பாகம் -14
ஒரு மணி நேரத் தேடலுக்கு பிறகு படிக்கட்டின் கீழே இருந்த பெயிண்ட் சமான்களின் பக்கத்தில் இருந்தது.
“மச்சி, இதோ பாரு டா உன்னோட ஃபோன்” என்றான் அஷோக்.
ஃபோனை எடுக்க போனான் அவினாஷ்.
“இரு மச்சி, எடுக்காதே” என்றான் விக்ரம்.
“ஏன்டா?” என்றனர் அஷோக் மற்றும் அவினாஷ்.
“ஏய், எவனோ எடுத்து மெஸேஜ் பண்ணிருக்கான் இல்ல? அவனோட ஃபிங்கர் பிரிண்ட் இதுல இருக்கும். ஸோ. நம்ம ஃபாரன்ஸிக்ல கொடுத்து கண்டு பிடிக்கலாம்”
“நல்ல ஐடியா மச்சி” என்றான் அஷோக்.
தலையில் அடித்து கொண்டான் அவினாஷ்.
“என்னடா?” என்றான் விக்ரம்.
“ரெண்டு பேரும் திரில்லர் கிரைம் படம் எதாவது பார்த்தீர்களா?”
“ஆமாம் டா, ஏன்?”
“லூசுங்களா, ஃபாரன்ஸிக் எல்லாம் போக எவ்ளோ பார்மாலிட்டீஸ் இருக்கு தெரியுமா? அதுவும் இல்லாம இதுக்கு எல்லாம் எவ்ளோ செலவாகும் தெரியுமா? அதுக்கு இரண்டு ஆப்பிள் ஃபோன் வாங்கிடலாம்”
“அதுக்காக சிஸ்டர் கிட்ட அவ்வளவு அசிங்கமா பேசனவனை விட்டிட சொல்றீயா?” என்றான் விக்ரம்.
“இல்ல, கண்டிப்பா இல்ல. அவனை எப்படி கண்டுபிடிக்கனும்னு எனக்கு தெரியும்” என்றான் அவினாஷ்.
“எப்படி?” என்றான் அஷோக்.
“சொல்றேன்” என்றான் அவினாஷ்.
********************
அன்று முழுவதும் ஹர்ஷிதா மூடு அவுட்டாகவே இருந்தாள்.
கேத்தரினிடம் நடந்ததை சொல்லி அழுதாள்.
கேத்தரின் ஹர்ஷிதாவிடம்,
“ஏய், அவினாஷையா தப்பா நினைக்கிற?”
“இல்ல கேத்தி, என்னால மாமாவை தப்பா நினைக்க முடியல. ஆனா ஒரு வேளை தண்ணி அடிச்சுட்டு அப்படி பண்ணிட்டாறோன்னு யோசிச்சேன்”
“ஏய், எனக்கு தெரிஞ்சு அவினாஷூக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இல்லை”
“எப்படி சொல்ற?”
“ நான், எங்க வீட்ல எல்லாருமே ஒயின் குடிப்போம். ஒயின்ல கேக் பண்ணுவோம். அன்னைக்கு குக் பண்ணும் போது ஃபிரிட்ஜில் ஒயின் பாட்டில் இருந்துச்சு. அதை முதலில் சாஸ் என்று நினைத்து எடுத்தவர், அதை திருப்பி வைக்கும் போது பார்த்தேன். அதோட மூடியை ஒழுங்கா மூடி வச்சார்”
“மூடி வச்சதுனால அதை குடிக்க மாட்டாரு ன்னு அர்த்தமா?”
“இருடி நான் இன்னும் சொல்லி முடிக்கலை. அந்த பாட்டில்ல ரோடேட்டிங் லாக் இருக்கு”
“ஸோ”
“அது சைல்டு லாக் மாதிரி. நீ குரோஸின் ஸிரப்புல பாத்திருக்கியா. பிரஸ் பண்ணி ஓப்பன் பண்ணா தான் ஓப்பன் ஆகும். இல்லன்னா ஜஸ்ட் ரொடேட் ஆகிட்டே இருக்கும் ஆனா ஸிரப்ப் வெளியே வராது. அந்த மாதிரி.
அது ஓப்பன்ல இருக்குன்னு நினைச்சு கிளோஸ் பண்றாரு. அப்போ அதை பத்தி ஒண்ணும் தெரியலைன்னு தான அர்த்தம்”
“எல்லா டிரிங்க்ஸ் பாட்டிலுக்கும் அப்படி தான் லாக் இருக்குமா?”
“இல்ல”
“அப்போ வேற எதாவது குடிச்சிருந்தாருன்னா”
“யம்மாடி, இதுக்கு மேல உன் கிட்ட பேச முடியாது. கெட்டவனை எல்லாம் ஈஸியா நம்பிடுங்க. எவனாச்சும் நல்லவன் மாட்டினா அவனை நோண்டி நுங்கு எடுத்திருங்க” என்றாள் கேத்தரின்.
“ஏய் ஏன் டி இப்படி எல்லாம் பேசுற?”
“பின்ன என்ன? நான் தான் சொல்றேன் இல்ல? அன்னைக்கு பார்த்து பேசின விதத்துல சொல்றேன்.
ஆம்பளைங்கள்ல நூத்துக்கு தொண்ணூறு பேரு பொண்ணுங்களோட கண்ணை பார்த்து பேசமாட்டாங்க. ஆனா அவினாஷ் அப்படி இல்லை. உன்னை லவ் பண்றாரு உன்னையே கண்களை தாண்டி அவர் எதையும் பார்க்கலை. அவர் கூட வந்துச்சே ஒண்ணு, ஓவரா வழிஞ்சிக்கிட்டு”
“அமரா?”
“ஆமாம், ஆமாம்”
“அவரு தப்பா பார்த்தாரா?”
“சீ சீ, இல்ல. அதை தான் சொல்ல வரேன். அவினாஷ் ஃபிரெண்டு வழிஞ்சானே தவிர அவனும் தப்பா பார்க்கலை. பிரெண்ட்ஸ் கூட நல்லவர்களாக பார்த்து தான் பழகுறாரு.ஸோ, நீ ரொம்ப மனசை போட்டு குழப்பிக்காத. ஃபிரீயா விடு. நம்ம டூரை பத்தி பேசினியா?”
“இன்னும் இல்ல. நல்லவேளை அதை பத்தி நான் சேட்ல சொல்லல” என்றாள் ஹர்ஷிதா.
“சரி விடு, வீடியோ கால் பண்ணி பேசு”
“மாமா ஃபோன் கிடைச்சுதான்னே தெரியல. எனக்கு அந்த நம்பருக்கு கால் பண்ணவோ மெஸேஜ் பண்ணவோ பயமா இருக்கு”
“சரி விடு அவினாஷே உனக்கு கால் பண்ணுவாரு”
“ஹூம்”
*******************
வேலன் வேணுகோபாலுக்கு கால் செய்தான்.
“ஹலோ மாமா”
“சொல்லு டா. எப்படி இருக்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா. அன்னைக்கு நடந்ததை மனசுல வச்சிக்காதீங்க மாமா”
“ஏய், அதை விடு டா. உங்க அப்பாவை பத்தி தெரியாதா. சரி அண்ணா கிட்ட பேசனியா?”
“இல்ல மாமா, பெரிய மாமா கிட்ட பேச பயமா இருக்கு”
“ஏன் நீ என்ன பண்ண பயப்பட?”
“இல்ல அப்பா பண்ணினதுக்கு என் மேல கோபப் படுவாறோன்னு”
“ஏய் சீ, லூசு மாதிரி பேசாதே. அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு. இரு ஃபோனை கொடுக்கறேன்”
“அய்யோ மாமா வேண்டாம்” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே, ஃபோனை ராஜகோபாலிடம் கொடுத்தார் வேணுகோபால்.
“ஹலோ” என்றார் ராஜகோபால்.
“மாமா, நான் வேலன்”
“டேய், கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா? உங்க அப்பனுக்கு தான் அறிவு இல்லை ன்னா, உனக்கு கூடவா? உங்க அம்மாவும் நீயும் அப்படியே உங்க அப்பாவுக்கு பயந்த மாதிரி நடிக்கிறீங்க” என்று திட்டினார்.
“அய்யோ இல்லை மாமா. உண்மையிலேயே அப்பா எங்களை திட்டுவார். ஏன் நாங்க அடி கூட வாங்கி இருக்கோம்”
“போதும் போதும் நிறுத்து டா. நாங்க ஆஃபீஸ் வந்ததும் வீட்டுக்கு வந்தீங்களா. எங்க முகத்துல முழிக்காமலே இருந்திடுவீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை மாமா. காலைல உங்களுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் ன்னு தான்”
“ஹூம், சரி சரி. இப்போ உங்க அப்பாவுக்கு தெரிஞ்சு வந்தீங்களா? தெரியாம வந்தீங்களா?”
ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல்,
“ தெரியாம தான் வந்தோம் மாமா. மனசு கேட்கலை. ஹர்ஷிதாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மாமா. அவ கஷ்டத்துல இருப்பாளே! அவளுக்கு ஆறுதல் சொல்லலாம்னு தான் வந்தோம். ஆனா அதுக்கு தான் அவசியம் இல்லையே”
“என்னடா சொல்ற?”
“அதான் ஹர்ஷிதாவும் அவினாஷூம் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்களாமே”
“ஏய், என்னடா உளருற?”
“நான் ஏன் உளறுப்போறேன் மாமா. லக்ஷ்மி மாமி அம்மா கிட்ட பேசியதை கேட்டு விட்டு தான் சொல்றேன். விஜயா மாமிக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாதா?”
“ஃபோனை வை டா” என்று கத்தினார்.
மெல்லிய ஒரு வில்லன் புன்னகையை சிந்திவிட்டு ஃபோனை வைத்தான் வேலன்.
ஃபோனை வைத்த ராஜகோபால்,
“வேணு” என்று கத்தினார்.
“என்ன ஆச்சு அண்ணா?”
“ஹர்ஷி, உன்னோட மச்சான் பையனை லவ் பண்றாளாம்”
“யாரை அர்ஜூனையா?”
“இல்ல அவன் தம்பியை”
“அவினாஷையா?”
“அவன் பேரெல்லாம் எனக்கு தெரியாது. உனக்கு விஷயம் தெரியுமா?”
“இல்ல அண்ணா, சத்தியமா தெரியாது”
“ஆனா என் பொண்டாட்டிக்கும் உன் பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிருக்கு”
“என்ன?”
“கிளம்பு, வா வீட்டுக்கு போகலாம்” என்று இருவரும் கிளம்பினார்கள்.
****************
ஃபோன் கிடைத்ததும் ரூமில் வைத்து விட்டு காலேஜூக்கு சென்றுவிட்டான் அவினாஷ்.
மாலை ரூமிற்கு வந்தவுடன் சார்ஜ் போட்டு விட்டு ஃபோனை ஓப்பன் செய்தான்.
வாட்ஸ் அப் ஓப்பனில் இருந்தது. அதில் இருந்த சேட்டை படித்தான். அவனுக்கு கண்கள் கலங்கியது. ஆத்திரமாக வந்தது. அவன் மட்டும் என் கைல கிடச்சான் அவனை மூஞ்சிமுகரையை பேத்திடுவேன் என்று தனக்கு தானே சொல்லி கொண்டான்.
புளூ டூத் மற்றும் ஹாட் ஸ்பாட் ஆனில் இருந்தது. அதன் ஸெட்டிங்கிஸ்ஸில் சென்று பார்த்தான். தில்லி திலீப் என்று இருந்தது. ஃபோட்டோ மற்றும் வீடியோ டவுன்லோட் செய்ய ஹாட் ஸ்பாட் மற்றும் புளூ டூத்தில் கனெக்ட் செய்திருக்கிறான். அவனுடைய பெயரில் இருந்ததால் ஈஸியாக கண்டுப்பிடித்துவிட்டான் அவினாஷ்.
திலீப்பிற்கு அது அவினாஷ் ஃபோன் என்று நன்றாகவே தெரியும். அஷோக் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிட சென்றபோது ஹாஸ்டல் கேண்டீனில் மறந்து வைத்து விட்டு வந்துவிட்டான். அதை எடுத்த திலீப் சைலென்டில் போட்டு தன் பாக்கெட்டில் வைத்து கொண்டான்.
தன் நண்பர்களிடம் “திலீப் தான் ஹர்ஷிதாவிற்கு மெஸேஜ் அனுப்பியவன் என்று சொல்லி விட்டு, நான் அவனை ஒரு வழி பண்ணிட்டு வரேன். வார்டனோ ஸ்டாஃபோ யாரும் வராம பார்த்துக்கோங்க” என்றான்.
“சரிடா மச்சி, நாங்க பார்த்துக்கிறோம். அவனும், அவனோட ஃபிரெண்ட்ஸூம் கீழே வாலிபால் ஆடுறாங்க” என்றான் விக்ரம்.
“இரு தண்ணி குடிக்க வருவான். அப்போ ரைட் சைடு காரிடர் பக்கம் பிளம்பிங் வேலை நடக்குது. சத்தம் இல்லாம அவனை அங்க கூட்டிக்கிட்டு போய் அந்த நாயோட மூஞ்சியை பேத்துட்டு வா” என்றான் அஷோக்.
“ஓகே” என்று சொல்லி விட்டு சென்றான் அவினாஷ்.
கால்மணி நேரத்திற்கு பிறகு
திலீப் வந்தான். கருக்கல் நேரம்.
தண்ணீர் குடிக்க தலையை தூக்கியவனை பின் பக்கமாக சென்று அவனுடைய வாயை பொத்தி தரதரவென இழுத்து சென்று காரிடரில் கீழே தள்ளி விட்டான்.
“டேய், யாருடா நீ?” என்று கத்திக் கொண்டே திரும்பி பார்த்தான் திலீப்.
ஓங்கி அவன் கன்னத்தில் குத்தினான். அடிவாங்கிக் கொண்டே அவனாஷை பார்த்து சிரித்தான்.
“ஓ, நீயா? கண்டுபிடிச்சிட்டியா?” என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தான்.
கோவம் அதிமாகனது அவினாஷூக்கு.
மறுபடியும் ஒரு அடி போட்டான்.
அவன் சிரித்துக் கொண்டே,
“நீ அவளை எப்படி கூப்பிடுவ? ஹாங் செல்லம். அந்த ஃபிகரோட ஃபோட்டோ இல்லையே டா. டிபிலையும் ஏதோ பூ படம் இருந்துச்சு. சேட்லையும் இல்ல. உன்னோட கூகுள் ஃபோட்டோஸ் மட்டும் லாக்ல இருந்துச்சு. அதுவும் மத்த ஆப்ஸ் மாதிரி அன்லாக்ல இருந்திருந்தா? உன்னோட ஆளு எப்படி இருப்பான்னு பார்த்திருப்பேன்” என்றான்.
மறுபடியும் அவன் வேகமாக அடிக்க, திரும்ப திலீபும் அடிக்க. இருவருக்குமே முகத்தில் ரத்தம் வந்தது. திலீப்பிற்கு ரத்தம் அதிகமாக கொட்டியது. சத்தம் கேட்டு திலீப் நண்பர்கள் மற்றும் அவினாஷ் நண்பர்கள் வர. இருவரையும் பிரித்து இழுத்துச் சென்றனர்.
ரூமிற்கு சென்று அவினாஷின் நெற்றியில் பட்ட காயத்திற்கு மருந்து போட்டு விட்டனர் விக்ரம் மற்றும் அஷோக்.
“மச்சி, நீ கீழ சாப்பிட வரவேண்டாம். நாங்களே உனக்கு எடுத்து கொண்டு வரோம். உனக்கு அடிப்பட்டதை வார்டன் பார்த்தா பிரச்சினை ஆயிடும்”
“சரி மச்சி” என்றான் அவினாஷ்.
அவர்கள் இருவரும் சென்றதும். ஃபோனை எடுத்து ஹர்ஷிதாவிற்கு வீடியோ கால் செய்தான்.
ஃபோனை எடுக்கவில்லை ஹர்ஷிதா. பாவம் அவனுக்கு தெரியாது. ராஜகோபால் மற்றும் வேணுகோபால் இருவரும் அவளை திட்டி அவளிடமிருந்து ஃபோனை வாங்கி வைத்துவிட்டார்கள் என்று.
மறுபடியும் கால் செய்தான். எடுக்கவில்லை.
மெஸேஜ் செய்தான். ஸெண்ட் ஆகவில்லை.
“அவள் என்னை வெறுத்து விட்டாளா?” என்று நினைத்து கொண்டான்.
கவலையில் நண்பர்கள் கொண்டு வந்த உணவை கூட சாப்பிடாமல் தூங்கச் சென்றான்.
No comments yet.