ஒரு பெண் கட்டுப்பாடுகளோடு விலகி இருந்ததுக்காக இப்படியுமா அவளை பற்றி பேச வேண்டும் ? என்று நிலாலினியின் மனம் கேள்வி எழுப்பியது.
” 5 வருடங்களாக என் பின்னால் சுற்றியவன் என்னை கொஞ்சம் கூடவா புரிந்துக் கொள்ளவில்லை ? அப்படியே அவனுக்கு என்மேல சந்தேகமாக இருந்தால் என்னிடம் அல்லவா இவன் வந்து கேட்டு இருக்க வேண்டும் ! இப்படி என்னை பற்றி இல்லாததும் பொல்லாததுமாகவா இவன் வெளியில் சொல்ல வேண்டும் ? ” என்று ஒரு புறம் தன்னை பற்றி அவன் இப்படி சொல்லி விட்டானே இதற்காக என்னை விட்டு வேறு ஒருத்தியை தேர்ந்தெடுத்து இருக்கானே என்று அழுகையாக வந்தது நிலாலினிக்கு.
நிலாலினியை அழக வைக்க வேண்டும் என்றது தானே இந்திராவின் நோக்கமும் ! அது நடந்து விட்டது.
ஆனால் சரியாக 2 நிமிடங்கள் மட்டுமே அழுத நம் நிலாலினியின் மனம், ” அட ! அது உண்மையாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சக பெண்களை பார்த்தால் சினேகமாகவும் மரியாதையாகவும் மட்டும் பார்க்கும் என்னை பற்றி எப்படி இவன் இப்படி சொல்லாம் ? இவன் என்னைப் பற்றி சொன்னால் அது உண்மை ஆகிவிடுமா ? நெருக விட்டது இல்லை என்றதுக்காக என்னைய விட்டு சென்ற அவனுக்காக அவன் கிளப்பிவிட்ட புரளிக்காக எல்லாம் நான் அழலாமா ? என் ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட இவன் எல்லாம் தகுதியாக ஆள் இல்லை ” என்று யாருக்கும் தெரியாமல் ரெஸ்ட் ரூமில் வாய் மூடி அழுது கொண்டிருந்த நிலாலினி,
தன் கண்ணீரின் மதிப்பு உணர்ந்து தன் அழுகையை நிறுத்திவிட்டு தன் கண்ணை துடைத்து கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்து அவள் அணிந்திருந்த அளவான மேக் அப் ஆன கண் மையும் லிப்ஸ்டிக்கையும் சரி செய்து ஒரு பெரும் மூச்சை எடுத்து விட்டவள் உதட்டில் உதிர்த்த சிறு புன்னகையோடும் கண்ணில் புது மிடுக்கோடும் வெளியில் சென்றாள்.
அங்கு எனகேஜ்மெண்ட்டிற்கு ரெடியாகி வந்த இந்திராவை திலிப் டான்சர்களோடு டான்ஸ் ஆடி வரவேற்றுக் கொண்டு இருந்தான்.
” பரவாலையே ! என்கிட்ட காதலிக்கிறேனு சொன்ன காலத்துல எப்படி எல்லாம் கல்யாணம் நடக்கும்ன்னு சொன்னானோ அதே மாதிரியே பர்பெக்ட்டா பண்ணுறானே. அட… பாட்டு கூட அவன் என்கிட்ட சொன்ன அதே பாட்டா இருக்கே ! ” என்று அங்கு டான்ஸ் ஆட்டிக் கொண்டிருக்கும் திலிப்பை பார்க்க அழுகைக்கு பதிலாக நிலாலினிக்கு சிரிப்பு தான் வந்தது.
அந்த பிரமாண்டமான ஸ்டேஜில் ஃபோகஸ் லைட் மூலம் ஹீரோ ஹீரோயின் ஆக ஜொலித்தனர் திலிப்பும் இந்திராவும்.
இந்திராவின் கையை பிடித்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த திலிப் அனைவரின் முன்பும் இந்திராவுக்கு மண்டியிட்டு புரோபோஸ் செய்து அவள் விரலில் நிலாலினிக்கு என்று அவன் சொல்லி வாங்கிய அதே மோதிரத்தை போட்டு விட்டான்.
அதை எல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நிலாலினியின் காதுகளில் அவன் தன்னை காதலிப்பதாக பின்னால் சுற்றிய நாட்களில் சொல்லிய வார்த்தைகள் எல்லாம் திரும்பவும் ஒரு முறை கேட்டது. அவன் சொல்லியது போலவே தான் அந்த கல்யாணதுக்கு ஒவ்வொரு விஷயமும் நடந்தது. ஆனால் என்ன ! நிலாலினி இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது இந்திரா. அது மட்டுமே தான் மாற்றம்.
திலிப்பை மனதில் வறுத்து எடுக்க வேண்டிய இடத்தில் இருந்த நிலாலினியோ, ” தேங்க்ஸ் திலிப்… நல்ல வேலை நீ சொன்ன மாதிரி அந்த இடத்தில நான் இல்ல. இருந்திருந்தா இப்படி புரிதல் இல்லாமல் மனசுல இருக்கிறத பேசி தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நீயே ஒன்றை நினைத்து அதுதான் சரி என்று விட்டு செல்லும் உன்னோடது சேர்த்து என் வாழ்க்கையும் எனக்கு நகரம் ஆகி இருக்கும். அந்த நரகம் எனக்கு கிடைக்காம என்னைய காப்பாத்தி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் திலிப்… ” என்று மனதில் அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தவள், மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு கை தட்டி வாழ்த்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளை அங்கிருந்து விடக் கூடாது என்றே அவளை வழி மறைத்தனர் இந்திராவின் முப்பெரும் தேவியர்கள்.
மகா, ” என்ன நிலா இன்னும் டான்ஸ் பார்ட்டி எல்லாம் இருக்கு. நீ அதுகுள்ள கிளம்பிட்ட ! ”
நிஷா, ” அப்போ… திலிப் சொன்னது எல்லாம் உண்மை தான் போல… இவ லிஸ்பியனே தான்… ” என்று நிலாலினியை மேலும் கீழும் ஆக ஒரு மாதிரி பார்த்தாள்
” ப்ச்… அதான் நான் சொல்லிட்டேன்ல. நான் அப்படி இல்லை ” என்று நிலாலினி அங்கிருந்து நகர பார்க்க,
ஷாலினி, ” அப்பறம் எங்க இவ்வளோ அவசரமா ஓடுற ! ஏன் ! நீ இங்க இருந்த வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் டான்ஸ் பார்ட்டில பசங்க ஆட ஆடி ஆகனும் இல்லான்னா உன் குட்டு எல்லாம் ஒடன்சிரும்னு பயமா ? ”
நிஷா, ” இருக்காதா பின்ன ! இவ தான் லிஸ்பியன் ஆச்சே… ” என்று அவர்கள் வேண்டும் என்றே அதையே திரும்ப திரும்ப சொல்லி வம்பிழுக்க,
பொறுமை இழந்த நிலாலினி, ” ஹ… ரெடியா இருந்துக்குங்க கேள்ஸ்… இந்த நிலாலினியோட டான்ஸ நீங்களும் பார்க்கத்தான போறீங்க. பாத்து… என் பார்ட்னரோட என்னோட கெமிஸ்ட்ரிய பார்த்து கருகிற போறிங்க… ” என்று சவால் விட்ட நிலாலினி,
” இன்றோடு இந்த பேச்சுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ” என்ற ஒரு முடிவோடு டான்ஸ் புளூருக்கு சென்றாள் நிலாலினி.
சரியாக அந்த நேரம் அனைவரையும் டான்ஸ் புளூருக்கு வெஸ்டர்ன் ஸ்டைலில் மெலோடி மூசிக்க்கு டூயட் டான்ஸ் ஆட அழைப்பு விடுக்க, இந்திரா திலிப் தலைமை வதிக்க இந்திராவின் முப்பெரும் தேவியர்களும் அவரவர்களின் லவ்வர்களுடன் டான்ஸ் ஆட ரெடி ஆகி விட்டனர். இதில் நிலாலினி பார்த்து நக்கலாக சிரிப்பு வேற.
நிலாலினி அவர்களை பார்த்து விட்டு பதிலுக்கு கண்ணை சூழட்டியவள், அந்த இடத்தில் இருப்பதிலே அழகான ஹைட்டான அவள் ஸ்டைலுக்கு மேட்ச் ஆகும் ஹன்ட்சம் மேனை தேடினாள் டான்ஸ் பண்ண இன்விட் செய்ய,
அங்கு அவளின் எதிர்பார்ப்புக்கு எல்லாம் ஏற்றது போல் ஒருத்தன் அந்த குஷன் சோஃபாவில் தனியாக ஜெத்தாக அமர்ந்து ஜுஸ் குடித்துக் கொண்டிருக்க, நிலாலினி அவனை மேலோட்டமாக ஸ்கேன் செய்தவள் அவன் தான் நமக்கு பர்பெக்ட் மேட்ச் என்று நினைத்து வேறு எதை பற்றியும் யோசிக்காமல் கையில் இவளும் ஒரு ஜூஸை எடுத்துக் கொண்டு நேரடியாக அவனிடம் சென்று, ” உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா ? ” என்று கேட்டாள்.
உடனே அவனை சுற்றி வெறும் பார்வை மட்டுமே வீசிக் கொண்டிருந்தவர்களுள் சிலர், ” என்னடா இது ! யாருடா அந்த பொண்ணு ! அவருகிட்ட நிக்க கூட நமக்கு எல்லாம் தகுதி இல்லாமல் நம்ம விலகி ஓரமா நிக்குறோம் இந்த பொண்ணு நேரா அவரு கிட்டையே போய் பேசுற ! ” என்று அங்கு இருந்த பஸினஸ் மேன்கள் சிலர் தன் வயதை விட குறைவாக இருக்கும் அவனுக்கு மரியாதை கொடுத்து பேசியவர்கள் நிலாலினி அவனை நெருங்கவும் வாய் பிளந்து பார்த்தனர்.
நிலாலினியின் குரலில் அவளை நிமிர்ந்து பார்த்தவன், ” ம்… ” என்று தலை ஆட்ட, அவனுக்கு அருகில் மிக அருகில் எல்லாம் இல்லை ஒரு அடி இடைவெளி விட்டு அமர, அவனின் கார்ட்ஸ் பதறி போய் அவளை நெருங்க விடாமல் விரட்ட வர, சோபா மீது அவளுக்கு பின்னால் கை வைத்திருவன் விரல் காட்டி அவர்களை தடுத்து விலகி செல்ல சைகை செய்தான்.
அவன் வேறு யாருமில்லை திலிப்பின் அப்பா சுந்தரத்தின் முதலாளி அந்த பிளாக் கோட் சூட் போட்டுக் கொண்டு டிப் டாப்பாக வந்தானே அவனே தான்.
அவனின் விரல் அசைவிலே அவன் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டு அவனை சுற்றி இருந்த அவனின் ஆட்கள் நால்வரும் நாலாபுறமும் விலகி நின்று மற்றவர்கள் அவர்களை நெருங்காமல் தடுக்க நின்றனர்.
நிலாலினி, ” உங்களுக்கு டான்ஸ் பண்ண தெரியுமா ? ” என்று கேட்க,
அவன் ஏன் என்பது போல் புருவம் சுருக்கி விரித்து பார்க்க, ” உங்களுக்கு ஓகே ஆ இருந்தா நீங்க என்கூட டான்ஸ் பண்ண முடியுமா ? ” என்று நிலாலினி மீண்டும் கேள்வியாய் கேட்கவும் அவன் சின்னதாய் சிரிக்க,
” இல்லை… நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்க கிட்ட நெருங்குற எண்ணத்துல எதுலையும் வரல. என்கூட படிச்ச பொண்ணுங்களுக்கு கேலி பேச நான் ஒரு டாபிக்கா இருக்க விரும்பல அதுக்கு நான் இப்போ யார் கூடையாவது டான்ஸ் பண்ணிதான் ஆகனும். இங்க இருக்குறதுல நீங்க தான் எனக்கு பர்பெக்ட் மேட்ச்சா இருக்கும்ன்னு தோணுச்சு அதான உங்ககிட்ட காட்டலாம்னு வந்த. உங்களுக்கு ஓகே ஆ இருந்தா… வீ கேன் டான்ஸ் ” என்று நிலாலினி விஷயத்தை சொல்லியும் அவன் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டே இருக்க,
நிலாலினி, ” இல்லாட்டி… ஐ கேன் சூஸ் சம்ஒன் எல்ஸ் ( I can choose someone else ) ” என்று அவள் சொல்ல,
வாய் திறந்த அவன், ” டூ யூ தின்க் யூ கேன் சூஸ் சம்ஒன் எல்ஸ் பெட்டர் தன் மீ அஸ் யூவர் மிஸ்டர். பர்பெக்ட் ! ( Do you think you can choose someone else better than me as your Mr.Perfect ! ) ” என்று அவன் என்னை விட உனக்கு பர்பெக்ட்டான மேட்ச் நீ கண்டுபிடிக்க முடிந்திடுமா ? என்ற கேள்வியை, உன்னால என்னைவிட உனக்கு பர்பெக்ட்டான ஆளை கண்டு பிடிக்கவே முடியாது என்னும் தோரணையில் பேச,
அவனின் இந்த கான்பிடன்ஸ் நிலாவை வெகுவாக ஈர்த்தது. அவனின் கண்ணை தெரிந்த அந்த கான்பிடன்ஸை பார்த்தவாரே, ” ஐ டோண்ட் தின்க் சோ… ( I don’t know so… ) ” என்று உன்னைவிட வேறு யாரும் எனக்கு பர்பெக்ட்டாக இங்கு இருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை என்று நிலா சொல்ல,
அவனோ, ” தென்… லெட்ஸ் டான்ஸ் டூகெதர் ( Then… Let’s dance together ) ” என்று அவனிடம் இருந்த ஜுஸ் கிளாஸை காட்ட, நிலாலினியும் அதற்கு சமதமாக அவனுடன் தன் கிளாஸை மெல்ல தட்டி சியர்ஸ் அடித்தவள்,
அதை முழுவதும் மெல்ல குடிக்க, அவனும் தன் கிளாஸில் இருந்த ஜுஸை குடித்தவாரே, அவளை ஓரக் கண்ணில் பார்த்தவனின் பார்வை அழுத்தமாகவும் விஷமாகவும் இருந்தது.
பாவம் ! நிலாலினி தான் அதை கவனிக்க தவறிவிட்டாள்.
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…
– தமிழ் நிலா
No comments yet.