நிலாவின் நிழல் – 02

தமிழ் நிலா | 18 May 2026 | Share

நிலாலினி மேல் விழுந்த மழை துளிகள் திலிப்பின் மேல் அவள் வளர்ந்த முதல் காதலை கழுவி விட்டுக் கொண்டிருந்தது.

தன் டிரவெல்லிங் பேக்கை இழுத்துக் கொண்டு தன் மனதில் இருந்த வலிகள் மறக்கும் மட்டும் மழையிலே நடந்தவள், ஒரு பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்தாள்.

அதற்கு பின் தான் மழையில் சொட்ட சொட்ட நனைந்து இருக்கும் தன் நிலையையும் மணியையும் பார்த்தவள், இதற்கு மேல் இப்படியே ஊருக்கு சென்று வீட்டின் முன்பு நின்றால் என்ன ஏது என்று பல கேள்விகள் வரும் தேவை இல்லாமல் தன் முதல் காதல் என்று இந்த திலிப்பை பற்றி எல்லாம் சொல்ல வேண்டி வந்துவிடும் என்று வீட்டுக்கு போகும் எண்ணத்தை கைவிட்டாள்.

அப்பொழுது அந்த வழியில் மூவர் குடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருக்கும் இவளை பார்த்து கூச்சல் இட்டுக் கொண்டே போக, அப்பொழுது தான் நிலாலினி தான் இருந்த இடத்தை சுற்றி முற்றி கவனித்தாள். 

அங்கு ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. திருந்திருந்த ஓர் இரு கடைகளையும் சாற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு மேல் இங்கு தனியாக இருந்தால் சரி வராது என்று பக்கத்தில் எதாவது ஹோட்டல் இருக்கிறதா என்று தேடினாள்.

அவள் நேரம் அங்கு ஒரே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் மட்டுமே இருந்தது. சரி என்று நிலாலினியும் உள்ளே செல்ல, அங்கு லாபியில் பேசி சிரித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி நிலாலினியை பார்த்ததும், ” ஹே… நிலா வந்துருக்கா டி “, என்று அவளிடம் ஓடி விட்டாள்.

அந்த கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண் இன்னொருத்தியிடம், ” ஏ… எப்பப்பா உன் ஆளோட எக்ஸ் லவ்வர கூட உன் கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருக்க போல ” என்று கேட்க,

அங்கு வாட்டசாட்டமாக பார்க்கவே பெரிய இடத்து பெண் போல் நின்றிருந்தவள் திரும்பி நிலாலினியை பார்த்து விட்டு, ” பின்ன ! அவள கூப்பிடாம எப்பிடி ! என்ன இருந்தாலும் அவ என்னோட ஃப்ரெண்ட் ஆச்சே… ” என்று ரொம்ப நல்லவள் போல் பேசிய இவள் தான் இந்திரா… இன்னும் இரண்டு நாளில் திலிப்பின் கை சேர இருக்கும் அவனின் ஃபியான்சே.

நிலாலினி, திலிப், இந்திரா எல்லோரும் ஒன்றாக ஒரே காலேஜில் படித்தவர்கள் தான். 

இந்திரா ஒரு ஸ்டேடஸ் பைத்தியம். கூட பழகும் நட்புக்கு கூட ஸ்டேடஸ் பார்ப்பாள். அப்படி பட்டவள் நிலாலினி அனைத்திலும் திறமையாக இருப்பதை பார்த்து அவளை தோற்கடிக்க முடியாதவள் அவளை நட்பு என்று சொல்லி தனக்கடியில் வைத்துக் கொள்ள வேண்டி நிலாவை நெருக முயற்சித்தாள். அவள் எவ்வளவு முயற்சித்தும் நிலாலினி அவளை அருகில் கூட சேர்க்கவில்லை. இருந்தும் வெளியில் அவள் தான் நிலாலினிக்கு இருக்கும் ஒரே நட்பு என்று புரலிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் இப்பொழுது வரை நிலாலினி அவளை நட்பு என்று சொன்னதே இல்லை. அது ஏன் ! நினைத்தது கூட இல்லை. 

நிலாலினியின் தேவை எல்லாம் படிப்பும் திறமையும் மட்டும் தான். அதை இந்திரா எவ்வளவு முயற்சித்து அவளிடம் இருந்து பறிக்க முடியவில்லை. அதனால் தான் இப்படி அவளின் முதல் காதலை பறித்து விட்டாள்.

” ஹாய் நிலா… ” என்று அவளிடம் சென்ற இந்திரா, ” எங்க நீ வராமையே போயிருவியோன்னு நான் ஃபீல் பண்ணுன தெரியுமா ! ஆனா நீ பாரு ! எனக்காக மழையின்னு கூட பாக்காமா இப்படி நனைஞ்சுட்டு வந்துருக்க ” என்று எதோ நிலாலினி அவளுக்கு திருமணம் என்று தெரிந்ததும் நட்புக்காக இப்படி வந்தது போல் பேசியவளை முறைத்தாள் நிலாலினி.

அதை எல்லாம் கண்டும் காணாத இந்திரா, ” இன்னும் டூ ஹார்ஸ்ல பேச்சுலர்ஸ் பார்ட்டி இருக்கு. நீ போய் சீக்கிரம் ரெடி ஆகி வா. இங்க பேக்ல ஒரு கார்டன் இருக்கு அங்க தான் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கு ” என்று நிலாலினியின் தோள் பட்டியில் எதோ குப்பையை தட்டுவது போல் அவள் காதோரம் ” உன் ஸ்டேடஸ் அளவுக்கு யாரும் லோகிளஸ அங்க இருக்கமாட்டாங்க தான். அதுக்காக வராம இருந்துராத. அப்பறம் எல்லாரும் உன்ன தான் தப்பா நினைப்பாங்க “, என்று சொல்லிவிட்டு விலகினாள்.

நிலாலினி உள்ளம் வெந்நீர் போல கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அவளை திட்டினால் மற்றவர்கள் கண்ணுக்கு அது, ” அவள் பின்னால் சுற்றி திரிந்தவன் இப்பொழுது இந்திராவை கட்டிக்க போறான் என்று வயித்தெரிச்சலிலும் பொறாமையிலும் தான் நிலா இப்படி எல்லாம் செய்கிறாள் ” என்று கூறிவிடுவார்கள் என்று தான் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

இந்திரா மற்றவர்கள் முன்னாடி சீன் போட கிடைத்த எந்த ஒரு சான்ஸையும் விட்டு விடாதவள், ” ஓகே கேல்ஸ்… நீங்க எல்லாம் வெயிட் பண்ணுங்க. நான் போய் நிலாக்கு ரூம் அரஞ்ச் பண்ணிட்டு வர “, என்று அவள் ரிசப்ஷன் நோக்கி செல்ல,

இதுவரை ஃப்ரெண்ட் என்று நிலாலினியை வைத்து சீன் போட்டுக் கொண்டிருந்த இந்திரா இன்று நிலாலினி இடமே சீன் போட, நிலாலினிக்கு தலைக்கு மேல் கோபம் பத்திக் கொண்டு வந்தது.

இவளை இதற்கு மேல் விட கூடாது என்று முடிவு எடுத்த நிலாலினி, அவள் பின்னாலேயே ரிசப்ஷனுக்கு சென்றாள். 

பாவம் இந்திரா ! இனி அவள் என்ன சீன் போட்டாலும் நிலாலினி அதை எல்லாம் நோஸ் கட் செய்ய போகிறாள் என்று தெரியாமல், ரிசப்ஷனலிஸ்ட்யிடம் தன் கிரெடிட் கார்டை எடுத்து ஸ்டைலாக நீட்டி ” செகண்ட் புளோர்ல ஒரு ரூம் வேணும். நிலாலினி பேருல புக் பண்ணனுங்க ” என்று சொல்லிவிட்டு

நிலாலினியிடம் திரும்பி, ” நிலா உன் ஐடி புரூப் கொடு ” எங்கவும்,

நிலாலினி அவள் கார்டை நீட்டி இருந்த கையை பிடித்து, ” நானே எனக்கு ப்பே பண்ணிக்குற ” என்று தடுத்து விட்டாள்.

இந்திரா கல்யாணத்துக்கு வந்தவர்கள் முன்பு பந்தா காட்டவே பல செலவுகளை பண்ணி கிரெடிட் கார்டு ஏற்கனவே லிமிட்டை தொட்டிருக்க, நிலாலினி இப்படி சொல்லவும் செலவு மிச்சம் என்று பார்மாலட்டிக்கு கூட இன்னொரு முறை கேட்காமல் பட்டென்று கார்டை பர்ஸக்குள் வைத்துக் கொண்டாள்.

அந்த ரிசப்ஷனலிஸ்ட் கம்யூட்டரில் பார்த்து விட்டு, ” சாரி மேம்… செகண்ட் புளோர்ல எல்லா ரூம்ஸ்யும் ஃபுல் ஆகிருச்சு. நீங்க வேணும்ன்னா ஃபர்ஸ்ட் புளோர் ஆர்… எக்ஸ்சிகியூட்டி சூட் டிரை பண்ணுறீங்களா ? ” என்று கேட்க,

” ஃபர்ஸ்ட் புளோரே கொடுங்க. அதுதான் மேடமுக்கு ஆப்போர்ட்டபிளா இருக்கும் ” என்று இந்திரா சொல்லவும், 

அதுவரை ஃபர்ஸ்ட் புளோரிலே தங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து இருந்த நிலாலினி, இந்திரா இப்படி சொல்லவும், ” எக்ஸ்சிகியூட்டி சூட் போட்டுங்க” என்றாள்.

அப்பொழுது நிலாவை நிழல் என அவளுக்கு தெரியாமலே பின்தொடர்ந்திருந்தவன், நிலாவை எலக்காரமாக பேசியவளுக்கு அவள் கொடுத்த பதிலடியை கேட்டதும், உதட்டின் ஓர் சிறு வளைவுண்டு சிரித்தவன், ” தட்ஸ் மை கேள்… ” என்று அவளை பெருமையாக நினைத்தபடியே அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

ரிசப்ஷனலிஸ்ட், ” மேம்… எக்ஸ்சிகியூட்டி சூட் பர் டேக்கு 19,999. உங்களுக்கு எவ்வளோ டேஸ் போடட்டும் ! ” என்றதும்,

நிலாலினி யோசிப்பது போல் இந்திராவை பார்த்து, ” உன் மேரேஜ் எப்போன்னு சொன்ன ? ” என்று தெரியாதவள் போல் கேட்க,

இந்திரா, ” டே ஆப்டர் டுமாரோ ” என்றதும்,

நிலாலினி, ” அப்போ அன்னைக்கு நைட் வரைக்குமே போட்டுருங்க ” என்று கார்டை நீட்டினாள்.

” 19,999 ரூபா… இவ ஒரு நாளைக்கு செல்லவ பண்ண போறலா ! உகும்… இவ மூணு மாசமா போன இன்டர்ஷிப்ல இவளுக்கு மொத்தமாவே அவ்வளோ வந்து இருக்காது. முதல இவளால ஃபர்ஸ்ட் புளோர் ரூம் புக் பண்ண முடியுதான்னு பாப்போம் ” என்று எலக்காரமாய் நினைத்திருந்த இந்திராவுக்கு நிலாலினி சூட் ரூமை புக் செய்யவும் அதுவும் இரண்டு நாளுக்கு புக் செய்யவும் மூஞ்சியே இல்லை.

ரிசப்ஷனலிஸ்ட் ” டூ டேஸ்க்கு 39,998 ருபீஸ் வருது மேம். கார்ட் ஸ்வீப் பண்ணிட்டடும்மா ? “, என்று கேட்கவும்,

” இரண்டு நாளைக்கு ரவுண்டா 40,000 ரூபா… இவளே ஒரு மிடில் கிளாஸ் இவகிட்ட எப்படி இவ்வளோ ! வாய்ப்பே இல்லை. எப்படியும் காசு இல்லைன்னு கார்ட திருப்பி தர போறாங்க… “, என்று இந்திரா நிலாலினியை எள்ளாக பார்த்து நின்றாள்.

அதற்காகவே நிலாலினி, ” சூர்… ஸ்வீப் இட் ” என்று கூற, நிலாவை எள்ளாக நினைத்த இந்திராவுக்கு தான் நோஸ் கட் ஆகிவிட்டது.

” ச்ச… இந்த நிலாவ… ” என்று பல்லை வெறுகியவள் அவளை எதாவது செய்ய வேண்டும் மற்றவர்கள் அவளை கேலியாக பார்க்க வேண்டும் என்று எண்ணி அதற்கு ஒரு திட்டத்தையும் போட்டு விட்டாள்.

” சரி நிலா… பார்ட்டிக்கு கிளம்ப டைம் ஆகுது நான் தான் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன் அரேஞ்ச் பண்ணிருக்க சோ நான் இப்போ போனாதா கரெக்ட்டா இருக்கும். நீயும் சீக்கிரம் கிளம்பி வந்துரு. வராம மட்டும் இருந்துராத ” என்று காலில் சுடு தண்ணீரை ஊற்றியது போல அவசர அவசரமாய் சொல்லி விட்டு நகர்ந்தவள்,

மற்ற பெண்களுடன் கிளம்பும் முன்பு, ” ஹே… நிலா… உனக்கும் சேத்தி டிரஸ நானே அரஞ்ச் பண்ணிடுறனே ! ” என்று அவர்களுடன் தள்ளி நின்றுக் கொண்டிருந்தவள் சத்தமாக கத்தி கேட்க,

நிலாலினி அவள் போய் விட்டாள் என்று பெரும் மூச்சு விட்டு முடிக்கவும் இந்திரா கத்தியதில், ” ஸ்சோ… இவளுக்கு இதுலையும் கூட சீன் போடனுமா ! ” என்று சலித்தவள், 

” அது எல்லாம் ஒன்னும் வேண்டாம். என் டிரஸ் நான் பாத்துக்குற ” என்று கொஞ்சம் கடுப்பாக கூறிவிட்டாள்.

” சரி ஓகே நிலா. பாய்… ” என்று நிலாலினியிடம் சொல்லிவிட்டு இந்திரா திரும்பி செல்லவும், 

இந்திராவுடன் இருந்த பெண் ஒருத்தி, ” என்னடி… எல்லாருக்கும் நீ தான பார்ட்டிக்கு டிரஸ் அரஞ்ச் பண்ணுன ! இப்போ இவ மட்டும் அவளே பாத்துக்குறேன்னு சொல்லுற ! “, என்று அவளிடம் கேட்டதும்,

இந்திரா, ” ப்ச்… நான் சொல்லிட்டேன் டி… பார்ட்டிக்கு எல்லாருக்கும் பிளாக் டீ ஷர்ட்டும் ஜீன்னும் அரஞ்ச் பண்ணிருக்க, பொண்ணு மாப்பிள்ளைன்னு நாங்க இரண்டு பேரும் தனியா தெரியனும் எனக்கும் திலிப்புக்கு மட்டும் ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன்னும் செலக்ட் பண்ணிருக்கென்னு நான் சொன்ன, அவ தான் என் டிரஸ் நானே பாத்துக்குறேன்னு சொல்லிட்டா. இருந்தும் எதுக்கும் கிளம்புறக்கு முன்னாடி ஒரு டைம் கேக்கலாம்ன்னு தான் கேட்ட, ஆனா நீயே பாத்தில அவ என்ன சொன்னான்னு ! சரி விடு டி. எப்படியும் அவ கிட்ட பிளாக் டீ ஷர்ட்டும் ஜீன்னும் இல்லாமையா போயிரும் ! ” எங்கவும்,

” ஓ… அப்படியா… ” என்பது போல் அவள் இந்திரா சொன்னதை மும்மரமாக கேட்டு மனதில் நோட் செய்துக் கொண்டாள்.

அவள் ஒரு மைக்செட் வாய் எதை அவளிடம் சொன்னாலும் ஊருக்கே தெரிந்து விடும் என்று நன்கறிந்திருந்த இந்திரா வேண்டும் என்றே தான் நிலாலினியிடம் மாற்றி சொல்லி விட்டு இங்கு இவளிடம் இப்படி கதை கட்டி விட்டாள். 

” இன்னும் கொஞ்ச நேரத்துல பாருடி… பார்ட்டிக்கு நீ பொண்ணு மாப்பிள்ள போடுற மாதிரி ஒயிட் ஷர்ட் போட்டுட்டு வருவீல அப்ப இருக்கு உனக்கு… ” என்று மனதிற்குள் இந்திரா இதை வைத்தே நிலாலினியை பார்ட்டியில் அசிங்க படுத்திவிட வேண்டும் என்று சென்றாள்.

அவள் திட்டம் பலிக்கும் படி தான் நிலாலினியும் இந்திரா சொன்னதை நம்பி ஒயிட் ஷர்ட்டும் ப்ளூ ஜீன்னும் அணித்து பார்ட்டிக்கு சென்றாள்.

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.