
தித்திக்கும் தேன்பாவை
பாகம் 10
ஷியாம் அந்த கேள்வியை கேட்டவுடன் ஷிவானிக்கு பிபி ஏறியது. உடம்பு தூக்கிப் போட்டது. பயந்து போன ஷியாம்
“சிஸ்டர் சிஸ்டர் ” என்று கத்தினான்.
சிஸ்டர் ஓடி வந்தார்.
“சார் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க, ” என்று சொல்லி ஷியாமை வெளியே அனுப்ப நினைத்தார். ஆனால் ஷிவானி இறுக்கமாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
பிபி ஏறிக்கொண்டே சென்றது. உடம்பு தூக்கி போடுவதும் அதிகமாக இருந்தது. நர்ஸ் ஷிவானியின் கைகளை விரித்து ஷியாமை வெளியே போக சொன்னார்.
ஏதோ ஒயர் எல்லாம் அட்ஜஸ்ட் செய்து. மூக்கில் ஆக்ஸிஜன் வைத்து ஸ்டேபிள் செய்து விட்டு உடனே டாக்டருக்கு கால் செய்தார் நர்ஸ்.
பதட்டத்துடன் வெளியே வந்து காத்திருந்தான் ஷியாம்.
அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த நர்ஸ்.
” சார் நீங்க கவலைப்பட வேண்டாம். அவங்க நார்மலா இருக்காங்க. நீங்க வெயிட்டிங் ஹாலுக்கு போயிடுங்க ஏதாவது வேணும்னா நாங்க கூப்பிடறோம் “
” ஒருமுறை பார்த்துட்டு போகலாமா சிஸ்டர்? “
” இல்ல அவங்களுக்கு பிபி அதிகமானதுனால டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வைக்க சொல்லி இருக்காரு. அதனால இப்போ அவங்க தூங்கிக்கிட்டு இருக்காங்க. அவங்க கண்விழிச்சாங்கன்னா நாங்களே உங்க கிட்ட சொல்லி அனுப்புவோம் ”
” ஓகே சிஸ்டர் தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு
வெயிட்டிங் ஹாலிற்கு செல்ல நினைத்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாய் அந்த சிஸ்டரிடம்,
“சிஸ்டர், உமென் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்து என்னோட தங்கச்சியை விசாரிப்பதாக சொன்னாங்க”
“ஓகே சார்”
“அவங்க தான் ஷிவானி கிட்ட முதல்ல பேசனும்னு சொன்னாங்க. முக்கியமா என்னை பேச வேண்டாம்னு சொன்னாங்க”
“என்ன சார், இப்போ வந்து இப்படி சொல்றீங்க?”
“சாரி சிஸ்டர், நீங்க போய் பார்க்க சொல்லும் போது பதட்டத்தில் உள்ளே போயிட்டேன். போலீஸ் கேட்டாங்கன்னா நான் இன்னும் ஷிவானியை பார்க்கலைன்னு சொல்லிடுங்க. என்னோட தங்கச்சி கிட்டேயும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க”
“என்ன சார், தேவையில்லாம என்னை பிரச்சனையில் சிக்க வைக்கறீங்க?”
“அப்படி எல்லாம் இல்ல மேடம். அவ எதுவுமே என் கிட்ட சொல்லல. அதனால எந்த பிரச்சனையும் இல்ல”
“ஓகே சார், உங்களை நம்பி தான் நான் சொல்றேன். அப்புறம் எதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நான் உண்மையை சொல்லிடுவேன். அப்புறம் நீங்க தான் ஃபேஸ் பண்ணிக்கனும்”
“ஓகே ஓகே சிஸ்டர், தேங்க்ஸ்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஷியாமுடைய ஃபோன் அடித்தது.
இந்த நேரத்தில் யார் கால் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே சிஸ்டரிடம் மறுபடியும் ஒரு முறை தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து பேசிக்கொண்டே வெயிட்டிங் ஹாலிற்கு சென்றான்.
வெளிநாட்டில் இருந்து அவனுடைய அக்கா ஷைலஜா கால் செய்தாள்.
” ஹலோ ஷியாம் தூங்கி கிட்டு இருந்தியா டா? “
” சொல்லு அக்கா எப்படி இருக்க? மாமா எப்படி இருக்காரு? ஜேசன் எப்படி இருக்கான்? “
” ஆல் குட் டா. என்னாச்சு அம்மா தினமும் கால் பண்ணிடுவாங்க இன்னைக்கு பண்ணல. நான் போட்டாலும் அப்பா அம்மா இரண்டு பேருக்குமே நாட் ரீச்சபிள்னு வருது? “
” ஊர்ல நம்ம பாட்டி இறந்துட்டாங்க அக்கா “
” ஓ எம் ஜி, எப்போ? “
” நேத்து தான் அக்கா, ஊருக்கு போய் இருக்காங்க அப்பாவும் அம்மாவும். “
” சரி சரிடா, சாரி நீ தூங்கிட்டு இருந்தியா? உன்ன வேற நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? “
” அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா, நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் “
” ஏன் டா, என்னாச்சு உனக்கு? “
” எனக்கு ஒன்னும் இல்ல அக்கா. ஷிவானி தான் கீழே விழுந்த தலையில அடிபட்டுகிட்டா”
” அச்சச்சோ எப்படி? இப்போ எப்படி இருக்கா? “
” படிக்கட்டில் தடுக்கி விழுந்திட்டா. ஹாஸ்பிடல் வந்த பிறகு நார்மலா தான் இருக்கா, பயப்பட ஒன்னும் இல்ல. இப்ப தூங்கிக்கிட்டு இருக்கா “
” அப்பா அம்மாவுக்கு தெரியுமா? “
” இல்லக்கா தெரியாது. தெரிஞ்சா ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. அப்பா அங்க டூ த்ரீ டேஸ்க்கு இருக்கணும்னு சொன்னாரு. ஏதோ சாங்கியம் எல்லாம் பண்ணனுமாம். அதனால நான் சொல்லல. உன் கிட்ட பேசினாலும் இப்போதைக்கு சொல்லாத அக்கா. நான் நேரா வந்தப் பிறகு சொல்லிக்கிறேன் “
” சரிடா நாளைக்கு காலையில ஷிவானி கண் முழிச்ச அப்புறமா எனக்கு கால் பண்ணு. எனக்கு இங்க மிட் நைட்டா இருந்தாலும் பரவால்ல நான் அவகிட்ட பேசுறேன்.”
” ஓகே அக்கா, பை “
” பை டா, டேக் கேர். அவளை நல்லா பார்த்துக்கோ. நீயும் உன் உடம்ப பார்த்துக்கோ. பை”
“ஓகே ஓகே அக்கா ” என்ற சொல்லி ஃபோனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டான் ஷியாம்.
கடவுளிடம் ஷிவானியை சீக்கிரமா சரியாக்கு என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.
வெகு நேரமாக தூக்கம் வராமல் அவதிப்பட்டவன் 5 மணிக்கு மேல் கண்ணயர்ந்தான்.
நிச்சயதார்த்த விழாவிற்காக நந்தினி வீட்டிலிருந்து ரெடியாகி பார்ட்டி ஹாலுக்கு செல்லும் முன் ஏழு முப்பது மணி அளவில் ஷியாமிற்கு கால் செய்தாள்.
அசந்து தூங்கி இருந்தவன் ஃபோன் அடித்ததும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்.
“ஹலோ நந்து” என்று அவன் பேசியதிலிருந்தே அவன் பதட்டமாக பேசுகிறான் என்று புரிந்து கொண்டாள் நந்தினி.
” என்னாச்சுடா ஏதாவது பிரச்சனையா? “
” இல்லடி, பயப்படாத ஒன்றும் இல்லை. நான் ரொம்ப லேட்டா தூங்கினேன் அதான் நீ கால் பண்ணதும் அலறி அடிச்சுட்டு எழுந்துட்டேன்”
” அச்சச்சோ நான்தான் உன்னை கால் பண்ணி எழுப்பி விட்டுட்டேனா? சாரி டா”
” சே சே அதெல்லாம் ஒன்னும் இல்ல. நல்லவேளை நீ கால் பண்ணின. இல்லன்னா இன்னும் எவ்வளவு நேரம் தூங்கிருப்பேன்னு தெரியல. இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாரு. நர்ஸ் கூப்பிடுவாங்க”
” ஓகே டா, டாக்டர் வந்து பார்த்துட்டு போனதும் என்னன்னு சொல்லு. அவ எப்படி இருக்கான்னு எனக்கு அப்டேட் பண்ணு “
” ஓகே டி நீ இதையே நினைச்சுட்டு ஃபங்ஷன்ல டல்லா இருக்காத. அப்புறம் எல்லாரும் உன்கிட்ட வந்து என்னாச்சு ஏதுன்னு கேட்பாங்க. நீ நார்மலா இரு”
” ஓகேடா, நைட்டு ஏதாவது
சாப்பிட்டியா? “
” இல்ல நந்து, எனக்கு பசிக்கல “
” அவளைப் பார்த்துக்கறதுக்காகவாது நீ தெம்பா இருக்கணும் டா, தயவுசெய்து இப்ப போய் ஏதாவது டிபன் சாப்பிடு. ப்ளீஸ் “
” ஓகே நந்து, நான் பாத்துக்குறேன்.”
அதற்குள் மைக்கில்
“ஷிவானி அட்டெண்டர் ப்ளீஸ் கம் டு ரிசப்ஷன் நம்பர் 28 ” என்று கூப்பிட்டார்கள்.
” ஓகே நந்து, இங்க கூப்பிடுறாங்க, பை “
“பை டா” என்று சொல்லி ஃபோனை வைத்த போது ரூமுக்குள் வந்த கௌசல்யா.
” என்ன நந்து ரெடியா? இந்த டைம்ல யார் கிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு, கிளம்பு கிளம்பு “
” நான் ரெடியா தான் அம்மா இருக்கேன் வாங்க போகலாம் “
அனைவரும் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றனர்.
அர்ஜுன் மற்றும் ஊர்மிளா இருவரும் பொருத்தமான ஜோடிகள்.
இருவரும் மேட்ச் ஆக ப்ளூ கலர் உடுத்தி இருந்தனர்.
ஊர்மிளாவின் அப்பா ராஜசேகர் மற்றும் அம்மா கனகவல்லி அனைவரையும் வரவேற்று நன்றாக பார்த்துக் கொண்டனர்.
நந்தினி பாவாடை தாவணி போட்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். ஊர்மிளாவின் தம்பி விஷ்வாவிற்கு நந்தினியை பார்த்தவுடன் பிடித்து விட்டது. இரண்டு மூன்று முறை அவளைப் சைட் அடித்தான். அதை நன்றாக புரிந்து கொண்ட நந்தினி அவனுக்கு எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
நந்தினியின் தோழிகள் ரம்யா மற்றும் தேவி இருவரும் வந்தனர்.
இருவரையும் வரவேற்று அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் நந்தினி.
கௌசல்யா ரங்கநாதன் இருவரும் தங்கள் உறவினர்களை அழைத்து 51 தட்டுகள் வரிசை வைத்தனர்.
அனைவரும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
10 பவுனில் சரடு போட்டனர். திருமணம் ஆன பிறகு தாலியை அதில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அந்த தாலிச் சங்கிலி ஏதாவது விசேஷத்திற்கு மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். மற்றபடி தினப்படி போட்டுக்கொள்ள 5 சவரன் செயனில் டைமண்ட் மோப்பு வைத்து வாங்கி இருந்தனர்.
ராஜசேகர் தனது மகளுக்கு 100 பவுன் நகையும்.
மாப்பிள்ளைக்கு செயின் வாட்ச் மோதிரம் பிரேஸ்லெட் என்று அனைத்தையும் பிளாட்டினத்தில் வாங்கியிருந்தார்.
நிச்சயதார்த்த விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
இது நிச்சயதார்த்தமா கல்யாணமா என்று சிலர் பேசிக் கொண்டனர். அர்ஜுனும் ஊர்மிளாவும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். விஷ்வா கேக் ஆர்டர் செய்திருந்தான். ஊர்மிளாவும் அர்ஜுனும் அதை வெட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டனர். பிறகு அனைவருக்கும் ஊட்டி விட்டனர். அர்ஜுன் தன் தங்கை நந்தினிக்கு ஊட்ட, ஊர்மிளா தன் தம்பி விஷ்வாவிற்கு ஊட்டி விட்டாள்.
ஃபோட்டோ எடுக்கும் போது நிறைய ஃபோட்டோவில் விஷ்வா நந்தினியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றனர்.
தொடரும்…
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.