நிலாவின் நிழல் – 14

தமிழ் நிலா | 24 May 2026 | Share

வெளி உலகத்திற்கு என் மகள் என் வீட்டு இளவரசி என் வீட்டுக்கே எஜமானி என் சொத்து முழுக்க அவளுக்கு நான் உழைப்பது அனைத்தும் அவளுக்கு நான் உயிர் வாழ்வதே அவளுக்கு என்று என்னவெல்லாம் சொல்லி மெச்சிக் கொண்டு இருந்தவர்கள், இன்று அவளை தகாத வார்த்தைகளால் சாடவும் தயங்க வில்லை.

அவர்களின் மகளும் மற்றவர்கள் போல் நினைத்து இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போய் இருக்கலாம் ஆனால் நிலாலினியோ வெளி ஊரில் இருந்தவள் வீட்டுக்கு வந்து அவர்களிடம் அல்லவா அவள் காதலிப்பதாக கூறினாள் ! 

ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையெனில் விட்டுவிட வேண்டியது தானே ! எதற்கு அவளை இழிவு படுத்த வேண்டும் ?

காதலிப்பதாக சொன்ன பாவத்திற்கு அவளுக்கு தண்டனை கொடுக்கிறதாக நினைத்துக் கொண்டு இத்தனை வருடம் அவர்கள் வாழ்ந்த வாழ்வையே கொச்ச படுத்திக் கொள்கிறார்கள் என்று ஏன் இந்த மூடர்களுக்கு புரியவில்லை !

நாக்கூசாமல் பெற்ற மகளுக்கு விலை வைத்து பேச இந்த ஜென்மங்களால் எப்படி முடிகின்றது ? நாவில் விஷத்தை தடவி அவள் மனதை இப்படி உயிரோடு வேர் அறுத்து கொள்வதற்கு அவளை கழுத்தை நெறித்து கொன்று இருக்கலாம். அப்படி தான் தோன்றியது நிலாலினிக்கு.

செத்து போ என்று அவர்களின் கையில் கொன்று இருந்தால் கூட சந்தோஷமாக உயிரை விட்டு இருப்பாள். ஆனால் இத்தனை வருடம் நம்மவர்கள் என்று அவள் நினைத்திருந்த அத்தனையும் பொய் ஆக்கி விட்டவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிலாலினிக்கு தொண்டைக் குழியை நெருக்க, இந்த நிமிடமே இப்படியே நம் உயிர் போய் விட்டாள் தான் என்ன ! என்று தான் தோன்றியது நிலாலினிக்கு.

இந்த உயிரை நானா கேட்டேன் ! இந்த உடலை நானா கேட்டேன் ! இந்த வாழ்வை நானா கேட்டேன் ! 

நான் வேண்டும் என்று கேட்டதா பொழுதும் வேண்டும் என்று அவர்கள் தானே என்னை பெற்றுக் கொண்டனர் ! பெற்ற குழந்தைக்கு அதற்கென்று ஒரு இதயம் இருப்பது போல் அதற்கென்று உணர்வுகள் இருக்கும் அதை நாமும் புல் அளவாவது மதிக்க வேண்டும் என்ற ஒரு நினைப்பு அவர்கள் மனதிற்கு எட்டவே இல்லையா ? 

அது சரி… மனம் என்ற ஒன்றில் அவர்களுக்கு துளியேனும் ஈரம் இருந்து இருந்தால் இப்படி எல்லாம் பெற்ற மகளுக்கு விலை வைத்து பேசி இருப்பார்களா ? 

அவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தானே ! அப்படி இருக்க ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட அவர்களின் காதல் புனிதமான பஞ்சாமிர்தம் என்றால் பெற்றோரிடம் வந்து தெரியப் படுத்திய அவர்கள் பெற்ற மகளின் காதல் மட்டும் கசக்கும் வேப்பங்கொழுந்தா ! 

நிலாலினியும் அவர்களை போல் அவள் வீட்டில் சொல்லாமல் காதலித்தவனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு இருக்க வேண்டுமோ ! 

அப்படி செய்து இருந்தால் அவர்களை போலவே நிலாலினியும் புனிதமானவள் ஆகி இருப்பாளோ என்னவோ ? நல்லவளாக வந்து பெற்றோர்களிடம் முறையிட்டவளுக்கு அவர்கள் வாயாலே கேடுகெட்டவள் என்று பெயர்.

நிலாலினி மனது ஆதங்கத்தில் பொங்கி, நீங்கள் விலை வைக்க நான் என்ன விலை மகளா அல்லது நீங்கள் தான் என்னை கூட்டிக் கொடுக்கும் மாமாக்களா ? என்று கேட்டிட துடிக்கும் உதடுகளோடும் கண்ணில் வலிகள் நிரம்பி வழிந்த கண்ணீரோடும் அவர்களை ஏறிட, பாய்ந்து வந்து அவளை அறைந்தவர் அவளின் ஃபோனை நீட்டி ” இந்தா… கூப்பிடு… இப்போ அவனுக்கு கூப்பிட்டு பணத்தோட வர சொல்லு… ” எங்க,

அதற்கு அவசியமே இல்லை என்பது போல் கதவு திறக்கப்பட்டது. அங்கு நின்று இருந்தது போலீஸ்.

நிலாலினி உதட்டின் ஓரம் கிழிந்து ரத்தம் வர கீழே விழுந்து கிடக்க, உள்ளே வந்த போலீசார் நிலாலினியின் பெற்றோரை கைது செய்ய,

” எங்கள எதுக்கு சார் அரெஸ்ட் பண்ணுறீங்க ? ” என்று துள்ளியவரிடம்,

” எதுக்கா… ? நீங்க உங்க பொண்ணு காதலிச்சதுக்காக அடிச்சு துன்புறுத்தி இருக்கீங்க ” என்று முகம் வெளிறி எழுந்திரிக்க கூட திராணியற்று கிடந்த நிலாலினியை கைக்காட்டினார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.

” குழந்தைங்க தப்பு பண்ணுன்னா பெத்தவங்க அடிக்கத் தாங்க செய்வாங்க ” என்ற தாயாரை பார்த்து,

போலீஸ், ” உங்க பொண்ணு என்ன தப்பு பண்ணுனா ? கல்யாணத்துக்கு முன்னாடியே எவன்கூடையாவது தப்பு தப்பா இருந்து வயித்துல பிள்ளைய வாங்கிக்கிட்டு வந்து உங்ககிட்ட மறச்சுட்டாளா ! இல்லை… அவ கண்டவன்கூட தப்பான உறவுல இருக்குறப்ப அவள கையும் களவுமா புடிச்சு அடிச்சீங்களா ? ஆன்… எதுக்கு அடிச்சீங்க ? ” எங்க

” இவ இஷ்டத்துக்கு ஊரு மேய எவனையோ காதலிக்கிறதா சொல்லி வந்து நிக்கிற *** ” என்றவர் பெற்ற மகளையே வாய் கூசாமல் மற்றவர்களிடம் தகாத வார்த்தையால் சாடினார்.

” ஓ… அத அவள பெத்த இன்னொரு *** சொல்லுதா ” என்று அவர் சொல்லிய வார்த்தையை அப்படியே அவரை குறிப்பிட்டு பேசினார் அந்த இன்ஸ்பெக்டர்.

” என்ன வார்த்தை பேசுறீங்க நீங்க ? ” என்று எகிறியவர்களிடம்,

காதைக் குடைந்துக் கொண்டே, ” நீங்க சொன்ன அதே வார்த்தைய தான் நானும் பேசுற. ஒருத்தன காதலிச்சதா வந்து சொன்ன உங்க பொண்ணு *** அப்போ அந்த காலத்திலேயே காதலிச்சு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகிட்ட நீங்களும் *** தானே ! ” என்று புத்தி பேதலிச்சுப் போய் பெற்ற மகளையே வாய்க்கு வந்த படி தகாத வார்த்தைகளை பேசியவர்களுக்கு அதே வார்த்தைகளால் சாட்டை அடி கொடுத்து விட்டார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அரண்டு போய் நின்ற அவர்களை பார்த்து, ” என்ன ! உங்கள பத்தி ஒன்னுமே தெரியாதுன்னு நெனச்சுட்டீங்களா ? ” என்று நக்கலாக சிரித்தவர், ” உங்கள பத்தி எனக்கு எல்லாம்… தெரியும். அமைதியா இப்போ நீங்க இரண்டு பேரும் என்கூட ஸ்டேஷனுக்கு வரலைன்னா உங்கள வலுக்கட்டாயமா எல்லார் முன்னாலையும் இழுத்துட்டு போக வேண்டி வரும் ” என்ற இன்ஸ்பெக்டர், அவர்களை அழைத்துச் செல்லுமாறு இன்னொரு போலீஸிடம் கண் காட்டி விட்டவர், 

நிலாலினியின் நிலையை பார்த்து விட்டு, ” நீங்க போய் மிஸ்டர். மாறன உள்ள வர சொல்லுங்க… ” என்று அவர்கள் வரும் பொழுது நீங்கள் உள்ளே வர வேண்டாம் வெளியவே நில்லுங்கள் என்று சொல்லி வெளியவே நிறுத்தி வைத்து இருந்த மாறனை அழைத்து வரும் படி சொல்லி கான்ஸ்டபிளை ஏவினார்.

விழுந்த அறையில் காதில் கொய் என்னும் சத்தத்துடன், இதயத் துடிப்புகள் அழுத்தமாகி, கை கால் விடுவெடுக்க வாயில் மூச்சு வாங்கிய படி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் கிடந்த நிலாலினிக்கு மாறன் உள்ளே வரவும் தான் விஷயம் புரிந்தது. போலீஸை வரவழைத்தது மாறனின் வேலை என்று.

” மிஸ்டர். மாறன் நீங்க அந்த பொண்ணுன ரிலாக்ஸ் பண்ண வெச்சு, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துருங்க. நாங்க இவங்கள முன்னாடி கூட்டிட்டு போறோம்… ” என்று அவர் வெளியில் சென்று விட,

நிலாலினியை கைத்தாங்கலாக தூக்கி விட்ட மாறனுக்கு அவள் நிலையை பார்த்து மனம் சுள்ளென்று வலித்தது. அவள் கை கால்களை சூடு பறக்க நன்றாக தேய்த்து விட்டவன் அவளை காருக்கு கூட்டி வந்து குடிக்க தண்ணீர் புகட்டினான்.

கொஞ்ச நேரத்தில் நிலாலினி தெளிவடைய, மாறன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி காரை விரட்டினான்.

கார் விண்டோவை இறக்கி விட்டு எதிர்காற்று தன் முகத்தில் படர அமைதியாகவே இருந்தவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட மாறனிடம் இன்னும் பேச வில்லை.

ரணமான அவள் மனது ஊமையாய் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டவனும் அவளிடம் பேச சொல்லி கட்டாயப் படித்த வில்லை.

போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் மாறன், அவன் கைப்படவே கம்பளெய்ன்ட் எழுதி கொடுத்தான். வீடியோ கால் மூலம் தன் லாயர்ரை கன்சல்ட் செய, அவரோ ” இனி அவங்களால மேடமுக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா. பொண்ணு விருப்பட்டது வெளிய வந்துடாதாகவும், இனி பொண்ணுக்கும் அவங்களுக்கும் எந்த ஒட்டு உறவுமே இல்லன்னும் எழுதி வாங்கிக்கோங்க ” என்றார்.

நிலாலினி காரில் வரும் பொழுதே மனம் தெளிவடைந்து விட்டாள். அவளின் மனம் கசிந்து உரைத்த ஒரு விஷயம்… இது போன்ற பெற்றோர்களுடன் இருப்பதற்கு அனாதையாகவே இருந்து இருக்கலாம்.

இப்பொழுது லாயரும் இப்படி உரைக்க அதே போல் எழுதி வாங்கி விட்டனர். 

நிலாலினியை தவறாக பேசிய அதே பெற்றோர்கள் தான், எங்களின் ஒரே மகள் செல்ல மகள் அவள் இல்லாமல் நாங்கள் இல்லை தவம் இருந்து பெற்றோம் ஆசையாய் வளர்த்தோம் என்று எல்லாம் நீலிக்கண்ணீர் வடிக்க,

” ஓ… இந்த அளவுக்கு பாசம் வெச்சுருக்க உங்க பொண்ண தான் என்கிட்ட *** அப்படின்னு சொல்லுங்களா ? உண்மையா பாசம் வெச்சு இருக்குற எவனாவது தான் பெத்த பொண்ண அப்படி சொல்லுவானாயா ? ” என்று நாக்கை பிடுங்கும் படி கேட்ட இன்ஸ்பெக்டர்,

” பெத்த மகள வெச்சு அவ லவ்வர் கிட்ட காச வாங்க பார்த்த கேடுக்கெட்ட குடும்பந்தானயா நீங்க ? தூ… ” என்று அவர் அவர்களை போட்ட போடில் சைன் போட்டு கொடுத்து விட்டனர்.

நிலாலினி அப்பொழுதும் போலீசிடம், ” என்னைய பெத்து வளர்த்தினத்துக்கு தானே அந்த 20 லட்சம் கேட்டாங்க… கொடுக்கிறேனு சொல்லுங்க. அதுவும் ஒரே முட்டா இல்லை. அவங்க எப்படி எனக்கு 22 வருசமா கொஞ்சம் கொஞ்சமா பண்ணுனாங்களோ அதே மாதிரி அடுத்த மாசத்துல இருந்து அடுத்த 22 வருசம் என்ன ! அவங்க சாகுற வரைக்கும் செலவுக்குன்னு அவங்களுக்கு ஒரு தொகைய பேங்க்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிடுறேனு சொல்லிடுங்க. நாளா பின்ன வயசாகிருச்சு ஹாஸ்பிடல் செலவு இருக்கு காசு வேணும்னு எதுக்கும் அவங்க என்கிட்ட வர தேவை இல்லை. எதுவா இருந்தாலும் எங்க லாயர் கிட்ட பேசிக்க சொல்லுங்க ” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ” பார்த்தியாயா உன் பொண்ண ? நீங்க பேச்சுன பேச்சுக்கு இனி என் மூஞ்சில கூட முழிச்சுராதிங்கனு சொல்லாம சொல்லிட்டு போற… 

இன்னும் என்ன நிக்குறீங்க ! அதான் நீங்க கேட்ட பணத்த விட அதிகமாவே நீங்க சாகுற வரைக்கும் உங்களுக்கு அந்த பொண்ணு மாசாமாசம் பேங்க்குல போட்டு விடுறேனு சொல்லிருச்சுல ! அப்பறம் என்ன ! கிளம்பு கிளம்பு ” என்று அவர்களை விரட்டி விட்டார்.

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.