நிலாவின் நிழல் – 01

தமிழ் நிலா | 17 Apr 2026 | Share

ஐந்து வருடங்களாக தன்னை காதலிப்பதாக தன் பின்னால் சுற்றியவன்… தன்னை திருமணம் செய்து கொள்ள போவதாக தினத்துக்கு நூறு முறை சொல்லியவன்… இன்று பார்ப்போர் கண் படும் அளவிற்கு பிரமாண்ட மேடையில் புது மாப்பிளையாக…

ஆனால் வேறு ஒரு பெண்ணோடு !

________________________________

மிடில் கிளாஸ் ஃபேமிலில் இருந்து வந்திருந்தாலும் நல்ல படிப்பாளியும் தைரியசானியுமான பெண் தான் நிலாலினி. 

மெரிட் சீடில் வசதியானவர் வர்கம் படிக்கும் பிசினஸ் காலேஜில் பிபிஏ பட்ட படிப்பில் சேர்ந்தாள். பிரைவேட் டூட்டர்கள் வைத்து படிக்கும் மற்றவர்களையும் விட திறமை கொண்டவளாக உலா வந்தாள்.

பல போட்டிகளில் பரிசுகளையும் வாங்கி உள்ளாள். அதனாலேயே அங்கிருந்த பல பேரின் கண்ணும் நிலாலினி மேல் தான். 

எத்தனை பேர் அவளை அந்த காலேஜில் இருந்து விரட்டி அடிக்க பார்த்தாலும், அனைவரையும் தன் படிப்பலும் திறமையாலும் தோற்கடித்தாள். யார் எல்லாம் அவளை தோற்கடிக்க பார்த்தார்களோ அவர்கள் முன்னே வென்று தலை நிமிர்ந்து நின்றவள்.

நிலாலினியின் கேரக்டர் பிடித்து போய் அவள் பின்னே முதலாம் ஆண்டில் இருந்து சுற்றி திரிந்தான் திலிப். நிலாலினி தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும், ” சரி அப்போ நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்களாம், ஆனா நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன் ” என்று கூறிய திலிப்பை முதலில் அவள் கண்டுக்கவில்லை.

காலங்கள் உருண்டோட பிபிஏ முடிந்தது எம்பிஏ பட்ட படிப்பும் முடிவுக்கு வந்தது. ஆனால் வருடங்கள் கடந்தும் அவன் மாற்றம் இல்லாமல் இருக்க நிலாலினியின் பார்வை அவன் மேல் திரும்பியது. திலிப்பின் காதலுக்கு சம்மதம் சொன்னால் நிலாலினி. 

ஆனால் கையை பிடிக்கவோ அவளை தொட்டு பேசவோ தடை போட்டு இருந்தாள். ஏன் என்று திலிப் கேட்டதுக்கு, ” நீ ஒரு நல்ல ஸ்டேஜ்க்கு வா திலிப். நீ இன்னும் சின்ன வசங்க மாறிதான் சுத்திட்டு இருக்க. நீ ஒரு நல்ல நிலமைக்கு வர வரைக்கும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆ இருந்தப்ப எப்படி இருந்தமோ அப்படியே இருக்கலாம் ” என்று சொல்லுபவள்.

மூன்று மாதம் இன்டர்ன்ஷிப்க்கு வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்த நிலாலினியை வழி அனுப்ப வந்த திலிப், ” நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிபேன். சீக்கிரம் வந்துரு என்னைய ரொம்ப வெயிட் பண்ண வைக்காத ” என்று சொல்லி காதல் போங்க பேசியவன். அவளை நெருங்க, விலகி விட்டாள் நிலாலினி. 

” பிளீஸ் நிலா. ஒரே ஒரு கிஸ் மட்டும். உன்ன மூண்ணு மாசம் பாக்காம இருக்கப்போற. கொஞ்சம் பாவம் பாரு. பிளீஸ்… ” என்று அவன் நெருங்க, அவனை தள்ளிவிட்டாள் நிலாலினி. அதுவும் அவன் விழுகும் அளவுக்கு எல்லாம் இல்லை அவளிடம் இருந்து விலகும் அளவிற்கு மட்டும் தான். 

” நான் போய்ட்டு வந்துடுற அப்பறம்… ” என்று சொல்லியவள், சிறு கள்ள சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அவளின் டிரெயின் கிளம்ப, ” ஐ வில் வெயிட்டிங் ஃபார் யூ… மை அஞ்சல்… ” என்று சொல்லி ரோமியோ போல் பிளேன் கிஸ்யை காற்றில் கொடுத்து அவளை வழி அனுப்பி வைத்தான் திலிப்.

அதே திலிப் தான் இன்று மணமேடையில் அனைவரின் முன் மண்டியிட்டு அமர்ந்து இன்னொருவளுக்கு புரோபோஸ் செய்து, அவளின் விரலில் நிலாவுக்காக வாங்கியது என்று அவன் சொல்லிய அதே வைர மோதிரம் அணிவித்தான்.

இதை பார்க்கத் தானா நிலா மூன்று மாதம் இன்டர்ன்ஷிப் முடிந்ததும் அவளின் வேலையின் நேர்த்தியையும் திறமையையும் பார்த்து அவளுக்கு அந்த கம்பனி கொடுத்த பர்மன்டன் வேலையையும் மாதம் 50,000 சம்பளத்தையும் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தாள் !

அவள் ஆசையாக ஓடேடி வந்தது எல்லாம் அந்த இன்டர்ன்ஷிப் சர்டிஃபிகேட் வைத்து இங்கேயே ஒரு நல்ல வேலையில் சேர்த்து காலை முதல் மாலை வரை வேலை என்று ஓடினாலும் மாலை முதல் அடுத்த காலை வரை திலிப் ஆசைப்பட்டது போலவே தன் காதல் மொத்தத்தையும் அவன் மேல் கொட்டி தீர்க்க வேண்டும், காதலோடு நில்லாமல் அவனுடன் சேர்ந்து கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக தான்.

” ஹலோ… திலிப். நான் இப்போ எங்க இருக்கேனு சொல்லுப் பார்க்கலாம் ? ” என்று நிலா ஊருக்கு திரும்பியதும் திலிப்புக்கு கால் செய்து கேட்ட,

” நிலா… நீயா ! நானே உனக்கு கால் பண்ணனும்னு நெனச்சுட்டு இருந்த நல்ல வேலை நீயே பண்ணிட்ட. நீ எப்போ இங்க வரப்போற ? ” என்றான் திலிப் தனது வீட்டில் இருந்து கேட்டை நோக்கி வெளியில் நடந்துக் கொண்டே,

” நீ ஒன்னுல இருந்து மூன்னு எண்ணுரதுக்குள்ள நான் அங்க இருப்பேன் ” என்றாள் நிலா.

” வாட் ! சில்லி… ” என்று சிரித்தவன், ” பட் ஐ லைக் இட் ” என்று தன் வீட்டு வாசலில் நடக்கும் அலங்கார வேலைகளை சரி பார்த்துக் கொண்டே நிலாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தவன் அவள் சொன்னது போலவே எண்ண ஆரம்பித்தான், ” ஒன்னு… இரண்டு… மூணு… ” என்று அவன் எண்ணி முடிக்க,

அவனது வீடு வாசலில் ஸ்பீடாக வந்து நின்றது ஓர் ஆட்டோ. அதில் இருந்து சூட்கேசுயுடம் இறங்கினாள் நிலாலினி. 

நிலாவை பார்த்ததும் திலிப் அப்படியே நிற்க, நிலா ஆட்டோவை அனுப்பி வைத்துவிட்டு வந்து திலிப்பின் முன் நின்றாள், கண்ணில் அவனுடன் சேர்ந்து வாழும் பல கனவுகளுடன்.

பாவம் பெண்ணவள் ! கனவுகளுடன் அவனை மட்டும் பார்த்த அவளது கண்கள் அவனை சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் தோரண அழங்காரங்களை பார்க்க தவறிவிட்டாது.

” ஹே… நிலா ! வாட் அ சப்ரஸ் ! ” என்று திலிப் கேட்க, அவனது கண்களுக்குள் மூகியவள் அவனது கையை பிடித்து ” ஃபார் யூ ” என்று கூறி புன்னகைத்தாள் நிலா.

” தேங்க்ஸ் நிலா. நீ வராமயே போய்டுவியோன்னு நான் பயந்துட்ட தெரியுமா ! நல்லவேளை நீயே வந்துட்ட. இன்னும் இரண்டு நாளுல கல்யாணம். நீதான்… ” என்று எதோ திலிப் சொல்ல வர, அதற்குள் அங்கு வந்த மினிடோர் ஹாரன் அடித்தது.

” பேனர் தான ! இங்கேயே இறக்கிருங்க ” என்ற திலிப் அந்திருந்த சில வேளை ஆட்களை ஏவி விட்டு வந்து மீண்டும் நிலா முன் நின்றான். 

” ஹாங்… எங்க விட்ட ! ” என்று திலிப் கேட்க,

” இன்னும் இரண்டு நாளுல எதோ கல்யாணம்ன்னு சொல்லிட்டு இருந்த திலிப் ” என்று நிலா அவனுக்கு எடுத்து கொடுத்தாள்.

” ஆமா. இன்னைக்கு நைட்டு பேச்சிலர் பார்டி, நாளைக்கு இவேனிங் எங்கேஜ்மெண்ட் , அடுத்த நாள் ஏர்லி மார்னிங் மேரேஜ். நீ எங்கையும் போக கூடாது இங்கதான் தங்கனும் ” என்று சொல்லி முடிக்க,

யாருக்கு என்று கேட்பதற்காக நிலா, ” யா… ” என்று வாய் திறக்க, அவள் எதிரே நின்றிருந்த திலிப்புக்கு பின்னால் சற்று தள்ளி வேலை செய்து கொண்டிருந்தவர்கள், அந்த வண்டியில் இருந்து பேனரை இறக்கும் பொழுது அதை ஒருவர் தன் கால் மேல் போட்டுவிட்டார்.

” ஆ… ” என்ற அவரின் கூச்சலில் அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது. திலிப், நிலாவின் கவனமும்.

திலிப் ஓடி சென்று அவருக்கு அடி பலமா என்று பார்த்து அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு திரும்பி நிலாவை நோக்கி நடந்தான்.

வந்ததில் இருந்து ‘ திலிப்பே தன் காதல் திலிப்பே தன் காலம் ‘ என்று அவன் கண்களில் மூழ்கி கிடந்த நிலாலினியின் கண்கள், இப்பொழுது தான் அந்த மாயையில் இருந்து விடுப்பட்டது. 

திலிப் வந்து நிலாவின் எதிரே நின்றும் நிலாவின் கண்கள் அவனை காணாது அவனுக்கு பின்னே இருந்த பேனரின் மேல் தான் நிலைக் குத்தி நிந்திருந்தது.

அந்த பேனரில் ஜோடியாக இருந்த இருவரின் முகத்தையும் பார்த்த நிலா அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். 

அதில் இருந்தது திலிப்பின் முகம் தான். ஆனால் அதில் இருந்த பெண்ணின் முகம் நிலாலினி உடையது அல்ல. 

அங்கேயே அவள் மனக்கோட்டை கட்டியிருந்த அவனுடனான கனவுகளை நிலாலினியின் மனது உடைத்து எரிந்தது. 

” போயும்… போயும்… இவனுக்காகவா நான் ஓடோடி வந்த ? நான் திரும்பி வந்துடுறன்னு சொன்ன மூணு மாசம் கூட இவனால பொறுக்க முடியலையா என்ன ! கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு அவசரமா ! அப்படியே இருந்தாலும் அவன் காதலிக்குறதா சொன்ன என்கிட்டயில்ல இவன் வந்துருக்கனும் ! வேற ஒருத்தி கூட எப்படி ! ச்ச… காதலுன்னு சொன்னது எல்லாம் வெறும் வேசமா ? இவனோட பொழுது போக்குக்கு நான் தான் கிடைச்சனா ? ” என்று நிலாலினியின் மனம் கொதித்து எழுந்தது. 

ஆனால் வெளியிலோ சிலை எனவே நின்று கொண்டிருந்தாள். ” நிலா… ” என்று திலிப் அவளது தோள்பட்டையை பிடித்து உலுக்க சுயம் பெற்ற நிலாலினி, தீ பட்டது போல் அவன் கைகளை தட்டிவிட்டாள்.

” ஓ… சாரி… உனக்கு யாரும் உன்ன தொட்ட பிடிக்காதுல ! நான் அத மறந்தே போய்ட்ட ” என்று சொல்லிக் கொண்டிருந்த திலிப்பை யாரோ அழைக்க, நிலாலினியிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கூட அவன் அங்கு சென்றுவிட்டான்.

நிலாலினிக்கு தான் யாரும் கண்டுக் கொள்ளாத பயனற்ற காட்டின் பழைய மரம் என மனமும் அவளு உடலும் மரத்து போனது போல் இருந்தது.

” உனக்கு பிடிக்காதுன்னு மறந்துட்டேன்னு சொன்னான்னா ! இல்ல… என்னையவே முழுசா மறந்துட்டேன்னு மறைமுகமா சொன்னான்னா ! ” என்று நிலாலினியின் மனம் கேள்வி எழுப்பியது.

உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் நிலாலினியின் மனமும் வெளியே மரத்து நின்ற அவளது உடலும் தன் நிலை பெரும் அளவிற்கு எங்கிருந்தோ திடீரென்று வந்த மழை அங்கு கொட்டித் தீர்த்தது.

அனைவரும் மழை பொழிய ஆரம்பித்ததும் ஓடி ஒதுங்க, நிலாலினி மட்டும் கொட்டும் மழையில் அசையாது நின்றாள்.

அவள் மேல் விழுந்த மழை துளிகள் அவளை தழுவி விட்டு வழிந்தோடியது. அவன் மேல் அவள் வளர்த்துக் கொண்ட காதலும் அதில் மெல்ல மெல்ல வடிந்தது.

மங்கிய மாலை பொழுதில் மழையில் வெறுமனே தனியாக நடந்த நிலா அறிவாளா ! அவளையே பின் தொடரும் நிழல் அவனை…

நிலாவின் நிழல் தொடரும்…

______________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…


– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.