பாகம் -13
அவினாஷ் ஃபோனை எடுக்கவில்லை.
‘நைட்டு 9 மணி தான் ஆகுது. அதுக்குள்ள மாமா தூங்கிட்டாறா?’ என்று யோசித்து கொண்டு மெஸேஜ் அனுப்பினாள்.
மெஸேஜ் டெலிவரி ஆகிவிட்டது. புளூ டிக் வந்தது. ஆனால் ரிப்ளை செய்யவில்லை.
கால் செய்தாள். மறுபடியும் எடுக்க வில்லை.
“என்னாச்சு மாமா உங்களுக்கு. ஃபோனை ஏன் எடுக்கல? மெஸேஜூக்கும் ரிப்ளை இல்ல?” என்று வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பினாள்.
மறுபடியும் புளூ டிக், டைப்பிங் என்று வந்தது.
‘அப்படி வாங்க வழிக்கு. என்னாச்சு?’ என்று மறுபடியும் மெஸேஜ் அனுப்பினாள்.
வெகுநேரமாக டைப்பிங்கிலே வந்தது.
‘என்னாச்சு இந்த மாமாவுக்கு’ என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே,
“சாரி டி செல்லம். பிரெண்ட்ஸ் எல்லாம் கூட இருக்காங்க. அதான் கால் எடுக்க முடியல. நீ மெஸேஜ்லையே சொல்லுடி” என்று ரிப்ளை வந்தது.
“ஓ, ஓகே ஓகே மாமா” என்று ரிப்ளை செய்தாள்.
பாவம் அவளுக்கு தெரியவில்லை. அவினாஷ் ஃபோனை தொலைத்துவிட்டான். அதை காலேஜ் ஹாஸ்டல் முழுக்கத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று.
அதை எடுத்த திலீப் என்ற ஒருவன் ஃபோனை சைலன்டில் போட்டு விட்டு ஹர்ஷிதாவுடன் சேட் செய்து கொண்டு இருந்தான். அவினாஷ் ஃபோனுக்கு லாக் வைத்திருக்கவில்லை.
திலீப் – அர்ஜூன் தாஸ்
“மாமா” என்று அவளிடம் இருந்து மெஸேஜ் வந்ததால், ஏற்கனவே சிறு போதையில் இருந்த அவன். மேலும் போதை தலைக்கு ஏறி. ஏற்கனவே அவர்கள் பேசிய சேட்டில் அவன் எப்படி அவளை அழைப்பான் என்று பார்த்துவிட்டு அதே போல சேட் செய்ய ஆரம்பித்தான்.
“சொல்லுடி செல்லம். ஐ லவ் யூ டி செல்லம்”
“என்ன மாமா. செல்லம் அதிகமா சொல்றீங்க. ஒரே ரொமாண்டிக் மூடுல இருக்கீங்க போல?” என்று மெஸேஜ் செய்தாள்.
‘இன்னைக்கு நம்ம யார் கிட்டேயும் திட்டு வாங்கல அடி கூட வாங்கலையே? எதுக்கு மாமாவுக்கு லவ் இப்படி பொங்கி வழியுது?’ என்று நினைத்து கொண்டாள்.
அவள் அப்படி ரிப்ளை செய்ததும்.
“ஆமாம் டி செல்லம். நீ மட்டும் இப்போ இங்க இருந்த ன்னா? நான் உன்னை என்னவெல்லாம் செய்வேன்னு சொல்லவா?”
“ஹூம் ஹூம், ஒண்ணும் வேணாம். எனக்கு தெரியும் என் அவினாஷ் மாமா பத்தி”
“சரி, நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு”
“நீ நிறைய அரியர்ஸ் வச்சிருக்க. எது உனக்கு புரியலைன்னு சொல்லு. சொல்லித் தரேன்னு சொல்லுவீங்க”
“சீ…சீ…” அதெல்லாம் சொல்ல மாட்டேன். உனக்கு முதலிரவு பாடம் சொல்லிக் கொடுப்பேன்”
“மாமா, ஏன் இப்படி எல்லாம் மெஸேஜ் பண்றீங்க? தண்ணி அடிச்சிருக்கீங்களா?”
“இல்ல டி செல்லம். பிரெண்ட்ஸ் கம்பல் பண்ணாங்க அதான் ஒரே ஒரு கட்டிங் போட்டேன்”
“மாமா, ஒரு முக்கியமான விஷயம் பேச கால் பண்ணேன். இப்போ நீங்க கேக்குற நிலைமைல நான் அதை சொல்ல விரும்பல” என்று மெஸேஜ் அனுப்பி விட்டு ஃபோனை ஆஃப் செய்தாள். மணி இரவு ஒன்பதரை.
இன்னும் கொஞ்ச நேரம் குடித்துவிட்டு,
அந்த திலீப் சில ஆபாச படங்களையும் வீடியோக்களையும் அனுப்பினான். அவள் ஃபோன் ஸ்விச்சிடு ஆஃப் செய்ததால் எதுவும் டெலிவரி ஆகவில்லை.
பதினோரு மணி அளவில் அவினாஷ் ஃபோனில் சார்ஜ் மிகவும் குறைந்து விட்டது. ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும் என்று நினைத்தான் திலீப். அதுவரைக்கும் வந்த எந்த காலையும் எடுக்கவில்லை அவன்.
அது ஆப்பிள் ஃபோன் அதனால் திலீபிடம் அதற்குரிய சார்ஜ் ஜிங் கேபிள் இல்லை. மேலும் இதற்கு மேல் அந்த ஃபோன் அவனிடம் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அதை வெளியே எடுத்து வந்து படிக்கெட் கீழே கிடந்த பெயின்டிங் பொருட்களின் அருகில் போட்டுவிட்டான்.
மிகவும் வருத்தத்துடன் பெட்டில் போய் படுத்தாள் ஹர்ஷிதா. வெகு நேரமாக அவளுக்கு தூக்கம் வரவில்லை. கண்கள் கலங்கியது.
‘ஏன் மாமா இப்படி எல்லாம் மெஸேஜ் அனுப்பினாரு. நாளைக்கு ஃபோன் பண்ணும் போது நல்லா திட்டிவிட்டிடப் போறேன்’ என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
அப்படியே சிறிது நேரத்தில் ‘நாளை மாமா கால் பண்ணினா முதலில் என்ன சொல்லலாம்?’ என்று யோசித்து கொண்டே தூங்கிவிட்டாள்.
****************
இரவு பத்து மணிக்கு அவினாஷின் ஃபிரெண்டு விக்ரம் அவினாஷின் நம்பருக்கு கால் செய்தான்.
ரிங் போனது.
விக்ரம் – அசோக் செல்வன்
“மச்சி கவலைப்படாதே டா, ரிங் போகுது. ஆஃப் ஆகலை. ஸோ ஈஸியாக கண்டுபிடிச்சிடலாம். அப்படி கிடைக்கலைன்னா மார்னிங் சைபர் செல் டிபார்ட்மெண்ட்ல எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு அவரு கிட்ட சொல்லி டவர் லோகேஷன் வச்சி டிரேஸ் பண்ணி கண்டுபிடிச்சிடலாம்” என்றான்.
“ஓகே டா மச்சி, தேங்க்ஸ்” என்றான் அவினாஷ்.
“மச்சி தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு டா. யாருக்காவது கால் பண்ணனும்ன்னா என்னோட ஃபோன்ல இருந்து போடு” என்றான் விக்ரம்.
ஹர்ஷிதாவிற்கு கால் செய்தான். ஸ்விட்சிடு ஆஃப் என்று வந்தது.
‘அவள் நமக்கு கால் செய்யாம தூங்க மாட்டாளே? ஒருவேளை நமக்கு வந்தது போல அவளுக்கும் ஃபுல்லா ரிங் போய் கட் ஆகி இருக்கும்’ என்று நினைத்து கொண்டான்.
“என்னாச்சு டா? சிஸ்டர் எடுக்கலையா?”
“ஆமாம் டா, ஸ்விச்சிடு ஆஃப் ன்னு வருது”
“சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகியிருக்கும்”
“ஹூம், நானும் அதான் நினைக்கிறேன். ஓகே டா மச்சான் லேட் ஆயிடுச்சு. நாளைக்கு பேசிக்கிறேன். இந்தா ஃபோன்” என்று அவனிடம் கொடுத்து விட்டு ரூமிற்கு சென்றான் அவினாஷ்.
“ஓகே டா, கவலைப்படாம தூங்கு. உன் ஃபோன் கூட இங்கதான் எங்கன்னா இருக்கும். இருட்டுல கண்டுபிடிக்க முடியல. காலைல பார்த்துக்கலாம்” என்றான் விக்ரம்.
“சரி டா மச்சி”
*********************
மறுநாள் காலை ஹர்ஷிதா ஃபோனை எடுத்து ஆன் செய்தவுடன்,
விக்ரமிற்கு மெஸேஜ் வந்தது. இப்போது நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று.
விக்ரம் அவினாஷிடம் ஃபோனை கொடுத்து
“மச்சி, சிஸ்டர் ஃபோன் ஆன் ஆகியிருக்கு. இப்போ கால் பண்ணு” என்று கொடுத்தான்.
ஃபோனை வாங்கி கால் செய்தான்.
“ஹலோ, யாரு?” என்றாள் ஹர்ஷிதா.
“செல்லம், நான் தான் அவினாஷ் பேசறேன்”
“உங்க ஃபோன்ல இருந்து பேசினா நான் எடுக்க மாட்டேன்னு. வேற நம்பர்ல இருந்து கூப்பிடறீங்களா? நான் உங்க மேல ரொம்ப கோவத்தில இருக்கேன். தயவுசெய்து ரெண்டு நாளைக்கு என் கிட்ட பேசாதீங்க மாமா” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் ஹர்ஷிதா.
“ஹர்ஷி, செல்லம், செல்லம்” என்றான் அவினாஷ்.
அவினாஷூக்கு ஒன்றும் புரியவில்லை மறுபடியும் கால் செய்தான்.
நம்பரை பார்த்து விட்டு கட் செய்தாள். அப்போது வாட்ஸ் அப்பில் திலீப் அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோ அவினாஷின் நம்பரில் இருந்து வந்தது. அதைப் பார்த்த ஹர்ஷிதா,
“சீ, என்னது இது? இவ்வளவு மோசமா மெஸேஜ் அனுப்புறாரு மாமா. தப்பான ஆளை லவ் பண்ணிட்டமோ?” என்று கண்கள் கலங்கினாள்.
மறுபடியும் நம்பரில் இருந்து கால் வந்தது.
“மாமா, உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. எதுக்கு இவ்வளவு கேவலமான போட்டோ வீடியோ எல்லாம் அனுப்பறீங்க?” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
“என்ன நானா?”
“ஆமாம் மாமா. உங்க ஃபோன்ல இருந்து தான் வந்துச்சு”
“செல்லம், பிளீஸ் நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு”
“என்னை விட்டுவிடுங்க மாமா. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை” என்று சொல்லி மறுபடியும் அழுதாள்.
“செல்லம்”
“வேண்டாம் மாமா. நாம பிரேக் அப் பண்ணிக்கலாம். உங்களுக்கும் எனக்கும் செட் ஆகும்ன்னு தோணலை”
“என்னை பேச விடாம. நீயே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் டி செல்லம்?”
“இல்ல மாமா”
“ஹர்ஷிதா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு” என்று கத்தினான்.
அழுகையை நிறுத்தியவள் அதிர்ச்சியாக ஆனாள்.
“என் ஃபோன் நேத்து ஈவினிங் தொலைஞ்சு போச்சு. இப்போ வரைக்கும் கிடைக்கல. நேத்து ராத்திரியே உன் கிட்ட சொல்ல கால் பண்ணேன். ஆனா உன் ஃபோன் ஸ்விச்சிடு ஆஃப்”
“உண்மையாவே வா?”
“செல்லம், எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன். என் ஃபோனை காணோம்”
“எப்படி உங்க ஃபோன்ல இருந்து எனக்கு மெஸேஜ் வந்துச்சு,”
“யாராவது எடுத்து அனுப்பியிருப்பாங்க”
“பாஸ்வேர்டு, ஃபிங்கர் பிரிண்ட் எல்லாம் இல்லாம எப்படி ஓப்பன் செய்ய முடியும்?”
“ஒரு பிராஜெக்ட்டுக்காக என் ரூம்ல இருக்குற இரண்டு பேரும் நானும் யூஸ் பண்றோம். அதனால லாக் பண்ணல, டிஸ் ஏபிள் பண்ணி வச்சிருந்தேன்”
“வாட்ஸ் அப்பு கூடவா ஓப்பன் ல வச்சிருந்தீங்க?”
“ஆமாம் டி செல்லம். ஒரு குரூப்ல பிராஜெக்ட் டீடெயில்ஸ் வரும், அதனால தான்”
“அப்போ அந்த இரண்டு பேர்ல யாரோ தான் எனக்கு அசிங்கமா மெஸேஜ் அனுப்பியிருக்காங்க. யாருன்னு கண்டுபிடிங்க மாமா. நைட்டு எல்லாம் எனக்கு சரியா தூக்கம் கூட வரலை. இப்போ வந்த ஃபோட்டோவும் வீடியோவும். அச்சோ, யப்பா. என்னால முடியல மாமா” என்றாள் ஹர்ஷிதா.
“அந்த ரெண்டு பேரா இருக்க வாய்ப்பில்லை டி செல்லம். அவங்க என்னோட கிளோஸ் பிரெண்ட்ஸ். கண்டிப்பா அவங்க இந்த மாதிரி கீழ்தரமான செயலை பண்ண மாட்டாங்க. ரெண்டு பேருக்கும் நம்ம லவ் பத்தி தெரியும். அவங்க ரெண்டு பேருமே உன்னை சிஸ்டர்ன்னு தான் என் கிட்ட சொல்லுவாங்க”
“நீங்க என்னை செல்லம்ன்னு கூப்பிட்டது கூட அவனுக்கு தெரிஞ்சு இருக்கு. அதே மாதிரி தான் சேட் பண்ணான். இருங்க நான் சேட்டை ஸ்கிரீன் ஷாட் அனுப்பறேன்” என்று சொல்லி அனுப்பினாள்.
“மாமா உங்க கிட்ட நிறைய பேசணும் நினைச்சேன். ஆனா இப்போ ஃபோன்ல பேசக் கூட பயமா இருக்கு.
பேசறது நீங்க தானா இல்ல உங்க வாய்ஸ்ல யாராவது பேசறாங்களோ ன்னு தோணுது. நீங்க இந்த வீக் என்டு சென்னைக்கு வந்தா நான் உங்களை நேரா பார்த்து பேசறேன். பை” என்றாள்.
“சரி டி செல்லம். பை”
“மாமா, ஒண்ணு சொன்னா தப்பா நினைக்காதீங்க”
“சொல்லுடி செல்லம்”
“கொஞ்ச நாளைக்கு என்னை செல்லம் ன்னு கூப்பிடாதீங்க. எனக்கு நீங்க அப்படி கூப்பிட்டா அந்த சேட் நியாபகம் வருது. அப்புறம் அந்த மோசமான ஃபோட்டோ மற்றும் வீடியோ. கொஞ்ச நாளைக்கு தான். பிளீஸ்”
“ஓகே செ… ஹர்ஷி, பை”
“பை, சீக்கிரமா ஃபோனை கண்டுபிடிங்க. அப்புறம் எனக்கு வீடியோ கால் பண்ணுங்க”
“ஓகே ஹர்ஷிதா”
ஃபோனை விக்ரமிடம் கொடுத்து விட்டு,
நடந்தவற்றை அவனிடம் சொல்லி வருத்தப்பட்டான்.
“மச்சி, கவலைப்படாதே டா. ஃபோன் கிடைக்கட்டும். அப்புறம் எந்த நாய் அப்படி மெஸேஜ் பண்ணுச்சுன்னு கண்டுபிடிச்சு அவன் தோலை உரிக்கலாம்” என்றான் விக்ரம்.
“அஷோக் எங்கே?”
அஷோக் – ஆரி
“அவன் காலைலேயே கொட்டிக்க போயிட்டான். எதுக்கு டா?”
“ஒண்ணும் இல்ல. சும்மா தான்”
“டேய் மச்சி, நீ அவனை சந்தேக படறீயா?”
“சீ சீ, என்னை என்னடா அவ்ளோ கேவலமா நினைச்சிட்டியா? நம்ம அஷோக்கை போய் நான் தப்பா நினைப்பேனா?”
“என்னடா? என் பேரு அடி படுது” என்று சொல்லி கொண்டே காஃபியை குடித்தவாரு வந்தான் அஷோக்.
“எங்க காணோம்ன்னு கேட்டேன் டா”
“ஓ, சரி சரி. உன் ஃபோன் கிடைச்சதா இல்லையா?” என்றான் அஷோக்.
“இன்னும் இல்ல டா” என்றான் அவினாஷ்.
“காலைல வெளிச்சத்துல தேடலாம் வாங்க. கிடைக்கலைன்னா போலீஸ் ல கம்பிளைண்ட் கொடுக்கலாம்” என்று பேசிக் கொண்டு தேட ஆரம்பித்தனர் மூவரும்.
No comments yet.