நிலாவின் நிழல் – 10

தமிழ் நிலா | 19 May 2026 | Share

இந்திராவும் திலிப்பும் மணக்கோலத்தில் அமர்ந்து இருக்க ஐயர் மத்திரங்களை எல்லாம் முடித்து தாலி எடுத்து கொடுக்க, அவர்களுக்கு பக்கத்தில் தீக்குளியில் நிற்பது போல் நின்று இருந்த திலிப்பின் அப்பா சுந்தரம், ” ஐயரே… இருங்க… முக்கியமா வந்து முன்னாடி நிற்க வேண்டியவங்க இன்னும் வரல. வெயிட் பண்ணுங்க… ” என்று வாசலையே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்தார்.

அந்த இடத்தில் பெண் வீட்டார்களால் கொஞ்சம் சலசலப்பாக சுந்தரம் அதை சமாளித்துக் கொண்டிருக்கவும், ஃபோன் பேச வெளியில் சென்று இருந்த மாறன் உள்ளே வந்தான்.

அவனை பார்த்ததும் சுந்தரம் கண்கள் மின்ன ” வந்துட்டாரு… வந்துட்டாரு… இருங்க அவர கூட்டிட்டு வர ” என்றவர் அவனை அழைக்க வர, மாறன் வந்தவன் நேராக நிலாவை தேடி தான் சென்றான்.

அவன் முன்னால் வராமல் நாலாவது ரோவில் அமர போக பதறிய சுந்தரம் மிதம் இருந்த எட்டுகளை ஓடி வந்தவர், ” சார்… சார்… வாங்க சார் நம்ம முன்னாடி போலாம்… நீங்க வந்த அப்பறம் தான் தாலி கட்டனும்னு மை சன் வெயிட்டிங் சார்… ” என்றார். 

எல்லாம் அவருக்கு பின்பு அவர் பதவி அவர் மகன் திலிப்புக்கே போக வேண்டும் என்று தான் அவர் செய்தது எல்லாம் அவர் மகன் செய்தாக சொல்லி காக்கா பிடிக்கிறார். அது மட்டுமல்ல எங்கும் செல்லாத மாறன் இந்த கல்யாணத்தை முன் நின்று நடத்தி வைத்தான் என்றால் சுந்தரத்தின் குடும்பத்துக்கே அவர்களின் தொழில் வட்டாரத்தில் மதிப்பு கூடி விடும்.

” நோ நோ சுந்தரம். ஐ வில் பி ஹியர் ( I will be here ). நீங்க ஃபுங்ஷன நடத்துங்க ” என்று மாறன் சொல்ல,

சுந்தரம், ” சார்… நீங்க தான் சார் முன்னாடி நிக்கனும். இட்ஸ் மை ஹும்பல் ரிக்வெஸ்ட் சார் ( It’s my humble request sir ). பிளீஸ் சார் நோ மட்டும் சொல்லிடாதிங்க… ” எங்க, உடனே மாறன் திரும்பி நிலாவை தான் பார்த்தான்.

” நிலா… ஷால் வீ ? ( Shall we ? ) ” என்று மாறன் கேட்கவும் நிலாலினிக்கு கண்ணா முழி பிதுங்குவது போல் ஆகிற்று.

” நா… நான் எதுக்கு ! நீங்க போங்க “, என்றாள்.

” சாரி சுந்தரம். என் லவ் அவங்க வராம தனியா நான் வரது நல்லா இருக்காது ” என்று மாறன் சுந்தரத்திடம் சொல்லவும், 

” எது ! இந்த பொண்ணு தான் சாரோட லவ்வரா ! ” என்று ஷாக் ஆன சுந்தரம், ” மேம்… வாங்க மேம்… நீங்களும் வந்து சார் கூட நின்னாதா நல்லா இருக்கும்… பிளீஸ்… வாங்க… ” என்று எம்மாவில் இருந்து மேமுக்கு தாவி கெஞ்சிக் கொண்டிருந்தார்.

மாலினி, ” அதான் இவ்வளோ தூரம் கூப்பிறாங்களா போ நிலா… ” எங்க,

நிலாலினி, ” அதுக்கு இல்ல மாலினி… ” என்று தயங்கிக் கொண்டே இருக்க, மாலினி இவள் கிட்ட பேசுனா எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைக்க துள்ளி எழுந்தாள் நிலா.

அதையே மாறன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிலாலினி இடையில் கை வைத்து தன்னுடன் சேர்த்து நிறுத்திக் கொண்டான்.

மாறன், ” வா மாலினி ” என்று மாலினியையும் அழைக்க, மாலினி ” நானா ! நான் எதுக்கு ? ” எங்க,

” நீ என் சிஸ்டர் தானா ! உன் ப்ரோ தான் கூப்பிடுற வா… ” என்று மாறன் அவளை தங்கை என்று உரிமை வைத்து சொன்னதும் எழுந்து குடுகுடுவென்று அவர்களுடனே சென்று விட்டாள்.

மாறனும் நிலாலினியும் ஜோடியாக வரவதை பார்த்ததும் இந்திராவின் வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது. 

ஏனென்றால் நேற்று இரவு திலிப்பின் மூலம் மாறன் பற்றி தெரிந்துக் கொண்டாள் இந்திரா. திலிப் அது தன் அப்பா செக்ரேட்ரியாக வேலை செய்யும் முதலாளி என்று சொல்ல, இந்திரா ” வாட் ! முதலாளியா !!! அவ்வளோ பெரிய கம்பனி அதுக்கு ஓனர் எப்படியும் ஒரு 45 டூ 50 ஆது ஏஜ் இருக்குற ஆளா தான் இருக்கும்னு தான நான் நினைச்ச இவரு யங்கா இருக்க மாதிரி இருக்கு ! ” எங்க,

திலிப், ” அவருக்கு இப்போ தான் 29 ஆகுது ” என்று சொல்லவும் வாய் பிளந்து விட்டாள் இந்திரா.

இது முதலிலே தெரிந்து இருந்தால் திலிப்புக்கு பதிலாக மாறனுக்கு ரூட்டு போட்டு இருப்பாளோ என்னவோ ! 

இப்பொழுது நிலாலினியை மாறனுடன் இப்படி பார்க்க இந்திராவுக்கு மட்டுமல்ல அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த திலிப்புக்கும் வயிறு கருகியது, ” நம்ம எத்தனை நாள் இவ பின்னாடி சுத்துனோம் ! அப்போ எல்லாம் கைய கூட பிடிக்க விட்டது இல்லை. இப்போ அவரு இத்தனை பேரு முன்னாடி எதோ அவரு கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரி அவளோட இடுப்ப புடிச்சிட்டே இருக்காரு அவளும் சும்மாவே இருக்கா… 

அவரு என்னவிட பணம் நிறையா வெச்சு இருக்கலாம் ஆனா… நான் தான் லவ் நிறையா வெச்சிருந்த நிலா. இப்போ நீ அது எல்லாம் இழந்துட்ட. உன்ன எப்படி எல்லாம் ராணி மாதிரி பாத்துக்கனும்னு நினைச்சனோ அதே மாதிரி நான் இனி இந்திராவ பாத்துக்க போற. அது பார்த்து நீ வயிறு எரிய போற… ” என்று தனக்குள் இனி எல்லாமே இந்திரா மட்டும் தான் என்று சபதம் எடுத்துக் கொண்டான்.  

மாறனும் நிலாலினியும் ஜோடியாக வந்து நின்ற பின்னர் தான் அவர்கள் அர்ச்சனையை தூவ திலிப் இந்திரா கழுத்தில் மூன்று முடுச்சியிட்டான். கல்யாணம் சிறப்பாக முடிந்தது.

நிலாலினி, ” என்ன இந்திரா… நீ சொன்ன மாதிரியே பண்ணிட்ட ! நான் என் லவ்வர் கூட ஜோடியா வந்தா தான் இந்த கல்யாணமே நடக்கும் அப்படி வரக்கு லேட் ஆனாலும் கூட நாங்க வரவரைக்கும் கல்யாணத்தை தள்ளி வெச்சிருவேனு நீ சொன்ன மாதிரியே இப்போ பண்ணிடியே ! ” என்று நட்பாக பேசுவது போல் சிரித்துக் கொண்டே குத்திக் காட்ட, 

இந்திராவுக்கு முகம் கருத்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ” ஆமா நிலா… நீ தான் என் பெஸ்ட் பிரெண்ட். நீ இல்லாம எப்படி ! ” என்று சொல்லி வைத்தாள்.

அது பொய் என்று நிலாலினிக்கும் தெரியும் இருந்தும் அவளிடம் எதுவும் சொல்லாது அங்கு கொஞ்சம் தள்ளி ஓரமாக நின்று இருந்த இந்திராவின் முப்பெரும் தேவியர்களை தான் பார்த்து சிரித்து வைத்தாள்.

ஏற்கனவே அவர்கள் இன்று இந்திரா அவர்களை பக்கத்தில் கூட சேர்க்க வில்லை என்று கடுப்பில் இருக்க, இப்பொழுது நிலாலினி பார்த்து சிரித்து வைக்கவும் அதில் ஒரு நக்கல் தெரிந்தது அவர்களுக்கு. இத்தனை நாள் அவர்கள் செய்ததிற்கு எல்லாம் பதில் அடி கொடுத்து விட்டாள் ஒற்றை சிரிப்பில் நிலா.

நிலாலினி மேல் அவர்களுக்கு கோபம் இருந்தாலும், இன்று இந்திரா அவர்களைக் கண்டுக்காமல் பத்தோடு பதினைத்தாக பார்த்து விட்டு சுந்தரம் அவர்களை தள்ளி துரம் நிற்க சொல்லும் பொழுதும் கூட எதுவும் சொல்லாது இப்பொழுது நிலாலினியை கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக் கொண்டு அவள் தான் அவளின் பெஸ்ட் பிரெண்ட் என்று கூறியதில் இந்திரா மேல் தான் அவர்களுக்கு கோபமும் திரும்பியது.

மாலினியின் காதல் கணவன் அர்ஜூன் சரியாக தாலி கட்டும் நேரத்திற்கு வந்து சேர்ந்தவன் அங்கு மாலினி மாறன் அருகில் நின்று இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியாகி அங்கேயே நின்று விட்டான்.

முகூர்த்தம் முடிந்து நிலாலினி மாறன் மாலினி மூவரும் கீழே வர, அங்கு நின்று இருந்த அர்ஜூனை பார்த்ததும், ” ஹே அர்ஜூ… என்னடா இப்போ தான் வர ! ” என்று மாலினி கேட்டுக் கொண்டே வர, 

அவள் யாரிடம் பேசுகிறாள் என்று பார்த்த மாறன் அங்கு அர்ஜூனை பார்த்ததும் புருவம் முடுச்சிட்டான்.

மாலினி, ” ப்ரோ… இது தான் என் ஹிஸ்பான்ட் அர்ஜூன் ” என்று அவனை அறிமுகம் செய்து வைக்க, அதை கேட்டு அதிர்ச்சியானான் மாறன். 

மாலினி, ” அர்ஜூ… இது என் பிரெண்ட் நிலா இது அவளோட லவ்வர் மிஸ்டர். மாறன் ” எங்க இந்த முறை அதிர்ச்சியாவது அர்ஜூனின் முறை ஆகிற்று.

” என்ன ! இரண்டு பேரு அப்படியே நின்னுட்டு இருக்கீங்க ! ஹான்ட் ஷேக் எதுவும் பண்ணிக்க மாட்டீங்களா ! ” என்று மாலினி வெகுளியாய் கேட்டு அர்ஜூன் கையை பிடித்து ஹேன்ட் ஷேக் செய்ய நீட்டப் போக அர்ஜூன் இன்னொரு கைக் கொண்டு அவள் கையை பற்றிக் கொண்டான்.

” மாலு… நம்ம வீட்டுக்கு போறக்கு டைம் ஆச்சு. வெளிய கார் நின்னுட்டு இருக்கு வா… வா… ” என்று நிலாலினிக்கு மட்டும் தலை அசைத்து விட்டு மாறனை நிமிர்ந்தும் பாராமல் அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டான் அர்ஜூன்.

மாலினி மட்டும் திரும்பி திரும்பி, ” பாய் நிலா அப்பப்போ கால் பண்ணு. ப்ரோ… நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம். பாய்… ” என்று கத்திக் கொண்டே சென்றாள்.

மாறன் நிலாலினிக்கு பின்னால் நின்று இருந்த அவன் பெர்சனல் அசிஸ்டென்ட் அவனிடம் ஃபோனை கொடுக்க, வாங்கி பார்த்தவன் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, ” நிலா… ஸ்டே ஹியர். ஐ வில் பீ பேக் இன் 5 மினிட்ஸ் ( Stay here. I will be back in 5 minutes ) ” என்று நகர்ந்து விட்டான்.

அவனுக்கு நிலா முன்பு ஃபோன் பேச இஷ்டமில்லை என்று எல்லாம் இல்லை கோவிலுக்குள் ஃபோன் பேச அனுமதி இல்லை அதான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவன் நிலாவுடன் கிளம்பினான். 

கோவிலுல் இருந்து வாசலை நோக்கி வந்த இருவரையும் அந்த கோவில் கோபுரங்களோடு சேர்த்து ஒளிந்திருந்த கேமராகளில் அழகாக எடுக்கப்பட்டது சில பல ஃபோட்டோகள்.

கோவில் வாசலில் நின்ற நிலா, ” தேங்க் யூ சார்… ” எங்க,

மாறன், ” மை ப்ளெஷர்… ( My pleasure… ) அண்ட் சாருன்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் ” என்றதும்,

நிலாலினி, ” ஓகே மாறன் ” என்றவள், அவன் ஒருபுறம் தலையை சாய்த்து பார்க்க, 

” நீங்க மாறன் தானா ! ” என்று தயக்கமாக கேட்டாள் நிலாலினி.

மாறன் அதற்கு இல்லை என்று தலை அசைத்தான்.

” மித்தவங்களுக்கு தான் நான் மாறன். உங்களுக்கு நான் நிழல் ” என்றான் அவன்…

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.