பாகம் 15

Vaishnavi Vijayaraghavan | 05 May 2026 | Share

தொடர்பியல்….. பாகம் -15


கேஸ் -2 ( நடேசன் தாத்தா – ரங்கசாமி)


அதுவரை கனவை பற்றி யோசித்து கொண்டு டென்ஷனாக இருந்த ராகினிக்கு மம்தா தேவியை காண்பித்து பேசியது சிரிப்பை ஏற்படுத்தியது.


கான்பரன்ஸ் மீட்டிங்கில் ஜார்ஜ் டேவிஸ் எல்லாவற்றையும் விளக்கமாக கூறியதும். அவரவர் சேம்பில்களை எடுத்து அவரவர் வேலைகளை மும்முரமாக செய்ய தொடங்கினர். யாரும் யாரோடும் பேசவில்லை. இது ஆக்ஸிடென்ட் கேஸ். லாரி மோதி இறந்துவிட்டார்…. என்று டேவிஸ் சார் சொன்னது ராகினி யின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 


இது ஏதேச்சையாக நடக்கிறதா…. இல்ல நம்ம கனவிற்கும் இந்த லேபில் வரும் சேம்பிலுக்கும் சம்பந்தம் இருக்கா…. ஒண்ணுமே புரியலையே…. என்று நினைத்து கொண்டே தன் வேலையை செய்து கொண்டு இருந்தாள் ராகினி.


லஞ்ச் பிரேக்கில் மம்தாவும் ராகினியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். 


என்ன கொண்டு வந்த லஞ்சுக்கு….. என்றாள் மம்தா.


பிரெட் ஆம்லெட்…. என்றாள் ராகினி.


ஏய்…. சூப்பர்…. மை ஃபேவரெட்….. என்றாள் மம்தா.


ஸ்மைல் செய்து கொண்டே டிபன் பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்டினாள் ராகினி.


தேங்க்ஸ் ராகினி…… என்று சொல்லி விட்டு டிபன் பாக்ஸை ஓப்பன் செய்து பிரெட் ஆம்லெட்டை சாப்பிட்டாள்….. பின்னர் 

இந்தா…. எங்கம்மா செஞ்ச லஞ்ச்…. சாப்பிடு…. என்றாள் மம்தா.


வேண்டாம் மம்தா பசிக்கல….


இன்னும் அதையே நினைச்சு கவலையா இருக்கியா….


இல்ல அதனால இல்ல…. உண்மையிலேயே பசிக்கல…..


என்னோட அம்மா சமையலை ஒரு முறை சாப்பிட்டு பாரு…. அப்புறம் டெய்லி என்னோட லஞ்சை என் கிட்ட கொடுக்க மாட்ட…. என்றாள் மம்தா.


அம்மா எப்பவுமே ஸ்பெஷல் தான் மம்தா…. எல்லாருக்கும் அம்மா கையால சாப்பிடும் பாக்கியம் கிடைக்காது….. என்று சொல்லி கண்கள் கலங்கினாள் ராகினி அவளுடைய அம்மாவை நினைத்து கொண்டே.


மம்தா அவளுடைய தோளை தடவிக் கொடுத்து தேற்றினாள். எல்லாருக்குமே ஒரு ஒரு பிரச்சனையை கொடுத்திடுவான் அந்த கடவுள். இல்லன்னா அவனை நாம கும்பிட மாட்டோம் இல்ல…. அதுக்கு…. தான்…. என்றாள் அவளுக்கும் கண்கள் கலங்கியவாறே.


மம்தா ஸ்பூனில் ஒரு உருண்டை காரக்குழம்பு சாதத்தை ராகினி யின் வாயருகில் கொண்டு போய் நீட்டினாள். ராகினி சாப்பிட்டாள்.

பின்னர் இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.


என்னம்மா படம் போடறாளுங்க இரண்டு பேரும்…. என்று புலம்பிக் கொண்டே தன் சாப்பாட்டை சாப்பிட்டாள் தேவி. உப்பை போட மறந்துவிட்டிருந்தாள். அன்று அவளே சமைத்து கொண்டு வந்திருந்தாள். அடக்கடவுளே…. உப்பை போட மறந்துவிட்டேனே…. ரைஸ் வேறு  என்று நினைத்து கொண்டாள்.


அப்போது அன்பரசன் தேவி அருகில் வந்தமர்ந்து….


தேவி…. என்ன லஞ்ச்?


ஸ்மைல் செய்து கொண்டே டிபன் பாக்ஸை மூட முயற்சித்தாள்.


ஏய்…. என்ன ஸ்பெஷல்…. எனக்கு தராமல் நீயே சாப்பிட பாக்குற…. காட்டு….


பிரிஞ்சி ரைஸ்…. சூப்பர்…. என்னோட ஃபேவரேட்…. கொடு….. என்றான்.


இல்ல அன்பு…. வேண்டாம்…..


ஏன் தேவி…. நீ தான செஞ்ச…..


ஆமாம்…. வேண்டாம் அன்பு…. பிளீஸ்…..


ஏய்…. கொடு…. என்று சொல்லி அவளிடம் இருந்து வாங்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டான்.


வாயில் போட்டதை துப்பவும் முடியவில்லை…. விழுங்கவும் முடியவில்லை. முகம் மாறியதை கவனித்தார்கள் ராகினி மற்றும் மம்தா.


பிளீஸ்…. பிளீஸ்…. துப்பிடாத டா…. என்று மிகவும் மெதுவாக கெஞ்சினாள் தேவி.


பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றி…. மாத்திரை விழுங்குவது போல விழுங்கி விட்டு …. தேவி…. டேவிஸ் சார் சொன்னது ஒரு வேலை பெண்டிங் இருக்கு…. நான் அப்புறம் சாப்பிடறேன்…. நீ சாப்பிடு…. பை…. என்று கிளம்பினான். 


ஹலோ ஹலோ…. அன்பு…. என்றாள் மம்தா.


ஹாங்…. சொல்லுங்க மம்தா…. என்று சொல்லி அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு வந்தான் அன்பரசன்.


எங்களோட லஞ்ச் எல்லாம் டேஸ்ட் பண்ண மாட்டீங்களா?….. உங்க லவ்வர் செஞ்சதை மட்டும் தான் சாப்பிடுவீங்களா?


மனதிற்குள்…. அம்பிகை நேரில் வந்தது போல இருக்கு…. நேரா பாத்ரூமிற்கு போய் வாந்தி எடுக்க இருந்தேன்…. எனக்கு நல்ல சாப்பாட்டை கொடுங்க…. என்று நினைத்து கொண்டே….


சாப்பிடலாமே…. இதுல என்ன இருக்கு….. என்று சொல்லி விட்டு பிரெட் ஆம்லெட் ஒரு துண்டும்…. காரக்குழம்பு சாதத்தை ஒரு உருண்டையும் சாப்பிட்டு விட்டு…. வேலை இருக்கு…. நான் கிளம்பறேன்…. தேங்க்ஸ் ஃபார் ஷேரிங் யுவர் லஞ்ச்…. என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் அன்பரசன்.



நீங்க சாப்பிடுறீங்களா தேவி…. என்றாள் ராகினி.


ஸ்மைல் செய்து கொண்டே ஷேர் செய்ய நினைத்தாள் தேவி.


ராகினி…. அவங்க தான் சூப்பர் பிரிஞ்சி ரைஸ் எடுத்து கொண்டு வந்திருக்காங்களே…. நம்ம லஞ்சை எல்லாம் சாப்பிடுவாங்களா?…. என்று சொல்லி கிண்டல் செய்தாள் மம்தா.


கோபமாகி தன் டிபன் பாக்ஸை மூடி வைத்து கொண்டு எழுந்து சென்று விட்டாள் தேவி.


ஏன் மம்தா?….. என்றாள் ராகினி.


ராகினி…. எனக்கு தேவியை பார்த்தாலே ஒரு கடுப்பு…. ஓவரா சீன் போடுவா…. அதான்…. நீ வா…. நம்ம சாப்பிடலாம்…. என்று சொல்லி சிரித்துக் கொண்டே சாப்பிட்டனர்.


***************


மாதவன் தன் அப்பாவிற்கு கால் செய்தான்.


ஹலோ அப்பா….


சொல்லுடா கண்ணா…. எப்படி இருக்க?


நான் நல்லா இருக்கேன் பா…. நீங்க எப்படி இருக்கீங்க?….. அம்மா எப்படி இருக்காங்க?


நான் நல்லா இருக்கேன் பா…. உங்க அம்மாவும் இப்போ பரவாயில்லை…. பா


ஓகே பா…. பணம் அனுப்பினேனே வந்துச்சா?


இல்லயே பா……..


இல்ல பா…. என் அக்கவுண்ட்டில் இருந்து பணம் போயிடிச்சு…. நீங்க செக் பண்ணி பாருங்க…..


இந்த பேங்க்ல பணம் வந்தா மெஸேஜே வர மாட்டேங்குது டா கண்ணா….. நான் பேங்க்கிற்கு நேரா போய் பாஸ் புக்ல என்டிரி போட்டு பார்க்கறேன்…..


ஓ…. ஓகே பா…..


சாப்பிட்டியா டா கண்ணா….


சாப்பிட்டேன் பா…. நீங்க….


சாப்பிட்டுட்டேன் …. வேற என்ன டா கண்ணா?


அது வந்து…. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்…. 


சொல்லுடா கண்ணா….


அது வந்து பா…. நான் ராகினி ன்னு ஒரு பொண்ணை காதலிக்கிறேன்…..


சரிடா கண்ணா…. உனக்கே தெரியும்…. எனக்கு லவ் மேரேஜ்ல அப்ஜெக்ஷன் இல்ல ன்னு…. உங்க அம்மா கொஞ்சம் சரி ஆனதும்…. நானே அவ கிட்ட பேசி…. ஒரு நல்ல முடிவா சொல்றேன்….. அதுக்கு அப்புறம் நம்ம அவங்க வீட்ல போய் பேசலாம்…..


தேங்க்ஸ் பா…. நீங்க புரிஞ்சிக்குவீங்கன்னு எனக்கு தெரியும்…..


ஹூம்…. அதான் எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல ன்னு சொல்லிட்டேனே…..


இல்லப்பா…. அவளுக்கு அப்பா அம்மா இல்லை…. ஒரே ஒரு தங்கச்சி மட்டும் தான்…..


ஓ….. சோ சேட்…. எப்படி அந்த பொண்ணு தனியா மேனேஜ் பண்றா….


அவ ரொம்ப தைரியமான பொண்ணு பா…. 


வெரிகுட்…. அப்படி பட்ட பொண்ணு நம்ம குடும்பத்துக்கு மருமகளா வருவது எனக்கு சந்தோஷம் தான்.


அப்பா….அவளுக்கு இப்போ ஒரு பிரச்சனை…

நான் அவ கூட இருக்கனும்….


சரிடா…. கூட இரு…. அதனால என்ன?


இல்லப்பா அவ கூடவே இருக்கனும்…..


அப்படின்னா…. லிவ்விங் டூகெதர்ல இருக்கப் போறீங்களா….


அச்சச்சோ…. இல்ல பா…. அதெல்லாம் இல்ல பா…. எனக்கும் சரி அவளுக்கும் சரி அந்த கான்செப்ட்ல இன்ட்ரெஸ்ட் இல்ல….


சரி….. பின்ன என்ன?


ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா ன்னு…. உங்க கிட்ட கேட்க…..


மாதவா…. என்னடா நீ…. நீ எங்களுக்கு ஒரே பையன்….. உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணனும் ன்னு நாங்க கனவு கண்டிருக்கோம்…. இப்போ இப்படி சொல்ற….


அப்பா…. அம்மாவுக்கு உடம்பு சரி ஆன பிறகு நம்ம முறைப்படி கல்யாணம் நல்லா கிராண்டா பண்ணிக்கலாம்…. இப்போ நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?


உங்க அம்மா உடம்பு சரி ஆகும் வரை உங்களால பொறுத்துக்க முடியாது?…. அதானே?…..


அப்பா…. என்னப்பா நீங்களே இப்படி பேசறீங்க…. அவ இப்ப ஒரு பிரச்சனைல இருக்கா ன்னு சொல்றேன் இல்ல…..அதனால தான்…. பிளீஸ் புரிஞ்சிக்கோங்க….


இதுக்கு உங்க அம்மா ஒத்துக்குவாங்க ன்னு நினைக்கிறீயா?


கண்டிப்பா மாட்டாங்க…. எனக்கு தெரியும்…. உங்க பர்மிஷன் மட்டும் தான் கேட்கிறேன்…. அம்மா சரி ஆன பிறகு மெதுவா எடுத்து சொல்லிக்கலாம்.


மாதவா…. நீ முடிவு பண்ணிட்ட…. அப்புறம் என் கிட்ட பர்மிஷன் என்ற பேர்ல இன்ஃபர்மேஷன் சொல்ற…..


அப்பா பிளீஸ்…..


அம்மாவுக்கு மருந்து கொடுக்கனும்…. நான் வைக்கிறேன் மாதவா…. பை….


அப்பா…. என்று மாதவன் பேசும்போதே கட் செய்து விட்டு உள்ளே சென்று விட்டார் மாதவனின் அப்பா.


மிச்…. அப்பா புயரிஞ்சுக்குவாரு ன்னு நினைச்சேன்…. அவரே இப்படி சொல்லிட்டாரே என்று நினைத்து கொண்டே வருத்தத்துடன் ஃபோனை வைத்து விட்டான் மாதவன். 


அப்போது மம்தா லேபிற்கு வெளியே வந்து மாதவனுக்கு கால் செய்தாள்.


சொல்லு மம்தா….


பிரோ…. ராகினி இன்னைக்கு ஃபுல் டே டல்லாகவே இருக்கா…..


நினைச்சேன்…. அவளுக்கு ஒரு பேட் டிரீம்….


ஹூம் சொன்னா…. அது பத்தி பேச தான் நான் கால் பண்ணினேன்.


சொல்லு மம்தா…..


என்னோட ஃபிரெண்ட் ஒரு டாக்டர்…. அவன் இதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்.


ஓ… ஓகே….


அவனோட டீடெயில்ஸ் அனுப்பறேன்…. நீங்க பேசிக்கோங்க பிரோ….


தேங்க்ஸ் மம்தா…. தேங்க்யூ ஸோ மச்….


சிஸ்டருக்கு தேங்க்ஸ் சொல்லலாம பிரோ….


ஓகே ஓகே… பை….


பை பிரோ…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு உள்ளே சென்றாள் மம்தா.


**************


தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.