டெவில் -14

Sweety Novel's | 19 Mar 2026 | Share

ருத்விகா முகம் இறுக “என் பேரண்ட்ஸ் உயிரோட இருந்தா என்ன இல்லன்னா என்ன… நான் என்னோட லைப்பையே ஸ்பாயில் பண்ணிக்கிற அளவுக்கு ஒன்னும் எனக்கு அவங்க மேல பாசம் கிடையாது…. நீ அவங்கள வச்சு மிரட்டுனா எல்லாம் நான் கேட்க மாட்டேன்….”என்றாள். 

“ஐ நோ… நீயும் கிட்டதட்ட என்னை மாதிரி தான் உனக்கு எந்த எமோஷனல் பாண்டிங்கும் கிடையாதுன்னு எனக்கு தெரியும்… உன் பேரண்ட்ஸ் உயிர் பத்தி வேணா உனக்கு கவலை இல்லாம இருக்கலாம் பட் நாயக் குரூப் ஆப் கம்பனி உனக்கு முக்கியம் தான…”என்றான்.. 

அதில் அதிர்ந்தவள் விழிவிரித்து அவனை பார்க்க வேதாந்த் திமிராய் இதழ் சுழித்துவன் அவளை விட்டு விலகி “நாயக் குரூப் ஆப் கம்பனியை டெஸ்ட்ராய் பண்ண எனக்கு ஒரு செகண்ட் போதும்….”என்றான் சொடக்கிட்டு.. 

ருத்விகா அவனையே பார்க்க “என்ன இப்போ கூட என்னோட பிளானுக்கு கோப்பரேட் பண்ண மாட்டேன்னு சொல்வியா… உனக்கு நாயக் குரூப் ஆப் கம்பனி முக்கியம் இல்லையா….”என்றவன் அவள் இப்பொழுது “நீ சொல்றதை நான் செய்யறேன்….”என்று சொல்லவும் “குட்….சிட்டுவேஷனை அண்டர்ஸ்டேன்ட் பண்ணிட்ட போல….”என்றான் 

“எதுக்காக நீ அஞ்சலி அக்காவை செலக்ட் பண்ணுன… இப்போ நான்….கண்டிப்பா ஏதோ பெரிய ரீசன் இருக்கு… அது என்ன?….” 

“ஸ்மார்ட் தான் நீ கண்டுபிடிச்சிட்டியே…எஸ் நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க போறதுக்கு பின்னாடி ஒரு ரீசன் இருக்கு….பட் அதை கேட்டதும் சொல்றதுக்கு நான் முட்டாள் கிடையாது… மார்னிங் ஹோலி செலபிரேஷன்ல மீடியா முன்னாடி நம்ம மேரேஜ் பத்தி அனவுன்ஸ் பண்ணனும் ரெடியா இரு….”என்றவன் அவ்வளவு தான் என்பது போல் அங்கிருந்து சென்றான்.. 

விக்ராந்த் தன்னுடைய வேலை முடித்து வீட்டிற்கு வந்தவன் உள்ளே வரும் பொழுது ஹாலில் வித்யுத் லட்சுமி பாட்டியிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கவும் அவர்கள் அருகில் சென்றான்.. 

“பாட்டிக்கு என்ன ஐஸ் வச்சுட்டு இருக்க?… உனக்கு எதாவது வேணுமா என்ன?….”என்று கேட்ட விக்ராந்த் அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.. 

அவன் பக்கம் திரும்பி பார்த்த வித்யுத் “எனக்கு எதாவது வேணும்ன்னா நான் எதுக்கு பாட்டிக்கு ஐஸ் வைக்க போறேன் வேதா ப்ரோகிட்டயே கேட்க மாட்டனா….”என்றான். 

“வெல் அப்போ வேதாந்த் ப்ரோ நீ கேட்ட எதையோ செய்யல அதான் பாட்டிகிட்ட பேச வந்திருக்க…” 

‘எப்படி கரெக்ட்டா சொல்றான்…. “வித்யுத் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொள்ள 

“என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேன்னு யோசிக்கறியா?….” 

“ப்ரோ என் மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுனது எல்லாம் போதும்…. பாட்டிகிட்ட அந்த டெவில் கேர்ள்கூட வேதாந்த் ப்ரோ மேரேஜ் வேண்டாம்ன்னு சொல்லு….” 

விக்ராந்த்தும் “எஸ் பாட்டி அந்த கேர்ள் வேண்டாம்….”என்று சொல்ல 

“பாட்டி அவங்க பொண்ணே கிடையாது…. எனக்கு அவங்க சிஸ்டர் இன் லாவா வேண்டாம்….”வித்யுத் சொல்ல அவன் பக்கத்திலேயே இருந்ததால் லட்சுமி அவன் தலையிலேயே ஒரு தட்டு தட்டினார்.. 

“பாட்டி…”அவன் சிணுங்கவும் 

‘வித்யுத் வேதாந்த் மேரேஜ் நாயக் டாட்டர்கூட தான் நடக்க போகுதுன்னு எல்லாருக்கும் அனவுன்ஸ் பண்ணியாச்சு வேதாந்த் மேரேஜ் நடக்கலன்னா ரொம்ப தப்பாகிடும்… வேதாந்த் இன்சல்ட் பண்ணுவாங்க… புரிஞ்சுக்கோங்க…”என்றார்.. 

“நீங்க நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க பாட்டி அந்த கேர்ள் வேண்டாம்….”என்று வித்யுத் விக்ராந்த் இருவரும் பேசிகொண்டிருக்கும் பொழுது “நீங்க ரெண்டு பேரும் என்னை பத்தி தான பேசிட்டு இருக்கீங்க?…”என்ற குரல் கேட்கவும் இருவரும் திரும்பி பார்த்தனர்.. 

ருத்விகா தான் மாடிப்படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்… அவளை பார்த்து ஷாக்காண விக்ராந்த் ‘இவ எப்போ வந்தா?…”என்று கேட்க 

“டுடே தான்…. என்னை இன்சல்ட் பண்ணிட்டாங்க தெரியுமா….”என்ற வித்யுத் “நீ என்ன சொல்ற?….”என அவன் கேட்கவும் “நான் பல்பு வாங்குன ஸ்டோரியை அப்பறம் சொல்றேன்….”என்றான்… அதற்குள் ருத்விகா அருகில் வந்திருந்தாள்.. 

விக்ராந்த் எழுந்தவன் ‘ஹாய் ஐயம் விக்ராந்த்… வேதாந்த் பிரதர்….”என்று சொல்லி கைநீட்ட ருத்விகா ஹாண்ட்ஷேக் செய்யாமல் சோபாவில் சென்று அமர்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டாள்.. 

“ம்ம் தெரியும்….”என சொல்ல 

விக்ராந்த் முகம் அவள் இன்சல்ட் செய்ததில் இறுக வித்யுத் ‘இதுக்காக தான் நான் வேண்டாம்ன்னு சொல்றேன்…”என்பது போல் தன் அண்ணனை பார்த்தவள் திரும்பி ருத்விகாவை முறைத்து பார்த்தான்… 

அவன் முறைத்து பார்ப்பதை பார்த்து “என்ன?…”புருவம் உயர்த்தியவள் விக்ராந்த் இப்பொழுது அமர்ந்து கால் மேல் கால் போட்டுகொண்டவன் லட்சுமியிடம் ‘பாட்டி பேசிக் மேனர்ஸ் கூட தெரியல சர்கார் பேமலிக்கு எப்படி இப்படிப்பட்ட கேர்ள டாட்டர் இன் லாவா சூஸ் பண்ணுணிங்க?….”என்றான். 

இப்பொழுது அவளை அவன் இன்சல்ட் செய்யவும் ருத்விகா முகம் இறுகியது… 

“யாருகிட்ட சர்கார் ப்ரோஸ்கிட்டயேவா….”என்று வித்யுத் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவன் லட்சுமி பாட்டியிடம் “பாட்டி… நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு நம்மகிட்ட கடன் வாங்குறவங்கள எல்லாம் நமக்கு கீழ தான் இருக்கனும்….”என்றான். 

விக்ராந்தும் “கரெக்ட்டா சொன்ன வித்து….சர்கார் பேமலிக்குன்னு ஒரு கிளாஸ் இருக்கு… ஆட்டிடுயூட் இருக்கலாம் பட் ஓவரா இருக்க கூடாது…”என்றான் 

இருவரும் அவளை பற்றி மாற்றி மாற்றி பேச லட்சுமி பாட்டி பெருமூச்சு இழுத்துவிட்டவர் “உங்களுக்கு இந்த மேரேஜ் பிடிக்கலன்னா உங்க அண்ணன்கிட்ட பேசுங்க…. என்கிட்ட சொல்றதால எதுவும் மாற போறது இல்ல….”என்றவர் எழுந்து சென்றார் 

அவர் சென்றதும் ருத்விகா இருவரையும் பார்த்து “உங்களுக்கு என்னை பிடிக்கலயா?…”என்று கேட்க 

“சுத்தமா பிடிக்கல….’இருவரும் டைமிங்கில் பதில் சொல்லவும் ருத்விகா இதழ் சுழித்தவள் “சேம் டூ யூ… எனக்கும் உங்களை பிடிக்கல….”என்றாள். 

விக்ராந்த் வித்யுத் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ருத்விகா எழுந்தவள் “உங்க ப்ரோன்னா ரொம்ப பிடிக்குமா… எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல அவனை மேரேஜ் பண்ணுனன்னா டார்ச்சர் பண்ணுவேன் அவனை மட்டும் இல்ல உங்க பேமலில இருக்க எல்லாரையும் டார்ச்சர் பண்ணுவேன்….”என்றவள் வேகமாய் வித்யுத் அருகில் சென்று அவன் முகத்திற்கு நேராக விரல் நீட்டியவள் “முக்கியம்மா உன்னை ரொம்பவே டார்ச்சர் பண்ணுவேன்…கேர்புல்….”என்று எச்சரித்தவள் அங்கிருந்து சென்றாள்.. 

இருவரும் அவள் கண்னை விட்டு மறையும் வரை பார்க்க வித்யுத் ‘ப்ரோ இந்த கேர்ள் வேண்டாம் ப்ரோ எப்படியாவது இந்த கேர்ள வேதாந்த் ப்ரோகிட்ட இருந்து பிரிக்கணும்… “என்று சொல்ல விக்ராந்த் யோசனையுடன் தலையசைத்தான்… 

காலை சூரியன் மெல்ல மேகத்தின் போர்வைக்குள் இருந்து வெளியில் வந்த அழகான காலை நேரம்.. 

வேதாந்த் வீட்டிற்குள் இருந்து ஜாக்கிங் டிரஸில் வெளியில் வர அவனை பார்த்ததும் கண்ணா அவன் அருகில் சென்றான்.. 

“ஸார்….” 

‘ஹோலி பார்ட்டிக்கு எல்லாம் ரெடியா…. “என்று கேட்க 

“எஸ் ஸார்… எல்லாம் அரேஞ் பண்ணிருக்கேன்… பாட்டியும் ஜாணவி மேம் சில சேஞ்சஸ் சொன்னாங்க அதையும் பண்ணிருக்கேன்….” 

“அவங்க எதுக்கு இதெல்லாம் சொல்றாங்க….”முனுமுனுத்துக்கொண்டவன் “ஓகே குளோஸ் ரிலேட்டிவ் அண்ட் பிரண்ட்ஸ் எல்லாம் வர்றாங்க எந்த ப்ராப்லம்மும் வரக்கூடாது செக்யூரிட்டிஸ் டைட் பண்ணு….”என்றவன் அவனிடம் பேசிகொண்டிருக்கும் பொழுதே வித்யுத் தூக்க கலக்கத்துடன் அவனை நோக்கி வந்தவன் “குட் மார்னிங் ப்ரோ….”என்றான்.. 

வேதாந்த் அவன் பக்கம் திரும்பி பார்த்து “குட் மார்னிங்….”என்றவன் கண்ணாவிடம் “ஒன்ஸ் மறுபடியும் செக் பண்ணிடு…செலபிரேஷன்ல கெஸ்ட் லிஸ்ட்ல இருக்கவங்கள தவிர யாரு உள்ள வந்தாலும் ஐடி செக் பண்ணாம உள்ள விடக்கூடாது…”என்று சொன்னவன் கண்ணாவை போக சொல்லிவிட்டு தன் தம்பியிடம் “என்ன எர்லியாவே எழுந்துட்ட?…”என்று கேட்டான்.. 

“உங்ககிட்ட பேசறதுக்காக தான்… ப்ரோ அந்த டெவில் கேர்ள்கூட உங்களுக்கு மேரேஜ் வேண்டாம்… நான் உங்களுக்கு பர்பெக்ட்டா மேட்ச் ஆகுற மாதிரி ஒரு பொண்ணை பார்த்து இருக்கேன்….போட்டோ பாருங்களேன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்….”என்றவன் சிசிடிவி கேமராவில் இருந்து எடுத்த தன்வியின் போட்டோவை தன்னுடைய போனில் காட்டினான்.. 

“பாருங்க அழகா இருக்காங்கல்ல… ப்ரோ எனக்கு பிடிச்சிருக்கு நீங்க இந்த கேர்ளயே மேரேஜ் பண்ணிக்கோங்க….”என்று சொல்ல வேதாந்த் அவனிடமிருந்து போனை வாங்கியவன் அதிலிருந்த தன்வியின் போட்டோவை பார்க்காமல் போனை ஆப் செய்து “வித்யுத் எனக்கும் ருத்விகாவுக்கும் தான் மேரேஜ் நடக்க போகுது… அக்சப்ட் இட்….”என்றான். 

“எனக்கு பிடிக்கல ப்ரோ…ரொம்ப ஓவரா ஆட்டிடுயுட் காட்டறாங்க….” 

“நானும் அப்டித்தான இருக்கேன்…” 

வித்யுத் தலைக்குணிந்தவன் ஏதோ சொல்ல வந்து பின் அதை சொல்லாமல் சென்று வேதாந்த்தை அணைத்துக்கொண்டவன் “ப்ரோ நீங்க மத்தவங்களுக்கு வேணா டெவில் மான்ஸ்ட்டரா இருக்கலாம் எனக்கு எப்பவும் ஸ்வீட் பிரதர் தான்…. நான் உங்க பேபி பிரதர் தான நான் கேட்டா என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேணு சொல்விங்க…. என்னை விட உங்களுக்கு அந்த ருத்விகா நாயக் இம்போர்ட்டண்ட்டா ஏன் என் பேச்சை கேட்க மாட்டேன்குறீங்க…. எனக்கு ஜலஸா இருக்கு…”என்றான்.. 

தன் தம்பியை தன்னிடமிருந்து பிரித்தவன் “என்ன சொன்ன ஜலஸா இருக்கா… வொய்?…”என்று கேட்க 

“என்னை விட உங்களுக்கு அந்த ருத்விகாவை தான அதிகமா பிடிச்சிருக்கு…. அதனால தான் நான் சொல்றதை கேட்க மாட்டேங்குறீங்க….”என்று முகம் வாடி அவன் சொல்ல வேதாந்த்க்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.. 

வித்யுத் தோளில் கைவைத்தவன் “இங்க பாரு உன்னோட அவளை நீ கம்பெர் பண்ணாத… எனக்கும் அவளை பிடிக்காது….”என்றான். 

“தென் வொய் ப்ரோ… எதுக்காக இந்த மேரேஜ்…. நம்மகிட்ட இல்லாத பணமா?…’ 

வேதாந்த் முகம் இறுக “இது பணத்துக்காகவோ என்னோட நேம் ஸ்பாயில் ஆகிடும்மோன்னு இல்ல….நான் அடையனும்ன்னு நினைக்கிற ஒரு விஷயத்துக்காக….”என்று சொல்ல வித்யுத் புரியாமல் “வாட்…. எதுக்காக?…’என்று கேட்கவும் ‘பேங்க் ஆப் பேரடைஸ்….”என்றான்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.