காரிகை

Sumithra Suryaprasanth | 02 Jun 2026 | Share

காலை பொழுது அழகாக விடிய நேற்று இரவு பெய்த பலத்த மழையால், மிஸ்டர். சூரியன் வரலாமா வேணாவான்னு, என்று அவர் கன்பியூஸ் ஆகிக் கொண்டிருந்த வேளையில்…. 

தன் 60 வயதிலும், கடமையை செவ்வனே செய்ய, கோவில் அருகில் குளத்தில் குளித்து, உடமைகளை துவைத்து விட்டு, அங்குக் கிடந்த திருநீற்றை எடுத்துப் பட்டையாகப் பூசிக் கொண்டு வராத சூரியனை அண்ணாந்துப் பார்த்து, கை எடுத்து கும்பிட்டார்… அந்தக் கோவிலின், நிர்வாகி சிவகிரி, 

அவரைப் பார்த்து சூர்யபகவான், மெல்ல பார்த்துக் கண்ணடித்தது… 

சூரியனை கும்பிட்டு விட்டு,  கோவிலின் உள்ளே வரும் போது சிவப் புராணத்தை, பாடிக் கொண்டே வந்து கருவறையைத் திறக்கவும்… ஒரு இளம் பெண் தலைக் குளித்து விட்டு, துண்டுடன் வந்து தாத்தா!! என்று அழைக்கவும் சரியாக இருந்தது…. 

வா!! மா மல்லி… வாசலில் கோலம் போட்டுடீயா!! 

என்ன நடந்தாலும், உங்க வேலை ஆகிடணும் அப்படித் தானே!! 

அவர் புன்னகைகிக்க, 

சிரிக்காதீங்க தாத்தா!! 

எனக்கு என் வேலை ஆகணும் அவ்ளோ தான்…. உனக்கு என்னை வம்பு இழுக்கனும், சரி, சரி

வா வா…. உள்ள பாரு எப்படி??  இருக்கு… என்ன சொன்னாலும் அவர் காரியத்திலேயே கண்ணாயிருக்க, 

ஆனால், அவர் சொன்னது போல் அங்கே, தென்னை மரத்தின் ஓலைகளும், அதன் மரத்தின் பிஞ்சுகளும், சிதறிக் கிடக்க….

ஆமா தாத்தா நைட்டு சரியான காத்துல அத பாருங்க ஓலை எல்லாம் விழுந்து கிடக்கு…. 

என்ன செய்ய…. விழத் தான் செய்யும், இந்த தென்னை மரத்தை வெட்டலாம்ன்னா!! உன் பிரண்ட் விட மாட்டேங்குறா, இது என்னைக்கு என் தலையில் விழுதோ அன்னைக்கு தான் விடுவா போல…. 

ஐயோ!! தாத்தா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க…. 

பின்ன என்னமா!! என்று அவர் சலித்துக் கொள்ள…..

சரி விடுங்க தாத்தா!! அவள் அதை எப்படி?? பாக்குறான்னு நமக்குத் தான் தெரியுமே?? அதுவும் இல்லமா அது கோவிலுக்கு வெளிய தானே இருக்கு… 

நான் என்ன மொத்தமாவா வெட்ட சொல்றேன்…. முன்னாடி இருக்க ரெண்டு மரத்தை தானமா வெட்ட சொல்றேன்…. எனக்கும் தென்னை பிள்ளை மாதிரி தான்… என்ன செய்ய, அதுல இந்த பசங்க ஏறி கோவில் உள்ள வரானுங்க…. 

புரிது தாத்தா!! 

சரிம்மா, வா போய் முதலில் எங்க அப்பன் பாட்டுக் கேட்டா தான் எனக்கு இந்த நாளே நல்லா இருக்கும்…. 

சரிங்க.. தாத்தா!! நீங்க போயி உங்க அப்பன தூக்கத்திலிருந்து எழுப்புங்க… நான் வேலைய பாக்கறேன்… ஆமா!! உங்க அருமை பேத்தி எங்க, 

அதற்கு அவரோ?? சிரித்துக் கொண்டு தலையை சொரிந்து… அவ இவ்வளவு நேரத்துக்கு எங்க இருக்காளோ? யாருக்கு தெரியும்… ஆமா உன்கிட்ட எதுவும் சொன்னாளா என்றுக் கூறி விட்டு, ஆந்தை முழி முழிக்க, 

அதானே!! என்கிட்டயே திருப்பி விட்டுடீங்களே!! அது தெரிஞ்சா நான் ஏன்?? தாத்தா!! இப்படி உங்க கிட்ட மல்லுக் கட்டப் போறேன். 

அவ என்கிட்ட நைட் காலையில எழுந்ததும், இங்க வரேன்னு தான் டா!! சொன்னா!! ஒருவேளை குழந்தை இன்னும் எந்திரிக்கலை போல…. 

ஆமா தாத்தா அஞ்சு வயசு குழந்தை இடுப்புல தூக்கி வச்சு கொஞ்சுங்க…. 

நைட் ரெண்டு பேரும், கோயில் பூட்டிட்டு போகும்போது மழை வர…. அங்கங்க கெடக்குற இடத்திலெல்லாம் ஒதுங்கி போகும் போதெல்லாம் என்கிட்ட பொலம்பிட்டே இருந்தா!! காலையில வாடி ரெண்டு பேரும் சுத்தம் பண்ணிடலாம்ன்னு அவ பேச்சைக் கேட்டு நானும் வெள்ளைனே எழுந்து வந்தா!! 

நீங்களும் இன்னைக்கு ஆடி அசைஞ்சி வரீங்க… அவளை ஆளே காணோம்… 

அவரோ!! அது உங்க ரெண்டு பேரு பாடு… நான் வரேன்… என் அப்பனை பாக்கணும்…. என்னை போக விடாம, கதை அடிச்சுக்கிட்டு இருக்க…. என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவர் சென்று விட்டார்…..

பின்னே, அவள் செய்வதற்கு எல்லாம், யாரு இவகிட்ட பேச்சு வாங்குவது என்று மனிதர் ஓடியே விட்டார்..

எதே!! நான் கதை அடிச்சுட்டு இருக்கனேனா!! பெருசுக்கு வரவர குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு…. என்று இன்று இவள் புலம்புவதை யாரும் கேட்காதவாறு!! 

உள்ளே சென்று சிவனை தரிசித்தவர் சிவபுராணப்பாடலை போட்டுவிட்டார்… அந்த ஒலிப் பெருக்கியும்

நமச்சிவாய வாழ்க 

நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடிபோற்றி…… 

என்று அந்த திருச்சி மாநகரின் லால்குடியில் உள்ள பழம் பெரும் ஆலயத்தில் பாட ஆரம்பிக்க, அதன் சத்தம் கேட்டு ஒவ்வொருவரும் ஒலிப்பெருக்கியின் சத்தம் கேட்டு அந்த தெரு மக்கள், கோபுரத்தை பார்த்து கும்பிட்டு விட்டு தன் பணியான கழனி வேலைக்குச் சென்றனர்… 

மல்லியும் தனது ஊதா நிற பாவாடையை இடுப்பில் சொருகிக் கொண்டு, தலையை அள்ளி முடிந்துக் கொண்டு, கோயிலை சுற்றி, நேற்று பெய்த மழையில் படிந்திருந்த குப்பைகளை, சுத்தம் செய்துக் கொண்டே, ஐயோ!! இன்னும் எவ்ளோ தூரம் பெருக்கனும், இடுப்பு உடைஞ்சிடும் போலயே…. 

ஸ்ஸ்ப்பா… என்று நிமிர்ந்து தன் இடுப்பை பிடித்துக் கொண்டே, 

காலையிலே நம்மள இங்க சிக்க வச்சிட்டு, அந்த சிலுவண்டு எங்க போனான்னு தெரியலையே, என்று அவள் தோழியை தனது மந்திரங்களால் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்… அந்திமல்லி, 

சிவனை தரிசித்து விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தவரோ??  அவர் எப்போது வாங்கும் பழனிச்சாமி டீக்கடையில், தன் பிளாஸ்க்கில், பேத்திக்காக… சூடான இஞ்சி டீ மசால் வடையும் வாங்கிக் கொண்டு, செல்லும் போதே அந்த காலையில் பொழுதின் ஏகாந்தம் அவரை இழுக்க…. அதை ரசித்துக்கொண்டே வரும் வழியில் எல்லாம் வருபவர்களை பார்த்து சிரித்து விட்டு, மூன்றுபுறமும், தோப்புகளால் சூழ்ந்து நடுவில் அமைந்திருக்கும்,  தன் வீட்டின், வெளியே அமைத்திருக்கும் காம்பௌண்ட் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழையும் போதே!! ராஜா, டேய் ராஜா என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்… அவர் தன் பேத்தியை அப்படித் தான் அழைப்பார்.. ராஜா என்று… 

அது கீழே மூன்று அறையும், மேலே ஒரு அறையும் கொண்ட சிறிய மாடி வீடுதான்… 

அவர் குரலைக் கேட்டு நாகவல்லி வெளியே வந்து, அவ இங்க இல்ல மாமா!! என்று கூறும்போது அவரை பின்தொடர்ந்து அவரின் மகள் யாழினி வந்து, 

ஐ, தாத்தா!! என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க…  என்று கையில் உள்ளதை வாங்கிப் பிரித்துப் பார்த்துவிட்டு, 

ஐயோ!! சீ… இந்த வடையா?? என்று அவள் அங்கு உள்ள டீப்பாயின் மேல், முகத்தை சுளித்துக்கொண்டு வைக்க….

அவருக்கு கோவம் வந்துவிட்டது…. அடிக்க கையை ஓங்கி விட்டு கீழே இறக்கி விட்டு “சிவ சிவா” என்று சொல்லி தன் கோவத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு, “யாழி” என்ன பழக்கம் இது சாப்பிடுற பொருளை இப்படி அனாவசியமா பேசுறது ரொம்ப தப்பு இல்ல….. 

அது எனக்கு பிடிக்கல தாத்தா!! எப்ப பார்த்தாலும் ஏன?? இதையே வாங்கிட்டு வரீங்க…  எனக்கு புடிச்சது எதுமே வாங்கி தர மாட்டீங்களா!! நானும் உங்க பேத்தி தானே!! இன்னும் சொல்லப்போனால் நான் மட்டும்தான் உங்க பேத்தி… 

உனக்கு பிடிச்சது எதுவுமே, உடம்புக்கு நல்லது இல்ல… சரியா?? அதுவும் இல்லாம இந்த மாதிரி பிரிச்சு பேசுற வேலை வச்சுக்கிட்டு வச்சுக்கோ கை ஓங்கின கை,  அடுத்த முறை கன்னத்தில் தான் இருக்கும்… 

திரும்பி நாகவல்லியைப் பார்த்து, இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு நாகு… போற இடத்துல இப்படி இருந்தா நல்லா இருக்காது பாரு ஒழுங்கா சொல்லி வை…. என்று தன் மருமகளிடம் சொல்லிவிட்டு… ஆமா உன் புருஷன் நடேசன் எங்க….. 

அவரு இப்பதான் எழுந்தாரு, மாமா உள்ள காபி குடிச்சிட்டு இருக்காரு….

சரி, என்று வாய் சொன்னாலும் அவர் கண்கள் எதையோ?? தேட அப்போது மஞ்சள் பூசிய முகத்துடன் அடுக்கலையிலிருந்து தன் கைகளை முந்தானையில் துடைத்துக்கொண்டே வந்தார்.. அவர் மனைவி அன்னலட்சுமி…. 

அவரைப் பார்த்தவுடன் இருவருக்கும், இதழில் மெல்லிய குறுநகை வர, அவர் தன் கண்களை கீழே தாழ்த்திக் கொண்டு வந்து, 

வாங்க,  எப்ப வந்தீங்க…. 

ஆமா!! நான் அப்படியே டெல்லி, மும்பை எல்லாம் சுத்திட்டு வரேன்…. வந்து அரை மணி நேரம் ஆச்சு ஆடி அசைஞ்சு வந்துட்டு எப்ப வந்தீங்கன்னு கேள்வி வர…. 

ஆமா!! நீங்க கூப்பிட்ட உடனே குடுகுடுன்னு ஓடி வந்து உங்க முன்னாடி நிக்கறதுக்கு நான் பதினாறு வயசு இளங்குமரி பாருங்க…. 

இவர்கள் இப்படி பேசிக் கொள்வதை பார்த்து நாகவள்ளியும் யாழ்மையும் தன் தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் அழைக்க சென்று விட்டனர்..

16 வயசு இளங்குமரியா இருந்துட்டா!! மட்டும் அப்படியே ஓடி வந்துடுவா!! சரி சரி ராஜா எங்க காணோம்….. 

தெரியலங்க, ஒரு வேளை இன்னும் எந்திரிக்கலையோ?? என்னமோ?? வாங்க மேல போய் பார்க்கலாம்…. 

இவ்வளவு நேரம் எந்திரிக்காமல் இருக்க மாட்டாளே!! ஒருவேளை காய்ச்சல் எதுவும் வந்திருக்குமோ??

ஏங்க நல்லா இருக்குற புள்ளைய காய்ச்சல் வந்துச்சுன்னு சொல்றீங்க… 

நான், எங்கடி காய்ச்சல் வந்துருச்சுன்னு சொன்ன வந்திருக்கும் என்று தானே கேட்டேன்… 

நல்லா சொன்னீங்க…. “தென்ன மரத்துல புள்ள பூச்சி இருந்தான்னு,”

எம்மா தாயே!! நான் வாயே திறக்கல, போதுமா?? வா போய் முதல்ல அவ எங்க இருக்கான்னு பார்க்கலாம்…. 

அந்த பயம் உங்களுக்கு எப்பவும் இருக்கணும்…. இன்று பேசிக் கொண்டே அவள் அறையை வந்து கதவை தட்ட, அது திறந்திருந்தது….

ரூம்லயும், இல்லை…. எங்க போயிருப்பா!! என்று வீட்டு அருகில்   உள்ள தன் நிலத்தைப் பார்க்க… அவள் அங்கும் இல்லை…. 

இங்கு, தன்னை சமன் செய்துக் கொண்டு மீண்டும், சுத்தம் செய்துக் கொண்டிருந்தவள்… எதையோ பார்த்து பயந்து காதில் கை வைத்து கத்தி விட்டாள்…. 

அப்படி அவள் எங்குத் தான் போய் இருப்பாள்… 

மல்லி எதைப் பார்த்து, கத்தினாள்…. ஏன்?? கத்தினாள்…. 

அவள் யாரு என்று எல்லாம் வரும் எபில பாக்கலாம்..கதையின் போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க….. 

அப்படியே, மதிப்பீடுகளையும், தங்களின் விமர்சனத்தயும் கொடுத்து விட்டு போங்க… செல்லம்ஸ்…

மறக்கமா அப்படியே பொல்லொவ்வும் கொடுத்து விடுங்கள்…. 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.