மெல்ல சூரியன் மறைந்து இருள் பரவ தொடங்கி இருந்த நேரம்..
மதி பாட்டி சொன்ன வேலைகளை செய்து கொண்டிருக்க இசை அவளுடன் அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூட சென்றபடி பேசிகொண்டிருந்தாள்..
“இசை நீ எதுக்கு என் பின்னாடியே வந்துட்டு இருக்க உன் அம்மா பார்த்தா திட்டபோறாங்க…”என மதி சொல்ல
“பச்…”இதழ் சுழித்தவள் “அவங்க திட்டுனா திட்டட்டும் நான் என் பிரண்ட் கூட பேசதான் செய்வேன்…”என்றவள் அவள் கையில் இருந்த செடிகளுக்கு அடிக்கும் ஸ்பிரேவை பிடுங்கி “இதெல்லாம் நீதான் பண்ணணுமா… இங்க எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க அவங்க பண்ண மாட்டாங்களா….”என்றாள்..
அதற்கு மதி “நானும் ஒரு வேலைக்காரிதான் அதை நீ வேணா மறந்து என்கிட்ட பிரண்ட்டா பேசலாம் நான் இல்ல…”என்றவள் மீன்டும் இசை கையில் இருந்த ஸ்பிரேவை வாங்கி அதை செடிகளுக்கு அடிக்க தொடங்கினாள்..
இசைக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..முகம் வாட நின்றவள் அப்பொழுது நந்தா வந்து “குட்டி பிசாசு…”என்றபடி அவளின் போனிடைல் முடியை பிடித்து இழுக்க கோபம்மானவள் “எருமை…”ஓங்கி அவன் காலிலேயே மிதித்தாள்.
அதை எதிர்பாராதவன் “ஐயோ அம்மா…”என்று கத்த இசை வேகமாய் அவன் வாயில் கைவைத்து அடைத்தவள் “டேய் தடியா கத்துன கொன்னுடுவேன்…”என்றாள்..
அவர்களை பார்த்து மதி சிரிக்க இசை அவள் பக்கம் திரும்பி பார்த்து “சிரிக்காத…”என்றாள்..
நந்தா அவள் கையை எடுத்துவிட்டு “இந்த அம்மா தங்கச்சி பாப்பாவை பெத்துதான்னு நான் கேட்டதுக்கு ஒரு குட்டி சாத்தானை பெத்து வச்சிருக்காங்க…”என்றவன் இசை முறைத்து பார்க்கவும் “என்ன என்ன லுக்கு…”என்றான்.
“ஓவரா பேசுன அப்பறம் காலை உடைச்சு விட்ருவேன்…”
இசை மிரட்ட அவள் செய்தாலும் செய்வாள் என்பதால் நந்தா மிடரு விழுங்கியவன் அவளிடம் மேலும் வம்பு வளர்க்காமல் மதியிடம் “மதி உன்னை மித்ரன் கூப்பிடறான்…”என்றான்..
“மித்ரன் கூப்பிட்டானா… எதுக்கு?…”
“எனக்கு எப்படி தெரியும் போய் கேளு…”என சொன்னவனிடம் ஸ்பிரேவை கொடுத்த மதி நந்தா “இதை வச்சு நான் என்ன பன்றது?…”என்று கேட்கவும்
“ம்ம் இந்த செடிங்களுக்கு எல்லாம் ஸ்பிரே பண்ணு…”
“நானா?…”அவன் அதிர்ந்து கேட்க
“பண்ணு….”என்று அவனுக்கு வேலை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்..
நந்தா “என்ன நான் இந்த வேலை பண்ணனுமா…”என்று முகம் சுழித்து சொல்ல இசை தன் அண்ணன் என்று பாராமல் அவன் முதுகிலேயே ஒரு அடி அடித்தவள் “சும்மாதான வீட்ல சுத்திட்டு இருக்க இந்த வேலையாவது பாருடா..”என சொல்லிவிட்டு அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்..
“வர வர இந்த ஜமீன்ல என்னோட மரியாதை குறைஞ்சுட்டே போகுது…”என முனுமுனுப்பாக சொன்னவன் மதி தன்னிடம் சொல்லிவிட்டு சென்ற வேலையை அந்த பக்கமாய் ஒரு வேலையாள் வரவும் அவனை செய்ய சொல்லிவிட்டு வீடியோ கேம் விளையாட டைம்மாகவும் தன்னுடைய அறைக்கு சென்றான்..
மதி மித்ரன் அறைக்கு சென்றவள் மித்ரன் கண்ணாடி முன் நின்று ரெடியாகி கொண்டிருக்கவும் கண்கள் சுருக்கினாள்..
பிளாக் கலர் டிரஸ் மித்ரனின் மில்கி வொய்ட் கலரை எடுத்து காட்ட வசிகரமாக இருந்தவனை பார்த்ததும் மதிக்கு புரிந்துவிட்டது வெளியில் எங்கோ கிளம்பிவிட்டான் என்று.
“மித்து…”
திரும்பியவன் அவளை பார்த்துவிட்டு “ஏய் நீ ரெடியாகலயா?…”என்றான்.
அவளோ புரியாமல் “ரெடியாகணுமா எதுக்கு?…”என்றாள்..
அவ்வளவுதான் முகம் இறுக அவளை நெருங்கினான்…
அதில் மிடரு விழுங்கிய மதி அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பொழுது எல்லாம் இரண்டடி பின்னாடி நகர்ந்தாள்..
இதற்கு மேல் நகர இடமில்லை என்ற நிலையில் அவள் சுவரில் மோதி நிற்க மித்ரன் அவளை நெருங்கி வந்தவன் ஒரு கரத்தை சுவரில் ஊன்றி அவளை அழுத்தம்மாய் பார்த்தான்.
மதி விலகி செல்ல பார்க்க மற்றொரு கரத்தையும் சுவரில் ஊற்றி அவள் இந்த பக்கமும் அந்த பக்கமும் நகர முடியாதபடி சிறை செய்தான்..
“மித்து…”என்றவளுக்கு அவன் நெருக்கத்தில் வார்த்தைகளே வரவில்லை…நெருக்கத்தை விட அவன் கண்களில் தெரிந்த கோபம்தான் அவளை தடுமாற வைத்தது.
“மார்னிங் நான் உன்கிட்ட சொன்ன கண்டிஷனை மறந்துட்டியா?…”எனமித்ரன் கேட்ட பின்தான் அவளுக்கு அது நியாபகம்மே வர “ஆமால்ல ஸ்கூல்ல டைமுக்கு டிராப் பண்ணனும்ன்னா அவன் கூப்பிடும்போது நான் வரணும்ன்னு சொன்னான்ல…”என தனக்குள் சொல்லிக்கொண்டாள்
அவளையே முறைத்து பார்த்தவன் யோசிப்பதை பார்த்து “ஏய் வேலைக்காரி என்ன யோசிக்கிற?…”என்று கேட்க
“மித்து எங்க வரணும்?…”
‘சொல்றேன்… போய் ரெடியாகிட்டு வா…. ”
மதி மறுக்கவில்லை “ஓகே…”என்று தலையாட்ட “சீக்கிரம் போய் ரெடியாகி வா…”என்றான்.
அவள் அப்படியே நிற்கவும் மித்ரன் புருவம் உயர்த்தியவன் “என்ன?…”என்று கேட்க மதி விழிகளை உருட்டி தன்னை சிறை வைத்திருந்த அவன் கரத்தை காட்டினாள்..
மித்ரன் தன்னுடைய கரத்தை எடுத்துகொள்ள மதி வேகமாய் அங்கிருந்து ஓடினாள்..
“போடி போ இன்னிக்கு நான் உன்னை பண்ண போற டார்ச்சர்ல உனக்கு கிடைக்க போற அவமானத்துல நீ இந்த ஜமீனை விட்டே போகணும்… போக வைப்பேன்…”என வெறுப்புடன் தனக்குள் சொல்லிக்கொண்டான்…
சில நிமிடங்களுக்கு பின்…
மதி அழகான சுடிதாரில் ரெடியாகி வர மித்ரன் அவள் டிரஸ் பார்த்து முகம் சுழித்தவன் எதுவும் சொல்லவில்லை அவளை அழைத்துகொண்டு சென்றான்.
மித்ரன் அவளை அழைத்து சென்றது யாருக்கும் தெரியவில்லை.. இசையும் அவளுடைய அறையில் இருந்ததால் தன்னுடைய பிரண்ட் ஆபத்து நோக்கி சென்று கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கு தெரியாமல் போனது..
மித்ரன் காரை வேகமாய் ஓட்ட அவன் பக்கத்தில் அமர்ந்து இருந்த மதிக்கு பயமாக இருந்தது.
“இப்போ எதுக்கு இவன் இவ்வளவு வேகமா ஓட்டறான்… என்மேல இருக்க கோபத்துல எங்கையாவது கொண்டு போய் விட்டு ஆக்சிடன்ட் பண்ணிடுவானோ… ம்ம் இவன் செய்யக்கூடிய ஆள்தான்…”தனக்குள் சொல்லிக்கொண்டவள்
‘மித்து மெதுவா போ எனக்கு பயமா இருக்கு…”என சொல்ல
அவள் பக்கம் திரும்பி பார்க்காமலே மித்ரன் “நீ எனக்கு எப்படி டிரைவ் பண்ணனும்ன்னு ஆர்டர் போடாத.. சைலன்ட்டா வரனும்…”என்றான் மிரட்டலாக..
அதன் பின் மதி அவனிடம் எதுவும் பேசவில்லை…அவன் டிரைவிங் மீது தோன்றியது பயத்தில் சீட் பெல்ட்டை இறுக பிடித்து கொண்டவள் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் முகத்தை திருப்பி கொண்டாள்..
மித்ரன் அவர்கள் வரவேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்த மதி அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்..
“இறங்கு….”அவன் சொல்லவும் “என்னை வச்சு ஏதோ பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டான் என்ன பண்ண போறானோ… கடவுளே நீதான் என்னை இவன்கிட்ட இருந்து காப்பாத்தனும்…”என தனக்கு பிடித்த கடவுளிடம் வேண்டுதல் வைத்தவள் காரில் இருந்து இறங்கினாள்..
அவர்கள் வந்திருந்த இடத்தை பார்த்ததும் மதி அதிர்ந்தவள் திரும்ப மித்ரன் இப்பொழுது அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தான்..
“மித்து இது கிளப்…”என சொல்ல
அவனும் கலர் கலர் லைட்களில் மின்னி கொண்டிருந்த கிளப்பை பார்த்தவன் “ம்ம் கிளப்தான் நான் இல்லன்னு சொல்லுலயே…”என்றான்.
“மித்து என்னை இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த?…”என மதி டென்ஷனாய் கேட்க
“கிளப் எதுக்கு வருவாங்க என்ஜாய் பண்ணதான்…”
மதி மிடரு விழுங்கியவள் அங்கிருந்து ஓடப்பார்க்க மித்ரன் விடவில்லை அவள் கரத்தை தடுத்து பிடித்தான்..
‘மித்து என்னை விடு… “என்றவள் அவன் கரத்தை உதற பார்க்க அழுத்தம்மாய் அவள் கரத்தை பற்றி இருந்தவன் பிடித்து இழுத்தான்.
அதை எதிர்பாராதவள் அவன் நெஞ்சில் சென்று மோத மித்ரன் கரம் அவள் இடையில் அழுத்தம்மாய் பதிந்தது..
அவன் அழுத்தி பிடித்தது வலிக்க மதியின் முகம் வலியை பிரதிபலித்தது…
“மித்து என்னை விடு… நான் இங்க எல்லாம் வரமாட்டேன்…ஐயாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்… ப்ளீஸ்…”என்றாள் கெஞ்சலாக.
ஆளவந்தான் மித்ரன் இப்படி கிளப் பப் என்று சுற்றுவதையே பிடிக்காமல் திட்டிக்கொண்டிருக்கிறார் இதில் மதி இங்கு வந்தது மட்டும் அவருக்கு தெரிந்தால் அவ்வளவுதான் அவர் அதற்கு தரும் தண்டனை அவளால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும்..
“ப்ளீஸ் மித்து விட்ரு… ஐயாவுக்கு மட்டும் நான் இங்க வந்தது தெரிஞ்சா அவ்வளவுதான்… என்னை கொன்னே போட்ருவாரு…”என சொல்ல
“எனக்கும் அதுதான்டி வேணும்… உன்னை அந்த ஹிட்லர் வீட்டை விட்டு துரத்தனும்…”என சொல்லிக்கொண்டவன் அவள் கெஞ்சலை எல்லாம் பொருட்படுத்தாமல் கைபிடித்து உள்ளே அழைத்து சென்றான்.
வெளியே நின்றிருந்த பவுன்ஸர்ஸ் பார்த்து “மலமாடு மாதிரி இருக்கானுங்க… ஹெல்ப் கேட்டா வருவாங்களா… கேட்டு பார்க்கலாம்…”என அவள் நினைக்க அந்த பவுன்ஸர்ஸோ மித்ரனை பார்த்து சல்யூட் வைத்தனர்..
மதிக்கு புரிந்து போனது இனி அவர்களிடம் அவளால் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது என்று.
“மித்து ப்ளீஸ்….என்னை வீட்ல கொண்டு போய் விட்ரு…”
அவள் கெஞ்ச உள்ளே அழைத்து வந்திருந்தவன் சுற்றி முற்றியும் பார்த்தான்..
இரைச்சலான சத்தத்துடன் ஆண்களும் பெண்களும் தங்களை மறந்து டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்..
மதி அரைகுறை டிரஸுடன் டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்த பெண்களை பார்த்து முகம் சுழித்தாள்..
“என்ன இப்படி டிரஸ் பண்ணிருக்காங்க….”என சொல்லிக்கொண்டவள் மித்ரன் கையை விட்டால் ஓடிவிடலாம் என்று பார்க்க அவனோ பார் அருகில் சென்றான்..
அவள் கைகள் அவன் கைகளுக்குள் இருந்ததால் அவளும் அவன் பின்னாடியே செல்ல வேண்டியநிலை…
மித்ரன் அங்கிருந்த சேரில் அமர்ந்தவன் “ஒன் கிளாஸ் விஸ்கி…”என்று ஆர்டர் சொன்னவன் கொரியன் பாடல் ஒலிக்கவும் அதற்கு ஏற்ப வைப் செய்தான்..
“மித்து விடு…நான் போறேன்…”என்று மதி சொல்ல அவளை முறைத்தவன் “இன்னொரு தடவை நான் போறேன்னு சொன்ன இந்த மித்ரனோட கோபத்தை பார்க்க வேண்டியதிருக்கும்… நானே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போற வரைக்கும் நீ இந்த கிளப் விட்டு வெளிய போகக்கூடாது புரிஞ்சுதா…”என்றான் மிரட்டலாக..
அவன் கோபத்தை பற்றி நன்றாக தெரிந்து இருந்தவள் “சரி…”என்று தலையாட்டினாள்..
“குட்…”என்றவன் அவள் கைகளை விடுவித்தான்..
அவன் கையை விட்டால் ஓடிவிடலாம் என்று இவ்வளவு வெயிட் செய்து கொண்டிருந்தவள் இப்பொழுது ஒரு அடிகூட நகராமல் அப்படியே நின்றாள்..
மித்ரன் ஆடிகொண்டிருந்த கேர்ள் பார்த்து ரசிக்க மதி “எங்க பார்க்கிறான்…”என்று அவன் பார்க்கும் திசையில் திரும்பி பார்த்தவள் முகம் கோபத்தில் சிவந்தது..
“அறைகுரை டிரஸ் போட்டுட்டு ஆடிட்டு இருக்காங்க அதை போய் பார்த்துட்டு இருக்கான்…”என திட்டிக்கொண்டவள் மித்ரன் இப்பொழுது அவளை பார்க்கவும் “இப்போ என்னை எதுக்கு பார்க்கிறான்…”என்று கண்கள் சுருக்கினாள்..
“என்ன?…”
“நீ அந்த மாதிரி டிரஸ் பண்ணுனா எப்படி இருக்கும்ன்னு பார்த்தேன்…”என்றவன் டேன்ஸ் ஆடிகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி சொல்ல மதி அவன் காட்டிய பெண்ணை பார்த்தவள் அதிர்ந்தாள்..
No comments yet.