றான்.

சிரித்துக் கொண்டே இருவரும் படியில் இறங்கி வந்தார்கள்.

அதை பார்த்த மகேஸ்வரிக்கு சந்தோஷமாக இருந்தது.

தன் கைகளால் இருவரையும் தொட்டு திருஷ்டி உடைத்தார்.

“அம்மா சாப்பிடலாமா ரொம்ப பசிக்குது”

பல வருடங்களுக்குப் பிறகு தன் மகன் இவ்வாறு பேசுவதை கேட்டு கண்கள் கலங்கினார் மகேஸ்வரி.

“வாப்பா, வா உட்காரு” என்று சொல்லி தன் மகனின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்தார் மகேஸ்வரி.

“அஸ்வினிக்கு சாப்பாடு கொடுத்துட்டீங்களா அம்மா”

“இப்பதான் பா கொடுத்தேன். சாப்பிட்டுட்டு தூங்குறா. அப்படியே உங்களை கேக்கலாம்னு நெனச்சேன். கதவு சாத்தி இருந்தது. தூங்குறீங்களோ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சு விட்டுட்டேன்”

“நீங்க சாப்டீங்களா அத்தை?” என்றாள் வசுந்தரா.

“இல்லம்மா எனக்கு பசிக்கல நீங்க சாப்பிடுங்க அப்புறமா நான் சாப்பிட்டுக்கிறேன்” 

“இல்ல அத்தை, எங்க கூட சேர்ந்து நீங்களும் சாப்பிடுங்களேன்”

“சரி மா” என்று சொல்லி மூவரும் சாப்பிட்டனர்.

முந்தைய இரவு சரியாக தூங்காததால் ஆதித்யா தூக்கம் வந்தது. தன் ரூமிற்கு சென்று தூங்கி விட்டான். வசுந்தரா தன் மாமியாரிடம் பேசிக்கொண்டு ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

சிறு வயதில் தன் தங்கையுடன் விளையாடியது, தன் அப்பா அம்மாவுடன் வெளியே சென்றது. அவளை பெற்ற அம்மாவின் முகம் கூட அவளுக்கு ஞாபகம் இல்லாதது என்று பல விஷயங்களை பேசினாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.

“உங்களுக்கு தூக்கம் வருதா அத்தை. நான் உங்களை ரொம்ப போர் அடிக்கிறேனா?”

“இல்லம்மா அதெல்லாம் இல்ல. வேலைய முடிச்சுட்டு மத்தியானத்தில் எனக்கு பெருசா தூக்கம் வராது. சாமி புக்கு கத புக் என்று எதையாவது வச்சு படிச்சுக்கிட்டு இருப்பேன். என் பசங்க எல்லாம் இந்த மாதிரி பேச மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கேன். நீ தான் இன்னைக்கு என் கூட பேசுற. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு”

ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.

“மத்தியானத்துக்கு மாத்திரை இருக்காமா?”

“மாத்திரை இல்ல அத்தை ஒரு சிரப்பு தான் இருக்கு. அது குடிச்சா ரொம்ப தூக்கம் வருது. அதனால ராத்திரிக்கு அது குடிச்சிக்கிறேன்”

“ஆதித்யாவுக்கு தெரிஞ்சா திட்டுவான் மா”

“நான் சொல்லிக்கிறேன் அத்தை”

“சரி மா” என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் படித்த புத்தக கதையைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

“எனக்கு ராஜேஷ்குமார் நாவல்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும் மா”

“புக்ஸா வாங்கி படிப்பிங்களா இல்ல ஃபோன்ல படிப்பீங்களா அத்தை”

“ஃபோன்ல எல்லாம் படிச்சா எனக்கு தலைவலி வந்துடும்மா, அதனால புக்கு வாங்கி தான் படிப்பேன். உங்க மாமா வாரத்துக்கு ஒரு முறை எனக்கு தேவையான புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்திடுவார்”

“ஓ, சூப்பர் அத்தை”

“ஆமா நான் கேட்கணும்னு நினைச்சேன் அத்தை, அர்ஜுன் ஏன் அவ்வளவா பேச மாட்டேங்குறாரு”

“அவன் சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் அம்மா. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான்”

“ஓ, ஓகே அத்தை”

பிறகு நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அஸ்வினி தன் அம்மாவிற்கு கால் செய்தாள்.

“அம்மா, அண்ணி கிட்ட பேசுற ஜோர்ல என்னை மறந்துட்டீங்க போல?”

“அச்சச்சோ சாரிமா, நான் எடுத்துட்டு வரேன் ஜூஸ”

“அம்மா நீங்க ஏன் ஏறி ஏறி இறங்கறீங்க. கமலா அக்கா கிட்ட கொடுத்து அனுப்புங்க”

“சரி மா”

“அண்ணி மேல வரும்போது என் கூட வந்து கொஞ்ச நேரம் பேச சொல்லுங்கம்மா. எனக்கும் ரொம்ப போர் அடிக்குது”

“சரிம்மா, நான் சொல்றேன்”

“அஸ்வினியா அத்தை மேல இருந்து ஃபோன் பண்றா?”

“ஆமாம்மா உன்கிட்ட பேசிட்டு இருந்ததில் அவளுக்கு ஜூஸ் கொடுக்க மறந்துட்டேன்”

“என்கிட்ட குடுங்க அத்தை, நான் குடுத்துட்டு வரேன்”

“ஆமா அவ உங்ககிட்ட கூட பேசணும்னு சொன்னா”

“சரிங்க அத்தை, நானே கொடுத்துட்டு பேசிட்டு வரேன்” என்று சொல்லி ஜூசை வாங்கிக் கொண்டு படியின் மேலே ஏறினாள்.

“உனக்கும் வச்சிருக்கேன்மா நீயும் குடி”

“சரிங்க அத்தை” என்று சொல்லிவிட்டு படியில் ஏறி நடந்து செல்லும் போது லேசாக தலை சுற்றியது. உடனே அந்த ஜூஸ் ட்ரேவை அங்கே இருந்த டேபிளின் மேல் வைத்து விட்டாள். மாடியில் ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

ரூம் கதவு திறந்து இருந்ததால் அவள் அவ்வாறு தள்ளாடி சென்று சோஃபாவில் அமர்வது தெரிந்து அஸ்வினி.

“அண்ணா, அம்மா” என்று கத்தினாள்.

மகேஸ்வரிக்கு கேட்கவில்லை. தூக்கத்தில் இருந்த ஆதிக்கு தன் தங்கையின் குரல் கேட்டது.   

எழுந்து வேகமாக வெளியே வந்து தன் தங்கையின் அறைக்கு ஓடினான்.

“என்னாச்சு அஸ்வினி?”

“அண்ணா, எனக்கு ஒன்னும் இல்ல. அண்ணி தான் அப்படியே தள்ளாடி சோஃபாவில உக்கார்ந்திட்டாங்க பாருங்க” என்று அஸ்வினி சொன்னதும் வேகமாக வெளியே வந்து பார்த்தான் ஆதித்யா.

சோஃபாவில் மயக்கத்தில் படுத்திருந்தாள் வசுந்தரா.

அவள் அருகில் அமர்ந்து அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான் ஆதித்யா.

ஆனால் அவள் கண் விழிக்கவில்லை. உடனே அங்கிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான் ஆதித்யா.

அஸ்வினி கால் செய்து கூறியதால் கீழே இருந்து மகேஸ்வரி மேலே ஏறி வந்தார்.

“என்னாச்சுப்பா? என்ன ஆச்சு வசுந்தராவுக்கு” என்று பதட்டமாக கேட்டார் மகேஸ்வரி.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.