நிலாவின் நிழல் – 07

தமிழ் நிலா | 19 May 2026 | Share

நிலாலினி டான்ஸ் பண்ண கூப்பிட்டவனும் அதற்கு சம்மதிக்க இருவரும் கையில் இருந்த ஜூஸை சியர்ஸ் அடித்து குடித்தனர்.

அவள் அந்த ஜூஸை குடிக்க, அந்த பிளாக் கோட் போட்டிருந்தவனின் கண் ஜூஸை குடித்தவரே அவள் மேல் தான் படிந்து இருந்தது அதுவும் அழுத்தமாகவும் விஷமமாகவும்…

பின் இருவரும் டான்ஸ் ஃப்ளோருக்கு செல்ல, அந்த டிம் லைட் ஃபோகஸில் அவள் எதிரே நின்றவன் வெஸ்டர்ன் ஸ்டைல் போல் கை நீட்டி அவள் ஒத்துழைப்பு கேட்க,

என்றும் ஆண்களை நெருங்காதவள் ஹேன்ட் ஷேக் செய்வதே பெரிய விஷயம். அதுவும் அவளுக்கு உயர் பதவியில் உள்ளோர் அவளின் ஆசிரியர்கள் போன்றவர்களுடன் ஒரு மரியாதைக்காக மட்டும் தவிர்க்க முடியாத சூழலில் ஹேன்ட் ஷேக் செய்வாள்.

இன்று அந்த முப்பெரும் தேவியர்களால் டான்ஸ் பண்ண ஒருவனை அழைத்து விட்டாள் அவனும் ஒப்புக் கொண்டு வந்து விட்டான். இது டுயட் டான்ஸ் என்றதால் நிச்சயம் தொடுகை இருக்கும். இப்பொழுது கை கொடுக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும் !

இருந்தும் நிலாலினி ஒரு நொடி அவன் கை சேர தயங்க, அவள் மனம் இது போல் சிறு சிறு தொடுகை கூட நீ நிகாரிப்பதனால் தான் உனக்கு இன்று இந்த பேரு… இனியும் நீ இப்படியே இருக்க போறிய ? என்று கேள்வி எழுப்ப,

சரி. இது போன்ற எல்லை மீறா சிறு தொடுகைகள் தவறில்லை என்று நிலாவும் அவன் கை சேர்ந்தாள். 

” ஷால் வீ ? ( Shall we ? )” என்ற அவன் கேள்விக்கு சிறு தலை அசைவை மட்டும் பதிலளித்தாள் நிலாலினி.

அவன் மற்றொரு கையை அவள் இடையில் வைக்க அவள் அருகில் வராமல் அப்படியே இருக்கவும், அவனே அவளை நெருங்கினான்.

அவன் நெருங்கவும் நிலாலினி தன்னர்ச்சியாக அவனை தடுக்க அவன் ஷுல்டரில் கை வைக்க, ” ம்ம்… நோவ் இட்ஸ் பெர்பெக்ட் ( Now it’s perfect ) ” என்றான் அவன்.

நிலாலினி அவனை கேள்வியாய் பார்க்க, ” யூவர் ஹேன்ட் பிளாஸ்மெண்ட். ஐ பெட் யூ ஆர் அ குட் டான்சர் ( Your hand placement. I bet you are a good dancer ) ” என்று அவள் டான்ஸ் ஆடுவதற்கு ஏதுவாக அவன் மேல் கை வைத்திருப்பதை சுட்டிக் காட்டி சொன்னான்.

நிலாலினி, ” ஆக்ச்சுவல்லி… நோ. இட்ஸ் மை ஃபர்ஸ்ட் டைம் ( Actually… No. It’s my first time ) ” என்றதும்,

அவன், ” தென் லெட் மீ டேக் தீ லீட் ( Then let me take the lead ) ” என்று அவன் டான்ஸ் பண்ண ஆரம்பிக்க அவனின் கால் அசைவை நிலாலினி பின் பற்றினாள்.

ஆனால் அந்தோ பரிதாபம்… ஆடும் பொழுது நிலாலினி அவன் காலை மிதித்துக் விட்டாள். 

” சாரி… சாரி… “, நிலாலினி

அவன், ” இட்ஸ் ஓகே… ” என்று மீண்டும் தொடர கால் தடுக்கி விழப்போன நிலாலினியை அவள் இடையுடன் பிடித்திருந்த கையால் அவளை தன்னுடன் சேர்ந்து அணைத்துக் கொண்டான்.

தூரத்தில் இருந்து எதர்ச்சியாய் அதை திரும்பி பார்த்த சுந்தரம் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்துக் கொண்டார். அவரின் முதலாளி இது போல் பார்ட்டியில் எல்லாம் டான்ஸ் செய்ததே இல்லை, எந்த பெண்ணிடமும் நெருங்கியதும் இல்லை. 

அப்படி பட்டவன் இப்பொழுது இங்கு ஒரு பெண்ணுடன் டான்ஸ் புளோரில் ஸ்பாட் லைட்களுக்கு கீழ் நெருக்கமாக அவள் இடையில் கை வைத்து நின்றிருக்க, சுந்தரம் நெஞ்சடைத்து ஸ்பாட்டிலே பரலோகம் போகாமல் இருப்பதே பெரிய விஷயம்.

அவரின் இந்த பேர் அதிர்ச்சிக்கு காரணமானவனோ இங்கு நிலாலினியிடம், ” கீழே கால பார்த்தே ஆடுனீங்கனா இது மாறி ஸ்லிப் ஆகத்தான் செய்யும். என்ன மட்டும் பாருங்க. நான் இன்ஸ்டிரக்ஷன்ஸ் சொல்லுறத நீங்க ஃபாலோ பண்ணுங்க. ஓகே ! ” எங்க,

நிலாலினி மீண்டும் சரியாக நின்றுக் கொண்டு இன்று எப்படியாவது நன்றாக டான்ஸ் பண்ணி அந்த மூதேவியர்கள் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என்று அவன் சொன்னது போலவே அவன் முகத்தை மட்டுமே பார்த்து அவனின் உதடுகளில் அசைந்து வரும் ” லெஃப்ட், ரைட் பேக், லெஃப்ட் டர்ன், ரைட் ஃப்ரெண்ட் ” என்ற இன்ஸ்டிரக்ஷன்களை ஃபாலோ செய்ய,

ஓர் அறிவில் செயல் படும் 4 கால்களும் அங்கு காற்றில் மிதந்து வரும் மெல்லிசைக்கு ஏற்ப அழகாய் நகர்ந்ததில் அங்கு இருந்த அனைவரின் கண்ணும் அவர்கள் மேல் தான் இருந்தது. 

டான்ஸ் ஃப்ளோரை சுற்றி நின்று இருந்த கூட்டத்தில், ” ஹே அந்த பிளாக் அண்ட் ரெட் நல்லா டான்ஸ் பண்ணுறாங்கள ! “, ” ச்ச… அங்க பாரு… செம்ம பேர் ” என்று சிலர் சலசலுக்கு சத்தம் கேட்க,

திரும்பி பார்த்த திலிப்புக்கு காதில் புகை தள்ளியது, எல்லாம் தான் காதலித்த பொழுது கையை கூட பிடிக்க விடாமல் இருந்தவள் இன்று யாரோ ஒருவனோடு கை கோர்த்து ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து தான்.

டான்ஸ் ஃப்ளோரில் ஆடிக் கொண்டிருந்த திலிப், இந்திரா முதற் கொண்டு இந்திராவின் மூப்பெரும் தேவியர்கள் ஆன நிஷா, ஷாலினி, மகா என அனைவரின் கவனமும் நிலாலினியின் மேலும் அவளுடன் டான்ஸ் செய்துக் கொண்டிருந்தவனின் மேலும் தான் இருந்தது. 

ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர்கள் இருவரின் கவனமும் இது எதற்கும் சிதறாமல், அவன் கண்ணும் கவனமும் நிலா மேல் மட்டும் நிலைத்திருக்க, 

நிலாவின் கண்ணும் கவனமும் அவன் உதட்டின் அசையில் வரும் இன்ஸ்டிரக்ஷன்ஸ் மேல் மட்டும் தான் இருந்தது.

அவள் கவனம் கொஞ்சம் மேலேறி அவன் கண்களை பார்த்திருக்கலாம்…

பார்த்திருந்தால் நாளை என்பதே எனக்கு இல்லை என்பது போல் ஒரு நொடியை கூட வீணாக்காது அவளையே அழுத்தமாக விழுங்குவதை போல் பார்த்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையில் அவனிடம் இருந்து விலகி இருப்பாளோ என்னவோ !

அப்படி அவள் விலகாதது அவனுக்கு தோதாக போய் விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக டான்ஸ் செய்கையில் அவள் இடையின் சைடில் வைத்திருந்த அவன் கையை நகர்த்தி அவள் அடி முதுகில் வைத்திருந்தவன் அவளை இன்னும் தனக்கு நெருக்கமாக கொண்டு வந்து இருந்தான்.

அவர்களின் அந்த நெருக்கத்தை பார்த்த கண்களுக்கு எல்லாம் வருத்தம்.

நிலாலினியையும் அவனையும் க்ளோஸ் அப் ஃபுல் சைஸ் ஹாஃப் சைஸ் லோ ஆங்கிள் என சினிமா பாணியில் வித விதமாக பல ஃபோட்டோகள் எடுக்கப் பட்டு அது அனைத்தும் நிலாவின் நிழல் அவனுக்கு அனுப்பப் பட்டது.

டிஜே ப்ரேக் விட்டதில் அனைவரும் டான்ஸ் ஃப்ளோரில் இருந்து இறங்கி வர, அவன் அருகில் திலிப்பின் அப்பா சுந்தரத்துடன் சில பிசினஸ் மேன்கள் வர, நிலாலினி அமைதியாய் ஒதுங்கி சென்று விட்டாள்.

நிலா வந்ததும் அவளை சுற்றி விட்டனர் அவளுடன் காலேஜில் படித்த சிலர், ” நிலா… உன் பேர் (pair) அவரு சூப்பர் டி… இரண்டு பேரும் அவ்வளோ அழகா டான்ஸ் பண்ணுனீங்க… ” என்று ஒருத்தி சொல்ல, 

இன்னொருத்தி, ” ஹே நிலா… அவரு யாரு டி ! ” என்று கேட்க,

மற்றொருத்தி, ” ஏய்… அவங்க அப்படி க்ளோஸா டான்ஸ் பண்ணுறப்பவே உனக்கு தெரியலையா டி… அவரு நிலா ஓட லவ்வர் டி ” என்று அவளிடம் சொல்ல,

நிலாலினி அவளிடம் இல்லை என்று சொல்ல வருவதற்குள், அங்கு இருந்த இன்னொருத்தி, ” அமா டி… உனக்கு இது கூடவா தெரியல ! நிலா எப்பவும் ஆஞ்சநேயர் பத்தகை மாதிரி பசங்கள நிழல கூட தொட மாட்டா. இன்னைக்கு அவரு கூட இப்படி க்ளோஸா டான்ஸ் பண்ணுறப்பவே தெரியலையா ! அவரு நிலா ஓட லவ்வர்னு ” என்றாள்.

அவர்கள் பேசுவதை அவர்களுக்கு பின்னால் தன் முப்பெரும் தேவியர்களுடன் ஜுஸ்யும் கையுமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த இந்திரா அதிர்ச்சியுடன் நிலாலினியை பார்க்க, நிஷா, ஷாலினி, மகா மூவரும் நிலாலினியை பொறாமை உடன் பார்த்தனர்.

அதை கவனித்த நிலாலினிக்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. 

அதனால் நிலாலினி இப்போதைக்கு அவள் கிளாஸ்மேட்களிடம் அவன் அவளின் லவ்வர் என்று அவர்கள் சொன்னதுக்கு ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் வெறுமனே சும்மாக சிரித்து வைத்து விட்டு நகர்ந்து இந்திராவின் கேங்கிடம் வந்தாள்.

” எப்படி ! டான்ஸ் நல்லா இருந்துதா ? “, என்று கேட்க, இந்திராவின் முப்பெரும் தேவியர்களுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் பட்டாசுகளாக வெடித்தது. 

இந்திரா, ” ம்ம்… சூப்பர் நிலா. உன் டான்ஸ்யும் சூப்பர். உன் டான்ஸ் பார்ட்னரும் சூப்பர். அவரு உன்னோட லவ்வராமே ! உன் பெஸ்ட் பிரெண்ட் நான் நீ என்கிட்டையே சொல்லல பார்த்தியா ? ” எங்க

நிலாலினி எதோ சொல்ல வாய் எடுக்க, அவள் தோள் மீது கை வைத்து இந்திரா, ” பரவாள விடு நிலா நீ எதவாது ரீசனால தான் சொல்லாம இருந்து இருப்ப. அதான் இப்போ எங்களுக்கு தெரிஞ்சிருச்சே. 

நாளைக்கு இதே மாதிரி ஜோடியா என் கல்யாணத்துக்கும் காலைல நேரமாவே வந்துருங்க. நானும் திலிப்பும் உங்களுக்கு வெயிட்டிங் பண்ணுவோம். நீங்க வரதுக்கு லேட் ஆனாலும் நீங்க வர வரைக்கும் எங்களுக்கு கல்யாணம் ஆகாது. பாத்துக்க ” என்று எதோ பல வாரங்களாக இணை பிரியாமல் இருக்கும் உயிர் தோழிகள் போல தான் பேசி விட்டு சென்றாள்.

இந்திரா சென்றதும் முப்பெரும் தேவியர்களும் வால் பிடித்தது போல் அவள் பின்னாலேயே சென்று விட்டனர். தனியாக நின்று இருந்த நிலாலினிக்கு தான் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது. 

இந்திரா ஒன்றும் நல்ல விதமாக எல்லாம் அப்படி சொல்லி செல்லவில்லை. நிலாலினிக்கு லவ்வர் எல்லாம் கிடையாது இந்த நிஷா, ஷாலினி, மகா மூவரும் அவளிடம் நாம் சொல்லியதை வைத்து எதாவது வம்பிழுத்து இருப்பார்கள் அதனால் தான் இவள் இப்படி யாரையாவது டான்ஸ் பண்ண கெஞ்சி கேட்டு கூட்டிட்டு வந்திருப்பாள் என்று சரியாக கணித்திருந்தாள்.

நிலாலினி மற்றவர் அவனை அவளின் லவ்வர் என்று சொன்னதை மறுக்காமல் சிரித்துக் கொண்டே மலுப்பி விட்டதால், வேண்டும் என்றே தான் இந்திரா இப்படி நாளை அவனை கூட்டி வருமாறு நிலாலினியிடம் சொன்னாள். 

எப்படியும் நாளைக்கு நிலாலினி தனியாக தான் வருவாள் அப்பொழுது அங்கு வைத்து இவள் குட்டு அனைத்தும் உடைத்து இவளை எல்லோர் முன்னும் அசிங்க படுத்திடலாம் என்று திட்டத்துடன் தான் இருந்தாள் இந்திரா.

அவள் திட்டத்திற்கு ஏதுவாக தான் அடுத்த நாள் அதிகாலை நிலாலினி தனியாக வந்து சேர்ந்தாள் திலிப் இந்திரா முகூர்த்தத்திற்கு…

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.