நிலாவின் நிழல் – 12

தமிழ் நிலா | 20 May 2026 | Share

இது எல்லாம் தான் செய்த தவறால் வந்த வினை தான். தன்னால் இப்பொழுது தனக்கு உதவ வந்தவருக்கும் சேர்த்து பிரச்சனைகள் வந்து விட்டதே என்று நிலாலினியின் மனம் அடித்துக் கொள்ள,

” நானே இத சரி பண்ணிடுற. நானே போய் பிரஸ்ல எல்லா உண்மையும் சொல்லிடுற. உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வராது ” என்று எழுந்து நிலாலினி செல்லவும்,

அது வரை அவள் நிதானம் அடையட்டும் என்று எதுவும் பேசாமல் அமைதி காத்து இருந்தவன் தன் மௌனத்தை உடைத்தான்.

அவள் கை பிடித்து தடுத்து நிறுத்திய நிலாவின் நிழல் அவன், ” எனக்கு இதுல எந்த ப்ராப்ளமும் இல்ல நிலா… லெட்ஸ் பி லவ்வர்ஸ்… ” என்றான்.

அதை கேட்ட நிலாலினிக்கு தனக்கு தான் பதற்றத்தில் அவர் சொல்லியது ஏதோ தவறுதலாக கேட்டு விட்டதோ ! என்று தோன்ற,

” சாரி சார்… எனக்கு பதட்டத்துல நீங்க சொன்னது சரியா கேக்கல. என்ன சொன்னீங்க ! ” என்று கேட்டாள்.

அவளை இன்னும் நெருங்கி நின்றவன், ” நிலா… லிஸன். எனக்கு இதுல எந்த ப்ராப்ளமும் இல்லை. சொல்ல போன இதுனால உனக்கும் சரி எனக்கும் சரி பெனிபிட்ஸ் தான் இருக்கு ” எங்க,

நிலாலினியின் புருவங்கள் முடிச்சிட்டன, ” என்ன பெனிபிட்ஸ் ! “

மாறன், ” உன்னோட பெனிபிட்ஸ் என்னன்னு உனக்கே நல்லா தெரியும்… நீ சொன்னது பொய்யுன்னு யாருக்கும் தெரிய போறது இல்லை. சோ… நீ யார் முன்னாடியும் தலை குனியனும்னு அவசியம் இல்லை.

அண்ட்… இதுல என்னோட பெனிபிட்ஸ் என்னன்னா… வீட்டுக்கு போன கல்யாணம் பண்ணிக்க சொல்லுற பாட்டி, வெளிய போன என் ப்ராபர்ட்டிச்ஸ்க்கு ஆசைப் பட்டு என்னைய சுத்தி வர பொண்ணுங்க, பிசினஸ் டீலிங் கூட மேரேஜ் டீலிங்கா மாத்த நினைக்கிற சில பேராசை பிடிச்ச பிசினஸ் பீப்பிள்ஸ். இவங்க எல்லாரையும் சமாளிக்க எனக்கு அமைஞ்ச பெஸ்ட் ரூட் இந்த லவ்…

நிலா…. லெட்ஸ் பி லவ்வர்ஸ்… ” என்று அவன் பிடித்து இருந்த நிலாவின் கை கோர்க்க,

நிலாலினி ஏதோ மறுப்பது போல் பேச வாய் எடுக்க, அதற்குள் முந்திக் கொண்டான் மாறன்.

” ஆஃப் கோர்ஸ் ( Ofcourse ) இது எல்லாம் உனக்கு ஓகே ஆ இருந்தா மட்டும் தான். சப்போஸ்… உனக்கு யாராவத லவ் பண்ணனும்னு ஆசை இருந்தா… யூ கான் லீவ். ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் ஆல் ஹியர் ( You can leave. I will take care of it all here ) ” எங்க,

நிலாலினியின் மனது, ” லவ் ஆ ! ஆசை ஆ ! அஞ்சு வருஷமா என் பின்னாடியே சுத்தி வந்தவனே இப்படி… இதுல இன்னொருத்தன் மேல வேற நான் ஆசைப் பட்டு லவ் பண்ண போறனா ! ” என்று சலித்துக் கொண்டது.

நிலாலினி மாறனிடம், ” என் லைஃப்ல லவ் இன்னு ஒரு விஷயத்துக்கு இடமே இல்லை. எனக்கு இதுக்கு சம்மதம் ” என்றாள்.

நல்ல வேலை நிலாவின் நிழலான மாறன் அவளிடம் நான் உன்னை காதலிக்கிறேன் அதனால் நாம் வெளியில் சொல்லியது போலவே லவ்வர்ஸாகவே இருக்கலாம் என்று சொல்ல வில்லை. சொல்லி இருந்தால் நிலாலினி அவன் முகத்தின் முழிப்பது அன்றே கடைசியாக இருந்திருக்கும். 

பின்னே யார் தான் நம்புவார் ! இப்படி திடீரென்று பார்த்த ஒருத்தன் தன்னை சில பல வருடங்களாகவே காதலிக்கிறான் அதுவும் மறைவில் இருந்தே என்று கூறினால் ! வருடக் கணக்கில் தனக்கு எதிரே கண்கூடாக பார்த்தவனின் காதலே இந்த அழகில் இருக்க, இப்பொழுது புதிதாய் வந்து உதவிய ஒருவன் இரண்டே நாளில் காதல் என்று சொன்னால் நிலாலினியால் அதை எப்படி நம்ப முடியும் !  

அதனால் தானோ என்னவோ மாறனும் தன் மனதில் மறைத்திருந்த காதலை சொல்லாமல் இப்படி எது ஏதோ சாக்கு கூறி அவளை தன் வழிக்கு கொண்டு வந்து விட்டான்.

நிலாலினி, ” அப்போ… நம்ம மித்த விஷங்களை பத்தி பேசிடலாமா ! ” என்றாள். ஏனென்றால் ம்யூச்சுவல் கோஆப்பரேஷன் என்று வந்து விட்ட பின் அவரவர் தேவைகளையும் வரன்முறைகளையும் பற்றி பகிர்ந்துக் கொள்வது தானே நல்லது ! அது எம்பிஏ படித்த அவர்கள் இருவருக்குமே நன்றாக தெரிந்த ஒன்று தான். மாறனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

இருவரும் சில முக்கியம் விஷயங்களை பற்றி பேசிக் கொண்டனர். பின்பு மாறன் அவளிடம் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான்.

தன் பர்சனல் ஃபோன் நம்பரிலிருந்து நிலாலினி ஃபோனுக்கு மிஸ்டு கால் கொடுத்தவன், ” சேவ் திஸ் நம்பர் நிலா… இட்ஸ் மை பர்சனல் நம்பர். இட்ஸ் ஒன்லி ஃபார் யூ ( Save this number Nilaa… It’s my personal number. It’s only for you ). ஃபர்தரா உங்களுக்கு எது வேணும்னாலும் எனக்கு இதுலயே காண்டாக்ட் பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன பத்தின இம்போர்டன்ட் இன்ஃபர்மேஷன்ஸ் எல்லாமே உங்களுக்கு நான் ஷேர் பண்ணி விடுறேன். ஜஸ்ட் கோத்ரோ இட் ” எங்க அதற்கு நிலாலினியும் சரி என்று விட்டாள்.

பின்பு ஏற்கனவே நிலாலினி அவளின் வீட்டுக்கு செல்ல கிளம்பி இருக்க, இருவரும் அங்கிருந்து நிலாலினி வீட்டுக்கு புறப்பட்டனர்.

மிதுன் ஹோட்டலில் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அந்த முழியாங்கண்ணியின் கேமராவை கையில் வைத்துக் கொண்டு இருந்தான். 

கேமரா கொஞ்சம் அடிவாங்கி இருந்தது. க்வாலிட்டியும் கொஞ்சம் குறைவு தான். ” இந்த கேமராவுக்கா அவ அவளோ சீன் போட்டா… ” என்று நினைத்தவன் நினைவுகளின் அவள் சொல்லிய அந்த பிங்கி ப்ராமிஸ் வந்து செல்ல தன்னையும் அறியாமல் சிரித்தான் மிதுன். 

பின்பு அந்த கேமராவின் மெமரி கார்ட்டை மட்டும் உருவு வைத்து விட்டு, நாளைக்கு அவளை கூப்பிட்டு இந்த கேமராவை கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் கேமராவை அவனின் கேபின் ரூமிலே வைத்து விட்டு கிளம்பி விட்டான்.

விண்ணில் செங்கிற்றுகள் பட்டு தெறிக்கும் நேரம் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப பார்க்கிங் நோக்கி சென்ற மிதுனை தடுத்து நிறுத்தியது ஒரு குரல், ” சார்… சார்… நில்லுங்க சார்… அட நில்லுங்க கொஞ்சம் சார்… ” 

அது யார் என்று மிதுன் திரும்பி பார்க்க அங்கு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டு இருந்தாள் அவள்.

அவளை பார்த்ததும், ” அட ஃப்ராட்டு… இவ இன்னும் போகாம இங்க என்ன பண்ணுறா ! ” என்ற யோசனை உடனே அவளை பார்த்தவன், 

அவள் அவனின் எதிரே வந்து நிற்கவும், ” நீ இன்னும் இங்க என்ன பண்ற ! நான் தான் உன்னை ஃபோன் நம்பர் கொடுத்துவிட்டு கிளம்பிக்க சொல்லிட்டேன்ல ? ” என்று கேட்க, 

அவளோ ” ஃபோனுன்னு ஒன்னு இருந்தா தான சார் ஃபோன் நம்பர் கொடுத்துட்டு போறதுக்கு ! என்கிட்ட தான் ஃபோனே இல்லையே ! ” எங்க,

” வாட் !!! உன்கிட்ட ஃபோன் இல்லையா ? ” என்று மிதுன் ஆச்சரியமாக கேட்கவும்,

” ப்ச்… ஆமா சார். அத தான நானும் சொன்ன ! என்கிட்ட இருக்கிறதே அந்த கேமரா மட்டும் தான் அத திருப்பி கொடுத்தீங்கனா நான் பாட்டுக்கு போயிருவ ” என்றாள் அவள்.

” நாளைக்கு வந்து வாங்கிக்க ” என்று சொல்லி திரும்பிய மிதுனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

” ஏய்… கைய விடு… ” என்று மிதுன் அவளிடம் இருந்து கையை உருவ பார்க்க, தன் இரண்டு கைகளாலும் கெட்டியாய் பிடித்துக் கொண்டவள்,

” ஊஹூம்… முடியாது… நீங்க என் கேமராவ கொடுங்க. நான் அப்போ தான் விடுவ… ” என்று பிடிவாதமாக நின்றாள்.

” அதான் நாளைக்கு கொடுக்குறேன்னு சொல்லிட்டன்ல ! “, மிதுன்

” அது எல்லாம் முடியாது. எனக்கு இப்போவே வேணும். நீங்க நாளைக்கு எனக்கு கேமராவ கொடுக்காம ஏமாத்திடீங்கனா ! “, அவள்

” ஏய்… உன் வேஸ்ட் கேமராவ வெச்சுட்டு நான் என்ன பண்ண போற ! நாளைக்கு காலையில வந்து வாங்கிக்கோ ” என்றவன் அவள் கைகளை விலக்கி விட்டு, 

” இன்னொரு டைம் இது மாறி என்னைய டச் பண்ணுன… அப்பறம் நடக்கிறதே வேற… மைண்ட் இட் ” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு தன் காரை நோக்கி நடக்க, ஓடி வந்து அவன் முன் வழி மறைத்து நின்றுக் கொண்டாள். 

” நாளைக்கு காலையில நான் வந்து கேமராவ கேக்குறப்ப நீ யாருனே எனக்கு தெரியாதுன்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா ! நான் உங்கள நம்ப மாட்ட. நீங்க என் கேமராவ தர வரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டா… ” என்று அவள் தர்ணாவில் ஈடுபட,

” நீ போகாட்டி எனக்கு என்ன ? நான் போற ” என்று மிதுன் தன் காரை கீ கொண்டு அன்லாக் செய்யவும், 

இவனை விட்டால் நம் கேமராவை கொடுக்காமல் ஏமாற்றி விடுவான் என்று பயத்தில் இருந்தவள் அவன் இப்படி தோள் குலுக்கி விட்டு நகரவும், 

அவனுக்கு முன் ஓடி சென்று, ” அப்போ நானும் வருவ… ” என்று அவன் காரின் பின் சீட்டின் கதவை திறக்கவும், 

” ஏய்… நில்லு டி… ” என்றவன் அவளை பிடித்து தடுக்க செல்லவும், அவள் பயந்துக் கொண்டு காருக்குள் ஏற போக, அவளின் ஜடையை பிடித்து இழுத்து விட்டான் மிதுன்.

அவள் வேகமாக காருக்குள் ஏற போக கால் தடுக்கி சீட்டில் விழப் போகவும், மிதுன் அவள் ஜடையை பிடித்து இழுக்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடி அவளின் அந்த டோபா செட் முடி அவன் கையோடு வந்து விட்டது. 

அதை பார்த்த மிதுனுக்கு முகம் மூணார் வரை சுழிப்புற்றது, ” சய்… அப்போ நிஜமாவே இது டோபா முடி தானா ! ” என்று அதை அருவருப்பாக கையில் இருந்து வீசி எறிந்தவன்,

” இவள… ” என்று அவளை கொன்று போடும் ஆத்திரத்துடன்,

” ஏய்… வெளிய வா டி… ” என்று கத்திக் கொண்டே கார் கதவை திருந்து அவள் கழுத்தை பற்ற சென்றவனின் கை தான் செய வேண்டிய செயலை மறந்து அந்திரத்தில் நின்றது.

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.