Sumithra Suryaprasanth | 02 Jun 2026 | ID: VLN56581 | Division: எரோட்டிக் | Share
ஊருக்கு பள்ளி விடுமுறைக்காக செல்லும் போது கதா நாயகன் ஆதிரூபன், கதாநாயகி கீர்த்தி வாணி யும் தங்களின் உண்மையான பெயரைக் கூட அறியாமல் நண்பர்களாகி நினைவு சின்னங்களுடன் பிரிகிறார்கள். அவன் பெரிய தொழில் அதிபராகவும், இவள் ஹாக்கி வீராங்கனையாகவும் வரும் வேளையில் கதாநாயகன் தன் தாய் தந்தையை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறான். இருவருக்கும் தான் திருமணம் என்று தெரியாமலேயே நடக்கின்றது. இருவரும் விவாகரத்து பற்றிப் பேச காத்திருந்த நேரம் கதாநாயகிக்கு அவன் யார் என்று தெரிந்து தன் காதலை சொல்லும் போது அவனோ அவளிடம் விவாகரத்து பத்திரத்தை நீட்டுகிறான்.. கதாநாயகி அவன் கொடுத்த சிறு வயது நினைவு சின்னங்களையும் தொலைத்து விட்டாள். அதன் பிறகு எப்படி அவனிடம் எப்படி தன்னை நிரூபித்து இணைகிறார்கள் அவன் எப்படி தன்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து கதாநாயகி ஹாக்கி விளையாட்டிலும் வெற்றி பெற வைக்கிறான் என்பது தான் கதை